Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு - நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்றுக் காட்டம்

Featured Replies

இந்­தி­யத் தூத­ரக அதி­கா­ரி­கள் ஊடக சுதந்­தி­ரத்­தில் தலை­யீடு - நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் நேற்­றுக் காட்­டம்
 
 
இந்­தி­யத் தூத­ரக அதி­கா­ரி­கள் ஊடக சுதந்­தி­ரத்­தில் தலை­யீடு - நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் நேற்­றுக் காட்­டம்
ஊடக சுதந்­தி­ரத்­தில் இன்று இந்­தி­யத் தூத­ரக அதி­கா­ரி­கள் தலை­யி­டும் ஓர் அவல நிலை யாழ்ப்­பா­ணத்­தில் ஏற்­பட்­டுள்­ளது என்று குற்­றஞ்­சாட்­டி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ், கிளி­நொச்சி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈஸ்­வ­ர­பா­தம் சர­வ­ண­ப­வன். 
 
‘‘இந்­தி­யத்­து­ணை­தூ­த­ர­கம் மிக மோச­மாக இயங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்­தி­யா­விற்கு எதி­ரா­ன­தாக எந்­தக் கருத்­தும் எமது பத்­தி­ரி­கை­யில் வரக்­கூ­டாது என்­ப­தாக அவர்­கள் செயற்­ப­டு­கி­றார்­கள். தமது தூத­ர­கத்­திற்­குச் செல்­ப­வர்­க­ளி­டம் உத­யன் பத்­தி­ரி­கை­யில் ஏன் எழு­து­கி­றீர்­கள் என்று மிரட்­டு­கி­றார்­கள்.
 
 எமது பத்­தி­ரி­கை­யில் எழு­தி­னார் என்­ப­தற்­கா­கவே ஒரு­வ­ரின் கலா­நி­திப் படிப்­பைப் பாழ்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள். அவர் தனது கலா­நி­திப் படிப் பைப் பூர்த்தி செய்­யச் செல்­வ­தற்கு விசா வழங்க மறுத்­தி­ருக்­கி­றார்­கள். இதன் மூலம் ஊட­கத்­தின் சுதந்­தி­ ரத்தை முறை­மு­க­மா­கக் கட்­டுப்­ப­டுத்­தப்­பார்க்­கி­றார்­கள்.அவர்­க­ளின் செயல்­க­ளைப் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­ம­லுள்­ளது’’ என்­றார் அவர். 
 
இங்­கி­ருக்­கும் அதி­கா­ரி­கள் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்­காக இந்­தி­யாவை நாம் எதிர்க்கி­றோம், வெறுக் கி­றோம் என்று அர்த்­த­மல்ல என்­றும் அவர் தெரி­வித்­தார். தீர்வு விட­யத்­தில் இந்­தியா காத்­தி­ர­மான பங்கை ஆற்­ற­வேண்­டி­யி­ருக்­கி­றது என்று குறிப்­பிட்ட அவர், யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள தூத­ரக அதி­கா­ரி­க­ளின் இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் தமிழ் மக்­கள் மத்­தி­யில் இந்­தியா மீதான வெறுப்­பை­யும் விரோ­தத்­தை­யும்­தான் வளர்க்­கும் என்­றும் குறிப்­பிட்­டார். 
 
உத­யன் படு­கொலை
 
உலக ஊடக சுதந்­திர தினம் இன்று உலக நாடு­கள் எங்­கும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. 2006ஆம் ஆண்டு உலக ஊடக சுதந்­தி­ர­தி­னத்­திற்கு ஒரு இரவு முன்­ன­தாக, மே மாதம் 2ஆம் நாள் இரவு உத­யன் பத்­தி­ரிகை அலு­வ­ல­கம் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அந்­தத் தாக்­கு­தலை நினை­வு­கூ­ரும் வகை­யில் ‘வேட்கை’ என்ற பெய­ரில் ஈழத்­தின் மிகப் பெரும் ஊட­கப் படு­கொலை தினம் நேற்­றுக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. 
 
