Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் இரு பௌர்ணமி பின்னர் பெரும் அதிர்ச்சி காத்திருக்கின்றது.!” சூளுரைக்கிறார் மஹிந்த

Featured Replies

mahinda.jpg

தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் குறிப்பிட்டார். 

கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் பொது எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது புதிய அரசியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/22176

  • கருத்துக்கள உறவுகள்

உளவியல் யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இவர் எப்படி தான் தலையால கிடங்கு கிண்டினாலும் பிரதமராகப் போகவில்லை. மைத்திரி அழைக்கப் போவதில்லை.

தமிழரைப் பொறுத்த வரை, இவர் வருவது நல்லது. உலகத்துக்கு சிறந்த செய்தி கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

தமிழரைப் பொறுத்த வரை, இவர் வருவது நல்லது. உலகத்துக்கு சிறந்த செய்தி கிடைக்கும்.

என்னது  அது ??நாதா:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனி ஒருவன் said:

என்னது  அது ??நாதா:unsure:

சிங்களவர் எதுவுமே பகிரமாட்டார்கள் என்ற செய்தி.

சுஜ நிர்ணைய உரிமை குறித்த குடியொப்பம் என்னும் குண்டினை தூக்கி வீசும் நிலையில் வடக்கு முதல்வர் தான் இருக்கின்றார்.

இதனால் தான் விக்கியரை துரத்த சிங்களவர் முயன்றார்கள். அது மட்டுமல்ல, இதன் காரணமாகவே கிழக்கு முதல்வர் பதவி தமிழர் கையில் இல்லை. 

இருந்தவரையும், மீண்டும் வரக்கூடும் என்றே, உள்ளே வைத்து உள்ளனர்.

கிழக்கு தமிழர்கள் செய்யக் கூடிய ஒரே வேலை, சிந்தாமல் சிதறாமல் தமது வாக்குகளை செலுத்தி, இவ்வாண்டு தேர்தலில் தமிழ் முதல்வர் வர வழி சமைக்க வேண்டும்.
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

சிங்களவர் எதுவுமே பகிரமாட்டார்கள் என்ற செய்தி.

அவை செய்தியாகவே மட்டும் இருக்கும்போல் தெரிகிறது, ஏனெனில் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலில் தெற்கு ஆசியாவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் இருப்பதாக தெரியவில்லை. எல்லாம் பக்கத்து பெரியண்ணன் முடிந்தவரை பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவைத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

உளவியல் யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இவர் எப்படி தான் தலையால கிடங்கு கிண்டினாலும் பிரதமராகப் போகவில்லை. மைத்திரி அழைக்கப் போவதில்லை.

தமிழரைப் பொறுத்த வரை, இவர் வருவது நல்லது. உலகத்துக்கு சிறந்த செய்தி கிடைக்கும்.

உலகத்திற்கு சிறந்த செய்தி மட்டுமல்ல ஒரு குட்டிப் பாப்பாவும் கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அவை செய்தியாகவே மட்டும் இருக்கும்போல் தெரிகிறது, ஏனெனில் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலில் தெற்கு ஆசியாவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் இருப்பதாக தெரியவில்லை. எல்லாம் பக்கத்து பெரியண்ணன் முடிந்தவரை பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவைத்திருக்கிறார்கள்.

ம்...

மகிந்தர் வந்தால்.... பெரியண்ணர் பாடு திண்டாட்டம் ஆகிவிடும்.

சீனாக் காரனின் பெரு திட்டத்தின் வெற்றியாகவே அது இருக்கும்.

அந்த நிலையில் மேலை நாடுகள் நிகழ்ச்சி நிரலை மாத்தி தாமே நேரடியாக கையாள முனைவார்கள். இதன் காரணமாகவே மகிந்த வர வாய்ப்பில்லை.

இலங்கை அரசியல் ஒரு குழப்ப நிலை. ஐக்கிய தேசிய கட்சி ஆதரவில் சுதந்திர கட்சியின் சுகாதார அமைச்சர் ஜனாதிபதி ஆனார். பின்னர் அக்கட்சியின் தலைவர் ஆனார்.

