Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திரை விமர்சனம்: லென்ஸ்

Featured Replies

lensreview_3166727f.jpg
 
கணினித் திரை முன்பு அமர்ந்திருக்கும் அந்த இளைஞன் ஆடை எதையும் அணிந்திருக்கவில்லை. மறுமுனையில் அவனோடு ‘அரட்டை’அடிக்கும் பெண்ணும் அதேபோலவே திரையில் தோன்றும் கணத்துக்காகக் காத்திருக்கிறான்.

அதிரவைக்கும் இந்தத் தொடக்கமே புதுமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணனின் ‘லென்ஸ்’ படத்தின் தீவிரத் தன்மையை உணர்த்திவிடுகிறது. மெய்நிகர் உலகில் நிலவும் வக்கிரங்களையும் அவற்றின் விபரீதமான விளைவுகளையும் பொட்டில் அறைந்ததுபோலச் சொல்கிறது ‘லென்ஸ்’.

இளமையும் அழகும் கொண்ட மனை வியை அலட்சியப்படுத்திவிட்டு, இணையத் தில் தன் வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்), ஒருநாள் அதேபோன்ற ஒரு அனுபவத்துக் காகக் காத்திருக்கும்போது, புதிய பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அரட்டையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்போதுதான் அது தனக்கு வைக்கப்பட்ட பொறி என்பது அவனுக்குப் புரிகிறது. அந்தப் பொறி என்ன? இணைய வக்கிரங்களின் விபரீதப் பரிமாணங் கள் என்ன என்பதை விறுவிறுப்பான திரைக் கதையின் மூலம் சொல்கிறார் இயக்குநர்.

வக்கிர ஆசாமியைப் பொறிவைத்து இழுக் கும் யோகன் (ஆனந்தசாமி) அடுத்தடுத்த நகர்வுகள் மூலம் அதிரவைக்கிறார். அரவிந் தின் நண்பன் காவல் துறையை நாட, அரவிந் துக்கும் யோகனுக்கும் என்ன தொடர்பு என்பது திரையில் விரிகிறது. அரவிந்தைப் போன்றவர் கள் தாங்கள் செய்யும் செயல்களின் முழு விபரீதத்தையும் உணரும் வகையில் திரைக்கதையின் போக்கு உள்ளது.

தனிநபர்களின் அந்தரங்கத்தைப் படம் எடுத்து, அதை இணையத்தில் பதிவேற்றி அற்ப சுகம் அடையும் கும்பலின் நிஜ முகத்தை இயக்குநர் அம்பலப்படுத்துகிறார். சிறிய சபலம், பலவீனம் என்றெல்லாம் ஒதுக்கிவிட முடியாத அளவில் ஆழமான வக்கிரத்துடனும் தெளிவான வழிமுறைகளுடனும் செயல்படும் இந்தப் போக்கினைப் புரியவைக்கிறார். அடுத்தவரின் அந்தரங்கத்தை நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு பார்க்கும், பரப்பும், மனிதர்கள் தங்களுக்கோ, தங்களைச் சேர்ந்த வர்களுக்கோ அப்படி நடந்தால் எப்படித் துடித்துப்போகிறார்கள் என்பதைக் காட்சிப் படுத்திய விதம் வலுவானது. இக்காட்சி இதுபோன்ற மனிதர்களின் மனசாட்சியைச் சிறிதேனும் அசைக்கும் வகையில் உள்ளது. தொழில்நுட்பம் என்பது பலமுனைகளிலும் கூரான கத்தி என்பதையும்; யாரும் அதற்கு இலக்கு ஆகலாம் என்பதையும் படம் காட்டிவிடுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களின் குமுறலை ஏஞ்சல் என்னும் பாத்திரத்தின் மூலம் மிக அழுத்தமாகக் காட்டுகிறார் இயக்குநர். இணையத்தில் தன் அந்தரங்கம் பதிவேற்றப் பட்டதையும் பலரும் அதை ரசித்துப் பார்ப்பதையும் அறிந்த அந்தப் பெண், தினமும் ஆயிரம் பேர் தன்னை வன்புணரும் வேதனைக்கு ஆளாவதாகக் குறிப்பிடுவது அடுத்தவரின் அந்தரங்கத்தைக் காண விழைபவர்களின் மனசாட்சியை உலுக்கக் கூடியது. எப்போதும் மெய்நிகர் உலகில் அற்ப சுகம் நாடும் கணவனைப் பற்றி மனைவியின் உணர்வு என்னவாக இருக்கும் என்பதையும் இயக்குநர் நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறார்.

