Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 8.2.2017 at 4:44 PM, கவிப்புயல் இனியவன் said:

----

காதல் ஒரு சேலை..........
அளவாக இருந்தால் அழகு.........
அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!!

################

காதலித்துப்பார் .........
பகலில் நிலாதெரியும்.......
காதலில் தோற்றுப்பார் ......
இரவில் சூரியன் தெரியும் ..!!!

&
கவிப்புயல் இனியவன்

காதலைப் பற்றி.. அழகாக வர்ணிக்கின்றீர்கள்,  கவிப்புயல் இனியவன்.
எனக்கு இளவயதில்...  பெரிதாக காதலில்  நாட்டம் இருக்கவில்லை.
16 வயது அளவில்,  ஒரு  மூன்று  மாதம் ஒரு பெண்ணை காதலித்து, 
இரண்டு காதல் கடிதம் பரிமாறிக் கொண்டோம்.  
பின் அதனை தொடரவில்லை.

அந்நேரம் பல நண்பர்கள் இருந்த படியால்... எமது பொழுது போக்குகள் வேறு விதத்தில் இருந்தமையும், ஒரு காரணமாக இருக்கலாம்.

  • Replies 233
  • Views 43.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
31 minutes ago, தமிழ் சிறி said:

காதலைப் பற்றி.. அழகாக வர்ணிக்கின்றீர்கள்,  கவிப்புயல் இனியவன்.
எனக்கு இளவயதில்...  பெரிதாக காதலில்  நாட்டம் இருக்கவில்லை.
16 வயது அளவில்,  ஒரு  மூன்று  மாதம் ஒரு பெண்ணை காதலித்து, 
இரண்டு காதல் கடிதம் பரிமாறிக் கொண்டோம்.  
பின் அதனை தொடரவில்லை.

அந்நேரம் பல நண்பர்கள் இருந்த படியால்... எமது பொழுது போக்குகள் வேறு விதத்தில் இருந்தமையும், ஒரு காரணமாக இருக்கலாம்.

இது போதுமே உங்கள் காதல் வெற்றிக்கு
 16 வயதில் 3 மாதம் செய்த காதல் இன்றுவரை
நினைவில் இருப்பதே காதல்
 வாழ்த்துகள் 

  • தொடங்கியவர்

காதல் ...........
கிடைப்பது பாக்கியம்...............
காதலி ................
கிடைத்ததும் பாக்கியம் ..............
நீ ...................
இரண்டுமாய் கிடைத்தது............. 
பெரும் பாக்கியம் ..............!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

அவள்.....
மௌனமானாள்....
இதயம் ....
மௌன அஞ்சலி......
ஆகியது .......!!!

நியத்திலும் ....
கனவிலும் வராமல் .....
மரணத்தில் வருவதாய் ....
இருக்கிறாயா .....?

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நீ சொல்லும் .....
வார்த்தை ஆயுள் ரேகை .....
நீ தரும் காதல் 
இதய ரேகை .........!!!

உன்னை கண்டேன் 
என்னை கொன்றேன் ....!!!

உன் அழகுதான் 
எனக்கு மரண தண்டனை .....!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

நான் விடுவது ........
கண்ணீர் அல்ல ...............
காதலின் பெறுபேறு...........!!!

எனக்கு உன் வலிகள் ....
வலிப்பதில்லை இதயம்.... 
புண்ணாகி போனதால்......!!!

பூக்களால் ....
கவிதை எழுதுகிறேன் .....
நெருப்பாய் பார்க்கிறாய் .....
நான் கருகி விடுகிறேன் ....!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

உன் கண்ணில் நானும் .....
என்கண்ணில் நீயும்......
இருப்பது தான் காதல் .....!!!

இப்போ .....
உன் தலைகுனிவு .......!!!
என்னை சஞ்சலப்படுத்துதே ....!!!

பார்ப்பவர்களுக்கு ....
நாம் காதலர் -காதல்....
உன்னை விட்டு பிரிந்து...
வருவதை நான் அறிவேன்......!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

கண்ணீர் .....
விடும் கண்களுக்கு.....
தெரிகிறது காதலின் வலி......
காதல் .....
கொண்ட உனக்கு.....
என் தெரியவில்லை...
காதலின் வலி ....!!!

ஒவ்வொரு மனிதனும் 
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!

நான் ....
கண்திறக்கும் நேரம்...
யாரும் இருக்கட்டும்....
நான் எப்போதும் கண்....
மூடும் போதும் நீ.....
தான் வரவேண்டும் ...!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

கண்ணீர் .....
விடும் கண்களுக்கு.....
தெரிகிறது காதலின் வலி......
காதல் .....
கொண்ட உனக்கு.....
என் தெரியவில்லை...
காதலின் வலி ....!!!

