Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் மீண்டும் தாக்குதல் : 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்

Featured Replies

'Van hits pedestrians' on London Bridge in 'major incident'

  • People run down Borough High Street as police are dealing with a "major incident" at London Bridge

Image copyright PA Image caption People running down Borough High Street on the south side of London Bridge

Police are responding to reports that a van has hit a number of pedestrians on London Bridge in central London.

Armed officers were sent to the scene after witnesses reported seeing a white van mount the pavement and drive into people.

The Met Police say they are dealing with an incident on the bridge and "multiple resources" are in attendance.

Transport for London said the bridge has been closed in both directions due to a "major police incident".

Bus routes were being diverted and the neighbouring Southwark Bridge has also been shut, it added.

TfL said there were further closures in Borough High Street, where armed police were later seen.

  Armed police officer in Borough High StreetImage caption Armed police were sent to Borough High Street Police and ambulance could be seen on the south side of London BridgeImage caption Blue lights of the emergency services seen on London Bridge

BBC reporter Holly Jones, who was on the bridge at the time of the incident, said the van was driven by a man and was "probably travelling at about 50 miles an hour".

"He swerved right round me and then hit about five or six people. He hit about two people in front of me and then three behind," Ms Jones told the BBC News Channel.

Five or six people were being treated for injuries after the vehicle mounted the pavement and hit them, she said.

"I'd say there are about four severely injured people. They all have paramedics assisting them at the moment."

She said the van, which was travelling from the direction of central London, headed towards the south side of the river.

Ms Jones later reported seeing a man being arrested by police. She said he was handcuffed and had his shirt off.

She said a French woman was among the injured and who told her she did not know where the two people who had been with her were.

http://www.bbc.com/news/uk-40146916

Run as fast as you can' - police advice to public

Posted at0:21

Police are reported to be treating injured people and carrying them away at the end Thrale Street, near London Bridge.

Members of the public were told by police to "run as fast as they could" westbound.

Nick Archer, who was in the London Bridge area, told Sky News: "We came out (of a bar) on to the road and looked and looked to my left and there is a guy, I thought he was just drinking but he was lying on the floor.

"And then a couple of seconds later, about three police vans flew past. "He looked in a bad way."

Reports of gunfire at the scene

Posted at0:21

Eyewitness Samantha Wilde tells the BBC she's seen between 30 and 40 ambulances at the scene and armed police.

Earlier, there were reports of gunfire.

 

லண்டன் பாலத்தில் தாறுமாறாக ஓடிய வேன்; 20 பேர் காயம்

 

லண்டன்: லண்டன் பாலத்தில் வேன் தாறுமாறாக ஓடியதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். உலக புகழ்பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதனால் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து போலீசார் தற்காலிகமாக லண்டன் பாலத்தை மூடியுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1783595

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

லண்டனில் சனிக்கிழமை பின்னிரவு 3 இடங்களில் தாக்குதல்- குறைந்தது ஒருவார் பலி-பலர் காயம்
------------------------------------------------------------------------
ஞாயிறு அதிகாலை 12.30 நிலவரம்

லண்டனில் சனிக்கிழமை இரவு மூன்று இடங்களில் நடைபெற்ற மூன்று தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு காலை பிரதமர் தலைமையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று தாக்குதலும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டுள்ளது என்று லண்டன் மாநகர் தெரிவிப்பு.

முதல் தாக்குதல் லண்டன் மேம்பலத்தில் நடைபெற்றது. இதில் பாதசாரிகள் மீது வெள்ளை நிற வாகனம் மோதி தாறுமாறாக தாக்குதல் நடத்தப்பட்டது.

அடுத்து அதிலிருந்து இறங்கிய மூவர் பரோ மார்க்கெட் பகுதிக்கு ஓடினர் என்றும் கத்திக்குத்து தாக்குதல்களை மேற்கொண்டனர் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாக, தற்போது அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

மூன்றாவதாக வாக்ஸால் பகுதியில் தாக்குதல் நடைபெற்றது. அங்கு என்ன நடைபெற்றது என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவங்களை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கும் தகவல்களைத் தவிர வேறு எந்த தகவல்களும் இத்தருணத்தில் வெளியாகவில்லை.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டன என்று செய்திகள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.

