Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவை சேனாதிராசாவுக்கு ஓர் அவசர மடல்

Featured Replies

14992.jpg
தமிழரசுக் கட்சியின் தலைவர் அன்புமிகு மாவை சேனாதிராசா அவர்களுக்கு வணக்கம்.
 
கடந்த ஒரு வாரமாக தங்களின் அரசியல் பணி மிகுந்த சிரமமுடையதாக இருந்திருக்கும். 
 
போதாக்குறைக்கு சம்பந்தர் ஐயாவும் உங்கள் தலையில் பாரத்தை ஏற்றிவிட்டு, தமிழரசுக் கட்சியின் சாதாரண உறுப்பினன் நான், மாவை சேனாதிராசாதான் அக்கட்சியின் தலைவர் என்று ஒதுங்கிக் கொண்டார்.
 
ஒரு சம்பிரதாயத்துக்கேனும் சம்பந்தர் ஐயா யாழ்ப்பாணம் வந்திருந்தால் அது உங்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருக்கும்.
 
என்ன செய்வது! காலம் பிழைக்கும் போது முதலில் அருகில் இருப்பவர்கள்தான் விலத்திச் செல்வர்.
 
எதுவாயினும் தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் இப்படியயாரு சோதனையை அக்கட்சி முன்பு ஒருபோதும் சந்தித்திருக்கவில்லை.
 
அதற்குக் காரணமும் உண்டு. முன்பெல்லாம் தமிழரசுக் கட்சியில் அடிமட்டத் தொண்டர்களாக இருந்து அந்தக் கட்சி மீது உயிரை வைத்திருந்தவர்களே அதன் முக்கிய பிரதானிகளாக இருந்தனர். ஆனால் இப்போது அப்படி எதுவும் கிடையாது.
 
உங்களைப் போன்ற ஒரு சிலரைத் தவிர, மற்றையவர்கள் காய்த்த மரத்தில் கனி பறிக்க வந்தவர்கள்.
 
கனியின் சுவை கண்ட அவர்கள் பவிசு வந்தவர்களாக மரத்தை அடியோடு தறித்து தம் வீட்டுக்கு எடுத்துச் சென்றால் என்ன? என்று நினைப்பவர்கள்.
 
இல்லையென்றால் வடக்கு மாகாண முதலமைச்சர் மீது அவர்கள் நம்பிக்கையில்லாப் பிரே ரணையை கொண்டு வருபவர்களா என்ன?
 
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்து வந்துவிட்டு, அவரின் பதவியைப் பறிக்க நினைத்தமை மிகப்பெரும் கபடத்தனம்.
 
அதைவிட தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவனாக இருக்கக்கூடிய விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதென்பது தமிழ் மக்களை உதாசீனப்படுத்தும் செயலாகும்.
 
இவையெல்லாம் நடப்பதற்கு தாங்கள் ஒரு போதும் இடம்கொடுத்திருக்கக்கூடாது.
 
தமிழரசுக் கட்சி அடியோடு கவிழ்ந்து விடப் போகிறதோ என்றிருந்த நிலையில் தாங்கள் எடுத்த சில முடிவுகள் மிகப்பெரும் தவறில் இருந்து கட்சியையும் தங்களையும் காப்பாற்றி விட்டது.
 
அதேவேளை இனிவரும் காலங்களில் நீங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
 
ஏனெனில் வடக்கு மாகாண சபைக்குள் இருக்கக்கூடிய பிரச்சினை முற்றுமுழுதாக நீங்கி விட்டதென்று ஒருபோதும் கூறிவிட முடியாது.
 
இப்போது வடக்கு மாகாண சபையில் நீதிக்கான உறுப்பினர்கள் என்ற அணி உருவாகியுள்ளது. இது எதற்கானது.
 
ஆளும் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய  தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நீதிக்கான உறுப்பினர்கள் என்ற அணியை உருவாக்குவதாக இருந்தால் இதற்கு நீங்கள் அனுமதி வழங்கினீர்களா?
 