ஒவ்வொரு மனிதனும் 
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!

நான் ....
கண்திறக்கும் நேரம்...
யாரும் இருக்கட்டும்....
நான் எப்போதும் கண்....
மூடும் போதும் நீ.....
தான் வரவேண்டும் ...!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

காற்று உருவம் ....
இல்லை -ஆனால்....
உன் மூச்சு உருவம் ...
தெரிகிறது ....!!!

நீ 
வரும் முன்னரே ......
உன் மூச்சு காற்று .....
என்னிடம் வருகிறது ....!!!

கடல் தொடும்.....
தொடுவானம் போல்......
நீ இருக்கிறாய் -நான்.......
உன்னை தொடும்
எண்ணத்தில் மன....
கப்பலில் அலைகிறேன் ....!!!

&
இனிக்கும் 
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

ஏய் மரங்களே ...
என்னவள் அருகில்...
வரும் போது நீங்கள்......
சுவாசிக்க கூடாது.....
அவள் வெளி சுவாசம் கூட....
எனக்கு தான் சொந்தம் ,,,,!!!

ஏய் பூக்களே....
உங்களுக்கு பூக்கத்தான்....
தெரியுமோ ...?
சிரிக்கத்தெரியாதோ ...?
என்னவள் உங்கள்
முன் சிரிக்கும் போது
சிரித்து பழகுங்கள் ......!!!

&
இனிக்கும் 
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

கவிதை எழுதும்போது....
மனதில் ஒரு முடிவு....
எடுப்பேன் -இந்த கவிதையில்...
உன்னை பற்றி எழுதவே....
கூடாது என்று -எப்படியும்....
கடைசி வரியில்.......
வந்துவிடுகிறாய் ...!!!

&
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

உன் வீட்டுக்கு வந்த....
எனக்கு - நீ ..........
கடித்து வைத்த லட்டை.........
எடுத்து சாப்பிட்டேன் .....
தூரத்தில் நின்று துள்ளி....
குதித்த நிகழ்வை......
எப்படி மறப்பேன் அன்பே ....!!!

நம் முதல் சந்திப்பில்.....
மௌனமாய் நீ இருந்தாய்.....
அதுதான் காதலில் மொழி.....
என்பதை இப்போதுதான்......
புரிந்துகொண்டேன் ....!!!
காதலில் மௌனத்தை
பலவீனமென  நினைப்பவர்கள்
காதலில் தோற்கிறார்கள் ...!!!

&
இனிக்கும் 
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

காதல் இருக்கும் ............
வரைதான் வாழ்க்கை ....
இருக்கும் ...........!!!

துடிக்காத இதயமும் .....
காதல் இல்லாத இதயமும்....
ஒன்றுதான்........!!!

காதல்  .....
அடிப்படை உணர்வு ....
தயங்காமல் காதல் செய் ......!!!

காதல் ....
ஒரு சொல் அல்ல ....
உலகின் அனைத்து .....
மொழியின் அகராதி.......!!!

காதல் செய் ....
உள்ளம் மாசு படாது ....
ஒளி வீசும்..........................!!!

தனக்கான ...........
காதலை தெரிவு செய்பவன் ...
அதிஸ்ரசாலி .................!!!

இறைவனின்........... 
பெரிய கொடை காதல் ....
பெரிய கொலையும் காதல் ..........!!!

மன்னித்துவிடு 
இதயத்தை திருடியத்தற்கு ...!!!

திருடிய பின்னும் .....
சந்தோசமாக இருப்பவர்கள்.... 
காதலர்............!!!

காதலை தவிர ............
கவிதை தெரியாதா ..? 
என்று கேட்கும்..........
உள்ளம் காதலால் ............
பாதிக்கப்பட்டுள்ளது...!!!

&
உங்கள் காதல் கவிஞர் 
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

சிரித்தது நீ ...
துன்பப்படுவது நான் ...!!!
@
கவிதை ஓடத்துக்கு ....
நீ தான் துடுப்பு...........!!!
@
பல‌முகம் இருந்தென்ன‌,,? 
தெரிந்த‌ முகம் நீ தான் ...!!!
@
பார்த்தாலே ஆயிரம் கவிதை....
சம்மதம் சொல் அகராதி எழுதுவேன்....!!!
@
நடை பழக்கினாள் தாய் ......
உடை பழக்கினாய் ....நீ....!!!
@
என் மனதின் உன் பாசம் ..
என் மரணம் வரை பேசும்.....!!!
@
கனவிலே எல்லா ......
காதலியும் உலக அழகி........!!!
@
பார்ப்பவர் கண்ணுக்கு நீ ......
தேவாங்கு எனக்கு நீ தேவதை.....!!!
@
இதயத்தில் இருப்பவளே .......
துடிக்கும் ஓசையில் தூங்கி விடாதே ...!!!
@
கல்லில் பாசியாக இருக்கிறேன்நீ 
மீனாக வந்து சாப்பிட்டுவிடு ...!!!

