Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாம்பியன்ஸ் டிராபி செய்திகள்...

Featured Replies

  • தொடங்கியவர்
 

டிவில்லியர்ஸ் அவுட்டாகியது என்னால் தான் - டு பிளசிஸ் வருத்தம்! #CT17

மற்றுமொரு முறை நாக் அவுட் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது தென் ஆப்ரிக்கா. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் நேற்று ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய அணியிடம் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்ரிக்காவின் படுதோல்விக்கு இரண்டு ரன் அவுட்டுகள் முக்கியமான அம்சமாக அமைந்தன. 

டாஸ் வென்ற கோலி  பீல்டிங்கை தேர்ந்தெடுக்கவே , தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங் செய்ய  களமிறங்கியது. இந்தத் தொடரில் இதுவரை முதல் பத்து ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இந்த முறை அந்த  தவறைச் செய்ய மாட்டோம் என சொல்லியிருந்தார் டிவில்லியர்ஸ். தென் ஆப்ரிக்க அணி முதல் பத்து ஓவர்களில் அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புவேனஸ்வர் குமார், ஜஸ்பிட் பும்ரா இணை அபாரமாக பந்து வீசியது. 

இந்திய அணியின் பீல்டிங்கும் ஓரளவு நன்றாகவே இருந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு அருகே மட்டுமே தொடர்ச்சியாக பந்து வீசி வந்தனர் இந்திய பவுலர்கள். ஆஃப்  ஜடேஜா உட்பட திறமையான பீல்டர்களை நிறுத்தியிருந்தார் கோலி. இதனால் தென் ஆப்ரிக்க அணியால் அதிரடியாக ஆட முடியவில்லை. சுமார் 3.5 - 4 என்ற ரன்ரேட்டில் விளையாடிக் கொண்டிருந்தது தென் ஆப்ரிக்கா. 18 வது ஓவரில் அஷ்வினின் ஒரு அபாரமான பந்தில் ஆம்லா விக்கெட்டை இழந்தார். அப்போது தென் ஆப்ரிக்கா 77 ரன்கள் எடுத்திருந்தது. டு பிளசிஸ், டீ காக் இணை கவனமாக ஆடியது. இந்தியாவுக்கு எதிராக பத்தாவது போட்டியில் விளையாடிய டீ காக்  ஆறாவது முறையாக ஐம்பது ரன்களை கடந்தார். இவர் களத்தில் நின்றால் இந்திய அணிக்கு சிக்கல் என்பதை உணர்ந்திருந்த கோலி, ஜடேஜாவிடம் பந்தை கொடுத்தார். 29-வது ஓவரில் டீ காக்கின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா. இதையடுத்து ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் உள்ளே வந்தார். 

டிவில்லியர்ஸ்

இந்த சாம்பியன்ஸ் டிராபியில் இதற்கு முன்னதாக இரண்டு போட்டிகளிலும் முறையே 4 மற்றும் 0 ரன்களை எடுத்திருந்தார் டிவில்லியர்ஸ். இந்த போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மைதானத்தில் நுழைந்தார். ஆம்லா, டீ காக், டு பிளசிஸ் போன்றோரிடம் இருந்த லேசான தடுமாற்றம் டிவில்லியர்ஸிடம் இல்லை. பந்துகள் நன்றாக அவரது பேட்டுக்கு வந்தன. அவரது டைமிங்கும் நன்றாக இருந்தது. கோலியால் டிவில்லியர்ஸ் பேட்டிங் செய்யும்போது கட்டுப்படுத்த முடியவில்லை. டாட் பால் வீசவிடாமல் தொடர்ச்சியாக ஓடி ஓடி ரன்களை எடுத்துக் கொண்டிருந்தார்  டிவில்லியர்ஸ். இந்திய அணியின் கேப்டன் கோலி சுதாரித்தார். அவரை  ரன் அவுட் ஆக்குவதே சிறந்த வழி என்பதை உணர்ந்திருந்தார். 

28 ஓவர்களில் 138/ 2  என நல்ல நிலையில் இருந்தது தென் ஆப்ரிக்கா. டிவில்லியர்ஸ் கடைசி வரை களத்தில் நின்றால் 330 - 350 ரன்கள் வரை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை தென் ஆப்ரிக்க ரசிகர்களிடம் இருந்தது. 29-வது ஓவரில் ஜடேஜா பந்து வீச வந்தார். முதல் பந்தில் ஒரு  ரன் எடுத்தார் டிவில்லியர்ஸ். அடுத்த பந்தை டு பிளசிஸ் சந்தித்தார் மிக அருகில் பந்தை தட்டிவிட்டு ஓட ஆரம்பித்தார். ஹர்திக் பாண்டியாவிடம் நேராக சென்றது பந்து. அவர் தோனியிடம் வீசினார். டு பிளசிஸ் ஓடிவருவதை பார்த்து அதிர்ந்த டிவில்லியர்ஸ் பரவாயில்லை  மறுமுனைக்குச் சென்றுவிடுவோம் என ஓடினார். அவருக்கு ரன் அவுட் ஆகப் போகிறோம் என்பது முன்னமே தெரிந்து விட்டது. 

ஏற்கெனவே தோள்பட்டை வலியில் இருந்தபோதும் முடிந்த மட்டும் டைவ் அடித்தார். அந்தரத்தில் இருந்தபடியே பேட்டால் கிரீஸை தொடுவதற்குள் தோனி மின்னல் வேகத்தில்  ஸ்டம்புகளை தகர்த்தார். டிவில்லியர்ஸ் அவுட்! அந்த நொடியிலேயே தென் ஆப்ரிக்காவின் வெற்றி வாய்ப்பு சரமாரியாக குறைந்தது. அதற்கடுத்த ஓவரிலேயே மில்லருக்கும் - டு பிளசிஸுக்கும் சரியான புரிதல் இல்லாமல் போகவே இந்தியாவுக்கு இன்னொரு ரன் அவுட் கிடைத்தது. அடுத்தடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தென் ஆப்ரிக்காவை சுருட்டி  எறிந்தது இந்திய அணி. 

டு பிளசிஸ்

 

இரண்டு பேரின் ரன் அவுட்டுக்கு  காரணமாக அமைந்ததுடன்,  ஒழுங்காக ரன்களும் அடிக்காததால் டு பிளசிஸ் மீது மீம்ஸ் போட்டு தாக்கினார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில்  இரண்டு ரன் அவுட் குறித்து வாய் திறந்திருக்கிறார் டு பிளசிஸ்.  " டி வில்லியர்ஸ் அருமையான பார்மில் இருந்தார். அவர் ரன் அவுட் ஆனதுக்கு முழுக்க முழுக்க நான்  தான் காரணம். என்னுடைய தவறால் தான் டிவில்லியர்ஸ் அவுட் ஆனார். நேற்றைய தினம் இந்திய ரசிகர்களின் சத்தம் அதிகமாக இருந்தது. இதனால் மைதானத்தில் மில்லருடன் சரியாகப் பேச முடியவில்லை. வார்த்தைகள் காதில் விழவில்லை. எங்களிடம் சரியான புரிதல் இல்லாததால் மற்றொரு ரன் அவுட் நிகழ்ந்தது. எனினும் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஒரே இடத்துக்குச் சென்றது மிக மோசமான நிகழ்வு. நேற்று இந்திய அணியின் நாள். அவர்கள் எங்களை எல்லா விதத்திலும் தோற்கடித்து விட்டார்கள்" என வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார் டு பிளசிஸ். 

http://www.vikatan.com/news/sports/92023-i-take-full-responsibility-for-de-villiers-run-out-says-du-plessis.html

  • Replies 236
  • Views 21.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: 317 பந்திற்குப் பிறகு விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 317 பந்திற்குப் பிறகு இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை கைப்பற்றிய அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

 
சாம்பியன்ஸ் டிராபி: 317 பந்திற்குப் பிறகு விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள்
 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் இன்றைய போட்டியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைகிறது.

இந்தியா 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 321 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை, 48.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பந்து எடுபடாமல் போனது. இங்கிலாந்து ஆடுகளத்தில் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் இருக்கும். ஆனால் தற்போதைய சாம்பியன்ஸ் டிராபில் தொடரில் பந்து ஸ்விங் ஆகவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்கள் வீழ்த்த திணறி வருகிறார்கள்.

