Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணச்சாதியும்-ஈழத்தமிழரும்

Featured Replies

நிட்சயமாக இதை இணைத்தவர் ஓரு ஓட்;டுக்குழு தான்

டேய் சாதி வெறிபிடித்தவன் எவனடாஅது ?

நாகமாய் போக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிட்சயமாக இதை இணைத்தவர் ஓரு ஓட்;டுக்குழு தான்

டேய் சாதி வெறிபிடித்தவன் எவனடாஅது ?

நாகமாய் போக

என்னை ஏன்கணும் கலைச்சுக்கொண்டு திரியுறீர்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மீனவக் கிறிஸ்தவர்கள் மற்றைய கிறிஸ்தவர்களுக்குள் மணம் முடிக்காது சாதியத்தை பேணுவதற்கும் கிறிஸ்தவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

அவர்கள் முதலில் இந்துக்களாக இருந்த பொழுது கொண்டிருந்த சாதியத்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிகின்ற போதும் கொண்டு சென்றார்கள் என்பதுதான் உண்மை.

சாதியத்தை இந்து மதம் மிக ஆழமாக மனங்களிற்குள் புதைத்து வைத்திருக்கிறது. அந்த சாதியம் வேறு மதத்திற்கு போனாலும், வேறு நாட்டிற்கு போனாலும், மாறாது இருப்பதற்கு அதுதான் காரணம்.

எப்போது பார்த்தாலும், இந்து மதம் பற்றி வெறுப்பைக் கக்குவதிலேயே திரயுங்கோ! ஆனால் உமக்கே புரிகின்றதல்லவா. இந்து மதத்தை மட்டும் குறை சொல்லி ஜாதியை நீக்க முடியாது என்று. ஏன் பகுத்தறிவு கதைப்பவர்களே நாங்கள் நாயக்கர் வம்சம் எண்டும், ஜாதிக்கட்சிகளை ஊக்குவிக்கின்ற நிலமையில் மதத்தை அழித்து ஜாதி வாதம் நீக்கலாம் என்ற உங்களின் கதை பொய்.

சொல்லப் போனால், அது ஒரு இன உணர்வாக மாறியிருக்கின்ற நேரத்தில் இந்து மதத்தைத் திட்டிக் காலத்தைச் செலவளிக்காதீர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே இந்த விவாதம், சாதியை தூண்ட, அல்லது, அழிக்கப்பட்டுக்கொண்டிருக்

Edited by Nitharsan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் நிதர்சன்.

ஜாதிகளைப் பற்றி பேசாமல் விடுவதே, எதிர்கால சந்ததிக்கு அதைக் கொண்டு செல்லவிடாமல் தடுக்கும் முறை. இங்கே, உயர் சாதி ஆதிக்கம், தாழ்சாதி ஆதிக்கம் என்று சொல்வது எல்லாம் அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லுதலே.

ஆனால் ஜாதியை அழிக்கின்றேன் என்று எம் பழம்பெரும் கலாச்சார முறையை விட்டுச்செல்வதாக இருக்கக்கூடாது. மேளம், நாதஸ்வரம்,பறை அடிப்பதை பள்ளிக்கல்வியாக, இளம் வயதிலிருந்தே, அனைவருக்கும் பொதுவாக கற்பிக்கின்றபோது தான், எம் கலாச்சாரத்தின் உருவமாக அது வரும்.

சொல்லப் போனால், இப்போது தமிழீழத்தில் கூட பிரதமவிருந்தினரை வரவேற்கின்றதற்கு, ஆங்கில ஒலிக்கலங்கள் தான் இப்போது பாவிக்கப்படுகின்றன. இந்த நிலை மாறவேண்டும்.

( தச்சுக்கலை இப்போது பள்ளிக் கூடங்களில் கற்பிக்கப்படுவது போன்ற நிலையையே நான் சொல்லவருவது)

அதென்ன ஆங்கில ஒலிக்கலங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆஙிகில ஒலிக்கலங்கள் என்பது தவறு, மேலைத்தேச ஒலிக்கலங்கள் என்று தான் வந்திருக்க வேண்டும். பல சிங்கள நிகழ்வுகளைப் பார்த்திருக்கின்றேன். நாட்டிற்கு வெளிநாட்டு ஆட்களை வரவேற்பதாகட்டும், பள்ளியில் நடக்கின்ற கலை நிகழ்ச்சியாகட்டும், அவர்கள் கண்டி நடனங்களையும், வாத்தியக்காரர்களையும் தான் பாவிப்பார்கள்.

