Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா: தலை வாறியா யார் அந்த மரத்தை முதல்ல ஓடிப்போய் தொடுவது.

தலை: நான் தயார்! ஆனால் யார் நடுவர்?

(விதிவசத்தால் கந்தப்பு அங்கு வாருகிறார். அவரைப் பார்க்கச் சொல்லி இருவரும் ஓடுகின்றனர்)

யமுனா: ஹையா நாந்தான் முதல்ல தொட்டேன்.

தலை: இல்லை! நாந்தான் என்று கந்தப்புவை முறைக்கிறார்.

( அப்புவுக்கு சங்கடம். தப்பா சொன்னால் தலை அடிக்கும் அல்லது யம்மு கடிக்கும். யோசித்து தீர்ப்பை இப்படிச் சொன்னார்.)

இந்தப் பந்தயத்தில் வானவில் இரண்டாவதாக வந்தார்.

யமுனா கடைசிக்கு முதலாவதாக வந்தார். :lol::unsure:

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply

( அப்புவுக்கு சங்கடம். தப்பா சொன்னால் தலை அடிக்கும் அல்லது யம்மு கடிக்கும். யோசித்து தீர்ப்பை இப்படிச் சொன்னார்.)

இந்தப் பந்தயத்தில் வானவில் இரண்டாவதாக வந்தார்.

யமுனா கடைசிக்கு முதலாவதாக வந்தார். :lol::unsure:

கந்தப்பு தாத்தாவுக்கு எப்ப இருந்து இவ்வளவு அறிவு வந்தது

:P

  • தொடங்கியவர்

யமுனா: தலை வாறியா யார் அந்த மரத்தை முதல்ல ஓடிப்போய் தொடுவது.

தலை: நான் தயார்! ஆனால் யார் நடுவர்?

(விதிவசத்தால் கந்தப்பு அங்கு வாருகிறார். அவரைப் பார்க்கச் சொல்லி இருவரும் ஓடுகின்றனர்)

யமுனா: ஹையா நாந்தான் முதல்ல தொட்டேன்.

தலை: இல்லை! நாந்தான் என்று கந்தப்புவை முறைக்கிறார்.

( அப்புவுக்கு சங்கடம். தப்பா சொன்னால் தலை அடிக்கும் அல்லது யம்மு கடிக்கும். யோசித்து தீர்ப்பை இப்படிச் சொன்னார்.)

இந்தப் பந்தயத்தில் வானவில் இரண்டாவதாக வந்தார்.

யமுனா கடைசிக்கு முதலாவதாக வந்தார். :lol::unsure:

ஐயோ நானும் ஜம்மூம்தான் முதலாவதா வந்தோம் இது கூட தெரியலை கந்தப்புவுக்கு, குஞ்சாச்சிட்ட அடி வாங்கி மூளை எல்லாம் கழண்டு போச்சுது :P

  • தொடங்கியவர்

கிரிக்கெட் ரசிகரான தருமி (திரு விளையாடல் படத்தில நாகேஷ் வேசத்தில வருவாரே அவர்தான்) இந்தியாவின் உலக கோப்பை ஆட்டத்தை பார்த்து வாந்தி எடுத்து, வயத்தால போய் ஆட்டங்கண்டு புலம்பி கொண்டு இருக்கிறார்...

"அய்யோ நாலு வருஷமாச்சே, நாலு வருஷமாச்சே... கோப்பை நமக்கில்லை, நமக்கில்லை எவனோ தள்ளிட்டு போகப்போறான்... நான் எங்கே போவேன் என்ன பெட் கட்டுவேன்? சொக்கா... ஐ சி சி கொடுக்கற கோப்பை இந்தியாக்கே கிடைக்கற மாதிரி அருள் புரிய மாட்டியா? ஆமா சூப்பர் எய்ட்டுகே சுக்கிர திசை இல்லை... கோப்பை வேறயா? கோழிகுஞ்சு கூட கிடைக்காது.."

அப்போது அங்கே சிவபெருமான் தோன்றுகிறார்...