குறிப்பாக 2-வது பந்து வீசும் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு மிகச் சிரமமாக உள்ளது. இலங்கைக்கு எதிராக இந்தியா பந்து வீசும்போது 5-வது ஓவரின் 4-வது பந்தில் புவனேஸ்வர் குமார் பந்தில் டிக்வெல்லா ஆட்டம் இழந்தார். அதன்பின் 49-வது ஓவர் 4-வது பந்து வரை இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. குணதிலகா (76), குசால் மெண்டிஸ் (89) ஆகியோர் ரன்அவுட் ஆனார்கள். பெரேரா காயம் காரணமாக வெளியேறினார். 44 ஓவர்களில் (சுமார் 264 பந்துகள்) இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்கள் வீழ்த்தவில்லை.

நேற்று தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா முதலில் பந்து வீசியது. 17 ஓவர் வரை இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீசவில்லை விக்கெட் வீழ்த்தவில்லை. 18-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் அம்லா அவுட் ஆனார். தென்ஆப்பிரிக்கா போட்டியில் 104 பந்திற்குப் பிறகுதான் விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதன்மூலம் ஒரு விக்கெட்டை வீழ்த்த இரண்டு போட்டியிலும் சேர்த்து வைடுக்குப் பதிலாக வீசப்படும் பந்துகளையும் சேர்த்து 317 பந்துகளுக்குப் பிறகு இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்திய அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/12165046/1090424/India-vs-South-Africa-Indian-Bowlers-get-a-Wicket.vpf

  • தொடங்கியவர்

அரையிறுதியில் பாக்., * வீழ்ந்தது இலங்கை ,

அரையிறுதியில் பாக்., * வீழ்ந்தது இலங்கை

கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில், பாகிஸ்தான் பவுலர்கள் அசத்த இலங்கை அணி 49.2 ஓவரில் 236 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பொறுப்பாக ஆடிய டிக்வெல்லா அரைசதமடித்தார்.

இங்கிலாந்தில், 8வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. கார்டிப் நகரில் இன்று நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு தனுஷ்கா குணதிலகா (13) ஏமாற்றினார். ஹசன் அலி பந்தில் குசால் மெண்டிஸ் (27) போல்டானார். சண்டிமால் 'டக்-அவுட்' ஆனார். பொறுப்பாக ஆடிய நிரோஷன் டிக்வெல்லா (73) அரைசதம் கடந்தார். கேப்டன் மாத்யூஸ் (39), குணரத்னே (27), லக்மல் (26) ஓரளவு கைகொடுத்தனர்

இலங்கை அணி 49.2 ஓவரில் 236 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மலிங்கா (9) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் ஜுனைடு கான், ஹசன் அலி தலா 3, முகமது ஆமிர், அஷ்ரப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 44.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

http://www.dinamalar.com/icc-champions-trophy-2017/detail.php?id=691

  • தொடங்கியவர்
இலங்கையை வென்று அரையிறுதியில் பாகிஸ்தான்
 

image_ec7f1be929.jpg

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிபெற்றுள்ளது. கார்டிப்பில், இன்று இடம்பெற்ற இலங்கை அணிக்கெதிரான தமது இறுதி குழுநிலைப் போட்டியில் வெற்றிபெற்றே, குழு பி-இலிருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சஃப்ராஸ் அஹமட், இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல, அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸின் இணைப்பாட்டம் காரணமாக சிறந்ததோர் அடித்தளத்தைப் பெற்றபோதும், இவர்களிருவரினதும் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. பின்னர், பின்வரிசையில், அசேல குணரட்ன, சுரங்க லக்மால் பெற்ற ஓட்டங்களின் மூலமே, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், நிரோஷன் டிக்வெல்ல 73 (86), அஞ்சலோ மத்தியூஸ் 39 (54), குசல் மென்டிஸ் 27 (29), அசேல குணரட்ன 27 (44), சுரங்க லக்மால் 26 (34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜுனைட் கான், ஹஸன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஆமிர், ஃபாஹிம் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 237 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், பக்கார் ஸமனின் அதிரடி ஆரம்பத்தைப் பெற்றாலும், பின்னர் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட நெருக்கடி நிலைக்கு வந்தபோதும், பிடியெடுப்புகள் தவறவிடப்பட, சஃப்ராஸ் அஹமட்டின் வழிகாட்டலில், 44.5 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில், சஃப்ராஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 61 (79), பக்கார் ஸமர் 50 (36), அஸார் அலி 34 (50), மொஹமட் ஆமிர் ஆட்டமிழக்காமல் 28 (43) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், லசித் மலிங்க, திஸர பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக, சஃப்ராஸ் அஹமட் தெரிவானார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இலங்கையை-வென்று-அரையிறுதியில்-பாகிஸ்தான்/44-198495

  • தொடங்கியவர்

இலங்கை அவுட்

 
இலங்கை அவுட்
  •  

மினி உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற வாழ்வா, சாவா ஆட்டத்தில் வெற்றிபெற்று இலங்கையை வெளியேற்றியது பாகிஸ்தான். இதனால் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெற இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இலங்கையின் ஆரம்ப வீரர்களாக டிக்வெல்ல மற்றும் குணதிலக. 13 ஓட்டங்களுடன் பவிலியனுக்குச் சென்றார் குணதிலக. குசல் மெஸ்டிஸ் பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. சந்திமல் முன்வரிசையில் களமிறக்கப்பட்டார். பரிதாபம் ஓர் ஓட்டத்தையேனும் அவரால் பெறமுடியவில்லை. மத்தியூஸ், டிக்வெல்ல இணைந்தனர். பின்னடைவுக்க தற்காலிகத் தீர்வு கிடைத்தது. இணைப்பாட்டமாக 78 ஓட்டங்கள் பெறப்பட்ட பின்னர் 39 ஓட்டங்களுடன் தலைவர் இருக்கைக்குத் திரும்பினார். அனுப்பி வைத்தவர் ஆமிர். டிக்வெல்லவும் ஆமிரிடம் சிக்கினார். நிதானமும், இலக்குச் சரிவும் இலங்கையை ஆட்கொண்டன. முடிவில் 236 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது இலங்கை.

பந்துவீச்சில் யுனைட்கான், ஹசன் அலி இருவரும் தலா 3 இலக்குகளையும், ஆமிர், அஸ்ரவ் இருவரும் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தானின் ஆரம்ப வீரர்களாக அசார் அலி, சமன் இருவரும் களமிறங்கினர். 10 பந்துப்பரிமாற்ஙங்களில் இலக்குச் சரிவில்லாமல் 65 ஓட்டங்களை எட்டியது பாகிஸ்தான். அணி 74 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் சமன். வீழ்த்தியவர் பிரதீப். அவர் பாபர் அசாமையும் பவிலியனுக்கு அனுப்பினார். இலங்கையின் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. அசார் அலி, ஹபீஸ், மலிக் ஆட்டமிழந்ததும் இலங்கை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது போன்றதொரு நிலையே மைதானத்தில் பிரதிபலித்தது. எனினும் ஓர் முனையில் பொறுமையாக நிலைத்துநின்றார் சர்பராஜ் அகமட். ஆமிர் தேவையான அளவு பந்துகளை எதிர்கொண்டு இலக்குச் சரிவைக் காத்தார். சர்பராஸ் அகமட்டுக்கு இரு வாய்ப்புக்கள் கடைசிக்கட்டத்தில் தவறவிடப்பட்டன. ஒன்று திசர பெரேராவாலும், மற்றொன்று சீகுகே பிரசன்னாவாலும் தவறவிடப்பட்டது. அதிலும் திசர பெரேரா தவறவிட்ட பிடியெடுப்பு மிகமிக இலகுவானது. மிகச் சிறு முயற்சியுடன் அகமட்டை பவிலியனுக்கு அனுப்பியிருக்கலாம். அரைச்சதம் கடந்த ஒருவருக்கு இரு வாய்ப்புக்கள் தவறவிட்டால் கேட்கவும் வேண்டுமா. 31 பந்துகள் மீதமிருக்க வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது பாகிஸ்தான்.

