Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • தொடங்கியவர்

சுப்ப-8 மிகுதி 4 போட்டியாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாது.

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அரையிறுதி ஆட்டத்திற்கு 4 அணிகள் தகுதி பெற்றுவிட்டதால் மிகுதி 4 போட்டிகளின் முடிவாலும் இதில் எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாது.

`சுப்ப- 8' சுற்றில் 4 போட்டிகள் எஞ்சியுள்ளன. இனி வரும் போட்டிகளில் இலங்கை - அயர்லாந்து, மேற்கிந்தியா - பங்களாதேஷ், அவுஸ்திரேலியா - நியூசிலாந்து, இங்கிலாந்து - மேற்கிந்திய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிகளின் முடிவுகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஏனென்றால், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, தென்னாபிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன.

`சுப்ப-8' சுற்றில் எந்த அணிக்கு எந்த இடம் என்பதில் வேண்டுமென்றால் முடிவு மாறலாம். தற்போதுள்ள நிலைவரப்படி அவுஸ்திரேலியா முதல் இடத்திலும் நியூசிலாந்து 2 ஆவது இடத்திலும் இலங்கை 3 ஆவது இடத்திலும் தென்னாபிரிக்கா 4 ஆவது இடத்திலும் உள்ளன.

`சுப்ப-8' சுற்றில் முதலிடத்தை பிடிக்கும் அணியும் 4 ஆவது இடத்தை பிடிக்கும் அணியும் ஒரு அரை இறுதியில் மோதும். இந்தப் போட்டி 25 ஆம் திகதி நடக்கிறது.

`சுப்ப-8' சுற்றில் 2 ஆவது, 3 ஆவது இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றொரு அரையிறுதியில் மோதுகின்றன. இந்த ஆட்டம் 24 ஆம் திகதி நடைபெறும்.

-Thinakkural-

Edited by யாழ்வினோ

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply

சுப்பர் எட்டில் சிறீ லங்கா இரண்டாம் இடத்தில் அல்லவா நிற்கின்றது?

  • தொடங்கியவர்

சுப்பர் எட்டில் சிறீ லங்கா இரண்டாம் இடத்தில் அல்லவா நிற்கின்றது?

ஆம் நேற்று அயர்லாந்து அணியுடன் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது அரை இறுதி போட்டியில் நியுசிலாந்து அணியுடன் மோதி படுதோல்வியடையும் இதை நான் சொல்லவில்லை ஸ்கொட் ரைறிஸ் தான் சொல்லியிருக்கிறார். :unsure:

ppyl0.jpg

Edited by யாழ்வினோ

சுப்பர் எட்டில் சிறீ லங்கா இரண்டாம் இடத்தில் அல்லவா நிற்கின்றது?

இரண்டாவது அல்லது மூண்டாவது :unsure:

ஆம் நேற்று அயர்லாந்து அணியுடன் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது அரை இறுதி போட்டியில் நியுசிலாந்துடன் அணியுடன் மோதி படுதோல்வியடையும் இதை நான் சொல்லவில்லை ஸ்கொட் ரைறிஸ் தான் சொல்லியிருக்கிறார். :unsure:

ஸ்கொட் ரைறிஸ் காண்டம் வாசிப்பவரா ? அல்லது பிரபல ஜோதிட நிபுணரா ?

அடட..விக்கெற் கீப்பரிடம் பிடி கொடுத்து விட்டு, நடுவரின் பிழையான தீர்ப்பை சாதகமாக்கிக்கொண்டு அசையாமல் நின்று பிறகு 100 அடித்தவர்.!

இதுதான் பிழையான தீர்ப்பு என்பதற்கு ஆதாரம் -

Law 32 (Caught)

1. Out Caught

The striker is out Caught if a ball delivered by the bowler, not being a No ball, touches his bat without having previously been in contact with any member of the fielding side and is subsequently held by a fielder as a fair catch before it touches the ground.

3. A fair catch

A catch shall be considered to have been fairly made if

the ball is hugged to the body of the catcher or accidentally lodges in his clothing or, in the case of the wicket-keeper, in his pads. However, it is not a fair catch if the ball lodges in a protective helmet worn by a fielder. See Law 23 (Dead ball).

:unsure:

  • தொடங்கியவர்

ICC World Cup - 46th Match, Super Eights

West Indies v Bangladesh

Scorecard

wwwwc4.jpg

bbpk3.jpg

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்டத்தில் பங்குபற்றும் அவுஸ்ரேலியா அணி வீரர்கள்

1 Matthew Hayden, 2 Adam Gilchrist (wk), 3 Ricky Ponting (capt), 4 Michael Clarke, 5 Andrew Symonds, 6 Michael Hussey, 7 Shane Watson, 8 Brad Hogg, 9 Nathan Bracken, 10 Glenn McGrath, 11 Shaun Tait.