"தருமியே..."

"யாருய்யா கூப்பிட்டது?"

"அழைத்தது நான் தான்"

"யாருய்யா நீ?"

"செஞ்சுரியும், சிக்ஸரும் அடித்து, பவுண்டரியும், பவுலரையும் அடிக்கும் கிரிக்கெட் பேட்ஸ்மேன் நான்"..

சிறிது நேர விவாதத்துக்கு பிறகு தருமி கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறார்....

பிரிக்க முடியாதது என்னவோ?

நம்மாளுகளும் பெவிலியனும்

சேர்க்க கூடாதது?

நம்மாளும் பார்ட்டிகளும்..

சேர்ந்தே இருப்பது?

நம்மாளும், செல்போனும்

சேராமல் இருப்பது?

நம்மாளு பேட்டும் எதிர் டீம் பாலும்...

சொல்ல கூடாதது

நம்ம ஆட்டம்

சொல்ல கூடியது

எதுவுமே இல்லை

செஞ்சுகிட்டே இருக்கிறது?

விளம்பர சூட்டிங்

செய்யாமயே இருக்கிறது?

பிட்ச்ல பேட்டிங்

நம்மாளு அறியாதது?

அடித்து ஆடுவது..

நன்றாக அறிந்தது?

குடித்து ஆடுவது...

விக்கெட் என்பது?

நாம் வேகமாக இழப்பது...

ரன் என்பது

மற்றவர்கள் வேகமாய் எடுப்பது...

பவுண்டரி என்பது..

எங்கேயோ இருப்பது...

சிக்ஸர் என்பது..

எட்டாமலே இருக்குது..

பால்னு சொன்னா?

நோ பால்

அதுக்கு மேல

வைடு பால்

விக்கெட்டுக்கு

சேவாக்

விளம்பரத்துக்கு

சச்சின்

அடக்குவது

ஐ சி சி

அமுக்குவது

பி சி சி

அய்யா நீர் வீரர் நீர் வீரர்...

நீர்?

நான் வீரர் இல்லை நான் அம்பயர்.

ஐயோ நானும் ஜம்மூம்தான் முதலாவதா வந்தோம் இது கூட தெரியலை கந்தப்புவுக்கு, குஞ்சாச்சிட்ட அடி வாங்கி மூளை எல்லாம் கழண்டு போச்சுது :P

அப்படி போடு அரிவாள தலை

:P

  • தொடங்கியவர்

கந்தப்பு தலையில போடணும் அரிவாளை

கந்தப்பு தலையில போடணும் அரிவாளை

பாவம் இப்பவும் குஞ்சாச்சியிட்ட அடி வாங்கி கொண்டு தான் இருக்கிறார்

:lol:

  • தொடங்கியவர்

ஐயோ கந்தப்பு ரொம்ப பாவம் ஆண்டவந்தான் காப்பத்தணும்

  • தொடங்கியவர்

தனியார் நிறுவன அலுவலரே.. கீழ்கண்ட சைகைகள் உங்களுக்கு தென்பட்டால்...

"உங்க டப்பா டான்ஸ் ஆடப் போகுதுன்னு " அர்த்தம்..

1. உங்க உதவியாளர் உங்க பெயரை மட்டும் (சார் எனும் விகுதி இல்லாமல்) சொல்லி அழைக்க ஆரம்பிக்கும் போது...

2. பியூன் டீ கிளாஸை "நங்" குன்னு உங்க டேபிள்ள வைக்கும் போது..

3. உங்க ஸ்டெனோ, "போனை நீங்களே எடுங்க.. என் கை ஈரமா இருக்கு"ன்னு தயக்கமே இல்லாம சொன்னால்..

4. பாதுகாப்பு ஊழியர் உங்களை முழுமையா தடவி சோதனை செய்ய ஆரம்பிச்சா...

5. உங்க TFT மானிட்டரை எடுத்துட்டு பழைய கருப்பு வெள்ளை மானிட்டரை வைத்தால்...