264319.jpg

 

264341.jpg

264342.jpg

264343.jpg

264344.jpg

264345.jpg

http://uthayandaily.com/story/6332.html

  • கருத்துக்கள உறவுகள்

:D: tw_blush: :love:

  • தொடங்கியவர்

'மிக மட்டமான ஃபீல்டிங்!' - தோல்வி குறித்து கடுகடுக்கும் ஏஞ்செலோ மேத்யூஸ்

 

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவர் என்ற சூழ்நிலை நிலவியதால் இரு நாட்டு ரசிகர்களுக்கிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

AA_1_03006.jpg

இதையடுத்து, இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை, 236 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் 237 என்ற இலக்கை பாகிஸ்தான் தட்டுத்தடுமாறி கடந்தது. இலங்கையின் இந்தத் தோல்விக்கு முக்கிய காரணமாக பலரால் சொல்லப்பட்டது, அவர்களின் ஃபீல்டிங்தான். கிட்டத்தட்ட மூன்று சுலபமான கேட்சுகளை விட்டு, பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாட வழிகோலியதே கடைசியில் இலங்கை அணியின் தோல்விக்கு வித்திட்டது. 

இந்த சூழ்நிலையில்தான் இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், 'இன்று நடந்த போட்டியை திரும்பிப் பார்க்கும்போது, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்பது தெரிகிறது. அதுவும் எங்கள் ஃபீல்டிங் மிகவும் மட்டமானதாக இருந்தது. நாங்கள் மட்டும் எங்களுக்கு வந்த கேட்சுகளைப் பிடித்திருந்தால், இன்று வேறொரு கதையைப் பற்றி பேசியிருப்போம். ஆனால், ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில் கேட்சுகளை நாங்கள் தொடர்ச்சியாக நழுவவிட்டோம்.' என்று வருத்தமாகப் பேசினார்.

 

இலங்கை அணி, ஃபீல்டிங்க்கு உரிய கவனம் செலுத்துகிறதா என்ற கேட்டபோது, 'உண்மையில் எங்கள் அணி, இந்த தொடருக்காக மிகவும் கடுமையாக உழைத்தது. இன்று நாங்கள் நிறைய கேட்சுகளை தவறவிட்டோம் என்பது உண்மைதான். ஆனால், ஃபீல்டிங் சம்பந்தமாக எங்கள் பயிற்சியாளர்களிடம் இருந்தும் அணியினரிடம் இருந்தும் மிகவும் உண்மையான அதீத பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. எங்கள் ஃபீல்டிங்குக்கு நாங்கள் கட்டாயமாக கவனம் செலுத்தினோம்.' என்று தெளிவுபடுத்தினார். 

http://www.vikatan.com/news/sports/92106-looking-at-todays-performance-i-thought-we-were-pathetic-once-again-mathews.html

  • தொடங்கியவர்

களத்தடுப்பில் கோட்டை விட்டதால் இலங்கையின் கிண்ணக் கனவு கலைந்தது - ( காணொளி இணைப்பு )

 

 

பாகிஸ்தான் அணிக்கிடையிலான முக்கியமான வாழ்வா, சாவா போட்டியில் இலங்கை அணி பிடியெடுப்புக்கள் மற்றும் களத்தடுப்பில் சொதப்பியதால், சம்பியன்ஸ் கிண்ணக்கனவு கலைந்ததுடன் இலங்கை அணி ரசிகர்களை ஏமற்றிய நிலையில் நாடு திரும்பவுள்ளது.

sri.jpg

இலங்கை - பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடையே நடை­பெற்ற சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்­டியில் பாகிஸ்தான் அணி 3 விக்­கெட்­டுக்­களால் வெற்றி பெற்று அரை­யி­று­திக்கு தகுதி பெற்­றுள்­ளது. 

இலங்கை அணியின் மோச­மான களத்­த­டுப்பு, குறிப்­பாக முக்­கி­ய­மான கட்­டத்தில் இரண்டு பிடி­யெ­டுப்­பு­களை தவ­ற­விட்­டதன் மூலமும், பந்­து­வீச்சு மற்றும் அணு­கு­மு­றையின் கார­ண­மாக இலங்கை தோல்­வி­யுற்று தொட­ரி­லி­ருந்து பரி­தா­ப­க­ர­மாக வெளி­யேற்­றப்­பட்­டது.

 

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சிறப்­பான துடுப்­பாட்­டத்­தினால் இலங்கை அணி வெற்­றி­பெற் ­றது என்று சொல்­வ­தை­விட, இலங்கை வீரர்­களின் தவ­றால்தான் பாகிஸ்தான் வெற்றியை ருசித்தது எனலாம்.

264310.jpg

236 ஓட்­டங்கள் என்ற இலக்கை விரட்­டிய பாகிஸ்தான் அணி முதல் ஓவ­ரி­லேயே ஒரு விக்­கெட்டை இழந்­தி­ருக்கும். லசித் மலிங்­கவின் முத­லா­வது ஓவரில் கைக்கே வந்து விழுந்த பந்தை தவ­ற­விட்டார் குண­தி­லக்க. இதன் பிறகு ஒரு ஓவர் நிதா­னித்து அதி­ர­டி­யாக ஆடத்­தொ­டங்­கினர் பாக். வீரர் கள். 11 ஓவர்­க­ளுக்கு விக்கெட் இழப்­பின்றி 74 ஓட்டங்­க ளைக் குவித்­தது பாகிஸ்தான். 

264314.jpg

அரைச் சதம் எட்­டிய அக­மது  12 ஆவது ஓவரில் ஆட்­ட­மி­ழந்தார். தொடர்ந்து ஆட வந்த பாபர் அசாம் நீண்ட நேரம் நிலைக்­க­வில்லை. 10 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்த நிலையில் அவர் பெவி­லியன் திரும்பஇ தொடர்ந்து வந்த முக­மது ஹபீஸ் அடுத்த ஓவரில் ஒரு ஓட்­டத்­துடன் வீழ்ந்தார். நன்­றாக ஆடி வந்த அசார் அலியும் 20 ஆவது ஓவரில் ஆட்­ட­மி­ழக்க 111 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டு­களை இழந்து பாகிஸ்தான் சற்று தடு­மாற்றம் கண்­டது.

264331.jpg

தேவைப்­பட்ட ஓட்­டங்கள்  குறை­வா­கவே இருந்­ததால் பாகிஸ்தான் விக்கெட் இழப்­புக்­களை பற்றி பெரி­தாகக் கவ­லை­யுற்­ற­தாகத் தெரி­ய­வில்லை. அவர்கள் உடல் மொழியில் தன்­னம்­பிக்­கையே தெரிந்­தது.

264348.jpg

ஆனால் 25ஆவது ஓவரில் ஷோயிப் மலிக்இ 26ஆவது ஓவரில் இமாத் வாஸிம்இ 30ஆவது ஓவரில் அஷ்ரப் என துரித கதியில் வீரர்கள் வெளி­யேற பாகிஸ்­தானின் ஆட்டம்இ சற்று ஆட்டம் கண்­டது. 30 ஓவர்­களின் முடிவில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 162 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்­தது. வெற்­றிக்கு தேவை 20 ஓவர்­களில் 75 ஓட்­டங்கள். தொடர்ந்து களத்தில் இணைந்த சர்­பராஸ் அஹ­மது மற்றும் ஆமிர் இருவர் மட்­டுமே பாகிஸ்தான் அணிக்கு ஒரே நம்­பிக்­கை­யாக இருந்­தனர். அடுத்த 10 ஓவர்கள் இவர்கள் பொறுப்­பாக ஆடஇ மேற்­கொண்டு விக்கெட் இழக்­காமல் பாக். இலக்கை நெருங்­கி­யது.

264345.jpg

இதற்கு நடுவில்இ 39ஆவது ஓவரில், மலிங்க வீசிய பந்தை சர்­பராஸ் நேராக தூக்க, கைக்கு வந்த பிடியை தவ­ற­விட்டார் திசர. அடுத்த ஓவரில் மீண்டும் சர்­ப­ராஸின் பிடியை தவ­ற­விட்டார் சீகுகே பிர­சன்ன. அதன்­பி­றகு அற்­பு­த­மாக ஆடி வந்த சர்­பராஸ் 71 பந்­து­களில் அரைச் சதம் கடந்தார். அவ­ரது அரைச் சதத்தை விட, அணிக்கு மிக முக்­கி­ய­மான 50 ஓட்­ட­ங்களை, முக்­கி­ய­மான கட்­டத்தில் குவித்தார் என்­பதே அந்த சூழலில் சிறப்­பம்­ச­மாக இருந்­தது.