இன்றைய ஆட்டத்தில் பங்குபற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள்

1 Stephen Fleming (capt), 2 Peter Fulton, 3 Ross Taylor, 4 Scott Styris, 5 Craig McMillan, 6 James Franklin 7 Brendon McCullum (wk), 8 Daniel Vettori, 9 Mark Gillespie, 10 Shane Bond, 11 Michael Mason.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் ஓரம் இன்று விளையாடமாட்டார்.

நியூசிலாந்தின் போன்ட் அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசக்கூடியவர். குறைந்தது இவர் 5 விக்கெற்றுக்கள் எடுத்தால் யாழ்கள போட்டியாளர்கள் சந்தோசப்படுவினம்.

  • தொடங்கியவர்

நியூசிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் ஓரம் இன்று விளையாடமாட்டார்.

ஆனால் ஜேக்கப் ஒறம் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுவார் இலங்கை அணிக்கு சங்குதான். :mellow:

  • தொடங்கியவர்

நியூசிலாந்தின் போன்ட் அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசக்கூடியவர். குறைந்தது இவர் 5 விக்கெற்றுக்கள் எடுத்தால் யாழ்கள போட்டியாளர்கள் சந்தோசப்படுவினம்.

ஏன் நீங்க "ஒரு போட்டியில் அதிக விக்கெற்றை கைப்பற்றுபவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?" என்ற கேள்விக்கு நியூசிலாந்து என்று பதில் எழுதினீங்களோ?? :o

நான் எப்ப கிளன் மக்கிராத் அல்லது நாதன் பிறேகன் 5 விக்கெற் எடுப்பார்கள் என்று காத்திருக்கிறன். :mellow:

ஆனால் ஜேக்கப் ஒறம் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுவார் இலங்கை அணிக்கு சங்குதான். :o

அடடடா அண்ணாச்சி இல்லாமல சுப்பர்8 ல இலங்கை கூட தோத்தது

இண்டைக்கு ஓரம் இல்லாதது அவுஸ்ரேலியாக்கு வாச்சுப் போச்சு :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நியூசிலாந்து அவுஸ்திரெலியாவை பெரிதாக வெல்லும் சந்தர்ப்பத்தில் அரை இறுதிப்போட்டியில் அவுஸ்திரெலியாவும், இலங்கையும் விளையாடும் சந்தர்ப்பம் ஏற்படும். ஆனால் நியூசிலாந்து அவுஸ்திரெலியாவை வெல்லும் சாத்தியங்கள் இருந்தாலும், பெரிதாக வெல்லும் சாத்தியம் மிகவும் அரிதே

இன்று நியூசிலாந்து அவுஸ்திரெலியாவை பெரிதாக வெல்லும் சந்தர்ப்பத்தில் அரை இறுதிப்போட்டியில் அவுஸ்திரெலியாவும், இலங்கையும் விளையாடும் சந்தர்ப்பம் ஏற்படும். ஆனால் நியூசிலாந்து அவுஸ்திரெலியாவை வெல்லும் சாத்தியங்கள் இருந்தாலும், பெரிதாக வெல்லும் சாத்தியம் மிகவும் அரிதே

அதேதான் இன்று நியூசிலாந்து தோற்க்கும் பட்சத்தில் மூன்றாவது இடத்திற்க்கு தள்ளபடும், பாரிய வெற்றி ஒன்றை பெற நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பில்லை, :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து வென்றால் நியூசிலாந்து, அவுஸ்திரெலியா ஒரே புள்ளிகளைப் பெறும்.அப்பொழுது ஒட்ட விகிதம் தீர்மானிக்கப்படும். அதுதான் பெரியவெற்றியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் என்று சொன்னேன். ஆனால் சந்தர்ப்பம் மிக மிக அரிது. ஆனால் துடுப்பாட்டத்தில் எதுவும் நடக்கலாம்.

நியூசிலாந்து வென்றால் நியூசிலாந்து, அவுஸ்திரெலியா ஒரே புள்ளிகளைப் பெறும்.அப்பொழுது ஒட்ட விகிதம் தீர்மானிக்கப்படும். அதுதான் பெரியவெற்றியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் என்று சொன்னேன். ஆனால் சந்தர்ப்பம் மிக மிக அரிது. ஆனால் துடுப்பாட்டத்தில் எதுவும் நடக்கலாம்.

அதுவும் சரிதான் அதிக ஓட்ட விகிதத்தில் தோற்கக்கூடிய நிலையில் அவுஸ்ரேலிய அணி இல்லை என்றே கூறமுடியும் :mellow:

  • தொடங்கியவர்

நியூசிலாந்து வென்றால் நியூசிலாந்து, அவுஸ்திரெலியா ஒரே புள்ளிகளைப் பெறும்.அப்பொழுது ஒட்ட விகிதம் தீர்மானிக்கப்படும். அதுதான் பெரியவெற்றியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் என்று சொன்னேன். ஆனால் சந்தர்ப்பம் மிக மிக அரிது. ஆனால் துடுப்பாட்டத்தில் எதுவும் நடக்கலாம்.