------------------------------------------------------------------------------------------- 

ஞாயிறு அதிகாலை 12.15 நிலவரம்

லண்டனின் மையப்பகுதியில் சனிக்கிழமை இரவும் நடைபெற்ற மூன்று தாக்குதல் சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்த கட்டடங்களில் இருந்த மக்களை பகுதி பகுதியாக வெளியேற்றும் நடவடிக்கையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

இச்சம்பவங்கள் நடைபெற்ற இடத்துக்கு அருகிலுள்ள மதுபான விடுதிகள், இரவு விடுதிகளில் காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு சிக்கியிருக்கும் அனைவரும் அமைதியாகவும், தங்களது அறிவுரையைக் கேட்டு அதன்படி செயல்படவும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

தங்கள் பணிக்கு இடையூறாக செய்தியாளர்கள் உட்பட யாரும் இருக்க வேண்டாம் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே வாக்ஸால் சுரங்க ரயில் பாதை திறக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் அந்த ரயில் நிலையத்தில் 24 மணி நேர சேவைகள் இடம்பெறும்.

பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் பிரதமர் தெரீசா மே உடனடியாக லண்டன் திரும்புகிறார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது
------------------------------------------------------------------------------------------

நள்ளிரவு 12 மணி நிலவரம்: 

சனிக்கிழை இரவு 'மூன்று சம்பவங்கள்' இடம்பெற்றுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லண்டன் பிரிட்ஜ் பகுதி, மேம்பாலம், பரோ மார்க்கெட் பகுதியிலுள்ள அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறும் காவல்துறையினர் உத்தரவு.

வாக்ஸால் பகுதியில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லண்டன் மாநகர் காவல்துறையின் சமூக ஊடகப் பக்கத்திலும், டிவிட்டரிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னிரவு 11.45 நிலவரம்
-------------------------------------------

லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற இத்தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறையினர் கூறுகின்றனர்.

பாதசாரிகள் மீது வாகனத்தை ஏற்றியும், கத்தியைக் கொண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது என்று காவல்துறையின் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதல் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடுவதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

பிரதமர் தெரீசா மே  உயரதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவர் பிரெஞ்ச் பெண்மணி என்று தற்போது வரும் செய்திகள் கூறுகின்றன.

தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு அருகிலுள்ள 'லண்டன் பிரிட்ஜ்' சுரங்கப்பாதை ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.

முந்தைய பதிப்பு (பின்னிரவு 11.35)
-------------------------

லண்டனின் மத்தியில் இருக்கும் லண்டன் பிரிட்ஜ் பகுதியில் சனிக்கிழமை பின்னிரவு பாதசாரிகள் மீது வாகனத்தை ஏற்றி தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இரவு 11 மணியளவில், அந்த பாலத்தில் சென்றுகொண்டிருந்த பாதாசாரிகள் மீது வெள்ளை வாகனம் ஒன்று மோதி ஏறிச்சென்றுள்ளது என்று முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

உடனடியா அந்தப் பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், பல்தரப்பின் உதவியை நாடியுள்ளனர்.

இதையடுத்து அந்தப் பாலம் இருபுறமும் உடனடியாக மூடப்பட்டது.

அந்தப் பாலத்துக்கு அருகில் இருக்கும் சதர்க் பாலமும் மூடப்பட்டு பேருந்துகள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன.

அருகிலிருக்கும் பரோ பகுதியின் முக்கிய சாலையும் மூடப்பட்டு ஆயுதமேந்திய காவல்துறையினர் வந்தடைந்தனர்.

தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் அங்கு இருந்த பிபிசி செய்தியாளர் ஒருவர் அந்த வாகனம் மணிக்கு சுமார் 50 மைல் வேகத்தில் வந்தது போலத் தெரிந்தது என்று கூறுகிறார்.

வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய நபர் குறைந்தது ஆறுபேரை இடித்து தள்ளினார் என்றும் எமது செய்தியாளர் மேலும் கூறுகிறார்.

