Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்திற்கு காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை// வித்தியா படுகொலை வழக்கின் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

வித்தியா கொலையும் சமூகத்தின் கடமையும்

 

பள்ளி மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணைகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. சந்தேகநபர்கள் 9 பேரில் 7 பேர் குற்றவாளிகள் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பாயம் அறி வித்துள்ளது. அதிகபட்சத் தண்டனையாக அவர்களை இறக்கும் வரை தூக்கிலிடுமாறும், 30 ஆண்டுகளுக்கான கடூ ழியச் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஒவ் வொருவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்குத் தலா 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் தீர்ப் பாயம் உத்தரவிட்டுள்ளது.

கொலை இடம்பெற்று 29 மாதங்கள் கடந்துவிட்ட பின்னர் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பது குறித்து பரவலான மகிழ்ச்சி வெளிப்பாடு தெரிகிறது. வெடி கொளுத்திப் பொங்கல் பொங் கிக்கூடச் சிலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

ஏனெனில் வித்தியா கொலை ஒட்டுமொத்த இலங்கையையுமே உலுக்கிப் போட்ட ஒரு பயங்கரம். ஆனால், அதுவே வடக்கில் நடந்த இதுபோன்ற ஒரேயொரு சம்பவமோ இதற்கு முன்னர் அறிந்தே இருக்க முடியாத கொடூரமோ அல்ல. போர்க் காலங் களிலும் இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. போர் முடிந்த பின்னரும் பல சம்பவங்கள் இடம்பெற் றிருக்கின்றன.

கட்டுப்படுத்த முடியாது பெருகி வந்த இத்தகைய குற்றங்களின் துன்பத்தைத் தாங்க முடியாத வெடிப்புத்தான் வித்தியா கொலை யுடன் அதிர்வலையை ஏற்படுத்தியது. தன்னெழுச்சியான போராட்டங்கள் முகிழ்த்தன. சரியான தலைமைத்துவம் இன்றி அது பின்னர் வன்முறையாக மாறியது. அதனைக் காரணமாகக் காட்டியே அத்தகைய தன்னெழுச்சிப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுவிட்டன.

இப்போது வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் நீதி தனது கடமையை முடித்துவிட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கும் தேட லுக்கும் உரியதாக இருந்து வந்த இந்த விவகாரம் 7 பேருக்கு விதிக்கப்பட்ட சாவுத் தண்டனையுடன் ஒரு முடிவுக்கு வந் திருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய் யப்போகிறார்கள் என்று குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் அறிவித்திருக்கிறார்கள். என்றாலும், இந்த விடயத்தில் நீதி தனது பணியைச் செவ்வனே நிறைவேற்றிவிட்டது.

ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பில் சமூகம் தனது கடமையைச் செவ்வனே ஆற்றியிருக்கிறதா? என்கிற பெரும் கேள்வி இருக் கிறது. வித்தியாவின் கொலை அதிர்வு எழுப்பிய சத்தத்தில் ஓங்கி ஒலித்த பெண்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு எதிரான வன்முறை குறித்த விடயங்கள் கொஞ்ச நாள்களிலேயே அமுங் கிப் போய்விட்டன.

வித்தியாவின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைத் தூக்கிலிடச் சொன்னதும் இத்தகைய குற்றங்கள் குறைந்துவிடும், பெண்களும் சிறுமிகளும் பாதுகாப்பாகிவிடுவார்கள் என்றால், அது மாணவி கிரிசாந்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு, அதிலும் இராணுவத்தினரான குற்றவாளிகளுக்குச் சாவுத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னரே நிகழ்ந்திருக்கவேண்டும். வித்தியா வின் கொலை நடந்தே இருக்கக்கூடாது.

எனவே தண்டனைகள் மட்டுமே குற்றங்களைக் குறைத்துவிட மாட்டா. பெண்கள் தொடர்பான அணுகுமுறையே இந்தச் சமூ கத்தில் நிறைய மாறவேண்டியிருக்கிறது. வித்தியா கொலைக்குப் பின்னரும்கூட அத்தகைய மாற்றங்களை நோக்கி இந்தச் சமூகம் முன்னேறியதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை.

குடும்பத்தில் ஆண், பெண் குழந்தைகளை வளர்ப்பதில் காட்டப்படும் வித்தியாசத்தில் இருந்து, பல்வேறு மட்டங்களி லும் சிறுமிகளும் பெண்களும் நடத்தப்படும் விதம் வரைக்கும் ஏற்றத்தாழ்வுகளை இயல்பாக்கிவிடும் பொறிமுறையைத்தான் நாம் இன்னமும் கொண்டிருக்கிறோம்.

ஆண்களுக்கு நிகராகச் சாதனை படைத்த பெண் விடுதலைப் போராளிகளைக் கொண்டதாகக் கூறிக்கொண்டாலும்கூட போருக்குப் பின்னர் அவர்களையும் அடக்கி, ஒடுக்கி மூலையில் முடங்க வைக்கக்கூடிய பலம் வாய்ந்த அந்தச் சமூகப் பொறி முறையை மாற்றியமைக்காத வரையில் வித்தியாக்களைப் பாதுகாப்பது இந்தச் சமூகத்தில் சாத்தியமானது அல்ல.

வித்தியா கொலையில் நீதி தனது பணியை நிறைவு செய்து விட்டது. சமூகம் எப்போது தனக்கான பணியை – கடமையைத் தொடக்கப்போகிறது? இனிமேலும் வித்தியாக்கள் உரு வாக்கப்படாமல் இருப்பதற்கான ஒரே வழி அதுதான்.

http://newuthayan.com/story/33109.html

  • Replies 184
  • Views 18.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2017 at 5:45 AM, இசைக்கலைஞன் said:

இந்த வழக்கின் தீர்ப்பு பெளதீக சான்றுகளின் அடிப்படையில் நிறுவப்பட்டதா அல்லது சாட்சிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதா? :unsure:

 சாடசிகளின் அடிப்படையில் என நினைக்கிறேன். குற்றம் சாடப்பட்ட ஒருவர் பின் அரச தரப்பு சாட்ச்சி, பிறிதொரு வழக்கின்   குற்றவாளிகளின் சாட்ச்சி போன்றவை. மரபணுப் பரிசோதனையில் எதிரிகளின் மரபணு ஒத்துபோகவில்லை   எதிரிகள் வீடியோ எடுத்ததாக கூறினார்கள் அது சான்றுப்பொருளாக இணைக்கப்படவில்லை. அதைப்பற்றி ஆர்வம் காட்டப்படவில்லை. சுவிஸிலுள்ள  மாபியாக் கும்பலுக்கு விற்றதாக கூறினார்கள். சுவிஸ் தேவயான உதவிகளை வழங்கும் என அறிவித்திருந்தது. இரு நாடுகளும் சேர்ந்து அந்த மாபியா கும்பலை பிடித்திருக்கலாம் பிடிக்கவில்லை. காதல் பிரச்னையால் நடந்தது என்கிறார்கள். பிறகு மாபியாக்கும்பலுக்காக நடந்தது என்கிறார்கள். குறித்த இடத்தில எதிரிகளை கண்டதாக சிலர் சாடசியமளித்திருந்தனர். ஏன் அங்கு எதிரிகள் நின்றார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டதாக தெரியவில்லை. தமிழ் சட்டத்தரணிகள் எதிரிகளுக்காக பிரசன்னமாக விரும்பாததால் இவர்கள் பக்க நியாயம் தெளிவாக வரவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப் படவேண்டும் ஆனால் சந்தேகமில்லாமல் குற்றம் நிரூபிக்கப் படவேணும். இல்லையாயின் தீர்ப்பின் மீது விமர்சனம் எழுவதை தவிர்க்க முடியாது.இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்தபோது வராத கூற்று இப்போ வருவதன் பின்னணி,   மாபியா கும்பல், நாட்டுக்கு அவமரியாதை, போன்ற கூற்றைப் பாக்கும்போது இப்படி ஒரு சந்தேகம் எழுகிறது. அப்படியென்றால் சுவிஸ் குமார் இலங்கைக்கு வந்து போன ஒவ்வொரு தடவையும் இப்படியான நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டும். உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்படும்போது இப்படியான நிகழ்வுகளும் நாடகங்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். 

புலம் பெயர் தமிழர் தான்  இதுக்கும் காரணம்.   அங்குள்ள் மக்கள் அப்பாவிகள்.   நாங்கள் தான்   எல்லாவற்றுக்கும் காரணம்.   மாபியா கும்பலே புலத்தமிழ்ர் தான்  காசுக்காக  எதையும் செய்யும் கூட்டம்

  • தொடங்கியவர்

வித்தியா வழக்கு – சுவிற்சலாந்தின் கௌரவத்தையும் அங்குள்ள இலங்கையரின் மதிப்பையும் பாதித்துள்ளது – நீதிபதி இளஞ்செழியன்

elancheliyan.jpg

 
.சுவிற்சலாந்தில் திட்டமிடப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் கொலைக்கான சதித்திட்டத்தினால் அந்த நாட்டிக் கௌரவத்திற்கும், அங்கு வாழும் இலங்கையர்களின் மதிப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த வழக்கின் ட்ரையல் எட் பார் நீதிபதிகளில் ஒருவராகிய நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
 
புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு கூட்டு வனபுனர்வின் பின்னர் கோரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி நடைபெற்றது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளின் பின்னர், யாழ் மேல் நீதிமன்ற சமாதான அறையில் ட்ரையல் எட் பார் விசாரணை முறையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
 
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த நான்கு மாதங்களாக இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது,
 
விசாரணை முடிவில் பாடசாலை மாணவி வித்தியாவைக் கடத்தி வன்புனர்ந்து கொன்றதாக 9 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 7 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
 
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  தீர்ப்பு வழங்கப்பட்டது. 3 பேர் கொண்ட ட்ரையல் எட் பார் நீதிபதிகள் குழாம் ஏகமனதாக எதிரிகள் ஏழு பேரை குற்றவாளிகளாகக் கண்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது,
 
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, நீதிபதிகள் குழாமின் தலைவராகிய நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தனது 332 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். இவருடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் தெரிவித்தார். இதனையடுத்து, இந்தத் தீர்ப்பை, தானும் ஏற்றுக் கொள்வதாகக் கூறிய நீதிபதி இளஞ்செழியன் தன்னுடைய தனி தீர்ப்பாகிய 343 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வழங்குவதாகக் கூறி தீர்ப்பளித்தார்.
 
அந்தத் தீரப்பில் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது:
 
வித்தியாவை   கூட்டுப்பாலியல் வல்லுறவு புரிந்து மிக மோசமாகவும், கொடூரமாகவும் மனித நாகரிகமில்லாத காட்டு மிராண்டித்தனமாக அந்த சின்னஞ்சிறிய பூவை கொடூரமாகக் கொலை செய்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
சர்வதேச பாலியல் வீடியோ சந்தை விவகாரம்
 
ஒரு மாணவ சிறுமியை மிகக் கேவலமாக வெறி பிடித்த மிருகங்களைப் போன்று இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது. பெண் இனத்திற்கே சவால் விடும் வகையில் அவருடைய இரு கைகளையும் தலையின்பின்னால் கட்டி இரண்டு கால்களை 180 பாகையில் விரித்து அலரி மரத்தில்கட்டி கொலை எண்ணத்தின் கொடூரத்தனத்தை வகையில் கொலை செய்துள்ளமை வழக்கு விசாரணையில் எண்பிக்கப்பட்டுள்ளது.  இந்த மாணவி கொலை வழக்கானது, மற்றைய வழக்குகளிலும் சற்று வித்தியாசமானது.  இந்த கொலைக்கான சதித்திட்டத்தில் சர்வதேச பாலியல் வீடியோ சந்தை விவகாரம் இருப்பது எண்பிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு மாணவ சிறுமி 4 பேரினால் மிகக் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட விதத்தினை அவதானிக்கும்போது, மனித நேயமில்லாத பெண்களுடன் பிறக்காத தாயை மனைவியை சகோதரியை பெண்ணாக மதிக்காத நபர்களால் செய்யப்பட்ட செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
 
அந்தப் பச்சை பாலகியான சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள விதமானது, பெண் இனத்தின் மானத்தை விலைபேசுகின்ற, பெண்ணினத்தை அவமானப்படுத்துகின்ற, மாணவிகள் சமுதாயத்தையும் அதன் கல்விகற்கும் நிலையையும் அச்சுறுத்துகின்ற சக்திகளின் செயற்பாடு என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.
 
கொடூரமான கொலை கடூரமான தண்டனை
 
காட்டுமிராண்டித் தனமான மனித பண்பாட்டு நாகரிகமில்லாத ஈவிரக்கமற்ற செயற்பாட்டின் ஒரு சமூக அவலத்தையே மாணவி வித்தியாவின் சடலம் கிடந்த காட்சி புலப்படுத்தியிருக்கின்றது.
 