ஆனால் நம் தமிழ்பாடசாலைகளாகட்டும், பிற வரவேற்பாகட்டும், எம் ஒலிக்கலங்கள் பாவிப்பது மிகக்குறைவு. சொல்லப் போனால் பொலநறுவை ஆட்சியைச் சோழர் கைப்பற்றியது முதல், இறுதிக் கண்டி இராசதானி வரைக்கும் தமிழினின் கலை ஓங்கியிருந்தபோதும், கண்டி நடனத்தைச் சிங்களவர்களுக்குச் சொந்தமாகவே காட்டுகின்றார்கள். ஆனால் நாங்கள், மோளதாளத்திற்கு பள்ளிமட்டத்தில் வரவேற்புக் கொடுப்பதுமில்லை. அதைப் பள்ளிக் கல்வியாக கற்பிப்பதும் இல்லை.

ஆனால் ஜாதியை அழிக்கின்றேன் என்று எம் பழம்பெரும் கலாச்சார முறையை விட்டுச்செல்வதாக இருக்கக்கூடாது. மேளம், நாதஸ்வரம்,பறை அடிப்பதை பள்ளிக்கல்வியாக, இளம் வயதிலிருந்தே, அனைவருக்கும் பொதுவாக கற்பிக்கின்றபோது தான், எம் கலாச்சாரத்தின் உருவமாக அது வரும்.

மேளம், நாதஸ்வரம்,பறை அடிப்பதை பள்ளிக்கல்வியாக, இளம் வயதிலிருந்தே, அனைவருக்கும் பொதுவாக கற்பிக்க வேண்டும் என்பது ஒரு சூப்பர் ஐடியா! நான் கூட இந்த வயதில்(ஆண்களின் வயதைக் கேட்கக்கூடாது!) நேரம் கிடைத்தால் இவற்றை பழகுவதற்கு ஆர்வமாக இருக்கின்றேன். இது ஜாலியான விசயம்! :P

ஈழத் தமிழர்கள் சொல்கின்ற மிகப் பெரிய பொய், ஈழத்தில் சாதி இல்லை என்பதுதான்.

ஈழத்தில் சாதியின் வீச்சு குறைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் சாதி இன்றைக்கும் ஈழத்தில் உயிரோடு இருக்கிறது.

(தூயவனுக்காக ஒரு சிறு குறிப்பு: பகுத்தறிவாளர்கள் யாரும் தாம் இந்த வம்சம் என்று பறைசாற்றுவதில்லை. அவர்களை எதிர்ப்பவர்கள்தான் அப்படியான குறுகிய வட்டத்திற்குள் அவர்களை சுருக்க முனைவார்கள்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

, ஈழம் என்று நான் சொல்வது தமிழீழ நிர்வாக கட்டுப்பாட்டு பகுதியை,

:o

நிதர்சன்.. சாதிய அடக்குமுறைகள் இல்லையென்பதை நான் சொல்லித்தானே இருக்கின்றேன். ஆனால் மனங்களில் சாதி எண்ணக் கரு இருப்பதை மறுக்க முடியுமா..? நிதர்சன் நீங்கள் வேண்டுமானால் பால்குடி வயதில் ஈழத்தைப் பிரிந்தவராக இருக்கலாம். நான் சொல்லியிருந்த திருவிழா முறைகள் நிகழ்காலத்திலும் நடைமுறையில் உள்ளவை. இங்கே விடயம் இதுதான். இந்த நடைமுறைகள் யாருக்கும் தாக்கம் விளைவிக்கும் வகையில் இல்லாமல் ஆனால் நடைமுறையில் உள்ளன.

வேண்டுமானால் இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத விடத்து அந்த சாதிய எண்ணக் கரு அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே..