அந்தரங்கங்கள் படம்பிடிக்கப்படுவது, பதிவேற்றம் செய்யப்படுவது ஆகியவை குறித்த காட்சிகள் பரபரப்பைக் கிளப்பும் வகையில் அல்லாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. ஆபாசத்தையே மையப் புள்ளியாகக் கொண்ட கதை என்றபோதிலும், இந்தப் படம் துளியும் ஆபாசமற்ற காட்சியமைப்பைக் கொண்டிருப்பது எடுத்துக்கொண்ட விஷ யம் சார்ந்த இயக்குநரின் நேர்மையான அக்கறையைக் காட்டுகிறது.

படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. மூன்று மொழிகளில் வெளியான இந்தப் படத் தில் வசனங்களும் உதட்டசைவுகளும் பொருந்தவில்லை என்பதை மன்னித்துவிட லாம். மற்ற குறைகளை அப்படித் தள்ளிவிட முடியாது. பழிவாங்குவதற்காக மிகவும் மெனக்கெடும் ஏஞ்சலின் கணவன், அதற்காகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது அவரைப் பொறுத்தவரை சரியான முடிவாக இருக்க லாம். ஆனால், அது எப்படி அரவிந்துக்கான தண்டனையாக இருக்க முடியும்? தன்னுடைய மனைவியை இழிவுபடுத்தியவனைத் தண் டிக்க அவனுடைய மனைவியைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை படத் தின் ஆதார உணர்வுக்கு வலு சேர்க்கிறது. எந்த இடத்திலும் அதிராமல் அதே சமயம் பார்வையாளர்களிடத்தில் தேவையான உணர்ச்சிகளை ஏற்படுத்தும் வகையில் நுட்ப மாகச் செயல்பட்டிருக்கிறார் பிரகாஷ் குமார். எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் அரை இருட்டில் நடந்தாலும் காட்சிகள் தெளிவாக மனதில் பதியும் வகையில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

அரவிந்தாக நடித்திருக்கும் ஜெயப்பிர காஷ், அவரைப் பொறிவைத்துப் பிடிப்பவ ராக வரும் ஆனந்த்சாமி இருவரும் தேவை யான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஏஞ்சலாக வரும் அஸ்வதி லால் அவமானத் தின் வேதனையைத் தத்ரூபமாக வெளிப் படுத்துகிறார்.

துல்லியமான தகவல்களுடனும் பொறுப்பு உணர்வுடனும் எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும்பங்காற்றக்கூடியவை. இது ஒரு திரைப்படமாகவும் நேர்த்தியாக உருப்பெற்றி ருப்பது கூடுதலான பாராட்டுக்குரியது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-லென்ஸ்/article9708941.ece?homepage=true

  • தொடங்கியவர்

"லென்ஸ்" - கவனம் பெற வேண்டிய அவசியம்

எழுத்தாளர்: ஞா.தியாகராஜன்
 
lens movie

பயணியின் கவிதையொன்று "கண்கானிப்புகள் மிகுந்த இந்த நகரத்தில்"என்ற வரிகளுடன் தொடங்கும்.நாம் ஆயிரம் கண்களால் கவனிக்கப்படுவது நவீன யுகத்தில் தவிர்க்க இயலாத செயல்.பல மன உளைச்சல்களை இது கொடுத்தாலும் ஒரு பகடியுடன் நாம் அதை கடந்து கொண்டிருக்கிறோம்.

ஆயிரம் ஆயிரமாய் நிர்வாண உடல்களை பதிவேற்றம் செய்யவும் அவற்றை  தரவிறக்கம் செய்யவும் வாய்ப்பளித்திருக்கும் அல்லது அப்படி ஒன்றுக்கு நிர்பந்திக்கும் பதட்டமிக்க நூற்றாண்டின் மனசாட்சியை கொடூர மௌனமாய் வெளிப்படுத்திருக்கும் திரைப்படமே "லென்ஸ்"

படத்தின் ஆக்க முறை கதைசொல் நேர்த்தி என எதிலும் சோடையாகாமல் தன் உலக சினிமா புத்தியை காட்டாமல் முழு திருப்தியளிக்கும் படைப்பாக வெளிவந்திருக்கிறது.வெற்றிமாறன் தயாரிப்பு என்பதை தவிர வேறெந்த எதிர்பார்ப்புகளையும் தூண்டாத படைப்பாக புதிய முகங்களுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.