இனி வரும் காலங்களில், ஒருவன் ஒரு பெண்ணின் மீது, விசேடமாக ஒரு மாணவி மீது இத்தகைய குற்றச்செயல் புரிந்தால் அதற்கு, இதுதான் தண்டனை என, மனதில் கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கின் தண்டனை அமைய வேண்டும். சர்வதேசமே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த வழக்கின் நீதித் தண்டனை அமைய வேண்டும். இந்த வழக்கில் வழங்கப்படுகின்ற தண்டனைத் தீர்ப்பு நாளைய சரித்திரத்தைப் புரட்டிப் போடுவதாக அமைய வேண்டும். எனவே, இந்த கொடூரமான கொலைக்கு கடூரமான தண்டனை வழங்கியே ஆக வேண்டும் என்று கருதுகிறேன்.
 
.இந்த வழக்கின் சதித்திட்டம் சுவிற்சலாந்து நாட்டில் திட்டமிடப்பட்டதாக வழக்கு விசாரணையில் தகவல் முன் வைக்கப்பட்டது. சுவிற்சலாந்து நாடு இரண்டு உலகப் போரின்போதும் நடு நிலைமை வகித்த ஒரு நாடாகும். ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை ஜெனிவாவில் அந்த நாடு கொண்டிருக்கின்றது. அந்த வகையில், இந்த வழக்கின் விடயங்கள் சுவிற்சலாந்து நாட்டின் கௌரவத்தை பாதிப்படையச் செய்துள்ளது. அதிலும் முக்கியமாக அங்கு வாழும் இலங்கையர்களின் மதிப்பையும் கௌரவத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது எனவே, சர்வதேச ரீதியாகக் கவனத்தைத் திருப்பிய இந்தக்குற்றச் செயலுக்கு சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தனது தனி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து 3 நீதிபதிகளினதும் ஏகமனதான தீர்ப்பின் அடிப்படையில் 7 எதிரிகளுக்கு மரண தண்டனையும் மேலும் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்டவராகிய வித்தியாவின் தாயாருக்கு 70 லட்சம் நட்டயீடாகவும் அரச தண்டப்பணமாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் குற்றவாளிகள் செலுத்த வேண்டும் என 3 நீதிபதிகள் குழாம் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்ட 9 பேரில் 7 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டதுடன்,
3 நீதிபதிகளும் ஏனைய 2 பேரையும் சுற்றவாளிகள் என ஏனமளதானத் தீரப்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/archives/43305

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வித்தியா படுகொலையும் நீதிமன்றத் தீர்ப்பும்

Justice-300x225.jpg

 

பாலியல் படுகொலைகளுக்கு மரண தன்டனை தீர்வாக அமையுமா என கேள்வி எழுப்பியுள்ள கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலன் வார இதழில் சமூகத்திற்கும் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டிள்ளது. 70 ஆண்டுகள் அரசியல் போராட்டம் ஒன்றை நடத்திய சமூகம் இன்று பண்பாட்டுப் பிரச்சினைக்கு முகம் கொடுப்பது வேதனையானது எனவும் அந்த இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பாதுகாவலன் வார இதழின் ஆசிரியர் தலையங்கம் முழுமையாக கீழே தரப்பட்டுள்ளது.

மரண தன்டனை கிறீஸ்த்தவ பார்வையில் ஏற்புடையதல்ல. பழிக்குப்பழி என்பதை கத்தோலிக்க திருச்சபை நிராகரிக்கின்றது. ஆனாலும் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக யாழ் மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைத்து சமூகத்திற்கும் மகிழ்ச்சியான செய்தி. குற்றவாளிகள் தன்டிக்கப்பட வேண்டும் என எல்லோருமே எதிர்ப்பார்ததிருந்தனர். 18 வயது நிரம்பிய பாடசாலையை மாணவியை பட்டப்பகலில் கடத்திச் சென்று மிலேச்சத்தனமான முறையில் பாலியல் பலாத்காரம் புரிந்து கொலை செய்தமை மன்னிக்கப்படக்கூடியல்ல.

அதுவும் வளர்ச்சியடைந்த வெளிநாடு ஒன்றில் இருந்து தாயகப் பிரதேசத்திற்கு வருகை தந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் ஒன்றின் இளவயது பிள்ளைக்கு நடந்த கொடுரம் இனிமேலும் யாருக்கும் நடந்துவிடக் கூடாது என்பதை யாழ் மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலமாக சொல்லியிருக்கின்றது.

ஆனாலும் இங்கே மூன்று கேள்விகள் எழுகின்றன. ஒன்று வித்தியாவை உருவாக்கியதும் இந்த சமூகம்தான். வித்தியாவை பாலியல் பலாத்காரம் புரிந்து கொலை செய்தததும் இந்த சமூகம்தான். எனவே இந்த தீர்ப்பின் மூலம் எமது சமூகம் திருத்திவிடுமா? இரண்டாவது பழிக்குப் பழி என்பதை கத்தோலிக்க திருச்சபை நிராகரிக்கின்றது. எனவே மரண தன்டனை தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பம் திருப்பதியடையாது. மூன்றாவது வித்தியா மாத்திலமல்ல எண்ணிலடங்காத பாலியல் பலாத்கார கொலைகள், அது பற்றிய வழக்குகள் கிடப்பில் உள்ளன.

ஆகவே வித்தியா கொலை வழக்கை விசாரணை செய்த யாழ் மேல் நீதிமன்றம் குறிப்பாக கொழும்பில் உள்ள சட்டமா அதிபர் திணைக்களம் ஏனைய பாலியல் பலாத்கார வழக்குகளையும் துரிதமாக விசாரணை செய்ய வேண்டும். மரண தன்டனை வழங்குவதைவிட குற்றவாளிகள் இனம் காணப்பட்டு சமூகத்தின் முன் அவர்களை அம்பலப்படுத்தினாலே போதும். அதேவேளை நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் தன்டனை கொடுக்கப்பட்டு சமூகத்தை திருத்தலாம் என நினைப்பதும் தவறு. வித்தியா விடயத்தில் நீதிமன்றம் தனது கடமையை சரிவர செய்துள்ளது.

ஆனால் சமூகத்தில் உள்ள பொது அமைப்புகள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள் ஆகியோருக்கும் பொறுப்புள்ளது. சமூக வன்முறைகளை கட்டுப்படுத்தக்கூடிய வேலைத் திட்டங்களை தனியே நீதிமன்றங்களிடம் ஒப்படைத்துவிட்டு இருக்கக்கூடாது. அரசியல் உரிமைப் போராட்டத்தையும் இப்படித்தான் தனி ஒரு இயக்கத்திடம் ஒப்படைத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

சமூக வன்முறைகளை தடுக்கக்கூடிய கல்வி முறை குறைந்தளவில் என்றாலும் எமது பாடத்திட்டத்தில் உண்டு. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வியும் சமூக அக்கறையுடன் கூடிய தொழிற்கல்வியும் ஆரம்ப முதலே உள்ளன. இலங்கை போன்ற ஆசிய நாடுகளில்தான் அவ்வாறான தரத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

எமது பாடத்திட்டம் அறிவுசார்ந்த பாடத்திட்டம்தான். ஆனால் பரீட்சையை மாத்திரமே நோக்கமாக் கொண்டு ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். பாடத்திட்டத்தையும் தாண்டி ஆசிரியர்கள் சமூக விழுமியங்களை போதிக்கலாம். அது குறித்து கல்வியாளர்கள் கவணம் செலுத்த வேண்டும். அதேவேளை பெற்றோரும் தமது பிள்ளைகளை ஆலயங்களில் நடைபெறும் சமய வகுப்புகளுக்கு ஒழுங்கான முறையில் அனுப்புவதில்லை. எவ்வாறாயினும் சமூக வன்முறைகளை முற்றாகவே இல்லாமல் செய்யவது என்பது கடினமானதுதான்.