கலப்பு மறுமணம் அந்த எண்ணக் கருவை இல்லாதொழிக்க நல்ல முறை என தெரிந்து யார் அதனை செய்ய முன்வருவீர்கள். .. இங்கே திணிக்கவில்லையே.. இன விடுதலையைப் புலிகள் முன்னெடுக்கின்ற போது சமூக விடுதலையை இவ்வாறான நடைமுறைகளின் ஊடாக நாம் மேற்கொண்டால் புலிகளுக்குப் பாரம் குறையுமே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தளங்களில் உள்ளதையும் ஒருக்கா பாருங்க

சாதி அழிய இன்னும் நெடும் தூரம் போகவேணும்

http://muranveliemag.blogspot.com/

http://www.satiyakadatasi.com/?p=81#comments

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு நெகட்டிவ் பப்பிளி சிற்றிக்காகத்தான். ஒன்றை இல்லை இல்லை என்று சொல்லியே இருக்கென்று அல்லது இருந்தது என்று காட்டி விளம்பரப்படுத்துறது. நம்மாக்கள் இதில கில்லாடிகள். நெகட்டிவ்வா பேசிப் பேசியே நிலைநாட்டிடுவாங்க.

பாரதியார் தொடங்கிச் சொல்கிறார்கள். அடேங்கப்பா மனிதனில பாகுபாடென்றால் ஆணும் பெண்ணும் என்ற இரண்டுதான். அதுவும் உடலால் உள்ள சில வேறுபாடுகள். வேற இல்லை என்று. உலகம் எங்க கேட்குது.. நிறம் நாடு இனம் மதம் இப்ப போதாக்குறைக்கு பணம் வசதி படிப்பு தொழில் அந்தஸ்து பத்தாக்குறைக்கு விசா சிற்றிசன் சிப் அகதி அகதி விசா மறுதலிக்கப்பட்ட அகதி என்று இப்படியே பாகுபாடுகள் மனிதனால மனிதன் மீது புதிசு புதிசா திணிக்கப்பட்டே வருகுது.நின்ற பாடாக் காணேல்ல.

நாடுகளைப் பாருங்க சுரண்டிப் பணக்காரன் ஆனால் பணக்கார நாடு.. சுரண்டாமல் ஏழையா இருந்தால் ஏழை நாடு. ஏனப்பா வளங்களின் வழங்களை சமனாகப் பகிர்ந்து கொண்டால் எல்லைகளற்ற உலகை அப்படியே மனிதனிடம் மீளக் கையளித்து விட்டால் அவன் பாட்டுக்கு சிவனே என்றிருப்பான். அநாவசியப் பாகுபாடுகளைப் புகுத்தி அதன் மூலம் மனிதனுக்குள் எதிர்பார்ப்புக்களை வளர்த்து அதற்காகவே அவனை அடிமையாக்கி அழித்துவிடுகின்றனர்..! இந்த நிலையில் இந்தப் பாகுபாடுகளை மனித மனங்களில் இருந்து முற்றாக அழிக்க முடியும் என்பது உடனடிச் சாத்கியமானதாகத் தெரியவில்லை. ஒன்றை அழிக்க இன்னொன்று முளைக்கும்..களைகள் போல..! :o:o

தமிழ் சமுகத்தில் இருந்து சாதியத்தை ஒழிப்பதற்கு சாதிபார்த்தால் மரணதண்டனை என்று சட்டம் கொண்டுவரவேண்டும்.சிங்கள வெறியர்கள் தமிழர்களுடைய உடலையும் உடமைகளையும் தான் அழிக்கிறார்கள்.ஆனால் சாதி வெறியர்கள் தமிழ் சமூகத்தினுடைய ஆன்மாவையே அழிக்கிறார்கள். வெளிப்படையாக சாதி பார்ப்பவர்கள் அறியாமையில் முழ்கி இருப்பவர்கள் என்பதால் அவர்களை நாங்கள் மன்னிக்கலாம். ஆனால் சாதி இல்லை என்று செல்லிக்கொண்டும் நாங்கள் சாதி பார்ப்பதில்லை என்று சொல்லிக் கொண்டும் நரித்தனமாக சாதியக் கலாச்சாரத்தை செயற்படுத்துபவர்களை நாங்கள் மன்னிக்கவே கூடாது.இவர்களை துரோகிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