கருணாநிதி, ஜெயா வை விழுத்த சசிகலாவை ஆதரித்த கதை. இங்கே மைத்திரி மக்களால் தெரிவு செய்யப்பட்டாலும், ( ஜெயலலிதா) மகிந்த ஜீரணிக்க முடியாமல் அடிபட்ட நாகம் போல திரிகிறார்.

அவரை வழக்குகளால் சிக்க வைக்க வேண்டிய கருணாநிதியோ (ரணில்), கட்சி அடிபட்டு உடைந்தால், தனது கட்சிக்கு நல்லது என்று அது குறித்து கவனம் எடுக்க வில்லை என்று (சசிகலா) மைத்திரி கவலை.

சகல அதிகாரங்களையும் கையில் வைத்துக் கொண்டே கவலைப் படுவதே மைத்திரி ஸ்டைல்.

இதனிடையே, சுதந்திரக் கட்சி தனது தன் மானத்தை, ரணில் கட்சியிடம் அடகு வைத்து விட்டது என்று மகிந்த உரு வேத்துகிறார், தனது கட்சிக்காரர்களிடம்.

இந்தக் கூப்பாடு எல்லாம் அந்த உரு ஏத்துதல் தான். 

ஆனாலும் மகிந்த ரணிலைக் கவிழ்த்து தன்னைப் பிரதமர் ஆக்க வேண்டும் என்கிறார்.

இலங்கை சட்டப்படி 1. மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக முடியாது (19 வது அரசியலமைப்பு திருத்தம் ) 2. மீண்டும்  ஜனாதிபதியாக முடியும் (18 வது அரசியலமைப்பு திருத்தம் ) 3. ஜனாதிபதி இறந்தால் பிரதமர் ஜனாதிபதி ஆவார்.

இப்போது மகிந்தவின் திட்டப்படி பிரதமராயின்,

1. முதல் வெடி மைத்திரிக்கு.
2. பாராளுமன்ற உறுப்பினர்களை வளைத்து 19 வது அரசியலமைப்பு திருத்தம் ரத்து செய்து விடடால், 18 படி அவரே ஜனாதிபதி.

இதன் காரணமாகவே அரசியலைப்பு மாற வேண்டாம் என்கிறார். மாறினால் பிரதமரே அதிகாரம் மிக்கவர் ஆவர், ஜனாதிபதி டம்மி போஸ்ட்.

ஆனால் தமிழருக்கு அதிகாரம் கொடுக்கப் போகின்றனர் என்று கதை விட்டுக் கொண்டே, அரசியல் அமைப்பு மாறுதல் வேண்டாம் என்கிறார்.

Edited by Nathamuni

இரண்டு பௌர்ணமி தினங்களில் காத்திருக்கிறது அரசுக்கு அதிர்ச்சி ; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Published by Gnanaprabu on 2017-07-22 10:12:33

 

தேசிய அர­சாங்­கத்தில் இருந்து மிகப்­பெ­ரிய குழு­வொன்று விரைவில் எம்­முடன் இணை­ய­வுள்­ளது. இன்னும் இரண்டு பௌர்ணமி  தினங்கள் முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்­தி­ருக்­கின்­றது. அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சியில் இருந்தும் ஒரு குழு இணைந்­து­கொள்ளும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். 

ஒரு அணி அர­சியல் அமைப்பு சபையில் இருந்­து­கொண்டும்  ஒரு அணி வெளி­யே­றியும் புதிய அர­சியல் அமைப்பை தடுப்­பதே தமது திட்டம் எனவும் குறிப்­பிட்டார். 

கொழும்பு விஜ­ய­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்­லத்தில் பொது எதி­ரணி கட்சி தலை­வர்கள் கூட்டம் இடம்­பெற்­றது. இதன் போது புதிய அர­சியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்­வுகள் குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இதன்­போது மஹிந்த ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ  தொடர்ந்து  கருத்து தெரி­விக்­கையில், 

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தை ஒரு­போதும் நாம் ஏற்­று­கொள்ள மாட்டோம். இப்­போது கொண்­டு­வர முயற்­சிக்கும் புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக நாட்டின் ஐக்­கியம், நிறை­வேற்று அதி­கார முறைமை உள்­ளிட்ட முக்­கிய விட­யங்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே இது குறித்து பொது எதி­ர­ணியின் நிலைப்­பாட்டை ஆராய்ந்தோம். 