ஆனாலும் 70ஆண்டுகால அரசியல் போராட்டம் ஒன்றை கண்ட தமிழச் சமூகம் இயல்பாகவே சமூக விழுமியங்களை பேணவேண்டும். ஏனைய ஆசிய நாடுகளில் அல்லது தென்பகுதியில் இடம்பெறும் கலாச்சார சீர்கேடுகள், சமூகவிரோத செயற்பாடுகளைப் போன்று தமிழர் பிரதேசங்களிலும் அவ்வாறு இடம்பெற்றக்கூடாது. வித்தியாவுக்கு நேர்ந்த அவலம் தமிழ்ச் சமூகத்தை வெட்கித் தலைகுணிய வைத்துள்ளது. இதுவரைகாலமும் படையினர்தான் அவ்வாறு செய்தார்கள். ஆனால் இன்று தமிழ்ச் சமூகம் தமக்குள்ளேயே இவ்வாறான கொடூர குணங்களைக் கொண்டுள்ளது என ஏனைய சமூகத்தினர் பேசும் அளவுக்கு இழி நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தனியே நீதிமன்ற தீர்ப்புக்களை மாத்திரம் நம்பியிருக்காது அரசியல் உரிமையை கோரி நிற்கும் தேசிய இனம் என்ற உணர்வுடன் முதலில் எம்மத்தியில் தீயாக பரவி வரும் சமூகவிரோத குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தக் மூடிய வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பியுங்கள்.

http://globaltamilnews.net/archives/44607

  • தொடங்கியவர்

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வித்தியா படுகொலை வழக்கு!

 

குற்றவாளிகள் சார்பில் தனித்தனியாக மேன்முறயீடு................!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனைக் குற்றவாளிகள் சார்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீட்டினை குற்றவாளிகளின் சட்டத்தரணிகளும் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

வித்தியா கொலை வழக்கின் ஏழு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக கண்டி போகம்பரை சிறைச்சாலையின் அத்தியட்சகர் மேன்முறையீட்டு மனுவை பதிவுத்தபாலில் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், வழக்கின் பிரதான குற்றவாளியான மகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ்குமார்) மற்றும் அவரது சகோதரனான மகாலிங்கம் சசிதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மேன்முறையீடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள இந்த மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பில் நீதாய விளக்கத் தீர்ப்பாய நீதிபதிகளுக்கு அறிவிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் உயர் நீதிமன்றத்திற்கு குறித்த மேன்முறையீட்டு மனு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதேவேளை வித்தியா படுகொலையுடன் தொடர்புபட்ட ஏழு குற்றவாளிகளுக்கு கடந்த மாத இறுதியில் மரண தண்டனையும், 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/vithya-Murder-case-appealed

  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை வழக்கின் எதிரிகள் அனைவரும் மேன்முறையீடு

 

 

புங்­கு­டு­தீவு பாட­சாலை மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொலை வழக்கில் தண்­டனை விதிக்­கப்­பட்ட குற்­ற­வா­ளிகள் சார்பில் அவர்கள் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் சிறைச்­சாலை அத்­தி­யட்­சகர் ஊடாக இவ்­வ­ழக்­கிற்கு வழங்­கப்­பட்ட தீர்ப்­புக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

Image result for வித்தியா படுகொலை virakesari

குறித்­தமேன் முறை­யீட்டு மனுக்­க­ளா­னது யாழ்.மேல்­நீ­தி­மன்ற பதி­வா­ள­ருக்கு குறித்த இரு­த­ரப்­பி­ன­ராலும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி வித்­தியா படு­கொலை வழக்கில் ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் ஒன்­பது சந்­தே­க­ந­பர்­களில் ஏழு பேரை குற்­ற­வா­ளி­க­ளாக கண்­ட­துடன் அந்த ஏழு பேருக்கும் மர­ண­தண்­ட­னையும் முப்­ப­தாண்டு கால கடூ­ழி­ய­சிறைத் தண்­ட­னையும் விதித்து தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது. இவ்­வா­றான நிலை­யி­லேயே தீர்ப்­புக்கு எதி­ராக மேன்­மு­றை­யீ­டா­னது செய்­யப்­பட்­டுள்­ளது.

ஒரு வழக்கில் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்டு தீர்­ப்ப­ளிக்­கப்­பட்­ட ­கைதி தனது தீர்­ப்புக்கு எதி­ராக இரண்டு வழி­களில் மேன்­மு­றை­யீடு செய்­வ­தற்கு உரித்­து­டை­ய­வ­ராவர். அதா­வது அவர் தனது சார்பு சட்­டத்­த­ரணி ஊடாக மேன்­மு­றை­யீடு செய்­ய­மு­டியும். 

அதே­போன்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட பின் னர் அவர் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள சிறைச்­சாலை அத்­தி­யட்­சகர் ஊடா­கவும் மேன்­மு­றை­யீடு செய்­ய­ முடியும்.

இந்த அடிப்­ப­டை­யி­லேயே இவ்­வ­ழக்கில் ஏழு குற்­ற­வா­ளிகள் சார்­பா­கவும் அவர்கள் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள சிறைச்­சா­லை­யான போகம்­பரை சிறைச்­சா­லையின் அத்­தி­யட்­சகர் இவர்­க­ளுக்­கான தீர்ப்­புக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்து அதற்­கான மனு­வினை யாழ்.மேல்­நீ­தி­மன்ற பதி­வா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

இதே­போன்று குற்றம் நிரூ­பிக்­கப்­பட்ட இவ்­வ­ழக்கின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யாக கூறப்­பட்ட சுவிஸ்­குமார் எனப்­படும் மகா­லிங்கம் சசிக்­குமார் மற்றும் அவ­ர­துச கோதரன் மகா­லிங்கம் சசீந்­திரன் ஆகியோர் சார்பில் சட்­டத்­த­ரணி ஆர்.ரகு­பதி மேன்­மு­றை­யீட்டு மனு­வினை கடந்த ஒன்­பதாம் திகதி மேற்­கொண்­டி­ருந்தார். அத்­துடன் ஏனைய குற்­ற­வா­ளி­க­ளான பூபா­ல­சிங்கம் ஜெயக்­குமார், பூபா­ல­சிங்கம் தவக்­குமார், தில்­லை­நாதன் சந்­தி­ர­காசன், சிவ­தேவன் துஷாந்தன் மற்றும் ஜெய­த­ரன் ­கோ­கிலன், ஆகியோர் சார்பில் சட்­டத்­த­ரணி மகிந்த ஜய­வர்த்­தன நேற்­றை­ய­தினம் மேன்­மு­றை­யீட்டு மனு­வினை சமர்­ப்பித்­தி­ருந்தார்.