சாதியத்தின் வலியையும் வரலாற்றையும் அறிய விரும்புபவர்கள் எனது நண்பர் சிவா சின்னப்பொடி அவர்களுடைய வலைப்பதிவை பார்த்தால் நிறைய விடயங்களை தெரிந்து கொள்ளலாம்

http://sivasinnapodi1955.blogspot.com/

மனிதனுக்கு முதல் எதிரி மனிதன் தான், காட்டில் மிருகஙக்ளோடு மிருகங்களாக வாழ்ந்த போது மிருகத்திற்க்கும் மனிதனுக்கும் சாதியோ, இனமோ,மதமோ,மொழியோ வேறுபட்டிருக்கவில்லை, காலப் போக்கில் மனிதனது மூளை வளர வளர அவனுக்கு பாகுபாடும் வளரத் தொடங்கியது, முதலில் மிருகத்திடம் இருந்து தன்னை பிரித்த மனிதன், பின்னர் வெகுவாக முன்னேறத் தொடங்க மனிதனுக்குள்ளேயே பிரிவினைகளால் பிரியத்தொடங்கி இன்று என்னற்ற சாதி,மதம்,இனம்,பால் என்று தன்னைத் தானே பிரித்து தனிமயாக இருக்கின்றான். தமிழன் மட்டும் அல்ல, யாழ்ப்பாணததவர் மட்டும் அல்ல உலகம் பூராவும் இந்த சாதிப் பாகுபாடு உள்ளது,

புலம்பெயெர் நாடுகளில் போய் வெள்ளக்காரன பாத்து தமிழ் பழக்கவழக்கங்கள மறந்து அவனோட பழக்கவழகக்ங்களில் ஊறிப்போனாலும் இந்த சாதியத்தை மட்டும்

மறக்காமல் சாதியததைப் பார்ப்பவர்களைவிட ஈழத்தில் சாதிப்பாகுபாடு பார்ப்பது குறைவாகவே உள்ளது காரண்ம் ஈழத்தில் உள்ளவர்களுக்கு போர் மீதுள்ள பயத்திலயே காலம் போய்விடிகிறது, ஆனலும் நண்பர்கள் சொன்னது போல் கல்யாணத்தின் போது மட்டும் அதிகமாக பார்க்கிறார்கள், ஆனல் புலம்பெயர் நாடுகலிள் ஒருவருடன் ஒருவர் பழகுவதற்கே சாதியம் பாக்கிறார்கள். இதை உடைத்தெறிய நம்மலைப் போல் இளம் தலைமுறையால் மட்டுமே முடியும், இங்கே உள்ளவர்கள் இதற்குத் தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் சொல்கின்ற மிகப் பெரிய பொய், ஈழத்தில் சாதி இல்லை என்பதுதான்.

ஈழத்தில் சாதியின் வீச்சு குறைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் சாதி இன்றைக்கும் ஈழத்தில் உயிரோடு இருக்கிறது.

(தூயவனுக்காக ஒரு சிறு குறிப்பு: பகுத்தறிவாளர்கள் யாரும் தாம் இந்த வம்சம் என்று பறைசாற்றுவதில்லை. அவர்களை எதிர்ப்பவர்கள்தான் அப்படியான குறுகிய வட்டத்திற்குள் அவர்களை சுருக்க முனைவார்கள்.)

சாதியம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனாதல் அதன் தாக்கம் தமிழகத்தை விடக் குறைந்திருக்கக் காரணம், அது பற்றிப் பேசாமல், தவிர்த்துக் கொண்டமையால் தான். யாழ்பாணத்தில் நீ என்ன ஜாதி என்று யாரையும் நேரே கேட்டதாக நான் அறியேன். அப்படிக் கேட்கின்ற நிலமை அருவருப்பானதாகத் தான் நோக்கப்படுகின்றது. ஆனால் தங்களுக்குள் குறித்த ஒருவரைப் பற்றிக் கதைக்கின்ற போக்கை மறுக்கவில்லை.

சொல்லப் போனால் ஜாதி வெறியின் தாக்கம் குறைந்த நிலையே அது. அது மேலும், வலுப்பெற வேண்டுமானால், ஜாதி பற்றிய சிந்தனைக்கு உயிரோட்டம் கொடுக்காமல் இருப்பதால் தான்.