வடக்கு மாகாண சபை­யின் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவஞா­னம் நிகழ் வில் முதன்மை அதி­தி­யா­கக் கலந்­து­ கொண்­டி­ருந்­தார். மா◌காண சபை உறுப்­பி­னர்­கள், ஊட­க­வி­ய­லா­ளர்­கள், பொது­மக்­கள், உத­யன் பணி­யா­ளர்­கள் கலந்­து­கொண்­டி­ருந்த நிகழ்­வில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
 
எமது ஊட­க­வி­ய­லா­ளா்­கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் தொடா்­பாக அர­சி­னால் இப்­போ­து­தான் சில காய் நகர்த்­தல்­கள் செய்­யப்­ப­டு­வ­தா­கத் தெரி­கின்­றது. பல வழி­க­ளி­லும் இருந்­து­தொ­டர்ந்து கொடுக்­கப்­பட்ட நெருக்­கு­தல்­க­ளால் இந்த நகர்வு இடம்­பெற்­றுள்­ளது. எனி­னும் எவ்­வ­ளவு தூரம் நேர்­மை­ யாக இந்­தப் பிரச்­சி­னையை அவர்­கள் கையாள்­கி­றார்­களோ தெரி­யாது. 
 
தெற்­கில் லசந்த விக்­க­ர­ம­துங்­க­வின் படு­கொலை போன்ற சில சம்­ப­வங்­கள் மீது மட்­டுமே கவ­னம் செலுத்­தப் பட்­டுள்­ளது. ஆனால் அது­வும் இன்­னும் ஒரு காத்­தி­ர­மான கட்­டத்தை அடை­ய­வில்லை. எனவே எமது சம்­ப­வங்­கள் மீதான விசா­ர­ணை­ க­ளுக்­கும் என்ன நடக்­கும் என்­ப­தைக் காத்­தி­ருந்­து­தான் பார்க்­க­வேண்­டும். 
 
எமது முன்­னாள் செய்­தி­யா­சி­ரி­யர் க.குக­நா­த­னைப் படு­கொலை செய்ய முயற்­சித்­தார்­கள்.  2006ஆம் ஆண்டு தாக்­கு­தல் நடத்­தி­ய­வர்­கள் அவ­ரைக் கொலை செய்­வ­தற்­கா­கத் தேடித் திரிந்­தார்­கள். தெய்­வா­தீ­ன­மாக அவர் தப்­பித்­தார். இரண்­டாம் தடவை 2011ஆம் ஆண்டு அவரை மீண்­டும் கொல்ல முயற்­சித்­தார்­கள். 
 
அந்­தச் சம்­ப­வம் நடந்து ஒரு கிழ­மை­யில் அன்­றைய அரச தலை­வா் மகிந்த ராஜ­பக்ச சொன்­னா், இந்­தச் சம்­ப­வத்­தில் தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு சம் பந்­தப்­பட்­டுள்­ளது என்று. பின்­னா் சம்­பந்­தப்­பட்­ட­வர் யார் என்­ப­தைச் சூச­மா­கத் தெரி­வித்­தாா்­கள். அவர் ஒரு  சட்­டத்­த­ரணி. இன்­றும் தொழில் செய்­து­வ­ரும் சட்­டத்­த­ரணி. ஆனால் அவர் கைது செய்­யப்­ப­ட­வும் இல்லை. அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வும் இல்லை. அடுத்த தேர்­த­லில் அவர் மகிந்­த­வின் கட்­சி­யில் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யிட்டார்.
 
கூட்­ட­ர­சா­லும் பய­னில்லை
 
நாங்­கள் கடு­மை­யாக முயன்று இந்த விட­யம் சட்­டமா அதி­பா் திணைக்­க­ளம் வரைக்­கும் வந்­துள்­ளது. பல­ரும் வாக்­கு­மூ­லம் கொடுத்­து­விட்­டார்­கள். ஆனால் இது­வ­ரை­யும் நட­ வ­டிக்கை இல்லை. 2006ஆம் நடத் தப்­பட்ட படு­கொலை குறித்­தும் பொலி­ ஸா­ருக்கு சாட்­சி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆனா­லும் இன்­னும் நட­வ­டிக்கை எது­வும் இல்லை. 
 
இன்­றைய கூட்டு அரசு பத­வி­யேற்ற பின்­னர் அவர்­க­ளா­லும் இது­வ­ரை­யும் எத­னை­யும் செய்­ய­மு­டி­ய­வில்லை. மாறாக நேற்று நடந்த பேர­ணி­யில் மகிந்த ஆட்­சிக்கு வலுச் சோ்க்­கும் மாதிரி மக்­கள் அங்கு குவிந்­துள்­ளார்­கள். 
 