6. உங்க முதலாளி," நாம முந்தி செஞ்சுக்கிட்ட வேலை ஒப்பந்த பத்திரத்தை நல்லா படிச்சு பார்த்தீர்களா..?" என்று கேட்டாரேயானால்...

7. உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் உங்க கவனத்துக்கு வராமலேயே துண்டிக்கப்பட்டால்...

8. உங்களுடைய இருக்கை மின்விசிறி இல்லாத இடத்துக்கு மாற்றப்பட்டால்..அல்லது உங்களுடைய தனியறையிலிருந்து குளிரூட்டும் இயந்திரம் கழற்றப்பட்டால்..

9. உங்களுக்காக அலுவலகத்தால் தரப்பட்ட கார் ரொம்ப நாளாக பழுது பார்க்கும் பட்டறையிலிருந்து திரும்பாவிட்டால்.. அல்லது உங்களை வீட்டில் இறக்கிவிடாமல் நாலு தெரு தள்ளி அம்போ வென இறக்கி விட்டுவிட்டு.." அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க சார்.. ஒரு அவசர வேலை.." என்று சொல்லி உங்கள் பதிலை எதிர்பாராமல் டிரைவர் கிளம்பினால்..

10. உங்க வேலையைத் தெரிஞ்சுக்கறதிலே இன்னொரு ஊழியர் திடீர் ஆர்வம் காட்டினால்...

நீங்க வேறே நிறுவனம் பார்க்க துவங்குவது புத்திசாலித்தனம்..!

  • தொடங்கியவர்

அப்படித்தானிருக்கும் ஜம்மு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியெல்லாம் இல்லை ஜம்மு அக்கா 3ம் எறும்பு பொய் சொன்னது :mellow:

  • தொடங்கியவர்

அப்படியெல்லாம் இல்லை ஜம்மு அக்கா 3ம் எறும்பு பொய் சொன்னது :mellow:

மூன்றாம் எறும்பா இல்லை மூன்று எறும்புமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்றாம் எறும்பு வானவில் அண்ணா :angry:

மூன்றாம் எறும்பு வானவில் அண்ணா :angry:

தலை அவா டென்சன் ஆயிட்டா

:mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்காக தலையை மன்னித்துவிடுகிறேன் ஜம்மு அக்கா :P

உங்களுக்காக தலையை மன்னித்துவிடுகிறேன் ஜம்மு அக்கா :P

அப்ப சரி

:P

  • தொடங்கியவர்

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ் புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே.. முதல்லயே சொல்லப்படாதா..?

__________________

நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும் செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக் கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..

ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?

  • தொடங்கியவர்

ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து [த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி...

ஜிம்மி ; லொள்.. லொள்..

த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]

த.க.நி. ; ஜாக்கி....

ஜாக்கி ; லொள்..லொள்..

த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே செய்கிறது ]

த.க.நி. ; மாதவ்..

மாதவ் சிங் ; லொள்..லொள்..

த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும் புரியாது..!

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி. அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு கிறித்துவர், ஒரு சர்தார் இவர்கள் நால்வரும் நண்பர்கள்.ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது அனுமான் சாமியைப் பற்றி பேச்சு வந்தது. நால்வருமே அனுமான் தங்கள் இனத்தவர் என்று சொந்தம் கொண்டாடினார்கள். அதற்கு நியாயமான காரணத்தையும் சொன்னார்கள்.

இந்து சொன்னார் ; அனுமான் ராமருடைய தூதர், இந்துக்களால் வணங்கப் படுபவ்ர். வாயு குமாரர். அதனால் அனுமான் இந்து தான்.

முஸ்லிம் சொன்னார் ; இல்லை இல்லை.. அனுமான் எங்கள் இனத்தவர்.. ரகு குல ராமன் மானைத் தேடி போனபோது கடத்தப்பட்ட சீதாவைத் தேடிப் போன ரகுமான் இந்த அனுமான்..மலை ஏறி தேடிய சுலைமான் எங்கள் அனுமான்..