@
எஸ் ம் எஸ் கவிதைகள்
இருவரி திருவரி கவிதை
&
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது

----------------------------------------------

வியப்பாக இருக்கிறதா....? 

அதிர்ச்சியாக இருக்கிறதா.....?

இதுதான் உண்மை....................

இனி ஒரு மெரினா புரட்சி.......

தோன்றவே தோன்றாது..............!!!

 

மெரினா போராட்டம் ஒரு.......

இயற்கை இயக்கத்தால்......

தோன்றியது...........................

தலைவன் இல்லை.......

தோற்றியவனும் இல்லை.....

முடித்து வைத்தவனும் இல்லை.......

அது இயற்கை இயக்கத்தால்.....

தோன்றிய அற்புத போராட்டம்....!!!

 

எப்படி இணந்தார்கள்.....?

யார் இணைத்தார்கள்.......

எப்படி இப்படி ஒரு மாபெரும்.....

சக்தி திரண்டது..........?

எல்லமே ஒரு விசித்திர நிகழ்வு.......

எத்தனை சமூக ஊடகம்.....

பங்களிப்பு செய்தாலும் ......

அதற்கும் மேலாக ஒரு சக்தி.....

இயக்கியது என்றால் அதுமிகையல்ல.....!!!

 

இன்று அதே ஊடகங்கள் இருகின்றன.....

நாளையும் இருக்கத்தான் போகிறது.......

எந்த காலத்திலும் மெரினாபோல்.........

ஒரு போராட்டம் இனி எப்போதும்....

தோன்ற போவதுமில்லை.......

தோற்றிவிகக்வும் முடியாது......

மெரினா போராட்டம் ஒரு......

இயற்கை இயக்கத்தால் தோன்றியது.......!!!

 

&

கவிப்புயல் இனியவன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான போராட்டங்கள் சரியான நேரத்தில் நடந்தேறி உள்ளன. தமிழக இளைஞர்கள் யுவதிகளை இலகுவில் எடை போட முடியாத ஜீனியஸ் என்பது எனது கணிப்பு.
முடிந்தால் உலகின் எந்த மூலையில் உள்ள இளைஞர் யுவதிகளுடனும் ஒப்பிடுங்கள் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
1 minute ago, nunavilan said:

மிகச்சரியான போராட்டங்கள் சரியான நேரத்தில் நடந்தேறி உள்ளன. தமிழக இளைஞர்கள் யுவதிகளை இலகுவில் எடை போட முடியாத ஜீனியஸ் என்பது எனது கணிப்பு.
முடிந்தால் உலகின் எந்த மூலையில் உள்ள இளைஞர் யுவதிகளுடனும் ஒப்பிடுங்கள் பார்க்கலாம்.

100 சத வீத உண்மை உண்மை

  • தொடங்கியவர்

உன் முகம் பார்க்க.....
ஏங்கி ஏங்கி ஓரகண்ணால்...
கண்ணீர் வர வழைத்தவனே.....
உனக்கு அது சிறு துளி.....
எனக்கு அது இதயத்தின்.....
மொத்த வலி...................!!!

வேறு வழியில்லாமல்.....
இமைகளை மூடுகிறேன்.......
என் ஏக்கத்தை புரிந்து.....
கனவிலேனும் வருவாயா...?

^^^
என்னவனே என் கள்வனே 04
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

என் .......
குயில் குரலால்.....
உன்னை அழைத்து......
கழுகு கண்ணால் .....
உன்னை கொன்று.....
துடிக்க விடனும் என்று ....
மனம் ஆசைபடுகிறது......!!!

பாவம் - நீ
நடைபிணமாய் ...........
வாழ்ந்துவிடுவாய்......
என்பதற்காக உன்னை....
விட்டு விடுகிறேன்........
என்னவனே...........................!!!

^^^
என்னவனே என் கள்வனே 05
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎.‎02‎.‎2017 at 3:05 AM, கவிப்புயல் இனியவன் said:

இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது

----------------------------------------------

எந்த காலத்திலும் மெரினாபோல்.........

