Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

குவைத்தில் கடும் வெப்பத்தால் தானாக எரியும் மரங்கள்..!

 

கடந்த ஒரு மாதமாக ஐக்கிய அமீரகத்தில்(UAE) நிலவும் கடும் வெப்பம் 47 பாகையை தாண்டி வீசுகிறது.. சில நாட்களாக 50 பாகையை தாண்டிய சம்பவங்களும் உண்டு.. மாலையில் வெப்பம் தணிந்திருக்குமென வீட்டைவிட்டு வெளியே வந்தால், அனல் காற்று எம் மேனியை சூட்டால் வறுத்தெடுக்கிறது.. vil2_calor.gif

நம் நிலைதான் இப்படியென்றால், எண்ணை வளமிக்க 'குவைத்'திலிருந்து வரும் காணொளிகள் பெரும் விந்தையாகவுள்ளது..! soleil.gif

 

அங்கே பகலில் வெப்பம் 60 பாகைக்கும் மேலே நிலவுகிறதாம்.. சாலையின் ஓரங்களில் விளைந்திருக்கும் பேரீச்ச மரங்கள், செடிகொடிகள் கடும் வெப்பத்தில் சூடேறி, தானாக எரிய ஆரம்பித்துள்ளதாக செய்தி..!  soleil01.gif

அதன் காணொளிகள் கீழே..!

 

 

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கும் அப்படித்தான் ராஜவன்னியன்.
கிட்டத்தட்ட 50C அளவில் இருக்கும். கடும் humidity என்றபடியால் ஒர் 5 நிமிடம் கூட நடக்க முடியாது. அப்படி வியர்த்து உற்றூம்.

பைப்பை திறந்தால் கொதி தண்ணீர் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, colomban said:

கிட்டத்தட்ட 50C அளவில் இருக்கும். கடும் humidity என்றபடியால் ஒர் 5 நிமிடம் கூட நடக்க முடியாது. அப்படி வியர்த்து உற்றூம்.

பைப்பை திறந்தால் கொதி தண்ணீர் வரும்

தினமும் மாலையில் நடை பயிற்சிக்காக இருட்டிய பின் செல்வதுண்டு.. தற்பொழுது கடும் வெப்பச் சலனத்தினால் அதிகம் செல்வதில்லை..!

காலையில் குழாய்களில் வரும் தண்ணீர் மிக மிக சூடாக இருப்பதால் இரவிலேயே வாளிகளில் நீரை நிரப்பி வைத்துக்கொண்டு காலையில் குளிப்பதுண்டு.. தவறி மறந்துவிட்டோமெனில் காலையில் நம்பர் டூ சென்றுவிட்டு கழுவ முடியாது.. அவ்வளவு கொதி நீராய்  மாறிவிடும், குழாய் நீர்! tw_astonished:

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.