-----------------

சபேசனுக்கு குறிப்பு:அவர் உயர் ஜாதி நாயக்கர் வம்சம் என்றும், கீழ்ஜாதிக்கு உதவி செய்வதாகவும் பகுத்தறிவின் தலைவர் பற்றிய குறிப்புக்களை பல தடவை படித்திருக்கின்றேன். அப்படி தன்னைப் பற்றி பெருமிதமாகவும் நினைப்பது கூட ஜாதி வெறி தான்.

சொல்லப் போனால் கலப்புத் திருமணம் செய்கின்றேன் என்று தம்பட்டம் அடிப்பது கூட மனதில் உள்ள ஜாதி வெறிக்கு அடையாளம். கலப்பு என்று மனதில் மாசை வைத்துக் கொண்டு ஏன் நடிப்பான். எல்லோரையும் சமத்துவமாக நினைத்தால் அப்படிச் சிந்தனை வராது.

ஒரு கதாநாயகன் எப்போது எதிர்பார்ப்புள்ளவனாக மாறுவான் என்றால், அவனை விட வில்லன் பலமுள்ளவனாகக் காட்டப்பட்டு, கதாநாயகனால் தோற்கடிக்கப்படும்போது தான். ஆகவே தான் பகுத்தறிவு கதைப்பவர்களுக்கு, தங்களின் இருப்பை என்னும் பேண, சமூகத்தில் அழிந்து போக வேண்டிய, அடக்குமுறைகளுக்குத் தூபம் போட வேண்டியிருக்கின்றது.

மேளம், நாதஸ்வரம்,பறை அடிப்பதை பள்ளிக்கல்வியாக, இளம் வயதிலிருந்தே, அனைவருக்கும் பொதுவாக கற்பிக்க வேண்டும் என்பது ஒரு சூப்பர் ஐடியா! நான் கூட இந்த வயதில்(ஆண்களின் வயதைக் கேட்கக்கூடாது!) நேரம் கிடைத்தால் இவற்றை பழகுவதற்கு ஆர்வமாக இருக்கின்றேன். இது ஜாலியான விசயம்! :P

பாடசாலைக் காலங்களில் மேசையில் மேளம் அடித்தோ, பூவரசம் இலையில் ஊதிப்பழகிய அனுபவம் ஏதும் இல்லையா? :o

தூயவன்! அவர் ஒரு போதும் தன்னை உயர் ஜாதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டது இல்லை. அப்படி நீங்கள் எங்கே படித்தீர்கள்?

எதற்காக இப்படி பொய்யான தகவல்களை இங்கே தருகிறீர்கள்?

கலப்புத் திருமணம் என்று சொல்லப்படுவது பற்றி தூயவனின் கருத்து சரி.

இந்தப் பதத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை.

இரண்டு மனிதர்களுக்குள் நடப்பதை "கலப்புத் திருமணம்" என்று சொல்வது அர்த்தமற்றது.

ஒரு மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் நடந்தால் அதை கலப்புத் திருமணம் என்று சொல்லலாம்.

இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும்.

சிலர் பெரிதாக "நான் சாதி பார்ப்பது இல்லை" என்று சொல்வார்கள். அதன் உள் அர்த்தமும் "நான் உயர் சாதி" என்பதுதான்.

ஒரு கதாநாயகன் எப்போது எதிர்பார்ப்புள்ளவனாக மாறுவான் என்றால், அவனை விட வில்லன் பலமுள்ளவனாகக் காட்டப்பட்டு, கதாநாயகனால் தோற்கடிக்கப்படும்போது தான். ஆகவே தான் பகுத்தறிவு கதைப்பவர்களுக்கு, தங்களின் இருப்பை என்னும் பேண, சமூகத்தில் அழிந்து போக வேண்டிய, அடக்குமுறைகளுக்குத் தூபம் போட வேண்டியிருக்கின்றது.

நெஞ்ச தொட்டுட்டீங்க தூயவன்!

இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும்.

சிலர் பெரிதாக "நான் சாதி பார்ப்பது இல்லை" என்று சொல்வார்கள். அதன் உள் அர்த்தமும் "நான் உயர் சாதி" என்பதுதான்.

