Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதவிடாய்: வெறும் குருதி அல்ல - பெண்ணின் உயிர்வலி அது - Jermain Jma

Featured Replies

பெண்ணுக்கு மட்டுமே உரிய சொத்து. பெண்களால் மட்டுமே உணரக்கூடியது. இரண்டு நாளுக்கு முதல்ல ஒரு பதிவு பார்த்தேன். மாதவிடாய் காலத்தில் பெண்கள் வலி வருவது போல் நடிக்கிறார்களாம் விளம்பரங்களில் பெண்கள் pad வச்சதும் டான்ஸ் ஆடுகிறார்களாம்.

இது என்ன மாதிரியான முதிர்ச்சியடைந்த மனநிலை. விளம்பரங்களில் மாதவிடாய் நீல மை ஊற்றி காட்டுகிறார்கள் அதற்க்காக பெண்களின் குருதி என்ன நீல நிறமா? உண்மையில் மாதவிடாய் காலத்தில் எல்லாப் பெண்களுக்கும் வயிறு வலி வருவதில்லை ஆனால் 1/5 பெண்களுக்காவது வலி வருவதுண்டு. அந்த வலி சாதாரணமானதும் இல்லை.

"கடும் வயிற்று வலியால் தூக்கிலிட்டு தற்க்கொலை செய்து கொண்டார்" இவ்வாறான செய்திகளை நாம் பார்ப்பதுண்டு அந்த மரணத்தின் பின் என்ன மர்மமும் இருக்கலாம் ஆனால் அந்த வலி வரும் போது ஒரு பெண் அப்படிப்பட மனநிலைமைக்கும், தற்க்கொலைக்கு செல்வது சாத்தியமான ஒன்று தான்.

எல்லா நேரமும் குருதி வெளியேற்றம் திரவமாக மட்டும் இருப்பதில்லை, சிலருக்கு குருதி திரவத்தன்மையோடு தின்மமாகவும் (இரத்தக்கட்டிகளாகவும்)வெளியேறும். மாதவிடாய் 28 நாட்க்களுக்கு சரியாக வரக்கூடியவர்களும் உள்ளனார், மாதக்கணக்கில் வராமல், வரும்போது சில மாதக்கணக்கில் இரத்தப்போக்கு ஏற்படுவதும் உண்டு (irregular periods problem) சிலருக்கு 50 நாளுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வருவதுண்டு அப்பிடிப்பட வேளையில் சில சிரமங்களை ஆண்களால் உணர்ந்து கொள்வது கடிணம் (24*7 )நாள் முழுவதும் ஒரு சிலிக்கன் pad ஓட மூன்று நாள் இருக்கலாம் அதையும் தாண்டி 20,30 நாட்கள் தொடர்ச்சியாக எப்படி முடியும். அதானல் ஏற்படக்கூடிய உடல் சேர்வு , பெண் உறுப்பு சார்ந்த வருத்தங்கள் இதை எல்லாம் யாரிடமும் எப்போதும் சொல்ல முடியாது. பல நேரங்களில் ஆடைகளே அசௌகரியமாக மாறிவிடும்.

வெறும் "வலி" என்ற வார்த்தைகளை மட்டும் பார்ப்பவர்களுக்கு அதன் உணர்வுக்குள் உட்செல்வது மிகக்கடினம். வலிகளை நிறுத்த மருந்து எடுக்கலாம் ஆனால் அதை மருத்துவர்களே அனுமதிப்பதில்லை மருந்துக்கு பழக்கப்படுத்தி விட்டால் பிரசவ பிரச்சனைகள் வரலாம் என்பதனால் கூட தவிர்க்க வேண்டியுள்ளது.