264342.jpg

சர்­பராஸ் தொடர்ந்து தோள் கொடுக்க, மறு­மு­னையில் முக­மது ஆமிரும் அவ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்தார். இறு­தியில் 44 ஆவது ஓவரின் 5ஆவது பந்தில், சர்­பராஸ் அடித்த பவுண்­ட­ரி­யுடன் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டி 3 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி கண்­டது. முக்­கி­ய­மாக அரை­யி­று­திக்கும் தகு­தியும் பெற்­றது.

264346.jpg

இலங்கை அணியின் மோச­மான களத்­த­டுப்பின் மூலம் அரு­மை­யான வாய்ப்பை கோட்­டை­விட்­டுள்­ளது. இந்த போட்­டியில் தோல்­வி­யுற்­றதன் மூலம் சம்­பியன்ஸ் கிண்ணத் தொட­ரி­லி­ருந்து இலங்கை அணி வெளி­யேற்­றப்­பட்­டது.

இந்த வெற்­றியின் மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான். அதன்படி சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துஇ இந்தியாஇ பங்களாதேஷூடன் பாகிஸ்தானும் இணைந்துகொண்டது. இதன்படி அரையிறுதிக்கு மூன்று ஆசிய அணிகள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20845

  • தொடங்கியவர்

இலங்கையின் வெற்றிக் கனவை தகர்த்த சப்ராஷ் அஹமட்டுக்கு அபராதத்துடன் எச்சரிக்கை

வெற்றி வாய்ப்பு இலங்கை அணியின் பக்கம் இருந்த போதும் தனது நிதானமான துடுப்பாட்டத்தால் பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்த பாகிஸ்தான் அணித் தலைவருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு ஐ.சி.சி.யினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.Sarfraz-Ahmed-dashes-off-in-celebration-

இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது பந்து வீசுவதற்கு ஒரு மணித் தியாலம் தாமதப்படுத்திய குற்றத்திற்காகவே சப்ராஷ் அஹமட்டுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீத அபராதமும் அணி வீரர்களுக்கு 10 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறிது நேரம் பந்து வீசுவதற்கு தாமதித்தாலும் கூட, எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் எனவும் சப்ராஷ் அஹமட்டுக்கு ஐ.சி.சி.யினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/20852

  • தொடங்கியவர்

தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? : ஊடகவியலாளர் மாநாட்டில் மெத்தியூஸ் தெரிவிப்பு

 

 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிடிய பிடியெடுப்புக்கள் மற்றும் ரன் அவுட்டுக்களை தவறவிட்டமையே தோல்விக்கு முக்கிய காரணம் என இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.Sri-Lanka-v-Pakistan_-Champions-Trophy.j

200 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு பிடியெடுப்புக்களை எடுத்து களத் தடுப்பை சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தால் கூட இப்போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம்.

ஆனால் 236 ஓட்டங்களை பெற்ற போதும் பாகிஸ்தான் அணி 162 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதேவேளை முக்கியமான தருணங்களில் பிடியெடுப்புக்கள் நழுவவிடப்பட்டன. இறுதியாக தவறவிடப்பட்ட இரு பிடியெடுப்புக்களே இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

இப்போட்டியில் நாணய சுழற்சி என்பது முக்கியமான ஒன்றாக காணப்படவில்லை.

மூன்றாவதாக களமிறங்கும் வீரர் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தனது துடுப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு மூன்றாவதாக களமிறங்கும் வீரருக்கு உள்ளது. 

எதிர்காலத்தில் மூன்றாம் நிலை வீரராக யாரை களமிறங்குவது என்பது தொடர்பாக தேர்வுக் குழுவுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

இளம் வீரர்களை கொண்ட எமது அணி இத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்றே கூறலாம். 

தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் சுலபமாக வெற்றிக்கொள்ளவில்லை. மிகவும் போராட்டத்திற்கு மத்தியிலேயே வெற்றியடைந்தனர். எதிர்அணிக்கு வெற்றி இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் போராடும் நிலையில் வீரர்கள் தமது திறமையை வெளிப்படுத்தினர். 

இந்த மனநிலையுடன் எதிர்காலத்திலும் செயற்பட்டால் போட்டிகளில் இலகுவாக வெற்றி பெறமுடியும்.

மேலும் தற்போது அணியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என நான் நினைக்கவில்லை என்றார்.

http://www.virakesari.lk/article/20847

  • தொடங்கியவர்

அதிர்ஷ்ட தேவதை சர்பராஸ் அகமட் பக்கம்: மோசமான பீல்டிங்கினால் இலங்கை தோல்வி

 

 
கேட்சைக் கோட்டைவிட்டதால் மலிங்கா ஏமாற்றம்.| படம்.| ஏ.பி.
கேட்சைக் கோட்டைவிட்டதால் மலிங்கா ஏமாற்றம்.| படம்.| ஏ.பி.
 
 

கேட்ச்கள் போட்டிகளை வெல்லும் என்பது கிரிக்கெட் மகாவாக்கியம். ஆனால் நேற்று இலங்கை தோற்றதற்கு மிக முக்கியமான காரணம் 5 கேட்ச்களைக் கோட்டைவிட்டதோடு, ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டைவிட்டது, மிஸ்பீல்ட் ஆகியவையுமாகும்.

சர்பராஸ் அகமது சில வேளைகளில் ரன் ஓடியது அவர் எப்படி இந்த மட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரரானார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. முற்றிலும் தவறான ரன் கணிப்புகளை அவர் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார், இலங்கை அந்த வாய்ப்புகளை தொடர்ந்து கோட்டைவிட்ட படியே இருந்தது.

பாகிஸ்தானின் 7-வது விக்கெட் விழும்போது அந்த அணியின் வெற்றிக்கு 75 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கைக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. களத்தில் கேப்டன் சர்பராஸ் அகமதுவும், மொகமது ஆமீரும் இருந்தனர்.

தொடக்கத்திலேயே இலங்கை பீல்டிங் சொதப்பாலாக அமைந்தது.

மலிங்கா வீசிய முதல் ஓவரிலேயே அசார் அலி பாயிண்டில் கட் செய்ய பொதுவாக நல்ல பீல்டரான குணதிலக கேட்சைத் தவறவிட்டார். அசார் அலி அப்போது ரன் எடுக்கவில்லை.

அடுத்த ஓவரிலேயே லக்மல் பந்தில் மீண்டும் ஆஃப் திசையில் அடித்து விட்டு ஒரு சிங்கிள் ஓடும் போது குணதிலகவின் த்ரோ சரியாக அமையாமல் அசார் அலி சுமார் 4 அடி கிரீஸுக்கு வெலீயேற் இருந்த போது ரன் அவுட் வாய்ப்பு பறிபோனது.

மேலும் 8-வது ஓவரில் ஒரு லீடிங் எட்ஜ் அசார் அலிக்கு ஷார்ட் எக்ஸ்ட்ரா கவர் முன்னால் விழுந்தது.

9-வது ஓவரில் ஃபகர் ஸமான், பிரதீப் பந்தை எட்ஜ் செய்ய அதுவும் ஸ்லிப் முன்னால் விழுந்தது.

21-வது ஓவரில் மலிங்கா வீச சர்பராஸ் அகமது ஆஃப் திசையில் அடித்து விட்டு ரன்னுக்காக கபடி ஆடினார், அப்போதும் குணதிலகாவின் த்ரோ ஸ்டம்பை அடிக்கவில்லை.

மீண்டும் 22-வது ஓவரில் சர்பராஸ் அகமது மிட் ஆனில் தட்டி விட்டு ரன் ஓடினார், ஆனால் அங்கு பீல்டர் கண்ணுக்கு ஒரு ஸ்டம்ப்தான் தெரியும் என்பதால் த்ரோ நேரடியாக ஸ்டம்பில் படவில்லை, பட்டிருந்தால் சர்பராஸ் வெளியேறியிருப்பார்.

23-வது ஓவரில் மீண்டும் மலிங்கா பந்தை மிட்விக்கெட்டில் மென்மையாக சர்பராஸ் ஆட கேட்ச் போன்று சென்று பீல்டர் முன்னால் விழுந்தது, தப்பினார்.

