Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா இனிவரும் காலத்திலாவது தனது தவறை திருத்திக்கொள்ளவேண்டும் – விக்கி

Featured Replies

ஐநா இனிவரும் காலத்திலாவது தனது தவறை திருத்திக்கொள்ளவேண்டும் - விக்கி

ஐநா இனிவரும் காலத்திலாவது தனது தவறை திருத்திக்கொள்ளவேண்டும் – விக்கி

l

ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டுருந்தால் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்காணோர் இறந்திருக்க மாட்டார்கள் என ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் முற்பகல் 10 மணியளவில் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரிக்கும் இடையில் சந்திப்பிலேயே மேற்குறித்த விடையம் தொடர்பில் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐக்கிய நாடுகள். சபையானது மாகாண அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாது மத்திய அரசுடன் மட்டும் தொடர்புகளை வைத்துகொண்டு செயற்படுகிறார்கள். இதனை ஏற்று கொள்ள முடியாது ஏற்கனவே மத்திய அரசு மாகாணத்தை புறந்தள்ளி தாம் நினைத்ததை செயற்படுத்தி வருகின்றது. எனவே அதனை ஏற்க முடியாது. இனிவரும் காலத்திலாவது ஐ நா இதனை திருத்தி மாகாண அரசுடனும் தொடர்புகளை பேணவேண்டும்.

குறிப்பாக 2009ம் ஆண்டு போர் இடம்பெற்ற காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை சிறப்பாக செயற்பட்டு மத்திய அரசின் செயல்பாட்டில் தலையிட்டிருந்தால் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் இறக்காது காப்பாற்றி இருக்கலாம் இனிவரும் கால்களிலும் அவ்வாறான ஒரு தவறை ஐ நா விடக்கூடாது என தான் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்

http://thuliyam.com/?p=66385

பல ஆயிரம் தமிழ் மக்கள் உயிரிழக்க ஐ.நாவும் காரணம்? வடக்கு முதல்வர் ஆதங்கம்

ஐ.நா சபை திறமையாக செயற்பட்டிருந்தால் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்காண தமிழ் மக்கள் உயிரிழந்திருக்க மாட்டர்கள் என்பதை ஐ.நா அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் சுட்டிக்காட்டியிருந்ததாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஐ.நா அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரிக்கும் இடையில் இன்று காலை விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ஐ.நா சபையானது மாகாண அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாது மத்திய அரசாங்கத்துடன் மட்டும் தொடர்புகளை வைத்துகொண்டு செயற்படுகிறார்கள். இதனை ஏற்று கொள்ள முடியாது.

ஏற்கனவே மத்திய அரசாங்கம் மாகாணத்தை புறந்தள்ளி தாம் நினைத்ததை செயற்படுத்தி வருகின்றது. எனவே அதனை ஏற்க முடியாது. இனிவரும் காலத்திலாவது ஐ.நா சபை மாகாண அரசுடனும் தொடர்புகளை பேணவேண்டும்.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி கட்ட யுத்த காலப்பகுதியில் ஐ.நா சிறப்பாக செயற்பட்டு மத்திய அரசின் செயல்பாட்டில் தலையிட்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான பொது மக்களை காப்பாறியிருக்கலாம்.

எவ்வாறாயினும், இனிவரும் காலங்களிலாவது அவ்வாறான ஒரு தவறை ஐக்கிய நாடுகள் சபை விடக்கூடாது என்பதை அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/144563?ref=view-latest

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Athavan CH said:

 

ஐநா இனிவரும் காலத்திலாவது தனது தவறை திருத்திக்கொள்ளவேண்டும் - விக்கி

ஐநா இனிவரும் காலத்திலாவது தனது தவறை திருத்திக்கொள்ளவேண்டும் – விக்கி

ஈழத்தமிழர் வரலாற்றில் "இனிவரும் காலங்கள்" என்ற வசனத்திற்கு இடமளிக்கக்கூடாது என்பது என் கருத்து.

அறுபது வருடத்திற்கு மேலாக அறுந்து அழிபட்டது போதும்.எமது பிரச்சனையை சிங்களத்திற்கும் ஐநாவிற்கும் பாலர் பாடசாலை நிகழ்ச்சிகள் போல் காட்டி தமிழ்மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம்.
ஈழத்தமிழர் பிரச்சனையை தெரியாதமாதிரி சிங்களவன் நடித்ததும் போதும்....குறிப்பிட்ட ஒருசில நாடுகள் நாடகமாடியதும் போதும்.

வழி தெரியாவிட்டால் மற்றவர்களுக்கு வழிவிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் வரலாற்றில் "இனிவரும் காலங்கள்" என்ற வசனத்திற்கு இடமளிக்கக்கூடாது என்பது என் கருத்து.

அறுபது வருடத்திற்கு மேலாக அறுந்து அழிபட்டது போதும்.எமது பிரச்சனையை சிங்களத்திற்கும் ஐநாவிற்கும் பாலர் பாடசாலை நிகழ்ச்சிகள் போல் காட்டி தமிழ்மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம்.
ஈழத்தமிழர் பிரச்சனையை தெரியாதமாதிரி சிங்களவன் நடித்ததும் போதும்....குறிப்பிட்ட ஒருசில நாடுகள் நாடகமாடியதும் போதும்.

வழி தெரியாவிட்டால் மற்றவர்களுக்கு வழிவிடுங்கள். 

இறுதி நேரத்திலும் குறைந்தளவு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஐக்கிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு சரணடைய எடுத்த முடிவுகள் இந்திய தரகன் நம்பியார் மூலம் ஐக்கிய நாடுகள் விலை போனதால் வந்த வினை.

நீதி எங்கே

நியாயம் எங்கே

ஐக்கிய நாடுகள் சபையே ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.