Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் முஸ்லிம்கள் குடியேற சி.வி.யே தடை

Featured Replies

வடக்கில் முஸ்லிம்கள் குடியேற சி.வி.யே தடை

 

 

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது தடையாக உள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் சபையில் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர்,

இன்றைய (நேற்று) ஒழுங்குப் பத்திரத்தில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முக்கியமான  தனிநபர் பிரேரணையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. 

எனினும் விவாதத்தை மதிய போசன இடைவேளைக்கு நிறுத்தாது தொடர்ந்தும் நடத்த சபை தீர்மானித்தது. வெள்ளிக்கிழமையால் முஸ்லிமாகிய நான்  ஜூம்மா தொழுகைக்கு சென்றிருந்தேன்.  இந்தபிரேரணை கடந்த காலங்களில் மூன்று  தடவைகள் நான் சபைக்கு சமுகம் தராத நிலையிலேயே அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்டிருக்கின்றது.

முஸ்லிம் உறுப்பினர்கள் ஜூம்மா தொழுகைக்குச் செல்ல முன்னர் அவர்களின் பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய விடயம் முக்கியமானது. வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு வடமாகாணத்தில் உள்ள முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தடையாக உள்ளார். அவர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்தப்பிரேரணையின் முக்கியத்துவத்தினை புரிந்து கொள்ளுங்கள். எனவே, வெ ள்ளிக் கிழமைகளில் தனிநபர் பிரேரணையை விவாதிக்கும்போது முஸ்லிம் உறுப்பினர்களின் பிரேரணையை முற்கூட்டியே எடுக்க வேண்டும் என்றார். 

அச்சமயத்தில் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, எதிர்வரும் காலத்தில் இது பற்றி கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுப்பதோடு உங்களது பிரேரணை தனிநபர் பிரேரணை மீதான விவாத நாளன்று முதலாவதாக எடுக்கப்படும் என்றார். 

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் சபையில் இல்லாதிருந்த சமயத்திலேயே  அவருடைய பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதாக சபா பீடத்திலிருந்த பிரதி சபாநாயகர் அறிவித்தார். எனினும், சபையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் இருக்காமையால் அடுத்த பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21647

இதனால் தான் முஸ்லிம்கள் அவரை விரட்ட படாத பாடு படுகீனம்.

எப்படியோ அடுத்த தேர்தலில் அவரை விரட்டி விட்டு  ஜொராக குடியேற்றம் செய்யலாம்.

அதுக்கு இழிச்ச வாய் தமிழனும் உதவுவான்.

முஸ்லிமுக்கு நல்ல விலைக்கு விற்று போட்டு  வெளி நாட்டுக்கு வந்து அசைலம் அடிக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Dash said:

இதனால் தான் முஸ்லிம்கள் அவரை விரட்ட படாத பாடு படுகீனம்.

எப்படியோ அடுத்த தேர்தலில் அவரை விரட்டி விட்டு  ஜொராக குடியேற்றம் செய்யலாம்.

அதுக்கு இழிச்ச வாய் தமிழனும் உதவுவான்.

முஸ்லிமுக்கு நல்ல விலைக்கு விற்று போட்டு  வெளி நாட்டுக்கு வந்து அசைலம் அடிக்க வேண்டியது தான்.

இனி உந்த அலைசம் விளையாட்டு சரிவராது.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முஸ்லீம்கள் மீள் குடியேற்றம் தொடர்பில் விடுதலைப்புலிகள் 2002 இலேயே அறிவித்துவிட்டார்கள். அதற்கு யாரும் தடையாக இருந்ததாகத் தெரியவில்லை. பிரபா - ஹக்கீம் இணக்கப்பாட்டினை முஸ்லீம்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம். 

ஆனால் முஸ்லீம்கள் குடி இருந்திராத தமிழர் பகுதிகளை.. மீள் குடியேற்றம் என்ற போர்வையில்.. ஆக்கிரமிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. அதில் விக்கி ஐயா காத்திரமாக இருப்பாராயின் அந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். tw_blush:

Edited by nedukkalapoovan

37 minutes ago, nedukkalapoovan said:

வடக்கு முஸ்லீம்கள் மீள் குடியேற்றம் தொடர்பில் விடுதலைப்புலிகள் 2002 இலேயே அறிவித்துவிட்டார்கள். அதற்கு யாரும் தடையாக இருந்ததாகத் தெரியவில்லை. பிரபா - ஹக்கீம் இணக்கப்பாட்டினை முஸ்லீம்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம். 

ஆனால் முஸ்லீம்கள் குடி இருந்திராத தமிழர் பகுதிகளை.. மீள் குடியேற்றம் என்ற போர்வையில்.. ஆக்கிரமிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. அதில் விக்கி ஐயா காத்திரமாக இருப்பாராயின் அந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். tw_blush:

விக்கி மட்டும் தான் காத்திரமாக இருக்கிறார், ரிஷாட் நானா கத்துவதில் இருந்த்து தெரியுது, அனால் எங்கட தமிழ் வெங்காயங்களுக்கு அது தெரியாது, கண்ணை மூடி பார்த்து கொண்டு இருக்கும், 

இதற்கு முழு சமூகமும் சேர்ந்து இதை தடுக்க வேண்டும்,  அண்மையில் கூட ஒட்டிசுட்டானில் இவர்கள் காடழித்து குடியேற்ற செய்த்க முயற்சியை மக்கள் எதிர்த்துள்ளனர், இதே போல் மாகாண சபை உறுப்பினர் சிவகரன் தலைமையிலும் தடுத்தனர்.

யாழ் நகர் மத்தியில் முஸ்லிம் கடை போட்டால் தமிழன் ஏன் வாங்குகிறான் ??

வடக்கில் இருக்கும் ஒவ்வொரு கோவிலிலும்/பாடசாலைகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினால் என்ன ?

ஒரு போராளி குடும்பம் வாழ வழி இல்லாமல் மதம் மாறிய போது அவனுக்கு உதவி செய்ய்மல் முதுகெலும்பு இல்லாதவன் என்ற இந்த சமூகம் திருந்தவா போகுது ??

£ 100,000 செலவளித்து சாமர்த்திய சடங்கு செய்யும் மடையர்களை என்ன செய்வது ?

சென்ற வாரம் ரிசாட் கூட்டம் போட்ட போது அங்கு சும்,ஆர்னொல்ட்,அங்கஜன் மூவரும் இருகீனம், இவர்களுக்கு அங்கு என்ன வேலை ??

 

 

58 minutes ago, MEERA said:

இனி உந்த அலைசம் விளையாட்டு சரிவராது.

எங்கட ஆக்கள் என்ன சும்மாவா? EPDP காரம் கூட்டமைப்பை 2001. தேர்தல் பிரச்சாரத்தின் போது அடித்ததை வைத்தே அசைலம் கேஸ் போட்ட ஆக்கள் ஆச்சே !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.