Ponting wants to use the match as a guide for Australia, who were beaten 3-0 by New Zealand the last time the teams met. "I'm looking forward to the game," Ponting said. "It will be a good indicator for both teams of where they are at." :mellow:

When it comes to Australia's potential run-scorers they are as well stocked as the nearby waters are with fish. Four of the top 15 batsmen at the World Cup are Australians, but the bowling is even more impressive with four of the leading nine. The individual success is a reason why they have extended their unbeaten streak in World Cups to 26 matches. :o

-Cricinfo-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

90138533mj6.jpg

aafa3.jpg

6 ஆவது குறைந்த ஓட்டம்

நேற்று முன்தினம் இலங்கைக்கு எதிராக அயர்லாந்து எடுத்த 77 ஓட்டங்கள் உலகக் கிண்ண வரலாற்றில் 6 ஆவது குறைந்தபட்ச ஓட்டமாகும். இப்பட்டியல் வருமாறு; ? அணி ஓட்டம் எதிரணி ஆண்டு கனடா 36 இலங்கை 2003 கனடா 45 இங்கிலாந்து 1979 நமீபியா 45 அவுஸ்திரேலியா 2003 ஸ்கொட்லாந்து 68 மே.இந்தியா 1999 பாகிஸ்தான் 74 இங்கிலாந்து 1992 அயர்லாந்து 77 இலங்கை 2007

முரளி `450'

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட் வீழ்த்தும் இரண்டாவது வீரர் என்ற சாதனை படைக்க காத்திருக்கிறார் இலங்கையின் முரளிதரன். நேற்று முன்தினம் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் இவரது `450' ஆவது விக்கெட்டாக வீழ்ந்தார்.

தினக்குரல்

ஆனால் ஜேக்கப் ஒறம் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுவார் இலங்கை அணிக்கு சங்குதான். :lol:

முதன்முறை விளையாடியபொழுது 31 ஓட்டங்களே எடுத்துவிட்டு ஓரமாகப் போன ஓரமா சங்கூதப்போறார்.

ஓரம் போ..ஓரம்போ என்ற பாட்டு தெரியுமா?

நீங்கள் ஆகவும் தான் நகைச்சுவையாக பேசுகிறீர்கள்..சிரிக்கத்தான் கஷ்டமாக இருக்கிறது.

:D

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளையட்டுக்களை பொறுத்தவரை விளையாடு வீரர்கள் கையளும் உத்திகள் தான் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கிறது! அதுவும் கிரிக்கட்டை பொறுத்தவரை அதில் விளையாடும் வீரர்களின்

கண நேரத்தில் செயற்படும் விதத்தில் தான் அவர்களின் திறமை வெளிப்படும். என்ன தான் பெரிய துடுப்பாட்டகாரராக இருந்தும் சச்சினால் இந்த முறை சோபிக்கமுடியவில்லை. காரணம் அவரின்

சிறு தவறையும் தமக்கு சார்பாக பயன்படுத்தும் போது அவர் மனவியல் ரீதியாக பாதிக்கபடுவர். இந்த நிலை சாதாரண ஒரு கிரிக்கட் வீரருக்கும் வரும். தென்ஆபிரிக்க அணி 438 ஓட்டங்களை

துரத்தி பிடித்த போது மிகச்சிறந்த பந்து வீச்சளர்கள் இருந்தும் அவுஷ்திரேலியாவால், அவர்களை தடுக்க முடியால. காரணம் எல்ல பந்துவீச்சுக்கும் 3, 4 ,6 என ஓட்டங்கள் எதிரணிக்கு வரும் போது

எந்த மிகச்சிறந்த அணித்தலைவரும் ஒரு நிமிடம் தடுமாறுவது இயல்பு. இதனை ரிக்கி போண்டிக்கே அந்த போட்டி முடிய ஒத்துக்கொண்ட உண்மை.

இப்போது நடந்து கொண்டிருப்பது ஒன்றும் தெருக்கிரிக்கட் அல்ல உலகக்கிண்ணம் அதை நினைவில் வைக்கவும். இதில் வெற்றி பெற பல பல திட்டங்கள் தேவை. அதில் தமது அணி

வீரர்களை பலப்படுத்துவது (உடல் + உளவியல் ரீதியாக) மற்றது எதிரணியினரை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்துவது. இதில் இரண்டாவது வகையில் அவுஷ்திரேலியா எவ்வளவு வல்லது என உலகிலுள்ள

அனேக கிரிக்கட் ரசிகர்களுக்கு தெரியும். இலங்கையணி அவர்களுக்கு சவாலாக இருப்பதுக்கு அவர்களின் எதிர் உளவியல் தாக்குதலும் ஒருகாரணம்.