கிறித்துவர் சொன்னார் ; இல்லவே இல்லை.. சூப்பர் மேன் மாதிரி காற்றில் பறப்பார்..ஹீமான் மாதிரி சண்டை போடுவார் எங்கள் அனுமான்..

சர்தார் மாதவ் சிங் முழங்கினார் ; வாயை மூடுங்கப்பா.. எப்ப ஒருத்தர் அடுத்தவங்க பொண்டாட்டிக்காக அல்லல் பட்டு, பின்பக்கம் நெருப்பை வாங்கிக்கிட்டு அவஸ்தை பட்டாரோ.. அவர் நிச்சயம் எங்க ஆள்தான்..!

சின்னா ரொம்ப குறும்புக்காரன். அந்த ஊர்ல எந்த கலாட்டா நடந்தாலும் அவந்தான் காரணமா இருப்பான். அவன் தொல்லை தாங்காம அவன் அம்மா அப்பா பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஒருநாள் அவங்க ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். எல்லாரும் அவங்க கஷ்டத்தை அவர்ட்ட சொல்லி தீர்வு கண்டாங்க. சின்னாவோட அம்மாவும் போய் சொன்னவுடன் சின்னாவை மட்டும் விட்டுட்டுப் போம்மா.. நான் புத்தி சொல்லி அனுப்பறேன்னுட்டாரு. சின்னா ஒண்ணும் புரியாம உக்காந்துருந்தான். எல்லாருக்கும் அறிவுரை சொல்லி அனுப்பிட்டு சின்னாவை கூப்பிட்ட சாமியார் கேட்டார்..

"கடவுளை அறிவாயா..?"

சின்னாவுக்கு ஒண்ணும் புரியல். தாடி, மீசை வேற பயமுறுத்துச்சு.

"கடவுள் எங்கு இருக்கிறார்.. சொல்..?"

சின்னா தொறந்த வாய் மூடாம் அவரையே பாத்துட்டு இருந்தான்..

"சொல்லப்பா.. கடவுள் எங்கே..?" இதைக் கேட்ட சாமியார் எதற்கோ சற்றுத் திரும்ப, சின்னா சிட்டய்ப் பறந்தான் வீட்டை நோக்கி..வழியில் அவன் நண்பன் அவனை நிறுத்திக் கேட்டான்..

"சாமியார் என்னடா சொன்னார்..? ஏன் இப்படி ஓடி வரே..?"

"பயங்கர சிக்கல்ல மாட்டிக்கிட்டேண்டா.. நம்மூரு சாமியைக் காணோமாம்.. அதையும் நான் தான் ஒளிச்சு வச்சுட்டேன்னு நெனைக்கிறாருடா..!"

  • தொடங்கியவர்

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர் சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு. அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான் என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு

  • தொடங்கியவர்

ஒரு பெண்மணி அழகு நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது ஒரு அழுக்கான, தலை பிசுக்கு பிடித்த, பார்க்க அசிங்கமான பிச்சைக்காரி அவளை அணுகி பிச்சை கேட்டபோது..

பெண் ; நான் காசு கொடுத்தால் உடனே போய் உன்னை அழகுபடுத்திக் கொள்வாயா..?

பிச்சை ; மாட்டேன் அம்மா..

பெண் ; நல்ல துணிகள் வாங்கிக் கொள்வாயா..?

பிச்சை ; இல்லை அம்மா..

பெண் ; நண்பிகளுடன் கிளப்புக்கு போவாயா..?

பிச்சை ; வயிறுப் பசிக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் கொள்வேன் அம்மா.. நீங்கள் சொல்லும் எனக்கு எதுவும் தெரியாது..

பெண் ; அப்படியானால் என்னோடு என் வீட்டுக்கு சற்று வந்துவிட்டுப் போ.. ஒரு பெண்ணுக்கு அழகு நிலையம், ஷாப்பிங், க்ளப் இது எதுவுமே தெரியாதென்றால் அவள் எப்படி தோற்றமளிப்பாள் என்று என் கணவரும் பார்க்கட்டும்...!