ஆம் அது போலவே குறைந்த சாதிக்காரர் (???) ஒருவரை பார்த்து சாதியை கூறி இழிவு படுத்தும் போது அவர் வெறி கொண்டவராகுகிறார். காரணம் அதனால் அவர் ஏற்கனவே பல்வேறு வகைகளில் மிகவும் நொந்து போயுள்ளமையால். உதாரணமாக ஏழை ஒருவனை (மானமுள்ள) பார்த்து பிச்சைக்காரன் என்றதும் அவனுக்கு அதீத கோபம் வருகிறது. இந்தக் கோபம் பின்னர் பல்வேறு அழியாத வடுக்களை (வெட்டுக் குத்து, கொலை, மானபங்கம், பழிவாங்கும் எண்ணம்) ஏற்படுத்துகிறது. பின்னர் இந்த வடுக்களும் பரம்பரை பரம்பரையாக சாதியை காவிக் கொண்டு போகிறது.

சரி இந்த சம்பாசனையில் உடன்பாடு காணப்பட்டவற்றை ஒருவர் (பாலபண்டிதர் போன்ற) தொகுத்து தரலாமே. அப்போதுதான் இது உபயோகமுள்ளதாக மாறும்.

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

, ஈழம் என்று நான் சொல்வது தமிழீழ நிர்வாக கட்டுப்பாட்டு பகுதியை,

:huh:

நிதர்சன்.. சாதிய அடக்குமுறைகள் இல்லையென்பதை நான் சொல்லித்தானே இருக்கின்றேன். ஆனால் மனங்களில் சாதி எண்ணக் கரு இருப்பதை மறுக்க முடியுமா..? நிதர்சன் நீங்கள் வேண்டுமானால் பால்குடி வயதில் ஈழத்தைப் பிரிந்தவராக இருக்கலாம். நான் சொல்லியிருந்த திருவிழா முறைகள் நிகழ்காலத்திலும் நடைமுறையில் உள்ளவை. இங்கே விடயம் இதுதான். இந்த நடைமுறைகள் யாருக்கும் தாக்கம் விளைவிக்கும் வகையில் இல்லாமல் ஆனால் நடைமுறையில் உள்ளன.

வேண்டுமானால் இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத விடத்து அந்த சாதிய எண்ணக் கரு அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே..

கலப்பு மறுமணம் அந்த எண்ணக் கருவை இல்லாதொழிக்க நல்ல முறை என தெரிந்து யார் அதனை செய்ய முன்வருவீர்கள். .. இங்கே திணிக்கவில்லையே.. இன விடுதலையைப் புலிகள் முன்னெடுக்கின்ற போது சமூக விடுதலையை இவ்வாறான நடைமுறைகளின் ஊடாக நாம் மேற்கொண்டால் புலிகளுக்குப் பாரம் குறையுமே..

காவடி அவர்களே, சாதியத்தை பேசி பேசியே அதை நீங்கள் பெரியதொரு விடயமாக்க முயல்கின்றீர்கள் என்று தான் நான் சொல்ல வந்தேன். இது வரை உங்களுக்கு இதைப்பற்றி பேச வேண்டும் என்று உங்களுக்கு தோன்றாத வேளையில் எவனோ ஒருவன், வலைப்பதிவிடும் வரை உங்களுக்கு அதைப்பற்றி பேச வேண்டிய தேவை இருக்கவில்லை. இன்று நீங்கள் சொல்வது போல, தாயகத்தில் சாதியம் இருப்பதாக வைத்து கொண்டாலும், அது மனதுக்குள் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், புதிய தலைமுறை ஒன்று உருவாகும் நேரத்தில், அது இல்லாமல் போய்விடும். புலம்பெயர் நாடுகளை விட, தாயகத்தில் சாதி என்ற மனப்பாங்கு மிகவும் அருகி விட்ட ஒன்றாகி விட்டது.

இவற்றைப்பற்றி பேசுவதால் அதை மறந்து போனவர்கள், மீண்டும் அதை புதிப்பித்துக்கொள்ள நாமே வழிசமைக்கின்றோம் என்பதையும், அதிக இளைஞர்கள் வலம் வரும் இணையத்தில் சாதியை பற்றி பேசி, அவர்கள் மனதில் இதைபற்றியதொரு விழிப்புணர்வுக்கு பதில், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை விவாதப்பொருளாக, நாம் எடுக்கவில்லை மாற்றாக, இதைப்பற்றி விவாதிப்பதை விரும்பவில்லை. கூட்டம் போட்டு சாதி பற்றி பேசுவது எமக்கு தான் இழுக்கன்று. அதை புரிந்து கொள்ள நீங்கள் மறுக்கிறீர்கள்.