உத­யன் படு­கொ­லை­கள் தொடா்­பாக இந்த வரு­டம் விசா­ர­ணைக்கு எடுப்­ப­தா­கச் சொல்­லப்­பட்­டுள்­ளது. அடுத்த மே மாதத்­துக்கு இடை­யில் ஏதா­வது மாற்­றங்­கள் தென்­ப­டு­கின்­றதா என்று பாா்ப்போம். தற்­போது நேர­டி­யாக தாக்­கு­தல்­கள் இல்­லா­விட்­டா­லும் மறை­மு­க­மான அச்­சு­றுத்­தல்­கள்  இருக்­கின்­றன. 
 
இந்­தி­யத் தலை­யீடு
 
இப்போ மறை­மு­க­மாக அண்டை நாடு கொஞ்­சம் தலை­யி­டு­கின்­றது. முன்­ன­ரும் தலை­யிட்­ட­வா்­கள்­தான் அவர்­கள். தற்­போது எமது பத்­தி­ரி­கை­யில் இந்­தி­யா­வைப் பற்றி எதிர்­ம­றை­யாக எது­வும் வரக்­கூ­டாது என்று சொல்­கின்­றாா்­கள். இந்­தி­யக் கலை­ஞர்­களை இங்கு அழைத்து வரு­வது குறித்து எமது பத்­தி­ரி­கை­யில் தனது கருத்­தைத் தெரி­வித்­த­தற்­காக ஒரு­வ­ருக்கு இந்­தியா செல்­லும் விசா வழங்க மறுத்­தி­ருக்­கி­றார்­கள். 
 
உள்­ளூா்க் கலை­ஞா்­களை ஊக்­கி­விக்க வேண்­டும் வஎன்­று­தான் அவர் கூறி­யி­ருந்­ரு­தார். அது இவர்­க­ளுக்­குச் சுடு­கி­றது. உத­யன் பத்­தி­ரி­கை­யில் கட்­டு­ரை­கள் எழு­தி­னார் என்­ப­தற்­காக ஒரு­வ­ரின் கலா­நி­திப் படிப்­பைப் பாழ்படுத்­தியி­ருக்­கி­றார்­கள். அவர் தனது ஆய்­வுக் கட்­டு­ரை­யைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் முன்­வைக்­க­வேண்­டிய தரு­ ணத்­தில் அவ­ருக்கு விசா வழங்­கா­மல் அவ­ரது எதிர்­கா­லத்­தையே நாச­ மாக்­கி­யி­ருக்­கி­றார்­கள். 
 
இங்கே இருக்­கும் இந்­தி­யத் துணை தூத­ர­கம் மிக­மோ­ச­மாக இயங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது. அவா்­க­ளு­டைய செயற்­பா­டு­க­ளுக்கு செய்­கை­க­ளை­யும் பொறுக்­க­மு­டி­யா­துள்­ளது. வந்­தாா்­கள், இருந்­தா்ா­கள், போனார் கள், அபி­வி­ருத்­தியை செய்­தார்­கள் என்று இல்­லாம் எங்­களை வழி­ந­டத்­து­வ­தற்­கும் மறை­மு­க­மாக ஆக்­கி­ர­மிப்­ப­தற்­கும் முயன்­று­கொண்­டி ­ருக்­கின்­றாா்­கள்். 
 
யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள இந்­தி­யத் துணைத் தூத­ர­க­த­துக்­குப் பொறுப்­பா­ன­வா் அந்த மாதி­ரி­யான செயற்பா­டு­க­ளில் இறங்­கி­யுள்­ளார். மிகக் கேவ­ ல­மான   முறை­யில்   நடந்துகொள்கிறார். ஒரு தடவை அவர் என்­னி­டமே நேர­டி­யா­கப் பத்­தி­ரி­கை­யில் அப்­படி எழு­து­கி­றாா்­கள், இப்­படி எழு­து­கி­றாா்­கள் என்று சொன்­னாா். நடப்­பதை மக்­க­ளுக்கு சொல்­ல­வேண்­டும் அது­தானே பத்­தி­ரி­கை­யின் பணி. 
 