கடந்த போட்டியில் இலங்கையணி இவ்வகையான ஒரு நடவடிக்கையையே செய்த்தது. அரையிறுதியில் அவுஷ்திரேலியாவை சந்திப்பதை விட இறுதியில் சந்திப்பது அவர்களுக்கு நல்லது. இந்த

திட்டத்தினை அவுஷ்திரெலியா அணி வீரர்களே பராட்டினர். நீங்கள் எல்லாம் சொல்லுவது போல வீடியோவில பாத்துப்போட்டு போய் மைதானத்தில விளையாடுவதெல்லாம் எழுத வெண்டுமானால்

நல்லா இருக்கும் நடைமுறைக்கு சரிவராது. இவ்வாறு இவர்கள் பார்ப்பது அவர்களுக்கு தெரியாதா என்ன?

கிரிக்க்ட்டில் எந்த வீரரும் போட்டியை திருப்ப கூடியவர்களாக இருப்பர்கள். தென் ஆபிரிக்கவுடன் மலிங்க இலங்கையணிக்கான ஒரு வெற்றி நோக்கி கொண்டு செல்லலையா? 2004 மினி

உலகக்கிண்ணத்தை மேற்கி இந்தியா வெற்றி பெற லாறாவோ, சர்வானோ வைக்கலா கடைநிலை ஆட்டக்காரர்கள் தான் கோண்டு போனார்கள். கடைசி விக்கடுக்காகா 60க்கு மேலான ஓட்ட்த்தை பெறலையா?

சிந்தனைகள் வரவேற்கப்பட வேண்டியவைதான் ஆனால் சிறு பிள்ளைடத்தனமாக இருக்க கூடாது.

முதன்முறை விளையாடியபொழுது 31 ஓட்டங்களே எடுத்துவிட்டு ஓரமாகப் போன ஓரமா சங்கூதப்போறார்.

ஓரம் போ..ஓரம்போ என்ற பாட்டு தெரியுமா?

நீங்கள் ஆகவும் தான் நகைச்சுவையாக பேசுகிறீர்கள்..சிரிக்கத்தான் கஷ்டமாக இருக்கிறது.

:D

உலகக் கிண்ணம் தொடங்க முதல் அவுஸ்திரேலியா அடித்த 340 ஓட்டங்களை இரு தடவை ஓரம் - மக்மிலம்

மக்கலம் - ஓரம் திரத்தி திரத்தி அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்களின் பெண்ட் நிமித்தியதை தாங்கள் மறந்து விட்டீர்களாக்கும்

அதை பார்த்திருந்தால் புரியும் யார் ஜோக் அடிப்பது என்று

குழந்த பிள்ள தனமாவே இருக்கு

சிரிக்க தெரியா விட்டாம் அழுது பாருங்கள் :lol:

  • தொடங்கியவர்

15 ஓவர்கள் முடிவில்,

அவுஸ்ரேலியா அணி 100 ஓட்டங்களுக்கு 1 விக்கெற் இழப்பு.

உலகக் கிண்ணம் தொடங்க முதல் அவுஸ்திரேலியா அடித்த 340 ஓட்டங்களை இரு தடவை ஓரம் - மக்மிலம்

மக்கலம் - ஓரம் திரத்தி திரத்தி அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்களின் பெண்ட் நிமித்தியதை தாங்கள் மறந்து விட்டீர்களாக்கும்

அதை பார்த்திருந்தால் புரியும் யார் ஜோக் அடிப்பது என்று

குழந்த பிள்ள தனமாவே இருக்கு

சிரிக்க தெரியா விட்டாம் அழுது பாருங்கள் :lol:

அப்போ.. ஓரம் அரைஇறுதியில் இலங்கை அணிக்கு சங்கூதப்போகிறார் என்கிறீர்கள்.. சிலநாட்கள்தானே இருக்கின்றன. பொறுத்துபார்ப்போம்..

:D

அப்போ.. ஓரம் அரைஇறுதியில் இலங்கை அணிக்கு சங்கூதப்போகிறார் என்கிறீர்கள்.. சிலநாட்கள்தானே இருக்கின்றன. பொறுத்துபார்ப்போம்..

:D

அவர் ஊதும் சங்கெல்லாம் அவுஸ்திரேலியா அணிக்குத்தான்

இலங்கை அணிக்கெதிரா அடக்கித்தான் வாசிப்பாரு :lol:

  • தொடங்கியவர்

30 ஓவர்கள் முடிவில்,

அவுஸ்ரேலியா அணி 208 ஓட்டங்களுக்கு 2 விக்கெற் இழப்பு.

மத்தியு கைடன் - 100*

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.