இவ்­வாறு சமர்­பிக்­கப்­பட்ட மேன்­மு­றை­யீட்டு மனுத்­தொ­டர்­பாக இவ் வழக்கின் தீர்ப்­ப­ளித்த ட்ரயல் அட்பார் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளுக்கு அறி­வித்த பின்னர் இவ்­வ­ழக்கின் நீதிவான் நீதி­மன்ற மூல வழக்­கே­டுகள் மற்றும் ட்ரயல் அட்பார் நீதி­மன்ற வழக்கு விசா­ரணை வழக்கு ஏடுகள் அடங்­கிய அனைத்து ஆவ­ணங்­களும் உயர்­நீ­தி­மன்­றத்­திற்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இவ்­வ­ழக்­கா­னது ட்ரயல் அட்பார் முறை யில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டதனால் இவ்வழக் கின் மேன்முறையீட்டு விசாரணையானது உயர்நீதிமன்றத்திலேயே மேற்கொள்ள முடி யும் என்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமை யவே இவ்வழக்கின் மேன்முறையீட்டு கோவைகள் அனைத்தும் உயர்நீதிமன்று க்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமையும் குறிப் பிடத்தக்கதாகும்.

http://www.virakesari.lk/article/25698

  • தொடங்கியவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணை பதிவேடு 4ஆயிரம் பக்கத்தில் :

 

questian.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைய குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்கு மேலாகும் என குற்றவாளிகள் தரப்பில் மேன்முறையீடு செய்த சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் தரப்பில் யாழ்.மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை இன்றைய தினம் முன் வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாய (ராயலட் பார் ) விசாரணை பதிவேடுகள் சுமார் 4ஆயிரம் பக்களைகொண்டு உள்ளன. அவற்றினை சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்ய குறைந்த பட்சம் ஒரு வருட காலம் தேவைப்படும்.

அதன் பின்னர் பிரதம நீதியரசர் 5 நீதியமைச்சர்களை நியமித்து , அந்த நீதியமைச்சர் குழாம் குறித்த வழக்கினை முழுமையாக படிக்க வேண்டும்.

அதன் பின்னர் விசாரணைகளுக்கு திகதியிட ப்பட்ட பின்னர் , வழக்கில் ஒவ்வொரு விடயத்திலும் விடப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்ட முடியும். அவ்வாறாக மேன்முறையீட்டின் இறுதி முடிவு கிடைக்க குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கு மேலாகும் என எதிர்ப்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/45976

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதலாக வாசிச்சு முப்பது நாற்பது வருடங்களுக்கு பின்பு தீர்ப்பை கொடுக்கலாம்..

  • தொடங்கியவர்

ங்குடுதீவு மாணவி கொலை வழக்கு குற்றவாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்களே ! மயூரப்பிரியன்:-

புங்குடுதீவை சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா   கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற வேளை  கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
 
அந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில்  நடைபெற்று, கடந்த 29.05.2017 ஆம் திகதி முதல் நீதாய (ரயலட் பார்) விளக்க முறையில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.
 
குற்ற சம்பவம் நடைபெற்று 898 நாட்களுக்கு பின்னர் கடந்த 27ஆம் திகதி தீர்ப்பயத்தால் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்தும், 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 
அத்துடன் குற்றவாளிகள் ஏழு பேரும் மாணவியின் குடும்பத்திற்கு தலா 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் , 2, 3, 5 மற்றும் 6ஆம் இலக்க குற்றவாளிகள் 40ஆயிரம் ரூபாய் தண்ட பணம் செலுத்த வேண்டும் எனவும் , ஏனைய 4, 8 மற்றும் 9ஆம் இலக்க குற்றவாளிகள் 70 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் செல்லுத்த வேண்டும் என தீர்ப்பாயம் தீர்ப்பளித்து இருந்தது.
 
தற்போது சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும், குற்றவாளிகளின் சட்டத்தரணிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில், குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
 
அந்நிலையில் , புங்குடுதீவை சேர்ந்த சிலரிடம் குறித்த வழக்கு தொடர்பிலும் , வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பிலும் கருத்து கேட்ட போது ,
 
புங்குடுதீவு – நயினாதீவு  , பல நோக்கு கூட்டுறவு சங்க  தலைவர், சுப்பிரமணியம் கருணாகரன்  தெரிவிக்கையில் , 
Karuna-karan-800x450.jpg
 
புங்குடுதீவில் பிறந்து வளர்ந்த மக்கள் 1948 க்கு முன்னர் எவரும் யாழ்ப்பாணம் சென்றதில்லை. புங்குடுதீவு மண்ணிலே விவசாயம் செய்து தமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொண்டார்கள். அக்கால பகுதியில் பத்து வீதமானவர்களே யாழ்.நகர் பகுதிகளுக்கு சென்று ஆடைகள் , இரும்பு பொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்து வருவார்கள். ஏனையவர்களுக்கு யாழ்ப்பாணம் எப்படி இருக்கும் என்றதே தெரியாது.
 
அதன் பின்னரான கால பகுதியில் புங்குடுதீவை சேர்ந்த மக்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக சிலர் வன்னியை நோக்கி நகர்த்னர் குறிப்பாக கிளிநொச்சி , வட்டக்கச்சி போன்ற பிரதேசங்களுக்கு சென்றனர்.
 
புங்குடுதீவு மக்கள் வசதியானவர்களாகவே வாழ்ந்தனர்.  1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் கொழும்பு வருமானம் நின்று போனது. கொழும்பில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் வர்த்தகங்கள் நிர்மூலம் ஆனது.
 