இந்­திய இரா­ணு­வத்­தி­னர் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்­த­போது யாழ். போதனா வைத்­தி­ய­சா­லைக்­குள் நுழைந்து சுட்­டார்­கள். அதில் மருத்­து­வர்­கள், தாதி­யர் எனப் பலர் உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளின் நினைவு தினம் ஒவ்­வொரு வரு­ட­மும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. அதைப் பத்­தி­ரி­கை­யில் செய்­தி­யாக வெளி­யி­டு­கி­றார்­கள். இங் குள்ள இந்­தி­யத் தூதர் கேட்­கி­றார், ஏன் அதனை மீண்­டும் மீண்­டும் போடு­கின்­றீா்­கள் என்று. 
 
வடக்கு கிழக்கு இந்­தி­யா­வுக்கா?
 
தெற்­கில் சீனா­வின் கை ஓங்­கு­வ­தால் வடக்கு கிழக்கை தங்­கள் பிடி­யில் வைத்­தி­ருக்­க­வேண்­டும் என்று அவர்­கள் விரும்­பு­கி­றார்­களோ தெரி­யாது. இது பற்றி கூட்­ட­மைப்­­பின் தலைமை நிச்­ச­யம் கவ­னத்­தில் எடுத்து நடந்­து­கொள்­ள­ வேண்டும். 
 
நட­ரா­ஜன் இந்­திய துணைத்­தூ­து­வா் அல்ல. அவ­ரது பத­வி­யின் பெயா் அது அல்ல. அவ­ரது பத­வி­யின் பெயர் கொன்­சூ­லர் ஜென­ரல். அவர் ஒரு அதி­காரி. அவ்­வ­ளவே! அவ­ருக்கு மேலே தூத­ர­கத்­தில் அதி­கா­ரம் உள்ள பத­வி­கள் எத்­த­னையோ  உள்­ளன. 
 
பத்­தி­ரிகை உண்­மையை உண்­மை­யா­கச் சொல்­லத்­தான்­வேண்­டும். அதை யாரும் கட்­டுப்­ப­டுத்த முடி­ யாது. எந்­தச் செய்­தி­யைப் போட­வேண்­டும் எதைப் போடக்­கூ­டாது என்று சொல்­லக்­கூ­டாது. வெளி­யிட்ட செய்­தி­யில் உங்­க­ளுக்கு உடன்­பாடு இல்­லா­விட்­டால் அல்­லது அது தொடர் பில் நீங்­கள் ஏதா­வது தீர்­வைப் பெற­வேண்­டி­யி­ருக்­கி­றது என்­றால் பத்­தி­ரிகை முறைப்­பாட்டு ஆணைக்­கு­ழு­வி­டம் முறை­யி­டுங்­கள். 
 
பத்­தி­ரி­கை­யில் உள்ள பிழையை சுட்­டிக்­காட்ட எல்­லா­ருக்­கும் உரிமை உள்­ளது. அதற்­காக அதன் சுதந்­தி­ர­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்த, அதனை மிரட்ட முனை­யக்­கூ­டாது. எங்­க­ளி­டம் பிழை இருந்­தால் அதனை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­வோம். அதைச் சுட்­டிக்­காட் டுங்­கள். 
 
இதற்­காக நாங்­கள் இந்­தி­யா­வுக்கு எதி­ரா­ன­வர்­கள், இந்­தி­யாவை வெறுப் ப­வர்­கள் என்று அர்த்­தம் அல்ல. இங் குள்ள சில அதி­கா­ரி­க­ளின் செயற்­பா­டு­க­ளால் அவ்­வா­றான ஒரு நிலை வந்­து­வி­டுமோ என்­று­தான் அஞ்­சு­கின்­றோம். தீர்வு விட­யத்­தில் இந்­தி­யா­வின் பங்­க­ளிப்பு அவ­சி­யம் என்­ப­தில் எமக்கு கருத்து வேற்­றுமை இல்லை. 
 