யாரும் எடுக்க தயங்கும் களம் ஆனால் எடுக்கப்படவேண்டிய களமாக இருந்த போர்ன் வீடியோக்கள்,ரொம்ப மலினமாய் கிடைக்கும் வீடியோ சாட்கள் என்று வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கும் சாத்தான்களை அப்பட்டமாய் எந்த வித சமரசங்களுக்கும் இடமளிக்காமல் தோலுரித்திருக்கிறது.அதிக ஒப்பாரி காட்சிகளையும் ஓவர் ஆக்ட் எமோஷன்களையும் வைத்து படைப்பை கெடுத்து கொள்ளாமல் எடுத்திருக்கிறார் இராதாகிருஷ்ணன்.

மாநகரம்,8தோட்டாக்கள் போன்ற படங்களுக்கான ஊடக வெளிச்சம் இப்படத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகமே..?திரைத்துறைக்குள் இயங்கிகொண்டிருக்கும் புதிய படைப்பாளிகளுக்குள் ஒரு உரையாடலை இது தோற்றுவிக்கலாம் என்றாலும் இதற்கான சரியான அங்கீகாரித்திற்கு சற்று குறைச்சலானதாகவே இருக்கும்.

"கதவுக்குள்ள நடக்குற விஷயம் கடைத்தெருவுக்கு வர காலம் இது"என்று வசனங்களில் கூட இணைய உலகத்தை சரியாக படம் பிடித்திருக்கும் படைப்பு தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் தாமதமான வருகையென்றாலும்.இப்பொழுதாவது இப்படி ஒரு படைப்பிற்காக சற்று சந்தோசம் கொள்ளலாம்.இருப்பினும் ஜனரஞ்சக பொதுப் புத்தியில் இதற்கான மதிப்பு என்பது ஒரு நீலப்படத்திற்கு ஒப்பானதாக இருப்பதை திரையரங்கில் காண முடிந்தது.வரக் கூடாத படமொன்றிற்கு வந்து விட்டது போலவே அனைவரும் தங்கள் ஒழுக்கம் இப்படத்தை காண்பதால்  கெட்டு விடுவது போன்ற உரையாடல்களே படம் முடிந்து வெளியேறுகையில் காதில் விழுந்தது.

பார்சினோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பிபிசியின் கவனத்தை ஈர்த்திருக்கும் படத்திற்கு இப்படியான வரவேற்பேயை பொதுஜன புத்தி வழங்குகிறது.அறிவு ஜீவி தளத்திலாவது கொஞ்சம் உரையாடல் நடக்க வேண்டுமென்பதே இக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கம்.

வாய் பேசும் திறனற்ற தன் ஊமை காதலியுடன் தனக்கு கிடைக்கும் புதிய உலகத்தின் அந்தரங்கங்கள் வீடியோ காட்சியாக இணையத்தில் பரப்பப்படுவதால் மீண்டும் சூன்யமாகும் தன் வாழ்க்கையை பழி தீர்த்து கொள்வதுடன் முடித்துகொள்ளும் சிறிய சராசரி மனதின் நியாயமான குரலே"லென்ஸ்"எங்கேயும் பார்வையாளனை குற்றவுணர்வுக்குள்ளாக்கி தன் நியாய கருத்துகளை உரைக்காத நேர்த்தியான படைப்பு.

தயாரிப்பு குழுவினரின் மார்க்கெட் திறமையினால் சில புதிய படைப்பாளிகளின் திரைப்படங்கள் ஊடக வெளிச்சமுடன் வசூல் வெற்றியையும் பெற்று விடுகின்றன.நல்ல படைப்புகள் கவனிக்கப்படும் போன்ற ஒரு ஜல்லியடிக்கும் விஷயத்தையும் இதனுள் புகுத்தி விடுகின்றன.அத்தகைய தந்திரங்களை கையால தெரியாத படங்கள் பெரிய உரையாடல்களை நிகழ்த்தாமல் விருதுகளுடன் அழுந்தி விடுகின்றன. அத்தகையை ஒரு இழப்பிலிருந்து காப்பாற்றப் பட வேண்டிய திரைப்படம்.

http://www.keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/33082-2017-05-17-06-26-50

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்தப்படத்தை இணையத்தில் பார்த்தேன். voyeurism எனப்படும் பிறருடைய அந்தரங்கத்தை பார்த்து ரசிக்கும் மனிதர்களின் மனநிலையை தெளிவாகக க‌ட்டப்படுள்ளது.

"அடுத்தவரின் அந்தரங்கத்தை நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு பார்க்கும், பரப்பும், மனிதர்கள் தங்களுக்கோ, தங்களைச் சேர்ந்த வர்களுக்கோ அப்படி நடந்தால் எப்படித் துடித்துப்போகிறார்கள்"

இதுதான் கதையின் சுருக்கம்.

