Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் காலமானார்

Featured Replies

sasrupavathy-1.jpg

இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் இன்று தனது 81வது வயதில் காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றி வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றுள்ளார். ஆரம்பத்தில்  ஆசிரியராக பணியாற்றிய அவர்  1965இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்  பகுதி நேர அறிவிப்பாளராக தனது அறிவிப்புத்துறையை ஆரம்பித்தார். 1969இல் நிரந்த அறிவிப்பாளரான அவர், தொடர்ந்து பல பதவிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வகித்திருக்கின்றார்.

இலங்கையில் செய்தி வாசிப்பு துறையிலும், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பிலும் சிறந்து விளங்கிய பெண்களில் இவர் மிகவும் பிரபலமானவராக கணிக்கப்படுகின்றார்.  ஒலிபரப்புத்துறைக்கு அப்பால் கொழும்பு தமிழ் சங்கத்தின் துணைத்தலைவராக இவர் நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். அத்துடன்  இலங்கை அரசாங்கத்தின் வானொலித் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

http://globaltamilnews.net/archives/25872

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறந்த ஒரு செய்தி வாசிப்பாளர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் செய்தி வாசிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்!

கமலினி செல்வராஜாவுடன் இவர் தயாரித்த ஒரு விளம்பரத்தின் வரிகள்..எனது நினைவில் இன்றும் உள்ளன!

 

மார் மேலே உனக்குத் தொட்டில் கட்டி....,

என் மடி மேலே...உனக்குப் பாலூட்டுவேன்...!

 

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.