ஆளுங்கட்சியே இப்படியெரு அணியை உருவாக்குமாக இருந்தால் சபையில் அநீதிகளை இழைப்பது யார்?
 
உங்கள் கட்சியில் இப்படியான அணியை உருவாக்குவதற்கு சட்டங்களும் நடைமுறைகளும் இடம் தருகிறதா? அல்லது ஆளும் கூட்டமைப்புத்தான் இடம்கொடுக்கிறதா?
 
நீதிக்கான உறுப்பினர்கள் என்ற அணி முதலமைச்சருக்கு எதிரானதா? தொடர்ந்தும் இந்த அணி முதலமைச்சருக்குத் தொந்தரவு கொடுக்குமா? அல்லது ஆளுநரைச் சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறுமா?
 
இதென்ன இது? இதெல்லாம் தேவை தானா? இதுபற்றி நீங்கள் சிந்தித்து தமிழரசுக் கட்சி என்ற கூட்டமைப்புக்குள் - உங்கள் தலைமைக்குள் அனைத்தையும் கொண்டு வாருங்கள். எழுந்தமானமாக கட்சி உறுப்பினர்கள் செயற்படுவதைக் கட்டுப்படுத்துங்கள்.
 
இதை கூறவே இவ் அவசர கடிதத்தை எழுதினோம்.

http://valampurii.lk/valampurii/content.php?id=14992&ctype=news

1 hour ago, Athavan CH said:
இப்போது வடக்கு மாகாண சபையில் நீதிக்கான உறுப்பினர்கள் என்ற அணி உருவாகியுள்ளது. இது எதற்கானது.
 
ஆளும் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய  தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நீதிக்கான உறுப்பினர்கள் என்ற அணியை உருவாக்குவதாக இருந்தால் இதற்கு நீங்கள் அனுமதி வழங்கினீர்களா?
 
ஆளுங்கட்சியே இப்படியெரு அணியை உருவாக்குமாக இருந்தால் சபையில் அநீதிகளை இழைப்பது யார்?

"நீதிக்கான அணி" என்ற பெயரில் அறிக்கைகள் விட்ட மிக மோசமான திருட்டுக் கும்பலுக்கு வழிகாட்டிய மாவைக்கு இப்படியொரு கடிதம் எழுதி அவரை அவமானப்படுத்தலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

சில தினங்களுக்கு முன்னர் நான் யாழ்களத்தில் வேறொரு திரியில் இட்ட கருத்துப்பதிவை மீண்டும் இங்கே தருகிறேன்.

   On 20.6.2017 at 8:25 PM,  vanangaamudi said: 

யார் இந்த அணியை அமைத்தது? இந்த அணி சட்டவிரோதமானது உடனே கலைக்கப்படவேண்டும். வடமாகாணசபைக்குள் இருந்துகொண்டு இப்படியான அணிகள் செயற்படுவது வீண் சர்ச்சைகளையே உருவாக்கும். நீதி நேர்மை என்று கவர்ச்சியான பெயரையும் வைத்து விட்டால்  தங்களை தலையாளிபோல் காட்டி நாசகாரவேலை செய்ய இப்படி பலர் முயலக்கூடும்.  பிரச்சினை ஒன்று வந்துவிட்டால் அதைசாட்டாக வைத்து பல அள்ளக்கைகள் நச்சுக் காளான்கள் போல் முளைத்து எரிகிற வீட்டில் புடுங்கப்பாக்கும். நீதிக்கும் நேர்மைக்கும் போராடுவது மக்கள் தெரிவு செய்து அனுப்பிய  பிரதிநிதிகளின் கடமை. இவர் ஏதோ உயிரைக்கொடுத்து போரடியதுபோல் பில்டப் செய்கிறார்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Athavan CH said:
 
------அதற்குக் காரணமும் உண்டு. முன்பெல்லாம் தமிழரசுக் கட்சியில் அடிமட்டத் தொண்டர்களாக இருந்து அந்தக் கட்சி மீது உயிரை வைத்திருந்தவர்களே அதன் முக்கிய பிரதானிகளாக இருந்தனர். ஆனால் இப்போது அப்படி எதுவும் கிடையாது.
 