அதன் பின்னரான கால பகுதியில் உள்நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1991 புங்குடுதீவு மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.
பின்னர் 2009களில் யுத்தம் முடிவடைந்த பின்னர் புங்குடுதீவு மக்கள் மீள குடியேறினார்கள். அதற்கு முன்னரே மக்கள் மீள் குடியேற தொடங்கி இருந்தாலும் யுத்தம் முடிவடைந்த பின்னரே பயமின்றி மீள் குடியேறினார்கள். அதன் போது பெரும்பாலான வெளிப்பிரதேச மக்களும் புங்குடுதீவில் குடியேறினார்கள். தற்போது புங்குடுதீவில் வசிப்பவர்களில் 50 வீதத்திற்கு மேலானோர் வெளி பிரதேச மக்களே .
 
இடம்பெயர்ந்து சென்ற புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட பலர் இன்னமும் ஊருக்கு திரும்பி வரவில்லை. வசதி குறைந்தோரே குடியேறினர். அதனால் வாழ்க்கை முறை சீரழிய தொடங்கியது.  தடியெடுத்தவன் எல்லாம் அதிகாரம் செலுத்த தொடங்கினான். அதற்கு புங்குடுதீவில் இருந்த சில காடைய அமைப்புகள் ஆதரவு வழங்கியதுடன் அவர்களும் சீரழிக்க தொடங்கினார்கள். .
 
புங்குடுதீவினை விட்டு இடம்பெயர்ந்து இன்னமும் மீள குடியமர விரும்பாமல் வெளிநாடுகளிலும் வேறு பிரதேசங்களில் வாழும் மக்கள் இங்குள்ள காணிகளை துப்பரவு செய்ய மாட்டார்கள். காணி இல்லாதவர்கள் காணிகளை வாங்க தயார் ஆனால் அதனை விற்பனை செய்ய எவரும் விரும்பலை. இதனால் இன்று புங்குடுதீவு பற்றை காணிகளாக காட்சி அளிக்கின்றன.
 
கடந்த 1960ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் புங்குடுதீவில் நன்னீர்வளம் இருந்தது. அதன் பின்னர் யுத்தம் காரணமாக இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் தீவாக பகுதிகளில் அதிகளவில் நிலைகொண்டு உள்ளமையால் அவர்களுக்கு நாளொன்றுக்கு 1 இலட்சம் லிட்டருக்கும் அதிகமான நீர் தேவைப்படுகின்றது. அதனால் தினமும், 5,  6 பவுசர்களில் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.
 
அதனால் புங்குடுதீவு மற்றும் சாட்டி பகுதிகளில் உள்ள நன்னீர் மூலங்கள் உவர்  நீராக மாற்றம் அடைய தொடங்கியுள்ளது. புங்குடுதீவு,  ஊர்காவற்துறை , மண்டைதீவு அல்லைபிட்டி , மண்கும்பான் இராணுவ , கடற்படை முகாம்களுக்கு புங்குடுதீவு மற்றும் சாட்டி பகுதிகளில் உள்ள நன்னீர் கிணறுகில் இருந்தே நீரினை எடுத்து சென்று தமது அன்றாட தேவைகள் , விவசாய தேவைகளுக்கு பயன்படுத்து கின்றார்கள்.
 
இந்த நிலமை தொடர்ந்தால் தீவகத்தில் நன்னீர் உவநீராக மாற்றம் அடைந்து விடும். தீவகத்தில் மக்கள் மீள் குடியேற விருப்பததன் முக்கிய காரணமாக நீர் பிரச்சனை உள்ளது. எனவே மேலும் நன்னீர் உவர்நீராக மாறாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.
 
புங்குடுதீவை சேர்ந்த கருணாகரன் குணாளன் கருத்து தெரிவிக்கையில் , 
Guna-lan-800x450.jpg
 
மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட  சந்திரஹாசன்,  சசீந்திரன் என்பவர்கள் ஏற்கனவே ஊரில் பல குற்றங்களை செய்த குற்றவாளிகள். மாணவியை ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படும் துஷந்த் எனும் குற்றவாளி குறிகட்டுவான் வாகன தரிப்பிடத்தில் வேலை செய்த போது பண மோசடியில் ஈடுபட்டதனால் , பிரதேச சபையினால் வேலையால் நீக்கப்பட்டார். அப்போது அவர்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கு மற்றும் தலையீடு காரணமாக மீண்டும் பிரதேச சபை தண்ணீர் பவுசர் சாரதியாக வேலைக்கு அமர்த்தப்பட்டார். (மாணவி கொலை வழக்கில் கண்கண்ட சாட்சியங்கள் மற்றும் தற்போது குற்றவாளியாக உள்ள நபர்,  எதிரியாக இருந்த போது மன்றில் சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கும் போதும் , பிரதேச சபை கடமை நேரத்தில் மாப்பிள்ளை என அழைக்கபப்டும் நடராஜா புவனேஸ்வரன் வீட்டில் கள்ளு அருந்த செல்வது உண்மை என சாட்சியம் அளித்திருந்தார்கள். )
 
மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் ஊரில் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள். இவர்களின் குற்ற செயலுக்கு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் அக் கால பகுதியில் கடமையாற்றிய தமிழ் மொழி பேசும் காண்ஸ்டபில் தர உத்தியோகஸ்தர்கள் இந்த குழுவுக்கு உடந்தை அளித்து வந்தனர். பொலிஸ் உடந்தை இருந்ததால் தான் அவர்கள் பயமின்றி குற்ற செயலில் ஈடுபட்டனர். (மாணவி கொலை வழக்கு விசாரணையின் போது பொலிஸ் சாட்சியங்களிடம் சந்தேக நபர்களாக இவர்களை கைது செய்த போது ஏன் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லாது , குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு கொண்டு சென்றீர்கள் என சட்டத்தரணிகள் கேட்ட போது , இவர்களுக்கு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் உதவி புரிய கூடிய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருப்பதனால் , இவர்களை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றால் உரிய விசாரணைகளை முன்னெடுக்க முடியாது. அதனால் தான் தாம் குற்றவாளிகளை குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு கொண்டு சென்றதாக சாட்சியம் அளித்திருந்தனர். )
 
இந்த வழக்கில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, கண் கண்ட சாட்சியமாக சாட்சி கூறிய உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் இந்த குர்ரவாளிகளுடன் சேர்ந்து பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர். 2015.05 .17ஆம் திகதி இரவு சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமருடன் ஆட்டோவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற போது வேலணை துறையூர் சந்தியில் சுவிஸ்குமாரை பொது மக்கள் மடக்கி பிடித்த போது ஒரு நபர் தப்பியோடி இருந்தார். அவர் உதயசூரியன் சுரேஷ்கரன் தான் அன்றைய தினம் தப்பியோடியவர். அவர் பற்றிய தகவல்களை ஊரவர்கள் பொலிசாரிடம் வழங்கி இருந்தனர். இருந்த போதிலும் போலீசார் சுரேஷ்கரனை கைது செய்யவில்லை. பின்னர் குற்றவாளிகளிடம் குற்றபுலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே சுரேஷ்கரன் கைது செய்யபட்டார்.
 