ஒரு போராட்டம் இனி எப்போதும்....

தோன்ற போவதுமில்லை.......

தோற்றிவிகக்வும் முடியாது......

மெரினா போராட்டம் ஒரு......

இயற்கை இயக்கத்தால் தோன்றியது.......!!!

 

&

கவிப்புயல் இனியவன்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதும் இயற்கை இயக்கத்தின் அத்திவாரமாக உள்ளதே.!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உனக்கு 
காதல் சின்னமாய்.......
தாஜ்மஹால் கட்டிவிட்டு....
உன் நினைவோடு.....
எகிப்து பிரமிட்டுக்குள்.....
அழியாத நினைவுகளுடன்....
சடலமாய் வாழ்கிறேன்......!!!

&
கவிப்புயல் இனியவன்
சின்ன கிறுக்கல்கள்
 

  • தொடங்கியவர்

நாம் .......
காதலில்  இரு.....
பிரதான ஒளி ............
நான் பகலில் சூரியன்.....
நீ இரவில் சந்திரன்........
அதனால் தானே இன்னும்.....
இணையாமல் இருகிறோம்........
வெட்டவெளியில் ஒற்றைமரம்....
தனித்து வேதனைபடுவது போல்.....
நம் காதல் தவிக்கிறது........!!!

&
கவிப்புயல் இனியவன்
சின்ன கிறுக்கல்கள் 

  • தொடங்கியவர்

உன்னோடு வாழ்ந்தவன் 
இப்போ உன் நினைவோடு 
மட்டுமே வாழ்கிறேன் ........!

உன்னை நேரே ..............
காதலிக்க முடியாது.............
கவிதையால்................
காதலிக்கிறேன் .................!

&
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

சாதாரண ..............
கண்ணுக்கும் ................
காதல் கண்ணுக்கும் ..................
வித்தியாசம் ...............
கண்டு பிடிக்காதவன் ..............
முட்டாள் .................!

துடிக்காத இதயமும் ...............
காதல் இல்லாத இதயமும்..........
ஒன்றுதான்...............
இருந்தென்ன வாழ்ந்தென்ன ....?

&
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

அவள் மனித தேவதை
--------------------------------
சூரியனின் பிரகாசதுக்கும்.......
சந்திரனின் குளிர்மைக்கும்.....
பிறந்தவள் என்பதால்.............
என்னவள் மனித தேவதையவள்.............!

பூக்களின் இதழ்களால்.....
திருமேனியானவள்.....
இசைக்கருவியின் இழைகளால்....
உடல் நரம்பானவள்..........
மெல்ல பேசினால் கூட........
மேனியது சிவக்கும்...........
நரம்புகள் இசைபாடும்.............!

மின்னல் கூட அவளை............
தீண்டமுடியாது மின்னனைவிட.......
சக்திகொண்ட கண்ணை......
கொண்டவள் என்பதால்............
கொவ்வை பழத்தை உதடாக......
கொண்டவள் என்றில்லை.........
கொவ்வைப்பழம் இவளிடம் .....
அழகை பெற்றதென்பேன்...................!

&
கவிப்புயல் இனியவன்
அவள் மனித தேவதை 01
 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நீ...............................................01
நான்........................................02
காதல்.....................................03
கற்பனை...............................04
நினைவுகள்............................05
வாக்கு வாதம்.........................06
காதலுக்கு வலி......................07
காதல் பிரிவு...........................06
முரண்பாடு............................05
விலகல்.....................................04
சோகம்.....................................03
வலி............................................02
போ.............................................01

&
கவிப்புயல் இனியவன்
காதல் பிரமிட்

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

பேசமுடியாத வயதில்.....
அழுகை மூலம் குழந்தையின்.....
நோயையும் பசியையும்.....
கண்டறியும் ஞானி தாய்......!

பொதுவாக.........
வெட்டினால் உறவு பிரியும்....
தொப்பில் கொடியை வெட்டிய.....
பின்னரே உறவு பெருகும்.......!

^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்
 

  • தொடங்கியவர்

தந்தையின் அழகு.....
முதுமையில் தெரியும்.....
ஒவ்வொரு தோல் சுருக்கமும்....
ஒவ்வொரு கடின தியாகத்தை.....
எடுத்து காட்டும்.......!

எனக்கு நினைவுள்ளவரை.....
கோயிலில் அவர் சுவாமி.....
சுமந்ததே இல்லை ஆனால்.....
என்னை தோளில் சுமக்காத.....
நாளே இல்லை.........................!

^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.