Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு மாகாணமும் பங்காளராக மாறவேண்டும்

Featured Replies

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு மாகாணமும் பங்காளராக மாறவேண்டும்

p28-70de121ac6da3a2ec0e65fcb468dba851a6256b9.jpg

 

யாழ்.செயலக கூட்டத்தில் பிரதமர் ரணில் வலியுறுத்தல்

(எம்.நியூட்டன்)

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு மாகாணமும் பங்காளராக வேண்டு மெனக் கோரிய பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க, முதற்கட்டமாக வடக்கு கிழக்  கில் ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி மற்றும் ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

பொருளாதார மேம்பாட்டிற்காக விசேட செயலணிகள் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிட்ட அவர், வடக்கின் வீட்டுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் மேலும் வீடுகளை வழங்கவுள்ளதாகவும் வடக்கில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கு அவ்வரசாங்கம் பரிந்துரைகளை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அரசபொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன்,வஜிர அபேவர்த்தன, சாகலரட்ணாயக்க, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலாமகேஸ்வரன் ஆகியோர் உட்பட கூட்டமைப்பு எம்.பி.க்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில், மிகச் சொற்ப காலத்தில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தமைக்காக முதலில் வடமாகாண முதலமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.  

பொருளாதார அபிவிருத்தியில் வடமாகாணத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வருகை தந்திருக்கின்றேன். குறிப்பாக நிர்மாணக் குறைப்பாடுகள், மீள்குடியேற்றத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

விசேடமாக காணிகளை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன. வேலையில்லாதோர் பிரச்சினைகள், வருமானத்தை அதிகாரித்தல் போன்ற பிரச்சினைகளும் காணப்படுகின்றன. யுத்தத்தின் முன்னரும் பின்னரும் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை தான் நாம் எடுத்து வருகின்றோம். அதனடிப்படையிலேயே தான் அபிவிருத்தி மிகவும் முக்கியமாகின்றது.  

முரண்பாடுகளின் பின்னரான காலத்தில் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்கப்படவில்லை. காணி, மீள்குடியேற்றம், தேசிய இனப்பிரச்சினை போன்றவை இதனுள் அடங்குகின்றன. விசேடமாக இனப்பிரச்சினைக்காக தீர்வை காண்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அதேநேரம் பொருளதார அவிருத்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

வேலையில்லாத பட்டதாரிகள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களின் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக முதற்கட்டமாக ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி மற்றும் ஆசிரிய சேவையினுள் உள்வாங்குதற்கு மாகாண சபைகள் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அது தொடர்பான கலந்துரையாடலும் நிறைவுபெற்றுள்ளது. அத்துடன் ஏனைய துறைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கும் ஏனைய பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதேநேரம் பட்டதாரிகள் தவிர்ந்து ஏனையவர்களின் வேலைவாய்ப்பு குறித்தும் நாம் அவதானம் செலுத்தவேண்டியுள்ளது. விசேடமாக பாடசாலைக்கல்வியுடன் வேலைவாய்ப்பினை தேடுபவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. அதற்குரிய வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியுள்ளது. வடமாகாணம் மட்டுமல்ல நடாளவிய ரீதியில் இதற்குரிய திட்டமொன்றை வகுப்பது குறித்து அவதானம்செலுத்தி வருகின்றோம்.

இந்துமா சமுத்திரப்பிராந்தியத்தில் இலங்கையை பொருளாதார கேந்திர நிலைமையாக மாற்றுவதே எமது பிரதான இலக்காகும். அதற்கென முதற்கட்டமாக நான்கு மாகாணங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இந்த இலக்கை அடைவதற்காக பல்இலக்குகளைக் கொண்டு மத்திய, மாகாண, அரசாங்கங்கள் மற்றும் தனியார் துறையினர் அனைவரும் இணைந்தே செயற்படவேண்டியுள்ளது.

இதற்காக எம்மிடத்தில் குறுகியகால மற்றும் மத்திய, நீண்டகால திட்டங்கள் காணப்படுகின்றன. நாம் மத்திய மற்றும் நீண்டகால திட்டங்களில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை இலக்காக கொண்டிருக்கின்றோம்.

குறுகியகால திட்டங்களில், கைத்தொழில், சுயதொழில் மேம்பாடு, உற்பத்தி துறையை அதிகாரித்தல் ஆகிய விடயங்களை முன்னேற்றுவது குறித்து கவனத்தைக் கொண்டிருக்கின்றோம்.