29-வது ஓவரில் வெற்றிபெறுவதற்கு தேவையான ரன்கள் 4 கூட இல்லாதபோது சர்பராஸ் மீண்டும் மிட்விக்கெட்டில் தட்டி விட்டு உயிரைவெறுத்து சிங்கிள் ஓடினார், அந்த த்ரோவும் ஸ்டம்பில் பட்டிருந்தால் சர்பராஸ் கதையோடு பாகிஸ்தான் கதையும் முடிந்திருக்கும். இப்படிப்பட்ட தவறான ரன் கணிப்பில்தான் பாஹிம் அஷ்ரப் ரன் அவுட் ஆனார்.

39-வது ஓவரை மலிங்கா வீச, பந்து வேகம் குறைவான ஃபுல் லெந்த் பந்து சர்பராஸ் இந்தப் பந்தைக் கண்டு அதிர்ந்தார், நேராக மிட் ஆனுக்கு மிக எளிதான கேட்ச், ஆனால் பெரேரா அதை சற்றும் நம்ப முடியாத விதத்தில் கோட்டை விட்டார்.

மீண்டும் 41-வது ஓவரில் மலிங்கா வீச பந்து வேகம் குறைந்த பவுன்சர் புல் ஷாட் டாப் எட்ஜ் எடுக்க ஸ்கொயர் லெக் பீல்டர் டைவ் அடித்து கேட்சை விட்டார். இம்முறை பதிலி வீரர் செகுகே பிரசன்னா தவறிழைத்தார்.

முதல் ஓவரிலிருந்து 45-வது ஓவர் வரை களத்தில் கேட்சையும் பந்தையும் வாங்கி வாங்கி விட்டால் எப்படி வெல்ல முடியும்? இதனை இலங்கை நிச்சயம் உணர்ந்திருக்கும்.


எது எப்படியானாலும் எவ்வளவு கேவலமாக ஆடி கேட்சை விட்டாலும், சிறுபிள்ளைத் தனமாக ரன்களை ஓடினாலும் விக்கெட்டை விட்டு விடக்கூடாது என்று அத்தனை ஈகோவையும் மூட்டைக் கட்டி வைத்து விட்டு சர்பராஸ் அகமது ஒரு கேப்டனாக நின்றதுதான் அவர் செய்த ஒரே நல்ல விஷயம்.

 

http://tamil.thehindu.com/sports/அதிர்ஷ்ட-தேவதை-சர்பராஸ்-அகமட்-பக்கம்-மோசமான-பீல்டிங்கினால்-இலங்கை-தோல்வி/article9726013.ece?homepage=true

  • தொடங்கியவர்

அரையிறுதியில் ஆஃப்-கட்டர்ஸ் பந்து மூலம் இந்தியாவை மிரட்டுவேன்: முஸ்டாபிஜூர் நம்பிக்கை

 

அரையிறுதியில் என்னுடைய பலமாக கருதப்படும் ஆஃப்-கட்டர்ஸ் பந்து மூலம் இந்தியாவை மிரட்ட முடியும் என முஸ்டாபிஜூர் ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
 
அரையிறுதியில் ஆஃப்-கட்டர்ஸ் பந்து மூலம் இந்தியாவை மிரட்டுவேன்: முஸ்டாபிஜூர் நம்பிக்கை
 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த லீக் போட்டிகள் முடிவில் இங்கிலாந்து, இந்தியா, வங்காள தேசம், பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் ‘ஏ’ பிரிவில் முதல் இடம் பிடித்த இங்கிலாந்தும், ‘பி’ பிரிவில் 2-வது இடம் பிடித்த பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளைமறுநாள் (15-ந்தேதி) நடக்கும் போட்டியில் ‘பி’ பிரிவில் முதல் இடம்பிடித்த இந்தியாவும், ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பிடித்த வங்காள தேசமும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.சி.சி. நடத்தும் முக்கியமான தொடரில் வங்காள தேசம் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடுவோம் என்று வங்காள தேச வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

201706131852098366_Mustafizur02-s._L_sty

இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் முதல் போட்டியிலேயே தனது ஆஃப்-கட்டர்ஸ் பந்து மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இந்த போட்டியில் 5 விக்கெட்டும், அடுத்த போட்டியில் 5 விக்கெட்டும், 3-வது மற்றும் கடைசி போட்டியில் 3-வது விக்கெட்டும் வீழ்த்தினார். மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவிற்கு எதிரான தொடரை வங்காள தேசம் 2-1 எனத் தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

201706131852098366_Mustafizur03-s._L_sty

ஆசிய கண்டத்தில் ஆஃப்-கட்டர்ஸ் பந்து மூலம் அசத்திய முஸ்டாபிஜூர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் திணறி வருகிறார். மூன்று போட்டிகளில் ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆனால், அரையிறுதி போட்டியில் ஆஃப்-கட்டர்ஸ் பந்து மூலம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

201706131852098366_mustafizur-s._L_styvp

இதுகுறித்து முஸ்டாபிஜூர் ரஹ்மான் கூறுகையில் ‘‘என்னுடைய பந்து வீச்சு சரியாக எடுபடவில்லை என்றாலும், முன்னேற்றத்தில் எந்த இடையூறும் இல்லை. என்னுடைய ஆஃப்-கட்டர்ஸ் பந்து வீச்சு அதிக தாக்கத்துடன் திரும்ப வலிமை பெறும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் என்னுடைய பந்து சரியாக இல்லை. ஆனால், நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

அரையிறுதிக்கு முன்னேறியுள்ளோம். இந்தியாவை எதிர்த்து விளையாட இருக்கிறோம். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். என்னால் எந்த அளவிற்கு சிறப்பான வகையில் பந்து வீச இயலுமோ, அந்த வகையில் பந்து வீசுவதற்கே எப்போதும் முயற்சி செய்வேன். நாங்கள் ஒவ்வொருவரும் அவரவரை நம்புகிறோம். ஒவ்வொருவருக்கும் அன்றைய நாள் சிறந்ததாக அமைந்தால், சிறந்தது நடக்கும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/13185206/1090665/Mustafizur-Rahman-hopes-his-off-cutters-work-against.vpf

  • தொடங்கியவர்

முதல் அரையிறுதி போட்டி: இங்கிலாந்து - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன.

 
முதல் அரையிறுதி போட்டி: இங்கிலாந்து - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை
 
கார்டிப்:

8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.

அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

அரையிறுதி போட்டி நாளை தொடங்குகிறது. கார்ப்பில் நடக்கும் முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து, ‘பி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

201706131245008459_eng%20lad._L_styvpf.g

இங்கிலாந்து ‘லீக்’ ஆட்டத்தில் தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணியில் கேப்டன் மார்கன், ஜோரூட், ஹால்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொய்ன்அலி, மார்க்வுட், புளுங்கெட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ஜோரூட் 3 ஆட்டத்தில் 212 ரன்னும், மார்கன் 175 ரன்னும் எடுத்து உள்ளனர். அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு சாதகமாக கருதப்படுகிறது.

அந்த அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது. ஏற்கனவே 2004, 2013-ம் ஆண்டு தகுதி பெற்று இருந்தது. ஆனால் 2 முறையும் கோப்பையை இழந்தது. இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு நுழைந்து கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

201706131245008459_paki%20t._L_styvpf.gi

சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி ‘லீக்’ ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது. அதன்பின் எழுச்சி பெற்று தென்னாப்பிரிக்கா, இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அந்த அணியில் அசார் அலி, பஹர் ஜமான், பாபர் ஆசம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது அமீர், இமாத்வாசிம், அசன்அலி, ஜூனைத்கான் போன்ற வீரர்கள் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி பேட்டிங்கைவிட பந்துவீச்சிலேயே சிறந்து காணப்படுகிறது. கணிக்க முடியாத அணி என்று வர்ணிக்கப்படும் அந்த அணி அதற்கு ஏற்றால்போல் தென்னாப்பிரிக்கா, இலங்கையை வீழ்த்தியது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்பில் உள்ளது. இதுவரை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கிடையாது. 3 முறை அரையிறுதி வரை வந்துள்ளது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

இப்போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/13124457/1090555/England-v-Pakistan-collide-in-CT17-semi-finals-tomorrow.vpf

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, இசைக்கலைஞன் said:

:D: tw_blush: :love:

மடப் பயலுகள்tw_dissapointed:tw_angry:...கட்ச்சுகளை விட்டு போயும் போயும் ஒரு சொத்தை டீமிடம் தோத்து இருக்கான்கள் இவங்களுக்க்கும்,செளத் ஆபிரிக்காகாரன்களுக்கும் அதிஸ்டம் என்பது கொஞ்சம் கூட இல்லை,<_<

  • தொடங்கியவர்

"சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் தீவிரம் குறையாமல் விளையாடுவோம்" - விராட் கோலி (வீடியோ இணைப்பு)

 

பங்களாதேஷிற்கு எதிரான சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் தீவிரம் குறையாமல் விளையாடுவோம் என இந்திய அணி தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா - பங்களாதேஷ் அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. சாம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பர்மிங்காம் மைதானத்திலே அரையிறுதிப் போட்டியும் நடைப்பெறவுள்ளது.