தடயவியல் போலீசார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை என நினைக்கிறேன்.  சுவிஸ்குமார் தங்கி இருந்த வீடு எரிக்கப்பட்டது. வீடு எரிக்கப்பட்ட பின்னர் அந்த வீட்டில் கமரா ஒன்று காணப்பட்டது. கைத்தொலைபேசி ஒன்றும் உடைந்த நிலையில் காணப்பட்டது. அவற்றை தடயவியல் பொலிசார் ஆதாரமாக சேகரிக்க வில்லை.
 
குற்றவாளிகளான சந்திரஹாசன், துஷாந்த், நிஷாந்தன், சசீந்திரன் மற்றும் சுவிஸ் குமார் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தான் இருப்பார்கள்.  கண்ணகி அம்மன் ஆலய திருவிழா கால பகுதியில் இங்கு வந்து மது அருந்துதல் , மாடு,  ஆடு, கோழிகளை களவாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அத்துடன் ஆட்கள் அற்ற வீடுகளை உடைத்து இரும்புகளை திருடி இரும்பு வியாபாரிகளுக்கு அவற்றை விற்பனை செய்வார்கள்.
 
மது போதையில் ஊரில் உள்ள பெண்களுடன் சேட்டை புரிவார்கள், அடிதடி அடாவடிகளில் ஈடுபடுவார்கள். அவ்வாறு ஈடுபடும் போது பிரச்சனை பெரிதாகி விட்டால் , கொழும்புக்கு ஓடி விடுவார்கள். கொழும்பில் இந்த வழக்கில் விடுதலையான கோகிலன் என்பவர் மட்டுமே வீட்டில் இருப்பவர். இவர்கள் லொட்ஜ்ல தான் தங்கி இருப்பார்கள். பின்னர் இங்கு தான் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஓய்ந்த பின்னர் ஊருக்கு வந்து மறுபடியும் தமது செயல்களில் ஈடுபடுவார்கள்.
 
மாணவி கொலை நடப்பதற்கு ஒரு மாத கால பகுதிக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தம்பதிகள் புங்குடுதீவில் வாடகை வீடொன்றில் தங்கி இருந்தனர். ஒரு நாள் இரவு இந்த வழக்கின் குற்றவாளிகளான சந்திரஹாசன் சசீந்திரன் உள்ளிட்டவர்கள் அந்த இளம் தம்பதிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்து கணவனை தாக்கி ,கணவனை கத்தி முனையில் வைத்து இருந்து மனைவியை கணவன் கண் முன்னால் வன்புணர்ந்தார்கள்.
 
அந்த சம்பவம் தொடர்பில் கணவன் மனைவியால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபப்ட்டது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் , சந்திரஹாசன்,  சசீந்திரன் உள்ளிட்டோரை ஊர்காவற்துறை போலீசார் அழைத்து விசாரணை செய்திருந்தனர். பின்னர் அந்த முறைப்பாட்டுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை, கணவன் மனைவியும் ஊரை விட்டு சென்று விட்டனர்.
 
சுவிஸ்குமாரை தப்ப வைத்தவர்களை தப்ப வைக்க சட்டத்தரணியை தடுத்தனர். 
vithya10-800x600.jpg
 
மாணவி கொலை வழக்குக்காக நீதிமன்றில் முன்னிலையாக சட்டத்தரணி கே.வி தவராசாவை புலம்பெயர் அமைப்புக்கள் கேட்டு இருந்தன. அதன் பிரகாரம் அவரும் மன்றில் முன்னிலையானர். கடந்த  2015ஆம் ஆண்டு  ஜீன் முதலாம் திகதி மன்றில்,   சுவிஸ் குமார் எப்படி தப்பினார் ? என்பது தொடர்பில் பூரண விசாரணை நடத்த வேண்டும் என விண்ணப்பம் செய்தார். அதன் பின்னரான வழக்கு விசாரணைகளில் கே.வி தவராசாவை முன்னிலையாக விடாது சிலர் தடுத்தனர்.
 
அதன் பின் பல அரசியல்கள் இருக்கின்றன. தீர்ப்பாய தீர்ப்பின் போது , நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் கூட சுவிஸ் குமார் தப்பி சென்றமை மற்றும் உதவியவர்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.
 
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை வழங்காமல் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்து இருந்தமையினால் தான்,  விசாரணைகள் விரைவில் முடிக்கப்பட்டது. பிணையில் விடுவிக்கப்பட்டு,  இருந்தால் அவர்கள் நாட்டை விட்டு எவ்வாறோ தப்பி சென்று இருப்பார்கள். அவர்களை பிணையில் விடாது தொடர்ந்து விளக்க மறியலில் வந்தது விசாரணைகளை நடாத்தியமைக்காக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
 
அதேபோன்று இந்த வழக்கு கொழும்பிற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணைகள் நடத்தப்பட்டு இருந்தால் , வழக்கு நீர்ந்து போய் இருக்கலாம் குற்றவாளிகள் தப்பி இருக்கலாம். என தெரிவித்தார்.
 
புங்குடுதீவை சேர்ந்த பி.சதீஸ் என்பவர் தெரிவிக்கையில் , 
 Sathees-800x450.jpg
 
இந்த வழக்கை துரித கெதியில் நடத்தி நல்லதொரு தீர்ப்பை பெற்று தந்த அனைவருக்கும் நன்றிகள். அதேபோன்று மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவு தூபி அமைத்து அந்த இடத்தை மாணவியின் நினைவிடமாக மாற்ற விரும்புகின்றோம். அதற்கு உரிய தரப்பினர்கள் உதவி புரிய வேண்டும் என கோருகின்றோம். என தெரிவித்தார்.
 
படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி தெரிவிக்கையில் , 
Saraswathi-Mother-800x450.jpg
 
வழக்கினை துரித கெதியில் விசாரணைகளை மேற்கொண்டு,  இரண்டரை வருடத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து , அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்த குற்ற புலனாய்வுபிரிவினருக்கு நன்றி.
 
அதேபோன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவானுக்கும் , தீர்ப்பாய நீதிபதி நீதிபதிளும் நன்றி.  இனியும் இப்படி சம்பவம் நடக்காது.
 
எனது பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடி பல  இன்னல்களை அனுபவித்தவர்களுக்கு நன்றி. அதேவேளை இந்த வழக்கு
 
கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட போவதாக தகவல்கள் வெளியான போது , அதற்கு எதிராக யாழ்ப்பணத்தில் போராட்டத்தினை நடத்தியவர்களுக்கும் நன்றி. இந்த வழக்கு யாழ்ப்பாணத்தில்  நடந்தமையால் தான் மிக விரைவாக நல்லதொரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகளை துரிய கெதியில் நடத்த ஒத்துழைந்த அனைவருக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி.
 