உங்களைப் போன்ற ஒரு சிலரைத் தவிர, மற்றையவர்கள் காய்த்த மரத்தில் கனி பறிக்க வந்தவர்கள்.
 
கனியின் சுவை கண்ட அவர்கள் பவிசு வந்தவர்களாக மரத்தை அடியோடு தறித்து தம் வீட்டுக்கு எடுத்துச் சென்றால் என்ன? என்று நினைப்பவர்கள்.
 
இல்லையென்றால் வடக்கு மாகாண முதலமைச்சர் மீது அவர்கள் நம்பிக்கையில்லாப் பிரே ரணையை கொண்டு வருபவர்களா என்ன?
 
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்து வந்துவிட்டு, அவரின் பதவியைப் பறிக்க நினைத்தமை மிகப்பெரும் கபடத்தனம்.
 
அதைவிட தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவனாக இருக்கக்கூடிய விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதென்பது தமிழ் மக்களை உதாசீனப்படுத்தும் செயலாகும்.
 
இவையெல்லாம் நடப்பதற்கு தாங்கள் ஒரு போதும் இடம்கொடுத்திருக்கக்கூடாது.
 
தமிழரசுக் கட்சி அடியோடு கவிழ்ந்து விடப் போகிறதோ என்றிருந்த நிலையில் தாங்கள் எடுத்த சில முடிவுகள் மிகப்பெரும் தவறில் இருந்து கட்சியையும் தங்களையும் காப்பாற்றி விட்டது.
 
அதேவேளை இனிவரும் காலங்களில் நீங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
 
ஏனெனில் வடக்கு மாகாண சபைக்குள் இருக்கக்கூடிய பிரச்சினை முற்றுமுழுதாக நீங்கி விட்டதென்று ஒருபோதும் கூறிவிட முடியாது.
 
இப்போது வடக்கு மாகாண சபையில் நீதிக்கான உறுப்பினர்கள் என்ற அணி உருவாகியுள்ளது. இது எதற்கானது.
 
ஆளும் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய  தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நீதிக்கான உறுப்பினர்கள் என்ற அணியை உருவாக்குவதாக இருந்தால் இதற்கு நீங்கள் அனுமதி வழங்கினீர்களா?
 
ஆளுங்கட்சியே இப்படியெரு அணியை உருவாக்குமாக இருந்தால் சபையில் அநீதிகளை இழைப்பது யார்?
 
உங்கள் கட்சியில் இப்படியான அணியை உருவாக்குவதற்கு சட்டங்களும் நடைமுறைகளும் இடம் தருகிறதா? அல்லது ஆளும் கூட்டமைப்புத்தான் இடம்கொடுக்கிறதா?
 
நீதிக்கான உறுப்பினர்கள் என்ற அணி முதலமைச்சருக்கு எதிரானதா? தொடர்ந்தும் இந்த அணி முதலமைச்சருக்குத் தொந்தரவு கொடுக்குமா? அல்லது ஆளுநரைச் சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறுமா?
 
இதென்ன இது? இதெல்லாம் தேவை தானா? இதுபற்றி நீங்கள் சிந்தித்து தமிழரசுக் கட்சி என்ற கூட்டமைப்புக்குள் - உங்கள் தலைமைக்குள் அனைத்தையும் கொண்டு வாருங்கள். எழுந்தமானமாக கட்சி உறுப்பினர்கள் செயற்படுவதைக் கட்டுப்படுத்துங்கள்.
 
இதை கூறவே இவ் அவசர கடிதத்தை எழுதினோம்.