குறித்த போட்டியினை பற்றி உரையாடிய இந்திய அணித்தலைவர் கோலி, "நாங்கள் பர்மிங்காம் மைதானத்தில் விளையாடியுள்ளோம். இந்த களம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. எங்கள் ஆட்டத்துக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டோம், அந்த வெற்றியையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. முன்னேற வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

ஆசிய கண்டத்தை சேர்ந்த 3 அணிகள் சாம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிக் கட்டத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம் நாம் விளையாடும் ஆட்டங்களின் எண்ணிக்கை என்றே நினைக்கிறேன். நெருக்கடியான ஆட்டங்களில் வீரர்கள் அதிகமாக அனுபவம் பெறுகிறார்கள் என நினைக்கிறேன். தொடரில் சில அணிகள் எதிரணியை துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் ஆச்சரியப்படுத்தியுள்ளது" என்று கோலி கூறினார்

 

http://www.virakesari.lk/article/20886

  • தொடங்கியவர்

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்

 

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்

 
 
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பில் முதலில் ஈடுபட்டது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

தொடக்கத்தில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி இடையில் தடுமாற, அணி சார்பாக அதிகபட்சமாக பெய்ர்ஸ்டோவ் 43 ஓட்டங்களையும், ஜோ ரூட் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி, அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஜுனத் கான், அறிமுக வீரர் ரூமென் ராயிஸ் தலா 2 விக்கெட்டை சாய்த்தனர்.

இதனைத் தொடர்ந்து 212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 37.1 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக அசார் அலி 76 ஓட்டங்களையும், பஃகர் ஜமான் 57 ஓட்டங்களையும் குவித்ததுடன், பாபர் அசாம் 38, ஹபீஸ் 31 ஓட்டங்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தானர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

http://tamil.adaderana.lk/news.php?nid=92397

  • தொடங்கியவர்

இந்தியாவை இலங்கையால் வெல்ல முடியும் என்றால், வங்காள தேசத்தாலும் முடியும்- முன்னாள் கேப்டன்

இலங்கையால் இந்தியாவை வெல்ல முடியும் என்றால், எங்களாலும் முடியும் என்று வங்காள தேச அணியின் முன்னாள் கேப்டன் அஷ்ரபுல் கூறியுள்ளார்.

 
 
 
 
இந்தியாவை இலங்கையால் வெல்ல முடியும் என்றால், வங்காள தேசத்தாலும் முடியும்- முன்னாள் கேப்டன்
 
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

நாளை இந்தியா - வங்காள தேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியாவிற்கு அதிக அளவில் வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டாலும், வங்காள தேசம் அணி இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் என்பதையும் யாரும் மறுக்கவில்லை.

இந்நிலையில் இலங்கையால் இந்திய அணியை வெல்ல முடியும் என்றால், எங்களாலும் முடியும் என்று வங்காள தேச அணியின் முன்னாள் கேப்டன் மொகமது அஷ்ரபுல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அஷ்ரபுல் கூறுகையில் ‘‘லீக் ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்து 322 ரன்கள் இலக்கை எடுத்து இலங்கை அணியால் வெற்றி பெற முடியும் என்றால், எங்களால் ஏன் முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் ஒரு கட்டத்தில் 33 ரன்களுக்கும் நான்கு விக்கெட்டை இழந்த நிலையிலும், அதன்பின் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம்.

இரண்டு அணிகளும் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதனால் இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும். கார்டிஃப் எங்களுக்கு ராசியான மைதானம். கடந்த மாதம் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் வங்காள தேச அணிக்கு உத்வேகம் கிடைத்தது.

பவர்பிளே ஆன 10 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை நாங்கள் வீழ்த்திவிட்டால், அது எங்கள் அணிக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். ருபெல் மற்றும் தஸ்கின் ஆகியோரால் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீச முடியும். அவர்களால் இந்த தொடக்க பேட்ஸ்மேன்களை திணறடிக்க முடியும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/14201214/1090893/If-Sri-Lanka-can-beat-India-so-can-Bangladesh-says.vpf

  • தொடங்கியவர்

வங்காள தேசம் சிறப்பாக விளையாடுகிறது என்பதில் யாருக்கும் ஆச்சரியம் இல்லை: கோலி

வங்காள தேச அணி சிறப்பாக விளையாடி வருகிறது என்பதில் யாருக்கும் எந்த நேரத்திலும் ஆச்சரியம் இருக்க முடியாது என கோலி கூறியுள்ளார்.

 
வங்காள தேசம் சிறப்பாக விளையாடுகிறது என்பதில் யாருக்கும் ஆச்சரியம் இல்லை: கோலி
 
இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு வங்காள தேச அணி கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி கூறுகையில் ‘‘வங்காள தேச அணி எப்போதும் சவாலானதே. அவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிப்பது யாருக்கும் எந்த நேரத்திலும் ஆச்சரியம் இல்லை. அவர்களுடைய கிரிக்கெட் உண்மையிலேயே முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர்களுடைய செட்-அப்க்கு பாராட்டுக்கள். அந்த அணியின் சில முக்கிய வீரர்கள் பொறுப்புக்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நாளில் அவர் மிகவும் அபாயகரமானவர்கள். எல்லோரும் அதை உணர்ந்துள்ளார்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/14205644/1090897/No-surprise-anymore-to-anyone-that-Bangladesh-are.vpf

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் கிண்ண கனவோடு முதல் முறையாக இறுதி போட்டியிற்குள் நுழைந்த பாகிஸ்தான் (Highlights)

 

 

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணி மற்றும் இங்கிலாந்து அணி மோதிக்கொண்டன.

264413.jpg

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.அதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி சப்ராஸின் பந்துவீச்சு மற்றும் பாகிஸ்தான் அணியின் அபாராமான களத்தடுப்பினால் ஆரம்பம் முதல் ஓட்டங்களைப் பெறத் தடுமாறி இறுதியில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.

264411.jpg

இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 46 ஓட்டங்களையும் ஜொனி பெயஸ்ரோ 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் ஹசன் அலி மூன்று விக்கெட்டுக்களையும் யுனைட் கான் மற்றும் ரகுமான் ரயீஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் தமக்கிடையே பகிர்ந்துக்கொண்டனர்.

264405.jpg

212 என்ற இலகுவான  வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தங்களின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஹர் ரகுமான் மற்றும் அசார் அலி ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சினை பந்தாடி 21.1 ஓவர்களில் 118 ஓட்டங்களைக் குவித்த நிலையில் 57 ஓட்டங்களுடன் பஹர் ரகுமான் ஆட்டமிழந்தார்.

264393.jpg

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களைக் குவித்த அஷார் அலியும் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 37.1 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்து எட்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியினை சொந்த மண்ணில் வைத்து இலகுவாக வெற்றியடைந்தது. பாபர் ஆஷாம் 38 ஓட்டங்களுடனும் முகமட் ஹபிஸ் 31 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கையடைந்தனர்.

264388.jpg

இவ்வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி முதன்முறையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.போட்டியின் ஆட்டநாயகனான ஹசன் அலி தெரிவுச்செய்யப்பட்டார்.