  • 3 weeks later...

நேற்று வெள்ளி இரவை சந்தோசமாக கழிக்க ஒரு படம் பார்ப்பம்
என்று வெளிக்கிட்டு லென்ஸ் படத்தை பார்க்க தொடங்குகின்றேன்
முதல் 20 நிமிடங்கள் கழிகின்றது ... "ஏன்டா இதை பார்க்க தொடங்கினேன்.. இப்படி Dry ஆக இருக்குதே" என்று படத்தை இடையில்
நிற்பாட்டி 'தொண்டன்' படத்தை போட்டால் நல்லம் போல என்று மனைவியிடம் சொல்லிவிட்டு "ஆனால் சமுத்திரகன்னி
அட்வைஸ் செய்தே கொல்வாரே.. "  என யோசிக்கின்றேன்.

நிரப்பின கிளாசையும் போட்ட படத்தையும் அரைவாசியில் கைவிட்டதாக நாளைக்கு வரலாற்றில் என்னைப் பற்றி எங்கும் வந்துவிடக்கூடாது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக 'லென்ஸ்' படத்தின் மிச்சத்தையும் தொடர்கின்றேன்..

ஒரு 30 நிமிடம் கழிகின்றது... ஒரு பெண்ணின் ஆடையை ஒவ்வொன்றாக களையும் சீன் ஒன்று வருகின்றது...
"ஆஹா வெள்ளி இரவுக்கு ஏற்ற படமடா" என்று மனசுக்குள் ஆனந்தம் எழுகின்றது.

படம் தொடர்ந்து மையப்புள்ளிக்கு வருகின்றது..

கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகளினூடாக அதிர்வலைகள் ஏற்படுகின்றன. நான் அடிக்கடி காணும் எண்ணற்ற Hidden camera காட்சிகளின் பின்னால் இருக்கும் அவலம், அதில் உள்ள சாதாரண மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகள், அவ் வீடியோக்களை எந்தவித குற்றவுணர்ச்சியும் பார்க்கும்
என்னைப் போன்றவர்களின் மனவோட்டங்கள் என்று ஒவ்வொரு காட்சியும் மனசுக்குள் கத்தி கொண்டு கீறீ கீறி கடந்து செல்கின்றது...

நாம் மிகவும் இலேசாக கடந்து விட்டு செல்லும் ஒரு விடயத்தின் பின்னால் இப்படி ஒரு அவலம் இருக்கு என்பதை காட்டும் காட்சிகளும் மிகவும் நேர்த்தியாக உள்ளன.
நிர்வாணமாக தோன்றும் பெண் தன் மனைவிதான் என்பதை முகத்தை பார்த்த பின் தான் கணவன் உணரும் ஒரு கட்டமும் அதை காட்டியன் நக்கலாக கேட்கும் காட்சி
உளவியல் சார்ந்த சாட்டையடி.
அதே போன்று வாய் பேச முடியாத பெண் தன் வலியை எழுதி எழுதி காட்டும் காட்சி மனசுக்குள் ஏற்படுத்தும் வலியும் மிகப் பெரியது

இப் படத்தை 14 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுடன் பார்க்க முடியாது /பார்க்கவும் கூடாது. நானும் பிள்ளைகளுடன் சேர்ந்து பார்க்கவில்லை.

ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது. இதை பார்த்ததால் நிழலி உடனே திருந்தி  நல்லவன் ஆகிட  மாட்டான்.
ஆனால் கண்டிப்பாக ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ தெரியாமல் அவர்களின் சம்மதம் இல்லாமல் எடுக்கப்படும் hidden camera வீடியோக்கள் whatsup இலும் வேறு social media க்களின் மூலமும்
எனக்கு கிடைக்குமாயின் அதை இன்னொருவருக்கு forward பண்ணும் போது ஒரு சில வினாடிகளாவது சிந்திக்க வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பார்த்தனீங்கள்? யூ ரியூப்பிலா?

2 hours ago, ரதி said:

எங்கே பார்த்தனீங்கள்? யூ ரியூப்பிலா?

தரமான டிவிடி () நேற்று முந்தினத்தில் இருந்து இங்கு கிடைக்கின்றது ரதி.  அங்கும் அநேகமாக கிடைக்கும். கண்டிப்பாக பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

தரமான டிவிடி () நேற்று முந்தினத்தில் இருந்து இங்கு கிடைக்கின்றது ரதி.  அங்கும் அநேகமாக கிடைக்கும். கண்டிப்பாக பாருங்கள்.

