Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் நடைபெறவுள்ளது 13வது உலக தமிழராய்ச்சி மாநாடு

Featured Replies

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து 13வது உலக தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் 5ம், 6ம் திகதிகளில் நடாத்த விருக்கின்றது.

இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 200 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து மேற்படி 13வது உலக தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.

இதன்படி 5ம் திகதி 1வது மாநாடு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறும். இம் மாநாட்டில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரத்னம் விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ் அமர்வில் பன்னாட்டு மலர் வெளியீட்டு சிறப்புரையினை சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆற்றவுள்ளார்.

2வது மாநாடு யாழ்.நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெறவுள்ளது.

இதில் முதன்மை விருந்தினராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்க்கட்சிதலைவருமான இரா.சம்மந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் கௌரவ விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் எ.நடராஜன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் அரியரத்தினம் கவிந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம் மாநாட்டில் 200 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் இந்தியாவில் இருந்து 28 பேராளர்களும், மலேசியாவில் இருந்து 18 பேராளர்களும், இலங்கையை சேர்ந்த 24 பேராளர்களும் அடங்குவர். இதேபோல் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/events/01/153950?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

நாளை... மறுதினமா 13´வது  உலகத்  தமிழராய்ச்சி மாநாடு.
சொல்லாமல், கொள்ளாமல்....  திடீரென்று, மக்களுக்கு அறிவித்துள்ளார்கள் போலுள்ளது.
கொஞ்ச கால அவகாசமாவது கொடுத்திருந்தால்,
மக்கள் அலங்கார ஊர்திகள், சோடனைகள்  செய்து....  கொஞ்சம் ஆயத்தமாகி இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

..  திடீரென்று, மக்களுக்கு அறிவித்துள்ளார்கள் போலுள்ளது.
கொஞ்ச கால அவகாசமாவது கொடுத்திருந்தால்,
மக்கள் அலங்கார ஊர்திகள், சோடனைகள்  செய்து....  கொஞ்சம் ஆயத்தமாகி இருப்பார்கள்.

1974 ஆம் ஆண்டு அப்படி செய்துதான் சகோதரயாமார் பொங்கி எழுந்தவையள் அந்த பயத்தில  இந்தமுறை அடக்கி வாசிக்கினம் போல‌:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நாளை... மறுதினமா 13´வது  உலகத்  தமிழராய்ச்சி மாநாடு.
சொல்லாமல், கொள்ளாமல்....  திடீரென்று, மக்களுக்கு அறிவித்துள்ளார்கள் போலுள்ளது.
கொஞ்ச கால அவகாசமாவது கொடுத்திருந்தால்,
மக்கள் அலங்கார ஊர்திகள், சோடனைகள்  செய்து....  கொஞ்சம் ஆயத்தமாகி இருப்பார்கள்.

53 minutes ago, putthan said:

1974 ஆம் ஆண்டு அப்படி செய்துதான் சகோதரயாமார் பொங்கி எழுந்தவையள் அந்த பயத்தில  இந்தமுறை அடக்கி வாசிக்கினம் போல‌:10_wink:

இதில் தமிழ் மக்கள் என்ன அறிந்து கொள்ளலாம் , கற்றுக்கொள்ளலாம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் கற்க வேண்டிய நிலையிலா இருக்கிறார்கள்....தங்களது அடையாளங்களை வெளிப்படுத்த சமுகங்கள்  இப்படியான மாநாடுகளை நடத்தும் அது வரவேற்கப்படவேண்டிய ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனி ஒருவன் said:

இதில் தமிழ் மக்கள் என்ன அறிந்து கொள்ளலாம் , கற்றுக்கொள்ளலாம் :unsure:

15 hours ago, putthan said:

தமிழ் மக்கள் கற்க வேண்டிய நிலையிலா இருக்கிறார்கள்....தங்களது அடையாளங்களை வெளிப்படுத்த சமுகங்கள்  இப்படியான மாநாடுகளை நடத்தும் அது வரவேற்கப்படவேண்டிய ஒன்று

சரியான கருத்து புத்தன். 
தற்போதுள்ள  தமிழக, ஈழ  அரசியல்  தலைவர்கள் மத்தியில்....
தமிழ் மொழியை காப்பாற்ற  இரு பக்கமும் இனமானமுள்ள அரசியல் தலைவர்கள் இல்லை.
மொழிப் பற்றுள்ள தலைமை  வரும் மட்டுமாவது, 
மொழியை காப்பாற்ற தமிழ் அறிஞர்கள்  இப்படியான மாநாடுகள் நடத்த வேண்டியது அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்

13... உலகத் தமிழாராய்சி மாநாடு.. யாழ்ப்பாணம்.. இலங்கை.. சிங்களப் பொலிஸ்... சிங்கள இராணுவம்.. பொருத்தம் குறைவா இருக்கே..

எதுவோ.. நல்லதாய் நடந்தால் சரி.tw_blush::10_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.