Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் உச்சம் தமிழ், முஸ்லிம் கடைகள் இரத்தினபுரியில் தீக்கிரை

Featured Replies

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் உச்சம்

தமிழ், முஸ்லிம் கடைகள் இரத்தினபுரியில் தீக்கிரை

 
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் உச்சம்
 

சிறு­பான்­மை­யி­னர் மீதான அச்­சு­றுத்­தல்­கள், அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான வணக்­கத் தலங்­கள் மற்­றும் வர்த்­தக நிறு­வ­னங்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தும் சம்­ப­வங்­கள் தொடர்ந்­தும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றன.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தின் கஹ­வத்­தைப் பிர­தே­சத்­தில் தமிழ் மற்­றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு வர்த்தக நிறுவனங்கள் நேற்று அதிகாலை தீயில் எரிந்து சாம்பராகி யுள்ளன.

சிறுபான்மையினருக்கு எதிரான 11 தாக்குதல் சம்பவங்கள் கடந்த 10 தினங்களுக்குள் பதிவாகியுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தைப் பிரதேசத்தில் நேற்று அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 4 மாடிகளைக் கொண்ட ஹாட்வெயர் கடையும், தமிழ் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான சில்லறை வர்த்தக நிலையமுமே தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபான்மையினரை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. சிங்கள – பௌத்த அமைப்பான பொதுபலசேனாவின் பொதுச் செயலர் ஞானசார தேரர், சிறுபான்மையினருக்கு எதிராகக் கருத்துக்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

அதி உச்சபட்சமாக, மனோ கணேசனின் அமைச்சுக்குள் புகுந்து, இது சிங்கள – பௌத்த நாடு என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இனக் குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துச் செல்கின்றன.

இதுவரை பதிவாகியுள்ள சம்பவங்கள் வருமாறு, கொட்டாபிட்டியாவில், முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான கடை மீது ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி பெற்றோல் குண்டு வீசப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் மாயக்கல்லி மலையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியை அடாவடியாகப் பிடித்து, அதனுள் பொதுபலசேனாவின் பொதுச் செயலர் ஞானசார தேரர் பிரவேசித்திருந்தார். இந்தச் சம்பவம் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

பொலநறுவை மாவட்டத்தின் ஒநேகம பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களின் வசிப்பிடங்களுக்கு, ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் அத்துமீறிப் பிரவேசித்து அந்த மக்களின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கடந்த 14 ஆம் திகதி பதிவாகியுள்ளது.

திருகோணமலை செல்வநகரில் கடந்த 15 ஆம் திகதி முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். 6 ஏக்கரில் அங்கு விகாரை அமைந்திருந்தது. அந்த விகாரை 49 ஏக்கரில் அமைந்திருந்ததாகக் கூறி, முஸ்லிம் மக்கள் காணிகளைப் பறிக்க முற்பட்டனர்.

அதே தினத்தில் பாணந்துறையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கொக்கிலவத்த இப்பராஹிம் ஜூம்மா பள்ளி வாசல் மீது இனந்தெரியாத நபர்கள் இதே தினத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். கொக்கிலவத்த பள்ளிவாசல் மீது மீண்டும் கடந்த 16 ஆம் திகதி குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான இரண்டு வர்த்தக நிலையங்கள் மீது பாணந்துறையில் கடந்த 17 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வென்னப்புவவில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான மின்சார வர்த்தக நிலையம் பெற்றோல் குண்டு வீசி 18 ஆம் திகதி தாக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பள்ளி வாசல் மீது 21 ஆம் திகதி அதிகாலையில் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதே தினத்தில் எல்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான அழகுசாதன பொருள் விற்பனை நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மகரகம, விஜயராம சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான தோல் விற்பனை நிலையம் தீயினால் நேற்று முன்தினம் திங்கள்கிழமை எரிந்து சாம்பராகியுள்ளது.

http://uthayandaily.com/story/3913.html

  • கருத்துக்கள உறவுகள்

மிகத்திட்டமிட்டு சிங்கள அரசின் மறைமுக ஆதரவுடன் இத்தாக்குதல்கள் இடம் பெறுகின்றன. சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் குறிப்பாக  முஸ்லிம் மக்களின் சொத்துக்களை நாசமாக்கி அவர்களை நடுத்தெருவில் விடுவதே சிங்கள பேரினவாதத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை ஆகும். இதற்கு சிங்களவர்கள் கட்சி வேறுபாடு இன்றி கடந்த காலத்தில் செயற்பட்டது போல் செயற்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