சிலருக்கு கர்ப்ப காலத்தில் மாதவிடாய் வருவதும் உண்டு இது பல ஆண்களுக்கு தெரியாது, சாதாரண நேரத்திலே இப்படி ஒரு பெண் அவஸ்தைபடும் போது கர்ப்பகாலத்தில் அது இன்னும் அதிகமான அசௌகரியத்தையே தரும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ("If anyone get first time bleeding during pregnancy please go hospital soon as possible "")

சில நேரங்களில் கர்ப்பத்தில் இருக்கும் குழ்ந்தை எதிர்பாராத விதமாக அழிய நேர்ந்தால் இது மாதவிடாய் வலி , பிரசவ வலிகளை விட கொடுமையாணதாகவே இருக்கும். அப்போது ஏற்படக்கூடிய உடல், மனம் சார்ந்த வலிகளை எந்த ஒரு மருத்துவத்தாலும் ஈடுகட்டவே முடயாது. தன் உடலுக்குள் வளர்ந்த உயிர் கரைவதை கண்களால் பார்ப்பவர்கள் துரதிஸ்டசாலிகளே. பாவம் அந்த உண்ர்வுகளை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எப்போதும் எதிர்பார்க்கவே கூடாது. தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் தான் அது வலி தந்த சோகம் மற்றவர்களுக்கு வெறும் தகவல் (அ) வார்த்தை.
இதில சிலர் விருப்ப பட்டு கருக்கலைப்பு செய்வதுண்டு ஆனால் கேட்டுப் பாருங்கள் அப்படி செய்து ஒருவாரத்திற்க்குள் சொல்வார்கள் பெரிய தவறு செய்துவிட்டேன் என்று (அ) வாழ்நாள் முழுவதும் அந்த நிகழ்வை மட்டும் மறக்கவே மாட்டார்கள். தாய்மை அவ்வளவு தூய்மையானதே. காதல் வலி எல்லாம் கால் தூசுக்கு சமாணம் என அந்த நொடி உணர்த்தும். இதனால் தான் இந்த பெண்கள் திருமணமாகி குழந்தை உண்டானதும் (அ) பிறந்ததும் பழைய காதல்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை எண்டு பலருக்கு புரிவதில்லை.

சில விடயங்களை புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலோ (அ) விளங்கவில்லை என்றாலோ அதை கடந்து சொல்லவதே உத்தமம் அதை விடுத்து ஒரு இலாப நோக்கத்துக்காக ஒளிபரப்பு செய்யப்படும் விளம்பரத்தை கொண்டு ஒருவர் சார்ந்த உணர்வை வெளிப்படுத்திவிடவே முடியாது

Jermain Jma

-----------------------------------------------------------------

Jermain Jma தன் முகனூலில் பதிந்ததை அவரது முழு அனுமதியுடன் பிரசுரிக்கின்றேன் - நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

வலி மாத்திரைகளை எம்மவர்கள்தான் 
முஸ்லிம்கள் பன்றியை பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள் 
அதனால் பெரும் கெடுதல் இருக்கும் என்று நான் நம்பவில்லை.
மேலை நாடுகளில் சாதாரணமாக எடுத்துகொள்கிறார்கள் 
(அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.)
அளவுக்கு அதிகமான வலியுடன் போராடுவது அதைவிட கெடுதல்.

வலி மாத்திரைகள் மூளைக்கு செல்லும் நரம்புகளில் தான் 
செயல்படுகிறது ஆதலால் எம்மவர்கள் எண்ணுவதுபோல் 
கர்ப்பபையில் எந்த சிக்கலையும் உண்டுபண்ணாது.

உடல்பயிட்ஸி என்பது சொகுசு வாழ்வுக்கு  மாறிவிட்ட எல்லோருக்கும் 
அவசியம். அதில் குறிப்பாக எமது உடலை பற்றிய சூத்திரம் எல்லோராலும் 
தெரிந்துகொள்ளப்படல் வேண்டும்.  
சாதாரண வேலைகளை செய்யும்போதும் உங்கள் சக்தியை உரிய இடத்தில் 
இருந்து பெற்றுக்கொள்ள தெரியவேண்டும். எங்களுடைய உடல் சக்தி என்பது வயிற்றில்தான் 
இருக்கிறது ஆண்கள் கூட இதை செய்யாதால்தான் பலருக்கு வயிறு பெருத்துக்கொண்டு 
போகிறது நீங்கள் சாதாரணமாக ஒரு கடையில் இருந்து ஒரு பையை தூக்கும்போது கூட 
உங்கள் வயிற்றில்இருந்து சக்தியை பாவித்தால் ...அது அந்த சுமையை இலகு ஆக்குவதோடு 
உங்கள் உடலையும் வலிமை கொள்ள செய்கிறது. 