 

 

http://www.virakesari.lk/article/20889

  • தொடங்கியவர்

பெரிய போட்டி அல்ல; எங்களுக்கு பெரிய வாய்ப்பு: அரையிறுதி குறித்து வ.தேச அணி பயிற்சியாளர்

 

 
வ.தேச அணி பயிற்சியாளர் சந்திக ஹதுரசிங்கா.
வ.தேச அணி பயிற்சியாளர் சந்திக ஹதுரசிங்கா.

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணி எந்த வித பதற்றமும் இல்லாமல் நிதானமாகவே வீரர்கள் உள்ளனர் என்று பயிற்சியாளர் ஹதுரசிங்கா தெரிவித்தார்.

2015 உலகக்கோப்பை காலிறுதியை அனைவரும் நினைவு படுத்துகின்றனர், அந்தத் தோல்விக்கு பழிவாங்கும் போட்டியெல்லாம் இல்லை. இந்தியாவுக்கு எதிராக நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆட வேண்டும். சவால் அளிக்க்த் திட்டமிட்டுள்ளோம் அவ்வளவே.

அணியின் உணர்வு நல்ல நிலையில் உள்ளது, நாங்கள் சாவதானமாக இருக்கிறோம். ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். தொடர் தொடங்கும் போது நான், இந்தத் தொடரில் அணி என்ன சாதிக்கிறதோ அது பெரியதாக இருக்கும் என்று கூறினேன், எனவே அரையிறுதிக்கு முன்னேறியது திருப்தி அளிக்கிறது.

அனைவருக்கும், பயிற்சியாளர்கள் உட்பட இதுதான் முதல் முறை, நாங்கள் எங்களை வெளிப்படுத்திக் கொள்வதே நோக்கம். இது பெரிய போட்டி அல்ல, எங்களுக்கு பெரிய வாய்ப்பு, எனவே மூத்த மற்றும் இளைய வீரர்களுக்கு எனது செய்தி என்னவெனில் இந்த வாய்ப்பை இருகைகளிலும் ஏந்திக்கொள்ளுங்கள் என்பதே.

அணிச்சேர்க்கை ஒரு மிகப்பெரிய சவால், எங்களிடம் போதுமான திறமை இருக்கிறது என்பது தெரியும், இளையோர் மூத்தோர் கொண்ட நல்ல அணிச்சேர்க்கை எங்களிடம் உள்ளது.

நாங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம், யார் எங்கள் எதிரணி என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் எங்களது திறமைகளை அதிகபட்சத்திற்குக் கொண்டு சென்று எங்களுக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கி கொள்வோம்.

நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இந்தியாவுக்கு எதிராக எங்களுக்கு யாரும் வாய்ப்பிருப்பதாக கருதவில்லை. இந்தியா சிறந்த அணி, ஆனால் அவர்களை வீழ்த்த முடியுமெனில் அது எங்களுக்கு ஒரு பெரிய சாதனையே.

இவ்வாறு கூறினார் வங்கதேச பயிற்சியாளர் ஹதுரசிங்கா.

http://tamil.thehindu.com/sports/பெரிய-போட்டி-அல்ல-எங்களுக்கு-பெரிய-வாய்ப்பு-அரையிறுதி-குறித்து-வதேச-அணி-பயிற்சியாளர்/article9726940.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

இந்தியாவை இலங்கையால் வெல்ல முடியும் என்றால், வங்காள தேசத்தாலும் முடியும்- முன்னாள் கேப்டன்

இலங்கையால் இந்தியாவை வெல்ல முடியும் என்றால், எங்களாலும் முடியும் என்று வங்காள தேச அணியின் முன்னாள் கேப்டன் அஷ்ரபுல் கூறியுள்ளார்.

 
 
 
 
இந்தியாவை இலங்கையால் வெல்ல முடியும் என்றால், வங்காள தேசத்தாலும் முடியும்- முன்னாள் கேப்டன்
 
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

நாளை இந்தியா - வங்காள தேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியாவிற்கு அதிக அளவில் வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டாலும், வங்காள தேசம் அணி இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் என்பதையும் யாரும் மறுக்கவில்லை.

இந்நிலையில் இலங்கையால் இந்திய அணியை வெல்ல முடியும் என்றால், எங்களாலும் முடியும் என்று வங்காள தேச அணியின் முன்னாள் கேப்டன் மொகமது அஷ்ரபுல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அஷ்ரபுல் கூறுகையில் ‘‘லீக் ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்து 322 ரன்கள் இலக்கை எடுத்து இலங்கை அணியால் வெற்றி பெற முடியும் என்றால், எங்களால் ஏன் முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் ஒரு கட்டத்தில் 33 ரன்களுக்கும் நான்கு விக்கெட்டை இழந்த நிலையிலும், அதன்பின் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம்.

இரண்டு அணிகளும் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதனால் இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும். கார்டிஃப் எங்களுக்கு ராசியான மைதானம். கடந்த மாதம் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் வங்காள தேச அணிக்கு உத்வேகம் கிடைத்தது.

பவர்பிளே ஆன 10 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை நாங்கள் வீழ்த்திவிட்டால், அது எங்கள் அணிக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். ருபெல் மற்றும் தஸ்கின் ஆகியோரால் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீச முடியும். அவர்களால் இந்த தொடக்க பேட்ஸ்மேன்களை திணறடிக்க முடியும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/14201214/1090893/If-Sri-Lanka-can-beat-India-so-can-Bangladesh-says.vpf

அடச் சீ...இலங்கையணிக்கு இந்த அவமானம் தேவையாtw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

சாம்பியன்ஸ் கிண்ண கனவோடு முதல் முறையாக இறுதி போட்டியிற்குள் நுழைந்த பாகிஸ்தான் (Highlights)

 

 

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணி மற்றும் இங்கிலாந்து அணி மோதிக்கொண்டன.

264413.jpg

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.அதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி சப்ராஸின் பந்துவீச்சு மற்றும் பாகிஸ்தான் அணியின் அபாராமான களத்தடுப்பினால் ஆரம்பம் முதல் ஓட்டங்களைப் பெறத் தடுமாறி இறுதியில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.

264411.jpg

இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 46 ஓட்டங்களையும் ஜொனி பெயஸ்ரோ 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் ஹசன் அலி மூன்று விக்கெட்டுக்களையும் யுனைட் கான் மற்றும் ரகுமான் ரயீஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் தமக்கிடையே பகிர்ந்துக்கொண்டனர்.

264405.jpg

212 என்ற இலகுவான  வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தங்களின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஹர் ரகுமான் மற்றும் அசார் அலி ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சினை பந்தாடி 21.1 ஓவர்களில் 118 ஓட்டங்களைக் குவித்த நிலையில் 57 ஓட்டங்களுடன் பஹர் ரகுமான் ஆட்டமிழந்தார்.

264393.jpg

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களைக் குவித்த அஷார் அலியும் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 37.1 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்து எட்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியினை சொந்த மண்ணில் வைத்து இலகுவாக வெற்றியடைந்தது. பாபர் ஆஷாம் 38 ஓட்டங்களுடனும் முகமட் ஹபிஸ் 31 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கையடைந்தனர்.

264388.jpg

இவ்வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி முதன்முறையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.போட்டியின் ஆட்டநாயகனான ஹசன் அலி தெரிவுச்செய்யப்பட்டார்.

 

 

http://www.virakesari.lk/article/20889

 

இந்தியாவிற்கு கப்பை தூக்கி குடுப்பதற்காகவே முக்கி,முக்கி பைனலுக்கு வந்திருக்கான்கள்...லூசுப் பயல்கள்

  • தொடங்கியவர்

கிரிக்கெட்: 'இந்தியா -பாகிஸ்தான்' போட்டிகளுக்கு இணையாகுமா 'இந்தியா-வங்கதேசம்' போட்டிகள்?

;சிவகுமார் உலகநாதன்பிபிசி தமிழ்
 

பிரிட்டனில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், வியாழக்கிழமையன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது.

கோப்புப் படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப் படம்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் போல தற்போது இந்தியா - வங்கதேசம் இடையிலான போட்டிகள் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள நிலையில், முந்தைய போட்டிகளில் இவ்விரு அணிகளின் பங்களிப்பு, இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை இந்த அலசல் விவரிக்கிறது.

