Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று காலை அமைச்சரவை மாற்றம் – மங்கள, ரவியின் பதவிகள் பறிப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை அமைச்சரவை மாற்றம் – மங்கள, ரவியின் பதவிகள் பறிப்பு?

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

அலரி மாளிகையில் நேற்று பின்னிரவு நடந்த ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது இடம்பெறவுள்ள மாற்றங்கள் தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விபரங்களை வெளியிட்டுள்ளார்.

நிதியமைச்சராக மங்கள சமரவீரவும், வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்கவும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, அமைச்சரவை மாற்றத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ஏற்க மறுத்திருப்பதாக பிந்திய தகவல் ஒன்று தெரிவிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே ஊடகத்துறை அமைச்சராக உள்ள கயந்த கருணாதிலகவிடம் இருந்து அந்த அமைச்சுப் பொறுப்பு விலக்கப்பட்டு, காணி அமைச்சு வழங்கப்படவுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் மாற்றப்படவுள்ளனர். பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி இந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய பதவி வழங்கப்படவுள்ளது.

விவசாய அமைச்சர் துமிந்த சில்வாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றங்கள் தொடர்பாக நேற்று சிறிலங்கா அதிபரும் பிரதமரும் கலந்துரையாடியிருந்தனர். எனினும், இறுதிநேர மாற்றங்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2017/05/22/news/23263

அமைச்சரவை மாற்றம் : 9 அமைச்சுபதவி, ஒரு இராஜாங்க அமைச்சுப்பதவி

 

 

புதிய அமைச்சரவை மற்றத்தின் படி 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும் ஒரு இராஜாங்க அமைச்சுப்பதவிகளும் சற்றுமுன் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.

-_Tu3U_t.jpg

அதன் படி நிதியமைச்சராக இருந்த ரவி கருநாணயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சுப்பதவியும் வெளிவிவகார அமைச்சராகவிருந்த மங்கள சமரவீரவுக்கு ஊடக மற்றும் நிதி அமைச்சுப்பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை துறைமுகள் அபிவிருத்தி அமைச்சராக இருந்து அர்ஜுண  ரணதுங்கவுக்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சுப்பதவியும் மீன்பிடி அமைச்சராகவிருந்த மஹிந்த அமரவீரவுக்கு ஏற்கனவே இருந்த மீன்பிடி அமைச்சு மற்றும் புதிதாக துறைமுகள் அபிவிருத்தி அமைச்சுப்பதவியும் மகாவலி அபிவருத்தி இராஜாங்க அமைச்சுப்பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/20209

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.