Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் நவீன போர்க்கப்பல் கொழும்பு வந்தது!!

Featured Replies

இலங்கையின் நவீன போர்க்கப்பல் கொழும்பு வந்தது!!

 
 
இலங்கையின் நவீன போர்க்கப்பல் கொழும்பு வந்தது!!
  •  

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கை கடற்படை வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் நவீன போர்க் கப்பல் இதுவாகும்.

இதனைத் தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இக் கப்பல் இலங்கைக் கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஜூலை 22 ஆம் திகதி நடைபெற்றது.

அதேவேளை, இலங்கை கடற்படைக்காக அமைக்கப்படுகின்ற இரண்டாவது கப்பல் 2018 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளது.

 

 

http://uthayandaily.com/story/14470.html

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் முடிந்தது என்று கூறும் சிங்கள அரசு எதற்க்காக நவீன போர் கப்பல்களை கொள்வனவு செய்கின்றது 

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் கொழும்பு வந்தது. கொமிசன் சுவிஸ் போனது. :grin: 

Just now, தமிழரசு said:

யுத்தம் முடிந்தது என்று கூறும் சிங்கள அரசு எதற்க்காக நவீன போர் கப்பல்களை கொள்வனவு செய்கின்றது 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழரசு said:

யுத்தம் முடிந்தது என்று கூறும் சிங்கள அரசு எதற்க்காக நவீன போர் கப்பல்களை கொள்வனவு செய்கின்றது 

ஒடர் கொடுத்தது போர்காலத்தில் ....இந்தியா கட்டிமுடித்தது இப்ப தான்..

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

ஒடர் கொடுத்தது போர்காலத்தில் ....இந்தியா கட்டிமுடித்தது இப்ப தான்..

இதில வேற அடுத்த கப்பல் அடுத்தாண்டில் வரப்போகிறதாம் ....... காச்சலுக்கு மருந்து கேட்டால் சாவு வீட்டுக்கு சவப்பெட்டி கொடுத்தது போல் இருக்கின்றது இந்தியாவின் கப்பல் கொடுக்கும் நடவடிக்கை 

10 minutes ago, Nathamuni said:

கப்பல் கொழும்பு வந்தது. கொமிசன் சுவிஸ் போனது. :grin: 

 

தரகர்கள் பாடுதான் பெரும் கொண்டாட்டம் 

  • கருத்துக்கள உறவுகள்

மழை வெள்ளம் எண்டு கிளம்பின கெலிகொப்டர் தண்ணீக்குள்ள போன கதை தெரியும் தானே. அதுக்கு பார்ட்ஸ் வாங்கினது இந்தியாவிடம் தானம்.

இப்ப கப்பல்.... சீனாக்காரன் சண்டை போடுற மாதிரி நடிக்க வைத்து, அய்யய்யோ அவங்க ஆரம்பிச்சாங்கன்னா, 10 நாள் கூட தேவையான வெடி பொருள் கிடையாது என்று கிளப்பி விட்டாங்க.

இனி என்ன ஆயுதம் வாங்கரம் என்று கிளம்புவாங்கோ. வாங்கி முடிந்தப்புறம், சீனாக் காரன் அந்தப் பக்கம் வரமாட்ட்டான்.

இப்ப பாருங்க சுவிஸ் வங்கி சில பல கணக்குகள் தொடங்க ஆயுத்தமாகப் போகுது.

 

  • தொடங்கியவர்

அதிசக்தி வாய்ந்த தொழிநுட்பக் கப்பல் இலங்கையை வந்தடைந்தது

 

 

இலங்கை கடற்படை தனது நடவடிக்கைகளை விரிவாக்கும் பொருட்டு இந்தியாவின் கோவா கப்பல் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது அதிசக்திவாய்ந்த தொழிநுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக்கப்பலொன்றை கொள்வனவு செய்துள்ளது.

ship.jpg

அண்மையில் குறித்த கப்பலானது இந்தியாவினால் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

1-_1_.jpg

2014 ஆம் ஆண்டு குறித்த கப்பலை நிர்மாணிப்பதற்காக இலங்கையால் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

2.jpg

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த தொழிநுட்ப ஆழ் கடல் கப்பலை இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

4-_1_.jpg

குறித்த கப்பலை தயாரிப்பதற்கு 66.55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நவீன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்போர்க் கப்பலானது இலங்கை கடற்படை வரலாற்றில் முதலாவது தொழில்நுட்பக் கப்பல் என்ற அந்தஸ்த்தை பெற்றுக்கொள்கிறது.

6.jpg

இதேவேளை, கப்பலானது அதி சக்தி வாய்ந்த தொழிநுட்ப திறன் கொண்டுள்ள நிலையில், இலங்கையின் கடல் கண்காணிப்பு, மனிதாபிமான செயற்பாடுகள் மற்றும் அனர்த்த நிலைமைகள் போன்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8.jpg

http://www.virakesari.lk/article/22450

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழரசு said:

யுத்தம் முடிந்தது என்று கூறும் சிங்கள அரசு எதற்க்காக நவீன போர் கப்பல்களை கொள்வனவு செய்கின்றது 

மாலைதீவை பிடிச்சவை இப்பவும் இருக்கினமெல்லே..tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.