  • தொடங்கியவர்

காவத்­தையில் தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான இரு­ க­டை­களில் தீ பரவல்

 

பல­ச­ரக்­குக்­கடை முற்­றாக எரிந்து நாசம்

(எம்.எப்.எம்.பஸீர், இறக்­கு­வானை காவத்தை மேல­திக, பெல்­ம­துளை நிரு­பர்கள்) 

இரத்­தி­ன­புரி காவத்தை நகரில் இரு வர்த்­தக நிலை­யங்கள் நேற்று அதி­காலை தீப்­ப­ர­வ­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. தமிழர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான பல­ச­ரக்­குக்­கடை முழு­மை­யாக தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளது . அரு­கி­லி­ருந்த முஸ்லிம் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான ஹார்ட்­வெயார் கடை பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளது. இந்த சம்­பவம் நேற்று அதி­காலை 2 மணிக்கும் 2.30 க்கும் இடைப்­பட்ட  

நேரத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலி ஸார் தெரி­வித்­தனர்.

பல­ச­ரக்குக் கடை முழு­மை­யாக தீக்­கி­ரை­யா­ன­மை­யினால் பல இலட்சம் ரூபா பெறு

­ம­தி­யான சொத்­துக்கள்

அழி­வ­டைந்­துள்­ளன. இந்­த­நி­லையில் குறித்த கடை­க­ளுக்கு எவ­ரேனும் தீ வைத்­த­னரா? என்ற கோணத்தில் காவத்தை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

குறித்த கடைகள் தீப்­பற்றி எரி­வ­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைக்­கும்­போது பல­ச­ரக்கு கடை­யா­னது முழு­மை­யா­கவே தீக்­கி­ரை­யாகி நாச­ம­டைந்­துள்­ளது. மற்­றைய கடை­யா­னது பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளது. சம்­பவம் இடம்­பெற்­ற­போது காவத்தை நகரில் சன­ந­ட­மாட்டம் இருக்­க­வில்­லை­யெ­னக்­கூறும் பொலிஸார் உட­ன­டி­யாக இரத்­தி­ன­புரி மாந­க­ர­சபை தீய­ணைப்புப் படையின் உத­வி­யுடன் தீயைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­த­தாக தெரி­வித்­தனர்.

இந் நிலையில் நேற்று காலை ஸ்தலத்­துக்கு அரச இர­சா­யன பகுப்­ப­ய­வா­ளர்கள் உள்­ளிட்­டோரும் அழைக்­கப்­பட்டு தீ பர­வ­லுக்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

 கடந்த ஒரு வாரத்­துக்குள் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் இலக்கு வைக்­கப்­பட்டு இவ்­வா­றான தீ வைப்புச் சம்­ப­வங்கள் பல பதி­வ­கை­யுள்ள நிலையில், இந்த தீ பர­வலும் நாச­கார செய­லாக இருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். அதன்­ப­டியே விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

 கடந்த புத­னன்று பாணந்­துறை நகரில் இரு முச்லிம் கட­டைகள் மீது பெற்றோல் குண்டு தக­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இத­னை­விட அத­னை­ய­டுத்த நாளில் வென்­னப்­பு­வையில் உள்ள பிர­மாண்­ட­மான ஆடை­யகம் ஒன்றும் தீக்­கி­ரை­யா­னது. அதன் பிறகு எல்­பிட்­டிய பகு­தியில் வர்த்­தக நிலையம் ஒன்று தீக்­கி­ரை­யா­னது. பின்னர் நேற்று முன் தினம் அம்­பாறை மற்றும் மஹ­ர­கம பகு­தி­களில் இரு முச்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தீக்­கி­ரை­ய­க­கப்­பட்­டி­ருந்­தன. இந்த அனைத்து நடவடிக்கைகளும் அதிகாலை 1.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையிலேயே இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் மிகத் திட்டமிட்டு இவ்வாறான தீ வைப்புக்கள் இடம்பெற்றுவருவதாக சந்தேகிக்கபப்டும் நிலையில் சிறுபானமை வர்த்தகர்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.