இந்திய அரசாங்கத்தினுடைய கலந்துரையாடல்களின்போது வடமாகாணத்திற்கு அதிகளவான நிர்மாணங்களை வடக்கில் மேற்கொள்வதற்கான கலந்துரையால்களை செய்துள்ளோம். இந்திய அமைச்சர் கட்காரியுடனான சந்திப்பில் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பது குறித்த யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அதன் அங்கமாக வடக்கு மாகாணத்தில் வீதிப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையிலும் வவுனியாவிலிருந்து மன்னார் வரையிலும் மன்னாரிலிருந்து திருகோணமலை வரையிலும் நெடுஞ்சாலைகளை அமைக்கப்படவுள்ளன.

எதிர்காலத்தில் இந்த நெடுஞ்சாலை தொகுதியானது இலங்கையின் மத்திய நெடுஞ்சாலை கட்டமைப்புடன் குருநாகலில் இணைக்கப்படும். ஏ9 வீதி பிரதானமாக அவ்வாறே இருக்கும். இந்த திட்டங்கள் அமுலாகின்றபோது பாரியளவிலான வேலைவாய்ப்புக்களும் ஏற்படும்.

மேலதிக வீடுகள்

இதற்கு மேலதிகமாக எமக்கு வீட்டுத்திட்டங்கள் மேலதிகமாக தேவைப்படுகின்றன. இந்திய அரசாங்கம் மேலதிகமாக வீடுகளைவழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இதன்மூலம் வடமாகாணத்தின் மீள்குடியேற்றத்தேவையை பூரணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

அந்த வகையில் நெடுஞ்சாலை அமைப்பது குறித்த பரிந்துரை திட்டம் தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. அமைச்சர் கட்காரியும் இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார்.

200 வீத வரிச்சலுகை

அடுத்தாக நாம் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். குறிப்பாக முதலீட்டாளர்களுக்கு விசேட ஊக்குவிப்புக்களை வழங்குவது குறித்து சர்வதேச நாணயநிதியத்துடன் கலந்துரையாடல்களைச்செய்து வருகின்றோம். நூற்றுக்கு நூறுவீதமான வரிச்சலுகை அளிப்பதற்கு தயாராகவிருக்கின்றோம். வடக்கில் 2019ஆம் அண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னராக காலப்பகுதியில் 200சதவீத வரிச்சலுகையை அளிப்பதற்கு உள்ளோம்.

தற்போது வௌிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பான விசேட செயலணியொன்று நிறுவப்பட்டுள்ளது. அவர்கள் வடக்கில் விசேடமாக யாழ்.மாவட்டத்தில் ஆய்வுகளை செய்யவுள்ளனர். அதற்கான பணிப்புரைகளை செய்துள்ளேன்.

அதேநேரம் வடக்கில் விவசாயத்துறையையும் மீன்பிடியையும் எவ்வாறு மேபடுத்துவது என்பது குறித்து பார்க்கவேண்டியுள்ளது. ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை கிடைத்தன் ஊடாக மேலதிகமாக மீன்களையும், விவசாய உற்பத்திகளையும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் எமக்குள்ளன. அதேபோன்று இந்தப்பகுதிக்கு பொருத்தமான சுற்றுலாத்துறை குறித்தும் அவதானிக்க வேண்டும்.

குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் பாதையானது சுற்றுலாத்துறைக்கு பொருத்தமானதாக இருக்கின்றது. அதேபோன்று சுற்றுலாத்துறைசார்ந்த விசேட செயலணியும் யாழுக்கு வருகை தரவுள்ளது.

அத்துடன் நில நன்கொடை முகவர் அமைப்புக்கள் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்திசெய்வது மற்றும் விமான சேவைகளை வழங்குவது குறித்து கலந்துரையாடியுள்ளன. குறிப்பாக சிறிய விமான சேவைகளை ஏனைய மாகாணங்களைளுக்கிடையில் வழங்குவது குறித்தும் சிந்திக்கப்படுகின்றது. இதுபோன்று பல துறைகளிலும் மேம்பாடுகளை செய்வது குறித்து நாம் அக்கறை கொண்டுள்ளோம். இது சம்பந்தமாக ஜனாதிபதியுடனும் நான் நீண்டகலந்துரையாடலொன்றை செய்துள்ளேன்.