இன்னும் சிலர், தனிப்பட்ட ரீதியான கருத்துக்களை சமூக ரீதியில் பார்ப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மதத்தையும் பகுத்தறிவையும், இதற்க்குள் இணைத்து அனைத்தையும், ஒன்றாக கலத்து ஒன்றுமில்லாத ஒன்றை உருவாக்க முனைகின்றீர்கள்.

நெருக்கால போவான் அவர்கள் சொல்வது போல, எல்லாவற்றுக்கும் எதிர்மறையாக விவாதம் செய்வதாக எடுத்துக்கொண்டாலும் அதை சொல்லிக்கொண்டு அதையோ அவரும் செய்வது. இதை அவர் சொல்லும் தகுதியை அவர் இழந்து விட்டார் என்பதையும் குறிப்பிட்டு கொள்வது நல்லது என்று நினைக்கின்றேன். ஈழத்தமிழர்களின் சாதியைப்பற்றி கதைக்கும் போது மேலைத்தேய, இன வேறுபாட்டையும் நிற வேறு பாட்டையும் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றார். பாராதி சாதிவேற்றுமையை களைய முனைந்தார் என்றாரலும் பிரமணர்ஈ அல்லது அந்தனர்' என்ற அடையாளத்தோடு தான் அவர் வலம் வந்தார். அந்த அடையாளம் அவரது பிரிவை, சாதியை மற்றவர்களுக்கு காட்டியது எனலாம். அதை பற்றி யோசிப்பவர் பாரதியின் சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாட்டு அவரது சாதி அடையாளத்தை மறைத்து விட்டதைப்பற்றியும் சிந்திக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகத்தில் சாதியம் இருப்பதாக வைத்து கொண்டாலும், அது மனதுக்குள் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், புதிய தலைமுறை ஒன்று உருவாகும் நேரத்தில்

புதிய தலைமுறை உருவாகி அது திருமணம் செய்யும் காலத்துக்கும் வந்துவிட்டது. சபேசன் சொன்னது போல கலப்பு மணம் என்பது பொருந்தாச் சொல் தான். ஆனால் நடைமுறையிலிருக்கும் அகமணமுறையை மாற்ற விரும்புவதை எப்படி அழைப்பது எனத் தெரியவில்லை. நடைமுறையில் உள்ள சாதிப் பிரிவுகளுக்குள்ளேயே திருமணம் செய்யும் வழக்கத்தை மாற்றும் வல்லமை புதிய தலைமுறைக்கு இருக்க வேண்டும். நடைமுறையில் சமூகத்தால் வெவ்வேறு சாதிகள் எனச் சொல்லப் படுபவர்கள் திருமணத்தில் இணையும் போது அவர்களின் பிள்ளைகளுக்கான சாதி அடையாளம் அற்றுப்போகும். சாதியை பேசாது விட்டால் அது அழிந்து விடும் என்கிறார்கள்.

ஈழத்தில் முற்றாக அழிந்து விடாமல் சிற்சில இடங்களில் வெளிப்பட்டு வரும் சாதி அடக்குமுறைகள் பற்றி புலிகள் எழுதியிருக்கிறார்கள். 90 களில் யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிச் சண்டைகளைப் பற்றி அவர்கள் வெளிச் சொல்லியிருக்கிறார்கள். இங்கே சொல்லப் படுவது போல ஒளித்து வைக்க விரும்பவில்லை.

யாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம்.அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணிக் கிணறு இருகிறது.அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனி மனிதருக்குச் சொந்தமானது.அந்தத் தனி மனிதர் தன்னை ஒரு உயர் சாதிக்காரர் என எண்ணிக் கொள்பவர்.அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்படோர் எனப்படும் ஒரு மக்களும் பிரிவும் இருக்கிறது.இந்த மக்களுக்கு குடி தண்ணீர் வசதி இல்லை.அவர்களிந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள்.தண்ணீர் அள்ளுவதற்கு முயற்ச்சிக்கிறார்கள்.இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடி வருகிறார்.தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்கிறார்.தாழ்த்தப்பட்டோ

Edited by காவடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.