இந்­தியா ஈழத் தமி­ழர்­க­ளின் பக்­கம் இருக்­க­வேண்­டும் என்­ப­தைத்­தான் நாம் எதிர்­பார்க்­கி­றோம். ஆனால் புது­டில்­லி­யால் இங்கு நிய­மிக்­கப்­ப­டும் அதி­கா­ரி­களோ இந்­தி­யா­வை­யும் ஈழத் தமி­ழர்­க­ளை­யும் பகைத்­துக்­கொள்­ளச் செய்­து­வி­டு­வார்­கள் போன்று உள்­ளது -– என்­றார்.    

http://www.onlineuthayan.com/news/25962

13 hours ago, நவீனன் said:

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள இந்­தி­யத் துணைத் தூத­ர­க­த­துக்­குப் பொறுப்­பா­ன­வா் அந்த மாதி­ரி­யான செயற்பா­டு­க­ளில் இறங்­கி­யுள்­ளார். மிகக் கேவ­ ல­மான   முறை­யில்   நடந்துகொள்கிறார். ஒரு தடவை அவர் என்­னி­டமே நேர­டி­யா­கப் பத்­தி­ரி­கை­யில் அப்­படி எழு­து­கி­றாா்­கள், இப்­படி எழு­து­கி­றாா்­கள் என்று சொன்­னாா். நடப்­பதை மக்­க­ளுக்கு சொல்­ல­வேண்­டும் அது­தானே பத்­தி­ரி­கை­யின் பணி. 

சரவணபவனே சொல்லுமளவுக்கு ஹிந்திய தூதரகத்தில் இருக்கும் ஹிந்திய காடையர்களின் நடத்தைகள் மிகக் கேவலமான மட்டத்தை அடைந்துள்ளது! 

சரவணபவன் "அமைதிப்படை என்ற பெயரில் யாழில் அரங்கேறிய இந்திய இராணுவப் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் ஒரு தொடரை உதயனில் பிரசுரிக்கலாம்.

 

1 hour ago, போல் said:

சரவணபவன் "அமைதிப்படை என்ற பெயரில் யாழில் அரங்கேறிய இந்திய இராணுவப் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் ஒரு தொடரை உதயனில் பிரசுரிக்கலாம்.

 

'அமைதி படை எனும் இந்திய இராணுவத்தின்  படுகொலைகள்' என்ற தலைப்பில் விரும்பினால் நீங்களே ஒரு திரியை ஆரம்பிக்கலாம் போல். நானும் ஏனைய உறவுகளும் எமக்கு தெரிந்த விடயங்களை அதில் இணைக்க முடியும்.

8 hours ago, நிழலி said:

'அமைதி படை எனும் இந்திய இராணுவத்தின்  படுகொலைகள்' என்ற தலைப்பில் விரும்பினால் நீங்களே ஒரு திரியை ஆரம்பிக்கலாம் போல். நானும் ஏனைய உறவுகளும் எமக்கு தெரிந்த விடயங்களை அதில் இணைக்க முடியும்.

நல்ல ஆலோசனை!

  • கருத்துக்கள உறவுகள்
On 3.5.2017 at 9:10 PM, போல் said:

சரவணபவன் "அமைதிப்படை என்ற பெயரில் யாழில் அரங்கேறிய இந்திய இராணுவப் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் ஒரு தொடரை உதயனில் பிரசுரிக்கலாம்.

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die sitzen, Vogel und Text

போலுக்கு... பகிடியாய் இருக்குப் போலை. :grin:
யாழ்ப்பாணத்தில்  "எழுக தமிழ்"  நிகழ்ச்சி நடந்த  நாளில் 
"எள்ளெண்ணை  எரிக்க... இன்று, கடைசி நாள்"  என்று... முதல் பக்கத்தில், செய்தி  வெளியிட்ட   "உதயன்" பத்திரிகையா?
 "அமைதிப்படை என்ற பெயரில் யாழில் அரங்கேறிய இந்திய இராணுவப் பயங்கரவாதம்" என்ற தலைப்பில், கட்டுரை எழுதப் போகுது.

Edited by தமிழ் சிறி

On 4/5/2017 at 2:16 AM, நிழலி said:

'அமைதி படை எனும் இந்திய இராணுவத்தின்  படுகொலைகள்' என்ற தலைப்பில் விரும்பினால் நீங்களே ஒரு திரியை ஆரம்பிக்கலாம் போல். நானும் ஏனைய உறவுகளும் எமக்கு தெரிந்த விடயங்களை அதில் இணைக்க முடியும்.

நிழலியின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
விரைவில் ஒரு திரியை ஆரம்பிக்கிறேன்!

எங்கு ஆரம்பிப்பது என்றதொரு குழப்பம் உள்ளது!

Edited by போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.