அதன்­போது ஒரு குழு­வினர் அர­சியல் அமைப்பு குழுவில் இருந்து வெளி­யே­று­வ­தா­கவும் இன்­னொரு குழு­வினர் அர­சியல் அமைப்பு சபையில் இருந்து போரா­டு­வ­தா­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இந்த பொது உடன்­பாட்­டுக்கு வந்­ததன் பின்­னரே விமல் வீர­வன்­சவின் தேசிய சுதந்­திர முன்­னணி அர­சி­ய­ல­மைப்பு சபையில் இருந்து வெளி­யே­றவும் ஏனைய கட்­சிகள் அங்கம் வகிக்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 

அர­சாங்­கத்தில் இருந்து முக்­கிய உறுப்­பி­னர்கள் கொண்ட குழு­வொன்று எம்­முடன் இணை­னைய தயா­ராக உள்­ளது. ஆகவே நாமும் எமது அணியை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்து வரு­கின்றோம். அர­சாங்­கத்தில் இருக்கும் எவ­ரு­டனும் நான் கலந்­து­ரை­யா­ட­வில்லை. எனினும் மூன்று பேருடன் நான் தனிப்­பட்ட ரீதியில் பேசி­யுள்ளேன். அவர்கள் மூவரும் முதலில் எம்­முடன் இணை­வார்கள். 

Local_News_copy_copy.JPG

மிகப்­பெ­ரிய குழு­வொன்று  பொது எதி­ர­ணியில் கைகோர்க்கும். 17 பேர்  நிச்­ச­ய­மாக என்­னுடன் இணை­வார்கள்.  அதை­விட அதி­க­மான உறுப்­பி­னர்­களும் வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. இப்­போது அர­சாங்கம் செல்லும் நிலையில் ஐக்­கியப் தேசியக் கட்­சியின் அரை­வாசி உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணை­வார்கள்.  ஐக்­கிய தேசியக் கட்­சியின் இளம் உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தில் திருப்­தி­யுடன்  இல்லை. அவர்­க­ளுக்­கான சரி­யான இடம் வழங்­க­ப­ட­வில்லை. அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­களும் அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கையை இழந்­துள்­ளனர். ஆகவே இன்னும் சிறிது காலத்தில் நிலை­மைகள் மிகவும் மோச­மாக அமையும் என்றார்.  

 பிவி­துரு ஹெல உறு­மைய  கட்­சியின் தலைவர் உதய கம்­மன்­பில கூறு­கையில், 

பொது எதி­ர­ணியில் உள்ள சகல கட்­சி­களும் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தை ஆத­ரிக்­க­வில்லை. அனை­வ­ருமே புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்­திற்கு எதிர்ப்பை தெரி­விக்­கின்றோம்.  அர­சியல் அமைப்பை தோற்­க­டிக்கும் நகர்வில் எம்­மி­டையில் வேறு­பட்ட நகர்­வுகள் இருந்த போதிலும் மாநா­யக்க தேரர்­களின் நிலைப்­பாடு என்­னவோ அதே நிலைப்­பாட்டில் தான் நாமும் உள்ளோம்.  வெவ்­வேறு பாதை­களில் பய­ணித்­தாலும் நாம் இறு­தியில் ஒரு இடத்­தையே வந்­த­டைவோம் என்றார்.  

ஜன­நா­யக  இட­து­சாரி முன்­ன­ணியின் தலைவர் வாசு­தேவ நாண­ய­கார கூறு­கையில், 

அர­சியல் அமைப்பு குழுவில் நாம் இணைந்து செயற்­படக் கூடாது என்­பது ஆரம்­பத்தில் இருந்தே விமல் வீரவன்சவின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் நாம் இதில் அங்கம் வகிக்க வேண்டும். அப்போது தான் நாம் எமது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகள் கிடைக்கும். இறுதியான தீர்மானைத்தில் நாம் ஏற்றுகொள்ள முடியாத நிலைப்பாடு எட்டப்படும் நிலையில் அதில் இருந்து நாம் விலக வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/22192

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.