எனது பிள்ளையை கொன்ற குற்றவாளிகளை எமக்கு இழப்பீடு வழங்க கூறி தீர்ப்பில் கூறப்பட்டது. அந்த குற்றவாளிகளின் ஒரு சதமும் எமக்கு வேண்டாம். என தெரிவித்தார்.
 
புங்குடுதீவை சேர்ந்த சின்னத்தம்பி குமரதாஸ் கருத்து தெரிவிக்கையில் , 
Kumara-das-800x450.jpg
 
மாணவியின் கொலைக்கு முன்னரும் சில கொலைகள் இந்த கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த மாணவியின் கொலை விசாரணையில். இந்த அரசாங்கம் காட்டிய அதீத அக்கறை , மக்களின் தீவிர போராட்டம் இதற்கெல்லாம் இந்த தீர்ப்பு சரியான பதிலை தந்துள்ளது.
 
இந்த கொலைக்கு முன்னரான மூன்று தசாப்த கால பகுதியில் இலங்கையில் சட்டம் ஒழுங்கு நடைமுறை சீராக இருக்கவில்லை இந்த கொலையின் பின்னர் தான் உரிய முறையில் சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படுத்த படுகின்றது.
 
கடந்த காலங்களில் சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இல்லாத கரணத்தால் தான் இவ்வாறான குற்றவாளிகள் உருவாகினார்கள்.
 
ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் 40 ஆயிரம் மக்கள் இருந்தார்கள் தற்போது 4ஆயிரம் மக்களே இருக்கின்றார்கள்.
 
அவ்வாறு கைவிடப்பட்ட கிராமத்தில் வாழ்பவர்கள் பதப்படாமல் பண்படாமல் வாழ்ந்து விட்டார்கள். அது அவர்களின் தவறில்லை. இந்த கால கட்டம் அவர்களை அவ்வாறு உருவாக்கிவிட்டது. எல்லோரையும் இல்லை ஒரு சிலர் அவ்வாறு உருவாகி விட்டார்கள்.
 
இந்த தீர்ப்பின் பின்னர் இவ்வாறான குற்றங்கள் நடைபெற மாட்டாது. இதற்கு முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு கூட கொலைகள் நடைபெற்றுள்ளது.
 
தண்டனை கொடுப்பதனால் மாத்திரம் குற்றத்தை கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறான குற்றங்களை ஏன் செய்கின்றார்கள் என்பதனையும் அதன் பின்புலன்களையும் அறிய வேண்டும். அதனூடகவே குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.
 
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. முரட்டு தனமாக மக்கள் வாழும் நாடுகளில் தான் தலையை வெட்டுதல் , கல்லெறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றது. நாங்கள் நாகரிகமானவர்கள் நாங்கள் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டியதில்லை. ஆனால் குற்றவாளிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் அவர்கள் சமூகத்திற்கு தேவையில்லாதவர்கள்.
 
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கபட்ட போதிலும் , இலங்கையில் மரணதண்டனை தற்போது நிறைவேற்றபடுவதில்லை என்பதனால் அவர்கள் ஆயுள் முழுவது சிறையில் தான் தமது காலத்தை கழிக்க போகின்றார்கள். இது அவர்களுக்கு நல்லதொரு தண்டனை.
 
இன்றைக்கு எல்லோர்கையிலும் ஊடகங்கள் உள்ளன.அதனால் எல்லோரும் தங்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றார்கள் . அது தீமையான செயலும் இல்லை. சாதாரண மக்களின்  கையில் ஊடகங்கள் உள்ளதால் பல நன்மைகள் நடைபெற்றுள்ளன.
 
மாணவி கொலை தொடர்பில்,  சில இடங்களில் தேவையற்ற விசமதனமான அரசியல் சுயலாபத்தோடு கருத்துக்கள் பரப்பப்பட்டன. அதனால் விசாரணைகளை கூட திசை மாற்ற முயற்சித்தனர். இதானல் சாதாரண மக்கள் உண்மை தன்மையை அறிந்து கொள்ள முடியவில்லை.
 
எதிர்பார்த்ததை விட நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. நேர்மையான விசாரணை நடைபெற்று நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு ஒரு நன்றி கூறாமல், பிறகும் பிறகும் தேவையற்ற விசமதனமான கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர். இது நன்மை பயக்க போவதில்லை.
 
இந்த மாணவியின் கொலை இவ்வளவு தூரம் பரபரப்பாகி தீர்ப்பு விரைவில் கிடைக்க காரணம் , இந்த கொலை கொடூரமான கொலை அத்துடன் கொலை நடந்த கால பகுதியில் தேர்தல் முன்னாயத்த வேலைகள் நடைபெற்ற கால பகுதி என்பதனால்,  அதனால் இந்த வழக்கு பல வடிவங்களில் பேசப்பட்டு திணிக்கப்பட்டது.
 
தற்போது நீதியான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு உள்ளார்கள். என தெரிவித்தார்கள்.
 
மேன்முறையீட்டு முடிவு கிடைக்க 5 வருடங்களுக்கு மேலாகும். 
vithya11-800x600.jpg
 
அதேவேளை குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்த சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன மேன்முறையீடு முடிவு கிடைப்பதற்கு குறைந்த பட்சம் 5 வருடங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,  குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாய (ராயலட் பார் ) விசாரணை பதிவேடுகள் சுமார் 4ஆயிரம் பக்களைகொண்டு உள்ளன. அவற்றினை சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்ய குறைந்த பட்சம் ஒரு வருட காலம் தேவைப்படும்.
 
அதன் பின்னர் பிரதம நீதியரசர் 5 நீதியமைச்சர்களை நியமித்து , அந்த நீதியமைச்சர் குழாம் குறித்த வழக்கினை முழுமையாக படிக்க வேண்டும்.
 
அதன் பின்னர் விசாரணைகளுக்கு திகதியிட ப்பட்ட பின்னர் , வழக்கில் ஒவ்வொரு விடயத்திலும் விடப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்ட முடியும். அவ்வாறாக மேன்முறையீட்டின் இறுதி முடிவு கிடைக்க குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கு மேலாகும் என எதிர்ப்பார்க்கிறேன். என தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
vithya9-800x600.jpgvithya8-800x600.jpgvithya7-800x600.jpgvithya6-800x600.jpgvithya5-800x600.jpgvithya4-800x600.jpgvithya3-800x600.jpgvithya1-800x600.jpg

http://globaltamilnews.net/archives/46397

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.