Mahmudullahபடத்தின் காப்புரிமைPA

இந்தியா - வங்கதேசம் இதுவரை:

  • இதுவரை இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே 32 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில், இந்தியா 26 முறையும், வங்கதேசம் 5 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டியில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
  • இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடந்த கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 2 முறையும், வங்கதேசம் 2 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டியில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
  • 2015-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில், வங்கதேசத்தை 109 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
  • இப்போட்டியில் நடுவர் வழங்கிய ஒரு தவறான தீர்ப்பால், தாங்கள் தோல்வியடைந்ததாக குற்றம் சாட்டி வங்கதேச ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இந்திய வீரர்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள், இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே கருத்து மோதலை உருவாக்கியது.
  • உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் வங்கதேசம் 2-1 என்று இந்தியாவை தோற்கடித்தது. இத்தொடரின் போது தங்கள் அணியை ஆதரித்தும், மாற்று அணி வீரர்களுக்கு எதிராகவும் வங்கதேச மற்றும் இந்திய ரசிகர்கள் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்கள் இவ்விரு அணிகள் விளையாடும் போட்டிகளை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிகளுக்கு இணையாக பரபரப்பாக பார்க்கப்பட்டது.
உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், கோலிபடத்தின் காப்புரிமைAFP Image captionஉறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், கோலி

இந்நிலையில் வியாழக்கிழமையன்று நடக்கும் அரையிறுதி போட்டியில் மோதும் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து காண்போம்

இந்திய அணியின் பலம் :

  • இத்தொடரில் இந்திய மட்டைவீச்சாளார்களான ஷிகர் தவான், யுவராஜ் சிங், விராட் கோலி ஆகியோர் நல்ல நிலையில் விளையாடி வருவது, இந்தியாவுக்கு சாதகமான அம்சமாகும். ஒரு போட்டியை தவிர ரோகித் சர்மாவும் இத்தொடரில் சிறப்பாக பங்களித்துள்ளார்.
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கடைசி போட்டியில், இந்திய அணியின் ஃபீல்டிங் மிகச் சிறப்பாக அமைந்தது. மூன்று தென் ஆப்ரிக்க வீரர்களை இந்திய அணி ரன் அவுட் செய்ததால் அந்த அணியால் 191 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
  • பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய இரு அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியாக மற்றும் சிக்கனமாக பந்துவீசி எதிரணியை கட்டுக்குள் வைத்திருந்தனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பான பீல்டிங்கால் இந்திய அணி வெற்றிபடத்தின் காப்புரிமைBCCI Image captionதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பான பீல்டிங்கால் இந்திய அணி வெற்றி

பலவீனம்

  • பொதுவாக 'இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற பாணியில் வங்கதேச கிரிக்கெட் அணி விளையாடும். இதனால் அந்த அணி எவ்வாறு விளையாடும் என்று கணிப்பது இந்திய அணிக்கு சிரமமாகும்.
  • இலங்கை அணிக்கு எதிராக 321 ரன்கள் குவித்தும் இந்திய பந்துவீச்சாளர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கையை போன்று வங்கதேச மட்டைவீச்சாளர்களும் நன்கு அடித்து ஆடக்கூடியவர்கள் என்பது இந்திய அணிக்கு பாதகமாக அமையலாம்.
  • இதுவரை நடந்த போட்டிகளில், இந்திய அணியின் முதல் நான்கு மட்டைவீச்சாளர்களை தவிர மற்றவர்கள் நீண்ட நேரம் களத்தில் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விரைவாக சில விக்கெட்டுக்களை இழந்துவிட்டால், பின்னர் களமிறங்குபவர்கள் தடுமாறக்கூடும்.

வங்கதேச அணியின் பலம் :

  • நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கண்டிப்பாக வென்றே ஆக வேண்டும் என்ற சூழலில், மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளதால் வங்கதேச அணியினர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சுழல்பந்து வீச்சை திறம்பட சமாளிக்கும் வங்கதேச அணியை இந்திய சுழல்பந்துவீச்சாளர்களால் திறம்பட சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள், இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தங்கள் அணிக்கு அளிக்கும் கூடுதல் உத்வேகம் அந்த அணியின் பங்களிப்புக்கு சாதகமாக அமையலாம். 2015-இல் வங்கதேசத்தில் நடந்த தொடரில் அந்த அணி வென்றதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா சாதிக்குமா? சறுக்குமா?படத்தின் காப்புரிமைAFP

பலவீனம்:

  • அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களான கோலி, யுவராஜ், ரோகித் சர்மா மற்றும் டோனி போன்றோரில், ஓரிருவர் நிலைத்து நின்றால் இந்திய அணியால் மிகப் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியும்.
  • புவனேஷ்வர் குமார், அஸ்வின் போன்ற இந்திய பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாக பந்துவீசி வருவதால் அவர்களை அடித்தாட முற்பட்டு வங்கதேச அணி தனது விக்கெட்டுக்களை இழக்கும் அபாயம் உள்ளது.
  • அனுபவம் வாய்ந்த மட்டைவீச்சாளர்கள், அழுத்தம் அதிகமாக இருக்கும் முக்கிய போட்டிகளில் பலமுறை விளையாடிய வீரர்கள் என இரு அம்சங்களிலும் இந்திய அணி, வங்கதேச அணியை விட கூடுதல் பலத்துடன் உள்ளது.

http://www.bbc.com/tamil/sport-40271570

  • தொடங்கியவர்

சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி செயல்பட தவறி விட்டோம்: தோல்வி குறித்து மோர்கன் கருத்து

நாங்கள் இங்குள்ள (கார்டிப்) சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி எங்களை மாற்றிக்கொண்டு சரியாக செயல்பட தவறி விட்டோம் என்று தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கருத்து தெரிவித்துள்ளார்.

 
சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி செயல்பட தவறி விட்டோம்: தோல்வி குறித்து மோர்கன் கருத்து
 
கார்டிப் :

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து அணி, ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற பாகிஸ்தானுடன் மோதியது. இந்த போட்டியில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இங்கிலாந்தை பதம் பார்த்து விட்டது. தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறும் போது, ‘பர்மிங்காமில் விளையாடி விட்டு வந்த நாங்கள் இங்குள்ள (கார்டிப்) சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி எங்களை மாற்றிக்கொண்டு சரியாக செயல்பட தவறி விட்டோம். எல்லா சிறப்பும் பாகிஸ்தானையே சாரும். அவர்களின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 250 முதல் 260 ரன்கள் எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/15092156/1090940/We-failed-to-act-in-climatic-conditions-England-captain.vpf

  • தொடங்கியவர்

எங்களை விட இந்திய அணிக்கே கூடுதல் நெருக்கடி: சொல்கிறார் வங்கதேசம் கேப்டன்

சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இன்று நடைபெறவுள்ள நிலையில், தங்களை விட இந்திய அணிக்கே கூடுதல் நெருக்கடி என்று வங்கதேசம் கேப்டன் மஷ்ரப் மோர்டஸா தெரிவித்துள்ளார்.

 
எங்களை விட இந்திய அணிக்கே கூடுதல் நெருக்கடி: சொல்கிறார் வங்கதேசம் கேப்டன்
 
லண்டன்:

இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி எளிதில் வங்கதேசம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இங்கிலாந்து எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளதால் இந்தியா வங்கதேசம் போட்டிக்கு பலத்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், தங்களை விட இந்திய அணிக்கே கூடுதல் நெருக்கடி என்று வங்கதேசம் கேப்டன் மஷ்ரப் மோர்டஸா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நாங்கள் அரையிறுதியில் விளையாடுகிறோம். இது நெருக்கடியான போட்டி தான். ஆனால் எங்களுக்கு உள்ள நெருக்கடியை விட இந்திய அணிக்கு தான் கூடுதல் நெருக்கடி. ஏனெனில் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் கிரிக்கெட்டை அதிக அளவில் நேசிக்கின்றனர்” என்றார்.

சாம்பியன்ஸ் தொடரில் இதுவரை தரவரிசையில் டாப்பில் உள்ள தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட அணிகளுக்கு தரவரிசையில் பின் வரிசையில் உள்ள அணிகள் அதிர்ச்சி அளித்துள்ளது. அதனால் வங்கதேசமும் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்குமா என்று அச்சமும் இந்திய ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/15092451/1090941/Champions-Trophy-India-Are-Under-More-Pressure-Than.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.