  • தொடங்கியவர்

ஒரு செல்வந்தர் தன் இறப்புக்கு பின்னால் தன் நினைவுக்காக செலவழிக்க ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கி உயில் எழுதிவிட்டு இறந்து போனார். அவர் மனைவி அந்த நினைவு சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்யும் பொறுப்பில் இருந்தாள்.. ஒருநாள் அவள் தோழி செல்வந்தர் மனைவியைச் சந்தித்தபோது...

தோழி ; உன் கணவர் சொன்னபடி செய்து விட்டாயா..?

மனைவி ; ஓ...!

தோழி ; அறக்கட்டளை நிறுவினாயா..?

மனைவி ; இல்லை..

தோழி ; தண்ணிர் பந்தல், ஏழை மாணவர்க்கு உதவி இப்படி ஏதாவது..?

மனைவி ; அப்படி எதுவும் இல்லை...

தோழி ; பின் என்னதான் செய்தாய் அந்த ஒரு லட்ச ரூபாய்க்கு..?

மனைவி ; அவர் நினைவாக கல் ஒன்று தயார் செய்துள்ளேன்..

தோழி ; ஒரு லட்ச ரூபாய் கல்லா..? எங்கே நினைவுக்கல் எழுப்பியிருக்கிறாய்.. அவர் சமாதியிலா..?

மனைவி ; இதோ.. என் மோதிர விரலில்.. ஒரு லட்ச ரூபாய் வைரக்கல்...!

  • தொடங்கியவர்

ஒரு பெண்மணி மலைப்பாதை வழியே கார் ஓட்டிக்கொண்டு வந்தாள். அவள் புதிதாக ஓட்டக் கற்றுக்கொண்டவள் என்பதாலும், கொண்டை ஊசி வளைவுகள் மிகக் குறுகலாக இருந்தமையாலும், வண்டி தாறுமாறாக ஓடி ஒரு இடத்தில் மலைப் பாதையின் பக்கத் த்டுப்பை உடைத்துக் கொண்டு உருண்டது.

நான்கு முறை உருண்ட கார் கீழே உள்ள மலைப்பாதையில் விழுந்தது. வியப்புக்குரிய வகையில் அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் அடிபடவில்லை. காரும் தலை கீழாக கவிழாமல் சாதாரண நிலையிலேயே நின்றது. பின்னால் வந்த காரோட்டி உதவிக்கு விரைந்தார்..

"அம்மணி.. தங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே..?"

"நன்றி அய்யா.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.. காருக்கு சேதமிருந்தாலும் ஓட்டிச் செல்லமுடியும் என்றே நினைக்கிறேன்.. கடவுள் என் பக்கம் இருந்ததால் இந்த அதிசயம் நடந்துள்ளது.."

"நல்லது அம்மணி.. இனி கவனமாக ஒட்டி வீட்டுக்கு செல்லுங்கள்.. இப்ப நடந்ததைப் பார்த்தபின் இனி கடவுள் உங்கள் பக்கம் அமர்ந்து வரமாட்டார் என்று தோன்றுகிறது...!"

  • தொடங்கியவர்

சிட்னி சின்னப்புவ எல்லாருக்கும் தெரிந்திருக்கும் அவரும் நம்ம முட்டாள் றோயல் பமிலி தலை சின்னப்பு போல ஒரு சின்னப்புதானே அவரப் போலவே தண்ணி பாட்டி சிட்னியில இருக்கார், அவர் மப்பில பல முத்துக்களை உதிர்ப்பார்

தத்துவம் நம்பர் 1

தண்ணி உனக்குள்ள் போனா ஜாலி...

நீ தண்ணிக்குள்ள போனா காலி... :D

Edited by வானவில்

சின்னப்பு சிட்னியிலா இருக்கிறார்

  • தொடங்கியவர்

சின்னப்பு சிட்னியிலா இருக்கிறார்

குறுக்கு கேள்வி எல்லாம் கேக்கக் கூடாது :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.