நன்றி...கட்டாயம் பார்ப்பேன்.

On 2017-6-18 at 0:16 AM, நிழலி said:

நேற்று வெள்ளி இரவை சந்தோசமாக கழிக்க ஒரு படம் பார்ப்பம்
என்று வெளிக்கிட்டு லென்ஸ் படத்தை பார்க்க தொடங்குகின்றேன்
முதல் 20 நிமிடங்கள் கழிகின்றது ... "ஏன்டா இதை பார்க்க தொடங்கினேன்.. இப்படி Dry ஆக இருக்குதே" என்று படத்தை இடையில்
நிற்பாட்டி 'தொண்டன்' படத்தை போட்டால் நல்லம் போல என்று மனைவியிடம் சொல்லிவிட்டு "ஆனால் சமுத்திரகன்னி
அட்வைஸ் செய்தே கொல்வாரே.. "  என யோசிக்கின்றேன்.

நிரப்பின கிளாசையும் போட்ட படத்தையும் அரைவாசியில் கைவிட்டதாக நாளைக்கு வரலாற்றில் என்னைப் பற்றி எங்கும் வந்துவிடக்கூடாது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக 'லென்ஸ்' படத்தின் மிச்சத்தையும் தொடர்கின்றேன்..

ஒரு 30 நிமிடம் கழிகின்றது... ஒரு பெண்ணின் ஆடையை ஒவ்வொன்றாக களையும் சீன் ஒன்று வருகின்றது...
"ஆஹா வெள்ளி இரவுக்கு ஏற்ற படமடா" என்று மனசுக்குள் ஆனந்தம் எழுகின்றது.

படம் தொடர்ந்து மையப்புள்ளிக்கு வருகின்றது..

கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகளினூடாக அதிர்வலைகள் ஏற்படுகின்றன. நான் அடிக்கடி காணும் எண்ணற்ற Hidden camera காட்சிகளின் பின்னால் இருக்கும் அவலம், அதில் உள்ள சாதாரண மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகள், அவ் வீடியோக்களை எந்தவித குற்றவுணர்ச்சியும் பார்க்கும்
என்னைப் போன்றவர்களின் மனவோட்டங்கள் என்று ஒவ்வொரு காட்சியும் மனசுக்குள் கத்தி கொண்டு கீறீ கீறி கடந்து செல்கின்றது...

நாம் மிகவும் இலேசாக கடந்து விட்டு செல்லும் ஒரு விடயத்தின் பின்னால் இப்படி ஒரு அவலம் இருக்கு என்பதை காட்டும் காட்சிகளும் மிகவும் நேர்த்தியாக உள்ளன.
நிர்வாணமாக தோன்றும் பெண் தன் மனைவிதான் என்பதை முகத்தை பார்த்த பின் தான் கணவன் உணரும் ஒரு கட்டமும் அதை காட்டியன் நக்கலாக கேட்கும் காட்சி
உளவியல் சார்ந்த சாட்டையடி.
அதே போன்று வாய் பேச முடியாத பெண் தன் வலியை எழுதி எழுதி காட்டும் காட்சி மனசுக்குள் ஏற்படுத்தும் வலியும் மிகப் பெரியது

இப் படத்தை 14 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுடன் பார்க்க முடியாது /பார்க்கவும் கூடாது. நானும் பிள்ளைகளுடன் சேர்ந்து பார்க்கவில்லை.

ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது. இதை பார்த்ததால் நிழலி உடனே திருந்தி  நல்லவன் ஆகிட  மாட்டான்.
ஆனால் கண்டிப்பாக ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ தெரியாமல் அவர்களின் சம்மதம் இல்லாமல் எடுக்கப்படும் hidden camera வீடியோக்கள் whatsup இலும் வேறு social media க்களின் மூலமும்
எனக்கு கிடைக்குமாயின் அதை இன்னொருவருக்கு forward பண்ணும் போது ஒரு சில வினாடிகளாவது சிந்திக்க வைக்கும்.

பார்த்தபின் எனக்கும் இப்படிதான் இருந்திச்சு, நல்லதொரு சமூக விழிப்புணர்வு படம். எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்த்தேன்...இந்தப் படத்தை முக்கியமாய் ஆண்கள் அதுவும் முக்கியமாய் ஒரு பெண் எப்ப காட்டுவாள் பார்க்கலாம் என்று அலையும் ஆண்கள்tw_angry: கட்டாயம் பார்க்க வேண்டிய படம்...படத்தில முகமூடியாய் சல்மான்கானை பயன்படுத்துவது சுப்பர்:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.