இங்கு அதிகமாக இளம் பெண்களை கர்ப்பத்தடை மாத்திரைகள் பாவிக்க 
பல மருத்துவர்கள் அறிவுரை கூறுவார்கள் அதுதான் பின் விளைவுகளை 
தோற்றுவிக்கறது. மற்ற நாடுகள் பற்றி தெரியவில்லை அமெரிக்காவில் 
மாதவிடாய் வலிக்காகவே பல இளம் பெண்கள் குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் 
கர்ப்பத்தடை மாத்திரைகள் பாவிக்கிறார்கள்.

சிலருக்கு  உடலுறவு வைத்துக்கொள்ள தொடங்கும் போது வலி குறைவடைகிறது 
பலருக்கும் அநேகமாக குழந்தை பிறந்தவுடன் அது சரியாகி போகிறது 
அதற்கும் தாண்டி இருந்தால் அது சாதாரண வலியாக இருக்காது ஏதும் மருத்துவ குறைபாடு 
காரணமாக இருக்கும் டாக்காடருடன் பேசுவதே நல்லம். 

வலிக்காக இந்த மாத்திரைகளை பாவிக்கலாம் 
பக்கவிளைவு என்று பெரிதாக ஒன்றும் இல்லை இது வெறும் வலி நிவாரணம்.
பேய் பிசாசு கதைகள் போல இல்லாதவையை பற்றி கவலை கொள்வதைவிட 
இருப்பதை பற்றி அறிந்து சுகம் பெறுவதே நன்று.
உங்களின் சொந்த ஆய்வு என்பது நிச்சயம் தேவை 
இந்த மாத்திரை பற்றி நீங்கள் உங்கள் மருத்துவருடன் முதலில் பேசி பார்க்க்கலாம்.

 

Midol Complete

About My Period

Get the facts. Period.

The cramps. The bloating. The fatigue. Sometimes it can feel like your period is completely taking control. You deserve better! Get the period facts--and learn how to get the relief you deserve.

  • understanding

    Understanding Your Body

    Get the inside story about the female body
    Read More »

  • understanding

    My Monthly Cycle

    Learn what goes on inside your body before, during and after your period
    Read More 

  • understanding

    My Menstrual Symptoms

    Discover the causes and symptoms of PMS
    Read More 

  • understanding

    Feeling Better During My Period

    Review available treatment options for relieving your period symptoms
    Read More 

  • understanding

    When to Ask Your Healthcare Professional

    Know which period symptoms to discuss with your doctor
    Read More 

https://www.midol.com/about-my-period/

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின்  மாத சுழற்சியில் ஏற்படும் வலிகளையும்  சுமக்கும் குழந்தை வரைக்கும் அவர்கள் அனுபவிக்கும் வலிகள் வேதனைகளை நன்றாக சொல்லி இருக்கிறார் அவர்  ....அவர் பொண்ணாக இருந்து வாழ்த்துக்கள் :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின்இது போன்ற  வலிகளை எழுதலாம்

ஆனால்அதை ஆண்களால் உணரவே முடியாது

அவரவருக்கு  வந்தால்தான்  தெரியும்

இது  பற்றி ஒருஅனுபவக்கதை எழுதியிருந்தேன்

மனைவிக்கு வலித்தபோது தெரியவில்லை

ஆனால்மகளுக்கு  வலித்தபோது.....?

அதற்கு எனது மனைவி சொன்னது 

நான்  இன்னொருவரின்  மகள்தானே  என்று.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

பெண்களின்இது போன்ற  வலிகளை எழுதலாம்

ஆனால்அதை ஆண்களால் உணரவே முடியாது

அவரவருக்கு  வந்தால்தான்  தெரியும்

இது  பற்றி ஒருஅனுபவக்கதை எழுதியிருந்தேன்

மனைவிக்கு வலித்தபோது தெரியவில்லை

ஆனால்மகளுக்கு  வலித்தபோது.....?

அதற்கு எனது மனைவி சொன்னது 

நான்  இன்னொருவரின்  மகள்தானே  என்று.

பச்சை இல்லை அதனால் எழுதுகிறேன் வலி ஒன்றுதான் ஏற்படும் இடமே வலிக்க வைக்கிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.