வாகன ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

BBC Tamil

லண்டன் தாக்குதல்: இதுவரை ஒன்றுக்கும் அதிகமானோர் பலியானதாக போலிஸார் கூறியுள்ளனர்.
==========================

லண்டன் பிரிட்ஜ், பரோ மார்க்கட் மற்றும் வாக்ஸ்ஸால் பகுதியில் தாக்குதல்கள் (மூன்று சம்பவங்கள்) - லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையம் மூடப்பட்டது
      =====================
லண்டனின் மத்திய பகுதியில் லண்டன் பிரிட்ஜில் நடைபாதையில் சென்றவர்கள் மீது வான் ஒன்று மோதியதாக போலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.�
நடைபாதையில் வந்தவர்கள் மீது வான் மோதியதாக வந்த செய்தியை அடுத்து சம்பவ இடத்தில் ஆயுதம் தாங்கிய அதிகாரிகள் காணப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.�
அந்தப் பாலம் இரு பக்கமாகவும் மூடப்பட்டுள்ளதாக லண்டனுக்கான போக்குவரத்துப் பிரிவு கூறியுள்ளது.�
அந்த சம்பவம் நடந்தபோது அந்த பாலத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் ஹொலி ஜோண்ஸ் , ஒரு நபரால் செலுத்தப்பட்ட அந்த வான் மணிக்கு சுமார் 50 மைல் வேகத்தில் ஓடியதாக தெரிவித்துள்ளார்.�அது பலரை இடித்ததை தான் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.�பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் சிகிச்சையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதையடுத்து அருகே பரோ மார்க்கட் பகுதியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.�
பரோ மார்க்கட்டில் உணவு விடுதி மற்றும் மதுச் சாலையில் கத்திக்குத்து குறித்த முறைப்பாடு கிடைத்ததை அடுத்து தாம் பதில் நடவடிக்கை எடுத்ததாகவும், அங்கு துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாகவும் போலிஸார் கூறியுள்ளனர்.

�லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ மார்க்கட் சம்பவங்களை விட தெற்கு லண்டனின்  வாக்ஸ்ஸால் பகுதியிலும் ஒரு சம்பவம் நடந்ததாக போலிஸார் கூறியுள்ளனர்.
ஆனால், இந்த மூன்றாவது சம்பவம் முதல் இரு சம்பவங்களுடன் தொடர்புடையதா என்று தெரியவில்லை என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் பிரிட்ஜ் சம்பவத்தை அடுத்து லண்டன் பிரிட்ஜ் ரயில்நிலையம் மூடப்பட்டதாக தற்போது வரும் செய்திகள் கூறுகின்றன.
பாலம் மூடப்பட்டு போக்குவரத்து திசைதிருப்பிவிடப்படுகின்றது.
வான் மோதியதில் பலர் காயமடைந்ததாகவும், சம்பவம் குறித்து பிரதமருக்கு உடனுக்கு உடன் தகவல் தரப்படுவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இதற்கிடையே இந்தச் சம்பவங்களில் ஒன்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

BBC

 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் - 6 பேர் பலி, 20 பேர் காயம்! 

London-Bridge-040617-seithy.jpg

லண்டனில் நேற்றிரவு நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று லண்டன் போலிசார் கூறினர். இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் தெரிவித்தனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.   

மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார். சாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார். அதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.

இந்த தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை எவ்வித்த்திலும் நியாயப்படுத்தமுடியாது என்று அவர் கூறினார். பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அரசின் அவசர பாதுகாப்பு குழு கூட்ட்த்தை நட்த்தவுள்ளார்.

மான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=183647&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

லண்டனில் மீண்டும் தாக்குதல் : 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்

 

 

லண்டன் மாநகரில் பாதசாரிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

london-bridge-759.jpg

லண்டன் நகரின் மத்திய பகுதியில் பாலம் ஒன்றில் நேற்று இரவு பாதசாரிகளை குறிவைத்து வாகனம் ஒன்று தாறுமாறாக பலமுறை மோதியது. இதில் பாதசாரிகள் பலரும் தூக்கியடிக்கப்பட்டனர்.

12387_content_41134FA000000578-4569638-i

இதனைத் தொடர்ந்து பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் பகுதிகளில் வேனில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்களில் இதுவரை மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

12387_content_41145A5B00000578-4569638-i

அத்துடன் இத்தாக்குதலை நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதியன்று வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் மீது மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைப் போல மீண்டும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இது ஒரு பயங்கரவாத தாக்குதலே என கண்டனம் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/20599

  • தொடங்கியவர்

லண்டனில் காரை பாதசாரிகள் மீது ஓட்டி, கத்திக்குத்து, 6 பேர் கொலை, 20 பேர் காயம்

 
 
இந்த புகைப்படத்திற்கு நடுவில் உள்ள வெள்ளை வேன் லண்டன் பிரிட்ஸ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.படத்தின் காப்புரிமைH. ATTAI Image captionஇந்த புகைப்படத்திற்கு நடுவில் உள்ள வெள்ளை வேன் லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர்.

லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.

மூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

லண்டன்படத்தின் காப்புரிமைAFP Image captionலண்டனில் காரை பாதசாரிகள் மீது ஓட்டி, கத்திக்குத்து, 6 பேர் கொலை, 20 பேர் காயம்

சாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார்.

 

அதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.

இந்த்த் தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார்.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது என்று அவர் கூறினார்.

பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அரசின் அவசர பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்தவுள்ளார்.

மான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

மார்ச் மாதத்தில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் மீது நுழைந்து மோதியது, பின்னர் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு போலிசார் உட்பட ஐந்து பேர், கொல்லப்பட்டனர்.

http://www.bbc.com/tamil/global-40147939

  • தொடங்கியவர்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் - புகைப்படத் தொகுப்பு

 
 

மத்திய லண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு.

  • லண்டன் பிரிட்ஜ் பகுதியில் வேன் ஒன்று பொதுமக்கள் பலரை மோதியதாக வந்த தகவலையடுத்து போலீஸார் எதிர்வினையாற்றினர்.PA

    லண்டன் பிரிட்ஜ் பகுதியில் வேன் ஒன்று பொதுமக்கள் பலரை மோதியதாக வந்த தகவலையடுத்து போலீஸார் எதிர்வினையாற்றினர்.

  • தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகே சுற்றியுள்ள பகுதிகள் உடனடியாக மூடப்பட்டன.GETTY IMAGES

    தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகே சுற்றியுள்ள பகுதிகள் உடனடியாக மூடப்பட்டன.

  • சம்பவ இடத்திற்கு ஆயுதமேந்திய போலீஸார் சில நிமிடங்கள் வந்தனர்.PA

    சம்பவ இடத்திற்கு ஆயுதமேந்திய போலீஸார் சில நிமிடங்கள் வந்தனர்.

  • லண்டன் பிரிட்ஜின் நடைபாதையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மோதி நின்றதாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் கூறுகின்றன.PA

    லண்டன் பிரிட்ஜின் நடைபாதையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மோதி நின்றதாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் கூறுகின்றன.

  • இந்த புகைப்படத்தில் உள்ள வெள்ளை வேன் லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.H. ATTAI

    இந்த புகைப்படத்தில் உள்ள வெள்ளை வேன் லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

  • சமூக ஊடக பயன்பாட்டாளர் ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், நபர் ஒருவர் சிறு கொள்கலன்கள் போல தோன்றும் சிலவற்றை தன்னுடைய உடலோடு கட்டிருந்தார். பின்னர், அவை போலி என உறுதி செய்யப்பட்டுள்ளது.GABRIELE SCIOTTO

    சமூக ஊடக பயன்பாட்டாளர் ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், நபர் ஒருவர் சிறு கொள்கலன்கள் போல தோன்றும் சிலவற்றை தன்னுடைய உடலோடு கட்டிருந்தார். பின்னர், அவை போலி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மூன்று சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.DOMINIC LIPINSKI

    பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மூன்று சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

  • அமைதியாகவும், எச்சரிக்கையாகவும் மற்றும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் போலீஸார் கூறியுள்ளனர்.PA

    அமைதியாகவும், எச்சரிக்கையாகவும் மற்றும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் போலீஸார் கூறியுள்ளனர்.

  • சம்பவ இடத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் காட்சி.AFP/GETTY

    சம்பவ இடத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் காட்சி.

  • லண்டன் பிரிட்ஜில் அவசர சேவை ஹெலிகாப்டர் தரையிறங்கும் காட்சி.AFP/GETTY

    லண்டன் பிரிட்ஜில் அவசர சேவை ஹெலிகாப்டர் தரையிறங்கும் காட்சி.