வடக்கு கிழக்கில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் அங்கங்களான மீள்குடியேற்றம், நல்லிணக்கம், புனர்வாழ்வு ஆகிய செயற்றிட்டங்கள் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வருமான வழிகள் மற்றும் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தல் ஆகியவிடயங்கள் மேலும் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

பாராளுமன்றஉறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடத்தில் வேலைவாய்புக்கள் கோரப்படுவதால் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைககளுக்கு தீர்வைப்பெறுவதற்காக செயற்படுவதோடு வடக்கு மாகணமானது மத்திய பொருளாதார வளர்ச்சியின் பங்களராக வேண்டும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-20#page-1

  • தொடங்கியவர்

2019க்கு முன் வடக்­கில் முத­லீடு செய்­வோ­ருக்கு முழுத் தீர்வை விலக்கு

 
2019க்கு முன் வடக்­கில் முத­லீடு செய்­வோ­ருக்கு முழுத் தீர்வை விலக்கு
 
  •  
  •  
  •  
  •  
  •  

2019ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் 31ஆம் திக­திக்கு முன்­னர் வடக்­கில் முத­லீடு செய்­ப­வர்­க­ளுக்கு முழு­மை­யான வரி விலக்கு வழங்­கப்­ப­டும். எனவே வடக்­கில் முத­லீட்­டுக்­குப் பொருத்­த­மான இடங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­மாறு, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்­றுக் கேட்­டுக் கொண்­டார்.

‘பல­மிக்­க­தோர் இலங்கை’ பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தொடர்­பில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று மாலை கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்­க­ளான சாகல ரத்­நா­யக்க, வஜிர அபே­வர்த்­தன, சுவா­மி­நா­தன், இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சேனா­தி­ராசா, ஈ.சர­வ­ண­ப­வன், எம்.ஏ.சுமந்­தி­ரன், த.சித்­தார்த்­தன், சி.சிறி­த­ரன், வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன், வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராஜா, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள், அரச அதி­கா­ரி­கள் இதில் கலந்து கொண்­டி­ருந்­த­னர்.

இங்கு உரை­யாற்­றிய தலைமை அமைச்­சர், “நாட்­டின் ஏனைய மாகா­ணங்­க­ளுக்கு இணை­யாக வடக்­கின் பொரு­ளா­தா­ரத்­தை­யும் அபி­வி­ருத்தி செய்ய வேண்­டும். இலங்கை முழு­வ­தும் 5 பொரு­ளா­தார வல­யங்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு – கிழக்­குப் பொரு­ளா­தார வல­யத்­து­டன் அனு­ரா­த­பு­ரம் மற்­றும் பொல­ந­றுவை மாவட்­டங்­கள் இணைக்­கப்­பட்­டுள்­ளன” என்று தெரி­வித்­தார்.
“முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு வடக்­கில் பொருத்­த­மான இடங்­களை அடை­யா­ளப்­ப­டுத்த வேண்­டும்.

2019ஆம் ஆண்டு இறு­திக்­குள் முத­லி­டு­ப­வர்­க­ ளுக்கு முழு­மை­யான வரிச் சலுகை வழங்­கப்­ப­டும். 200 சத­வீ­தம் அவர்­க­ளுக்கு வரிச்­ச­லுகை வழங்­கப்­ப­டும். இத­னைப் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்” என்று தலைமை அமைச்­சர் கேட்­டுக் கொண்­டார்.

வடக்­கில் தொழில்­நுட்­பத் துறை­யில் தகு­தி­யா­ன­வர்­களை அடை­யா­ளம் காண்­ப­தற்கு முத­லீட்­டா­ ளர்­கள் சிர­மப்­ப­டு­வ­தா­க­வும் ரணில் சுட்­டிக்­காட்­டி­னார்.

“இலங்­கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை கிடைத்­துள்­ளது. ஆடை ஏற்­று­ம­திக்கு அடுத்ததாக மீன் ஏற்­று­ம­தியே முக்­கி­ய­மா­ னது. வடக்கு – கிழக்­கில் மீன் ஏற்­று­மதி ஊடாக, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலு­கை­யின் நன்­மையை இந்­தப் பிராந்­தி­ய­மும் பெற்­றுக் கொள்ள வேண்­டும்” என்­றும் தலைமை அமைச்­சர் கூறி­னார்.

இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின் போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், “இங்கே முத­லீடு செய்ய வரு­ப­வர்­கள் அனு­ம­தி­க­ளைப் பெற்­றுக் கொள்­வ­தற்கு அதி­கா­ரி­கள் பின்­னால் அலைந்து திரிய வேண்­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது. முத­லீட்­டா­ளர்­கள் அலைக்­க­ழிக்­கப்­ப­டு­கின்­ற­னர்” என்­ப­தைச் சுட்­டிக் காட்­டி­னார். இத­னைக் கவ­னத்­தில் எடுப்­ப­தாக தலைமை அமைச்­சர் பதில் வழங்­கி­னார்.

