Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம்

Featured Replies

கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம்
 

-ரொமேஸ் மதுசங்க

யாழ்ப்பாணம், கோப்பாய், திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர்.

மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச் சென்றுள்ளார் என்று தெரியவந்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் புலனாய்வுப் பொலிஸாரால் அழைத்துவரப்பட்ட மேற்படி நபர், பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக, பொலிஸார் மேலும் கூறினர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கோயில்-உற்சவத்தில்-’தனிஈழ’-வரைபடம்/71-197246

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:
கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம்
 

 புலனாய்வுப் பொலிஸாரால் அழைத்துவரப்பட்ட மேற்படி நபர்,

உண்மையில் இலங்கையில் நல்லாட்சிதான் நடக்கிறது. நம்பலாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் கிளிநொச்சியில் சிங்கள கொடி கட்டுறான் போலீஸ் பார்த்துக்கொண்டு இருக்க “தனி ஈழம்” வரை படம் வைத்தால் குற்றம் என்கின்றானுக, ஒவ்வொரு தமிழனின் உள் மனதில் ஆழமாக பதிந்த “தனி ஈழம்” படத்தை நீக்க முடியாது என்பதை ஏன் உணர மறுக்கின்றார்கள் ஆட்ச்சியாளர்கள்.

  • தொடங்கியவர்

திரு­நெல்­வேலி காளி அம்­மன் ஆலயத்தில் தமி­ழீழ அலங்காரம்

I
திரு­நெல்­வேலி காளி அம்­மன் ஆலயத்தில் தமி­ழீழ அலங்காரம்
 

யாழ்ப்­பா­ணம், திரு­நெல்­வேலி சிறி காளி அம்­மன் ஆலய வரு­டாந்த அலங்­கா­ரத் திரு­வி­ழா­வில் தமி­ழீ­ழத்தை சித்தி­ரிக்­கும் வகை­யில் காளி அம்­ம­னுக்கு அலங்­க­ரிக்­கப்­பட்­டமை தொட­ர்பில் ஆலய நிர்­வா­கத்தி­னர் மற்­றும் அர்ச்­ச­கர் புல­னாய்­வுப்­பி­ரி ­வி­ன­ரின் தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

திரு­நெல்­வேலி சிறி காளி அம்­மன் ஆலய வரு­டாந்த அலங்­கா­ரத் திரு­விழா நடை­பெற்று வரும் நிலை­யில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற 3ஆம் நாள் திரு­வி­ழா­வின் போது காளி அம்­மன் புலி வாக­னத்­தில் தமி­ழீ­ழத்தை சித்­த­ரிக்­கும் வகை­யில் அலங்­க­ரிக்­கப்­பட்டு அடி­ய­வர்­க­ளுக்கு காட்­சி­ய­ளித்­தார்.

அம்­ம­னின் திரு­வு­ரு­வக் காட்சி ஒளிப்­ப­டம் ஊட­கங்­க­ளில் வெளி­யா­கி­யது.இந்த நிலை­யில் ஆலய சூழ­லுக்கு காலை­யி­லேயே சென்ற புல­னாய்­வுப் பிரி­வி­னர் அங்கு ஆலய நிர்­வாக சபை­யி­னர் மற்­றும் அர்ச்­ச­க­ரி­டம் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­த­னர்.

ஆல­யத் திரு­வி­ழா­வில் தமி­ழீ­ழத்தை சித்­த­ரிக்­கும் வகை­யில் அலங்­கா­ரம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தால் அப்­ப­கு­தி­யில் நேற்­றை­ய­தி­னம் காலை­யில் இருந்து இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரும் பொலிஸ் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரும் அந்­தப் பகுதி மக்­க­ளி­டம் திரு­விழா தொடர்­பில் விசா­ரித்­த­னர். அத­னால் ஆலய சூழ­லில் பெரும் பர­ப­ரப்பு நிலை காணப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

http://uthayandaily.com/story/4036.html

  • தொடங்கியவர்

அம்மன் அலங்காரத்தில் தமிழீழ வரைபடம் – இளைஞர் மீது விசாரணை

 

amma.jpg
திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் நாள் திருவிழாவான கடந்த  செவ்வாய்க்கிழமை  காளி அம்மன் தமிழீழ வரைபடத்தின் பின்னணியில், புலி வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.

இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை யாழ்ப்பாண போலிஸ் புலனாய்வு துறையினர் நேற்று புதன் கிழமை  கோப்பாய் போலிஸ் நிலையத்திற்கு அழைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர்.

amma2.jpg

 

http://globaltamilnews.net/archives/27943

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.