 

 

http://www.bbc.com/tamil/global-40148205

 
 
இலண்டனில் தாக்குதல்கள்...
 

image_09f9a2f286.jpgimage_65cad77883.jpgimage_a8b2d4957f.jpgimage_bca2aa23b1.jpgimage_d9e61e7d71.jpg

 

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/இலண்டனில்-தாக்குதல்கள்---/46-197922

  • தொடங்கியவர்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : எட்டு முக்கிய தகவல்கள்

 
லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் சம்பவம் : ஏழு முக்கிய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
  • லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ மார்க்கெட் பகுதிகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களையடுத்து பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சந்தேக நபர்களை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
  • வேகமாக சென்ற வேன் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியது. தொடர்ந்து, சந்தேக நபர்கள் வேனிலிருந்து வெளியேறி பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை கத்தியால் குத்தினர்.
  • தாக்குதல்தாரிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் போலியான வெடிகுண்டு ஆடைகளை அணிந்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
  • பொது மக்களில் 48 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • லண்டன் பிரிட்ஜ் ரயில்வே நிலையம் மூடப்பட்டுள்ளது.
  • இன்று நள்ளிரவு வரை வரை லண்டன் பிரிட்ஜ் மூடப்பட்டிருக்கும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
  • வாக்ஸ்ஹால் பகுதியில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் ஒன்றிற்கும் இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
  • தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஓர் அவசர அலுவலகத்தை போலீஸார் அமைத்துள்ளனர். அவர்களை 0800 096 1233 மற்றும் 020 7158 0197 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

http://www.bbc.com/tamil/global-40148367

  • தொடங்கியவர்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு, 48 பேர் காயம்

 
இந்த புகைப்படத்திற்கு நடுவில் உள்ள வெள்ளை வேன் லண்டன் பிரிட்ஸ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.படத்தின் காப்புரிமைH. ATTAI Image captionஇந்த புகைப்படத்திற்கு நடுவில் உள்ள வெள்ளை வேன் லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர்.

லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.

மூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

லண்டன்படத்தின் காப்புரிமைAFP Image captionலண்டனில் காரை பாதசாரிகள் மீது ஓட்டி, கத்திக்குத்து, 7 பேர் கொலை, 48 பேர் காயம்

சாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார்.

 

அதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.

இந்த்த் தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார்.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது என்று அவர் கூறினார்.

பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அரசின் அவசர பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்தவுள்ளார்.

மான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

மார்ச் மாதத்தில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் மீது நுழைந்து மோதியது, பின்னர் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு போலிசார் உட்பட ஐந்து பேர், கொல்லப்பட்டனர்.

http://www.bbc.com/tamil/global-40147939

  • தொடங்கியவர்

லண்டன் தாக்குதல் குறித்து இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள்

 
 
லண்டன் தாக்குதல்: இதுவரை நடந்தவைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
  • லண்டன் பிரிட்ஜில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
  • தாக்குதல்தாரிகள் மூன்று பேரை போலிஸார் சுட்டுக் கொன்றனர்.
  • இந்த தாக்குதலில் காயமடைந்த 48 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் அதில் 21 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
  • நான்கு போலிஸார் காயமடைந்துள்ளனர்; அதில் இரண்டு பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர்.
  • எட்டு போலிஸ் அதிகாரிகள் 50 துப்பாக்கி குண்டுகளால் மூன்று தாக்குதல்தாரிகளை சுட்டனர்.
  • அதில், பொதுமக்களில் ஒருவர் மீது குண்டு அடிப்பட்டு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • லண்டனின் கிழக்கு பகுதியில் இருக்கும் பார்கிங்கில் சோதனை நடத்தி, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
  • "இஸ்லாமியவாத தீவிரவாதத்தின் ஒற்றை சிந்தைனை" என இதை விவரித்துள்ள பிரிட்டன் பிரதமர் மே, "இதுவரை நடந்தது போதும்" என தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • பிரிட்டன் "பயங்கரவாதத்திற்கு எதிராக மலிவாக செயல்படாது" என எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோபின் தெரிவித்துள்ளார்.
  • தாக்குதல்தாரிகளில் ஒருவர் பார்கிங்கில் வசித்து வந்ததாக நம்பப்படுகிறது. அவர் வீட்டிற்கு அருகாமையில் இருந்தவர்கள், அவருக்கு திருமணமாகி இருண்டு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
  • லண்டன் பிரிட்ஜை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன அதில் சிலவற்றை போலிஸார், திங்களன்று காலை திறக்கலாம் என்று நம்பப்படுகிறது.

http://www.bbc.com/tamil/global-40155783

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.