அர­சி­யல் தரப்­பி­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டல் முடி­வ­டைந்த பின்­னர், அதி­கா­ரி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. இதற்கு தலைமை அமைச்­ச­ரின் செய­லர் சமன் எக்­க­நா­யக்கா தலைமை தாங்­கி­னார். ‘பல­மிக்­க­தோர் இலங்கை’ செயற் றிட்­டம் தொடர்­பில், தலைமை அமைச்­சர் அலு­வ­ல­கத்­தின் மூத்த உத­விச் செய­லர் அச்­சு­தன் விளக்­க­ம­ளித்­தார்.

http://uthayandaily.com/

வடக்கு மாகாணத்தை கீழ்த்தரமானதாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் – வடக்கு முதல்வர்!

வடக்கு மாகாணத்தை கீழ்த்தரமானதாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் - வடக்கு முதல்வர்!

 

ஒழுக்கமற்ற முதலீட்டாளர்களின் நலனுக்காக வடக்கு மாகாணத்தை கீழ்த்தரமான ஒரு மாகாணமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

நேற்றையதினம் வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது.

இதன்போது வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 வீத வரி விலக்களிப்பு வழங்குவதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் முதலீடுகளுக்காக வட மாகாணத்தை கீழ்த்தரமாக பயன்படுத்த எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஒழுக்கமற்ற முதலீட்டாளர்களின் நலனுக்காக ஒரு அடிமட்ட மாகாணமாக வடமாகணத்தை பயன்படுத்த இடமளிக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை பற்றி பெருமிதம் கொள்கிறோம்.  நாங்கள் எங்கள் சொந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். மாறாக வெளியிலிருந்து வரும் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயற்பட நாம் தயார் இல்லை என இத்னபோது குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அரசியலில் சமஷ்டி அடிப்படையிலான கூட்டாட்சியை விரும்புவது போல் பொருளாதார துறையில் முழுமையாக இணைந்து செயற்பட நாம் நிச்சயமாக தயாராக உள்ளோம் எனவும் வடமாகாண சபை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=68261

  • தொடங்கியவர்

பலாலி வானூர்தி நிலையத்தை சீரமைக்க நிதி தேடுகிறது அரசு

பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாக மாற்றியமைப்பது தொடர்பில், தொழில்நுட்ப மீள் மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  அதனை அபிவிருத்தி செய்வதற்கான பொருத்தமான நிதி வழங்கு நரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்து ரையாடலிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
 
பலாலி வானூர்தி நிலையத்தை, பிராந்திய வானூர்தி நிலையமாக மாற்றுவது தொடர்பில் பேசப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் மாவை.சேனாதிராசா ஆகியோர், தற்போதுள்ள காணிக்கு மேலதிகமாக மக்கள் காணியைச் சுவீகரிக்கா மல் இதனைப் பிராந்திய வானூர்தி நிலையமாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
 
“இந்தியத் தொழில் நுட்பக் குழுவினர் வானூர்தி நிலை யத்தை ஆராய்ந்தனர். தற்போதுள்ள ஓடுதளமே, பிராந்திய வானூர்தி நிலையமாக மாற்றுவதற்குப் போதுமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் வான் படையினர், பிராந்திய வானூர்தி நிலையமாக மாற்று வதற்கு மக்களின் காணிகள் மேலும் தேவை என்று குறிப்பிடுகின்றனர்” என்று தலைமை அமைச்சருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளால் எடுத்துரைக்கப்பட்டது.
 
இதன் பின்னர் பதில் வழங்கிய தலைமை அமைச்சர், “தொழில்நுட்ப மீள் மதிப்பீடு செய்யப்படும். பலாலி வானூர்தி நிலையம் பிராந்திய வானூர்தி நிலையமாக மாற்றப்படும். இதனை அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான நிதி வழங்குநரைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்” என்றார்.
 
பலாலி வானூர்தி தளத்தின் அபிவிருத்திப் பணியை இந்தியாவே மேற்கொள்ளும் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

http://uthayandaily.com/story/3561.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்துக்கானதல்ல எந்த அபிவிருத்தியும். அவை ஒரு பக்கச்செயற்பாடே. பலாபலனைப் பல்தேசிய நிறுவனங்களும் பாதுகாப்புத் தரப்பினரும் பங்குபோட்டுக்கொள்வர். இவற்றுக்கு முன்பாக வட-கிழக்கிணைந்ததீர்வொன்றை வைத்தாலே போதும்போதும் வட-கிழக்கிணைந்த பொருண்மிய கட்டமைப்பை நிறுவி பணவைப்புகளை உள்வாங்குவதூடாக மாகாணம் தனது அபிவிருத்தியை சுயமாக முன்னெெடுக்கும். வெளிச்சந்தையாளருக்கான சந்தைகளைத் தேடும் ரணில் முதலில் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.