காலத்தின் தேவை கருதி... மாவைக்கு ... எழுதிய கடிதம், பல விடயங்களை சுட்டிக் காட்டியுள்ளது.
இதனை எல்லாம், நிவர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு, 
மாவைக்கு தலைமைப் பண்பு உள்ளதா? என்பது கேள்விக்குறியே....

அப்படி இருந்தால், முதலில்... சம்பந்தனையும், சுமந்திரனையும் கட் சியை விட்டு நீக்கினால்,
எந்தப் பிரச்சினையும், கட் சிக்குள் ஏற்படாது. 
இந்த இருவரின் செயல்கள் தான் .... தமிழனை சந்தி  சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது.

  • தொடங்கியவர்
தமிழ் மக்கள் உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவர்
 
15005.jpg
தமிழனுக்கு தமிழனே பகையாகிவிட்ட நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற ஏக்கம் பலரிடமும் இருக்கவே செய்கிறது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் பாவமன்னிப்பு வழங்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் அவர்களை நம்பி வாக்களித்தனர்.
 
வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தவர்களில் சிலர், இப்போது அரசுடனும் பேரினவாத சக்திகளுடனும் இணைந்து போவதில் மிகத் தீவிரமாக இருக்கின்றனர்.
 
இதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற நிலைமை உணரப்படுகிறது.
 
இந்நிலையில் வடக்கு மாகாண சபையில் நடந்த அதிரடிச் சம்பவங்கள் தமிழ் மக்களை கதிகலங்கச் செய்ததுடன் தமிழர்களுக்கு ஆட்சி என்பது பொருத்தமற்றது என்றவாறான கதைகள் தென்பகுதியின் விமர்சனமாக மாறியும் உள்ளது.
 
விடுதலைப் புலிகள் என்ற மண் மீட்புப் போராட்ட அமைப்பு உருவாகிய இத்தமிழ் மண்ணில், விடுதலைப் புலிகள் எவ்வாறாக நிர்வாகம் நடத்தினர் என்பதை இந்த உலகமே நன்கறியும்.
 
தவிர, விடுதலை புலிகள் அமைப்பின் ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன எதிரிகளையும் திகைக்க வைத்தது.
 
இவ்வாறாக ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய தமிழினம் இன்று மாகாண சபையைக் கூட நடத்த முடியாமல் தத்தளிக்கிறது என்ற அளவில் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தமிழ் மக்களின் இயலாமையன்று.
 
மாறாக பேரினவாத சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு குழுவாக இயங்கும் தமிழ் அரசியல்வாதிகள் வேண்டுமென்றே செய்கின்ற திருகுதாளங்கள்.
 
இதன் ஓர் உச்சக்கட்டமே வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமாகும்.
 
இவற்றைச் செய்கின்றவர்கள் இதன் பின் விளைவு பற்றி இம்மியும் சிந்திக்கவில்லை.
 
அத்தகைய சிந்தனை அவர்களுக்குத் தேவையுமற்றது. பேரினவாதத்துடன் சேர்ந்து எத்தகைய நிலைமையைத் தோற்றுவிக்க வேண்டுமோ அத்தகைய நிலைமையைச் செய்து முடிப்பதே அவர்களின் இலக்காக உள்ளது.
 
எனினும் இவற்றை தமிழ் மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.
 
வடக்கு மாகாண சபையில் என்ன நடக்கிறது. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் எப்படி உரையாற்றுகிறார்கள் என மக்கள் விழிப்பாக அவதானிக்கத் தலைப்பட்டுள்ளனர்.
 
தமது அரசியல் நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விழிப்படைந்துள்ளதால்,
 
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் மிகச்சிறப்பாக அமையும் என நம்ப முடியும்.
 
அதேவேளை சபை நடவடிக்கையை வேண்டுமென்றே குழப்ப யார் நினைத்தாலும் மக்கள் அதனை அனுமதிக்கப் போவதில்லை என்பது சர்வநிச்சயம்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15005&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மதில் மேல் பூனை மடல்களுக்கு எல்லாம் அசராது. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.