Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி பெயரை குறிப்பிட்டது எனக்கு மிகப்பெரும் கௌரவம்

Featured Replies

மோடி பெயரை குறிப்பிட்டது எனக்கு மிகப்பெரும் கௌரவம்

மோடி பெயரை குறிப்பிட்டது எனக்கு மிகப்பெரும் கௌரவம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எனது பெயரை குறிப்பிட்டதை மிகப்பெரும் கௌரவமாக கருதுகிறேன் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளுக்காக இலங்கைக்கு வந்திருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மலையகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது, மக்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை பேசிய அவர், முத்தையா முரளிதரன், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களால் உலகுக்கு வழங்கப்பட்ட பரிசு என்று புகழ்ந்துரைத்தார்.

இதற்கு முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்,

தனது உரையின்போது எனது பெயரை அவர் (பிரதமர் மோடி) குறிப்பிட்டது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. உலகிலேயே மிகப்பெரும் ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், எனது சொந்த நாட்டில் எனது பெயரையும், நான் சார்ந்த சமூகத்தின் அடையாளத்தையும் அவர் குறிப்பிட்டுப் பேசியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்.

இந்தியாவுடன் எனக்கு மிகவும் நெருங்கிய உறவு உள்ளது. நான் தென்னிந்தியாவைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளேன். எனது மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள் தான். நாங்கள் அவர்களது 4 அல்லது 5வது தலைமுறையினர் ஆவோம்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மிகநெருங்கிய நட்புறவு நிலவுகிறது. இலங்கையின் மூத்த சகோதரனாக இந்தியா உள்ளது.

இலங்கைக்கு பல்வேறு உதவிகளை இந்தியா செய்து வருகிறது. எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்படும் என்று நம்புகிறேன் என்றார் முத்தையா முரளிதரன்.

http://tamil.adaderana.lk/news.php?nid=91443

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நவீனன் said:

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மிகநெருங்கிய நட்புறவு நிலவுகிறது. இலங்கையின் மூத்த சகோதரனாக இந்தியா உள்ளது.

அப்ப‌ பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையின் இளைய சகோதரர்களா? ....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

அப்ப‌ பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையின் இளைய சகோதரர்களா? ....

விடுங்க புத்து.. சேவ் சைட்டில் இருந்து கொண்டு எப்படியும் பந்து போடலாம். என்ன கவலை அவுங்களுக்கு. ரிஸ்க் சைட்டில இருக்கிறவன் தான் யோசிக்கனும்.. ஒவ்வொரு பந்துக்கும் எத்தனை ரன் போகுமுன்னு...! இவர் எப்பவும் தன்னை சேவ் சைட்டில் வைச்சுக்கிற ஆள். இப்ப இந்திய வம்சாவளி என்பார்.. அங்கால சிங்களவனட்டப் போனால்.. நான் கண்டியில் பிறந்து வளர்ந்த சிங்களவன் என்பார். விட்டுத்தள்ளுங்க. சொந்த தமிழ் உறவுகள்.. ஏன் சக மனிதர்கள் சொந்த நாட்டில்.. சாகடிக்கப்படும் போது துடிக்காதவங்க தான் இவங்க.. எல்லாம். போலிப் புகழ் தேடிகள். tw_bawling:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

ஏதோ மலையக மக்களுக்கு நல்ல வீடுகளும் கிடைத்து மற்றும் அவர்களின் வாழ்க்கை தரமும் உயர்வடைந்தால்  மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கு அந்த ரென்சனில.. ரண்டு பெயர் தான் ஞாபகம் வந்திருக்கு. எடுத்து விட்டிருப்பார். அதுக்குப் போயி.. இவரு.............tw_blush:

Just now, putthan said:

ஏதோ மலையக மக்களுக்கு நல்ல வீடுகளும் கிடைத்து மற்றும் அவர்களின் வாழ்க்கை தரமும் உயர்வடைந்தால்  மகிழ்ச்சி

நம்புறீங்க. போர் முடிந்து 8 ஆண்டுகளாச்சு. 50,000 வீட்டுத் திட்டம் முடிஞ்சு வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் சுயாட்சிய சுய மரியாதையோடு வாழுறதை பார்க்கிறீங்கல்ல. இதேதான் அங்கும். வந்தமா.. மீடியாக்களை உசுப்பேத்தினமா.. போனமா.. மறந்தமா.. என்றிருக்கனும். அதுதான் இந்திய உபகண்ட சன நாய அக அரசியல். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

மோடிக்கு அந்த ரென்சனில.. ரண்டு பெயர் தான் ஞாபகம் வந்திருக்கு. எடுத்து விட்டிருப்பார். அதுக்குப் போயி.. இவரு.............tw_blush:

நம்புறீங்க. போர் முடிந்து 8 ஆண்டுகளாச்சு. 50,000 வீட்டுத் திட்டம் முடிஞ்சு வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் சுயாட்சிய சுய மரியாதையோடு வாழுறதை பார்க்கிறீங்கல்ல. இதேதான் அங்கும். வந்தமா.. மீடியாக்களை உசுப்பேத்தினமா.. போனமா.. மறந்தமா.. என்றிருக்கனும். அதுதான் இந்திய உபகண்ட சன நாய அக அரசியல். tw_blush:

ஆஸ்பத்திரி புதுசு மாதிரி தெரிகின்றது...எதோ கொஞ்சம் கிடைக்கும் என்று நம்பலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால இன்னொரு திரியில மூளையை யோசிச்சி செயயோனும்,அவசரப்பட்டு அடிக்க கூடாது என்டு அட்வைஸ் அதையே முர்ளி செய்தால் சிங்களவனுக்கும்,இந்தியனுக்கும் ஜால்ரா பிடிக்கிறான் என்ட பட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எனது பெயரை குறிப்பிட்டதை மிகப்பெரும் கௌரவமாக கருதுகிறேன் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

அட ஞான -----! அவருக்கு வேறை ஆக்களை தெரி----....அந்த கிரிக்கெட் இல்லாட்டி ----.:cool:

Edited by நிழலி
ஒருமையில் எழுதப்பட்டவை நீக்கப்பட்டன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.