Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரிகள் மீது தாக்குதல் – மரம் அரிந்தோரை பிடிக்க முற்பட்டபோது சம்பவம்!!

Featured Replies

அதிகாரிகள் மீது தாக்குதல் – மரம் அரிந்தோரை பிடிக்க முற்பட்டபோது சம்பவம்!!

 

சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்களைக் கைது செய்யச் சென்ற வனவள அலுவலர் ஒருவரை மரம் அரியும் இயந்திரத்தால் வெட்டிக் காயப்படுத்திய இனந்தெரியாதவர்கள், ஏனைய அலுவலர்களையும் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிவிலுள்ள முட்கொம்பன் செக்காலை காட்டுப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் களப் பயணம் மேற்கொண்ட வனவள திணைக்கள பகுதி வன அதிகாரி மற்றும் அலுவலர்கள் சென்ற போது மரம் அரியும் இயந்திரத்தின் ஒலி காட்டுப் பகுதியில் கேட்டதைத் தொடர்ந்து வனவள அலுவலர்கள் காட்டுக்குள் சென்றனர்.

ஜந்து மேற்பட்டவா்கள் மூன்று மரம் அரியும் இயந்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக மரங்களை வெட்டி அவற்றை பலகைகளாக அறுத்துக்கொண்டிருப்பதனை அவதானித்துள்ளனா்.

அவர்கள் தப்பிச்செல்ல முற்பட்ட போது அவா்களை பிடிக்க வன வள அலுவலர்கள் முயற்சித்துள்ளனா்.

கைகலப்பில் மரம் வெட்டிய ஒருவா் தான் வைத்திருந்த இயந்திரம் மூலம் அலுவலரின் கையில் வெட்டிவிட்டு இயந்திரத்தையும் கைவிட்டு தப்பயோடியுள்ளார். ஏனையவா்கள் இயந்திரங்களுடன் தப்பிச்சென்றுள்ளனா்.

காயமடைந்த வனவள அலுவலா் பூநகரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிசை பெற்று வருகிறார். இது தொடர்பில் பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/16678.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் திருட்டுத்தனமாக மரம் வெட்டியவா்கள் வனவள அலுவலரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்

20624615_330174384107707_274671896_n.jpgகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிவிலுள்ள முட்கொம்பன் செக்காலை காட்டுப்பகுதியில் திருட்டுத்தனமாக மரங்கள் வெட்டியவா்களை பிடிக்கச்சென்ற  வனவள அலுவலர் ஒருவரை மரம் அரியும் இயந்திரத்தினால் வெட்டியதுடன்  ஏனைய அலுவலர்களை தாக்கிவிட்டு  தப்பிச் சென்றுள்ளனா்.

குறித்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு இடம்பெற்றுள்ளது

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வனவள திணைக்களத்தின் பூநகரி வட்டார அலுவலகத்தில் இருந்து மேற்படி பிரதேசத்திற்கு  கள விஜயம் மேற்கொண்ட வனவள திணைக்கள பகுதி வன அதிகாரி  மற்றும் அலுவலர்கள் சென்ற போது மரம் அரியும் இயந்திரத்தின் ஒலி  காட்டுப்பகுதியில் கேட்டதனை தொடர்ந்து வனவள அலுவலர்கள் காட்டுக்குள் சென்றுள்ளனா்.

கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர் அளவில்  அடர்ந்த பல பெறுமதியான மரங்களை கொண்ட பகுதியில் ஜந்து மேற்பட்டவா்கள்  மூன்று மரம் அரியும் இயந்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக மரங்களை  வெட்டி அவற்றை பலகைகளாக  அறுத்துக்கொண்டிருப்பதனை அவதானித்துள்ளனா்.

இதன் போது கள்ள மரம் கட்டத்தல்காரர்கள்  தப்பிச்செல்ல முற்பட்ட போது அவா்களை  பிடிக்க வன வள அலுவலர்கள் முயற்சித்துள்ளனா்.

இதன்போது ஏற்பட்ட கைகலப்பில்  மரம் வெட்டிய ஒருவா் தான் வைத்திருந்த இயந்திரம் மூலம் அலுவலரின் கையில் வெட்டிவிட்டு இயந்திரத்தையும்  கைவிட்டு தப்பிச் சென்றுள்ளாh்.  ஏனையவா்கள் இயந்திரங்களுடன்  தப்பிச்சென்றுள்ளனா்.

காயமடைந்த வனவள அலுவலா் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிசை பெற்று வருகிறார்.  அத்தோடு இது தொடர்பில்  பூநகரி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர்களில் ஒருவா் ஏற்கனவே நீதிமன்றினால் பிடியாணை பிறபிக்கப்பட்டவா் என வனவள அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

பூநகரி முட்கொம்பன் பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் முதிரை, பாலை  போன்ற பெறுமதியான நீண்ட காலம் முதிர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. இந்த பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றமை தொடர்பில்  பொது மக்களினால் அனைத்து தரப்பினா்களினதும் கவனத்திற்கும் கொண்டு வரப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது

20624667_330174424107703_1386614224_n.jpg

20624743_330174294107716_37303777_n.jpg

20632481_330174360774376_360362314_n.jpg

 

20632713_330174324107713_1254584008_n.jpg

20643615_330174347441044_200487631_n.jpg

20643965_330174407441038_1178686531_n.jpg

http://globaltamilnews.net/archives/35585

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் படை ஆக்கிரமிப்பின் கீழ் தமிழர்களின் எல்லா வளங்களும் நாசமாக்கப்படுகின்றன.

தயவுசெய்து எங்கட தமிழ் அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் சிங்களப் படையை துணைக்கு கூப்பிடுவதை நிறுத்தி.. உடனடியாக சர்வதேசத் தலையீட்டுடன் கூடிய ஒரு அரசியல் பொறிமுறை மூலம்.. தமிழர் தாயகத்தில்.. தமிழர் ஆட்சியையும்.. தமிழர் நிர்வாகத்தையும்.. தமிழர் காவல்துறையையும் நிறுவ நடவடிக்கை எடுத்துப் பாருங்கள்.

12,000 முன்னாள் போராளிகளையும் உள்ளடக்கி ஒரு பொலிஸ் படையை உருவாக்கி.. அவர்களிடம் வடக்குக் கிழக்கு நிர்வாகத்தை சர்வதேச கண்காணிப்பின் கீழ் அளித்துப் பாருங்கள்..

ஒரு வன்முறையும் நிகழாது. தமிழர் தாயகம்.. தெற்காசியாவின் சிங்கப்பூராக மாறி நிற்கும். tw_angry::rolleyes:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.