Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு தமிழர்கள் சமஷ்டி அரசியலமைப்பையே கோருகின்றனர்

Featured Replies

வடக்கு, கிழக்கு தமி­ழர்கள் சமஷ்டி அர­சி­ய­ல­மைப்­பையே கோரு­கின்­றனர்

p8-893e71435d70c59ee04838ff2e789df1b9c1c487.jpg

பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் முதல்வர் விக்கி எடுத்­து­ரைப்பு

(எம்.நியூட்டன்)

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மட்­டுமே இந்த பூமியின் சொந்­தக்­கா­ரர்கள். அதற்­கான அனைத்து தெளி­வான ஆதா­ரங்­களும் இருந்தும் பல தமிழ் தலை­வர்கள் சிங்­க­ள­வர்­களின் மனது புண்­பட்டு விடுமோ என்ற பயத்தில் இந்த உண்­மையை கூறாமல் விட்­டு­வி­டு­கின்­றனர் என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

மேலும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் பிரித்­தா­னிய அர­சாங்கம் மேற்­பார்வை செய்யும் வி தத்­தையும் பாராட்­டி­ய­தோடு தமிழ் சிங்­கள மக்கள் பற்­றியை அணு­கு­மு­றையை பிரித்­தா­னியா புரிந்­துக்­கொள்ள வேண்டும் என்றும் முத­ல­மைச்சர் வலி­யு­றுத்­தினார்.

தேசிய ஒருங்­கி­ணைப்பு மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தின் ஏற்­பட்டில் இலங்கை வந்­துள்ள பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வட மாகாண முத­ல­மைச்சர் யாழ்­பாண மாவட்ட செய­ல­கத்தில் நேற்று சந்­தித்­தி­ருந்தார். இதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இதன்­போது அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

நல்­லி­ணக்கம் மற்றும் மீள்­கட்­டு­மாணம் தொடர்பில் நாமே எமது கருத்­துக்­களை கூற வேண்டும். மீள்­கட்­டு­மாணம் பெள­தீக ரீதி­யாக இருக்­கு­மாயின் நல்­லி­ணக்கம் அறிவு சார்ந்­த­தாக இருக்­க­வேண்டும்.

இலங்­கையின் நல்­லி­ணக்கம் தொடர்பில் பிரித்­தா­னியா மேற்­பார்­வை­யா­ள­ராக செயற்­ப­டு­கின்­ற­மைக்கு எமது வாழ்த்­துக்­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றோம். சில­வேளை எமது பிரித்­தா­னிய சொந்­தங்கள் எம்மை முழு­மை­யாக தெரிந்­துக்­கொண்­டுள்­ளார்­களா என்ற சந்­தேகம் இருக்­கின்­றது.

எம்மை பற்றி ஏனை­ய­வர்கள் கதைப்­ப­தை­விட எம்மை பற்றி நாமே சொல்­வ­துதான் சிறந்­த­தாக இருக்கும் என நினைக்­கின்றேன். முதலில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்­களின் எண்­ணங்­களை விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் என்­றுமே தங்­களை சிறு­பான்­மை­யி­ன­ராக எண்­ணி­ய­தில்லை. அவர்கள் 2000 ஆயிரம் வரு­டத்­திற்கு முன்பே இம்­மண்ணில் வாழ்ந்­த­வர்கள். ஆனால் 100 வரு­டங்­க­ளுக்கு முன்­பி­லி­ருந்தே தமிழ் மக்­களை துன்­பு­றுத்­திய படலம் ஆரம்­ப­மா­னது. வடக்கு கிழக்கில் வாழும் மக்­களில் பெரும்­பா­ல­னோர்கள் இந்­துக்கள்.

அவர்கள் பெளத்த மதம் தோன்றும் முன்பே அங்கு வாழ்ந்­த­வர்கள். இந்து தமி­ழர்­களால் பெளத்தம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. ஆனாலும் வடக்கு கிழக்கில் தமிழ் பெளத்­தர்கள் வாழ்ந்­தார்­களே தவிர ஒரு­போதும் சிங்­கள பெளத்­தர்கள் அங்கு வாழ­வில்லை. காரணம் சிங்­கள மொழி 6 ஆம் நூற்­றாண்­டுக்கு பின்பே தோற்றம் பெற்­றது.

அடுத்­த­தாக வடக்கு கிழக்கில் வாழும் தமி­ழர்கள் தம் சொந்த மொழி,மதம்,கலா­சாரம் பாரம்­ப­ரி­யத்தை பேணும் வகையில் அமைந்த சமஷ்டி அர­சி­ய­ல­மைப்­பையே வேண்டி நிற்­கின்­றனர். தனது தனி மனித சுய பாது­காப்­பையே அவர்கள் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றார்கள்.

அவர்­க­ளது அடை­யா­ளமும் தனி மனித பண்­பு­களும் நிச்­சையம் பாது­காக்­கப்­பட வேண்டும். பெரும்­பான்­மை­யான சிங்­க­ள­வர்கள் வடக்கு கிழக்கு தமி­ழர்கள், தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து வந்த சமீ­பத்­திய குடி­யேற்­ற­வா­சி­க­ளாக கரு­து­கின்­றனர்.

ஆனால் அவர்கள் புத்தர் தோன்­று­வ­தற்கு முன்பே வடக்கு கிழக்கு மக்கள் இங்கு வாழ்ந்­தார்கள் என்­பதை மறந்­து­விட்­டார்கள். சிங்­க­ள­வர்கள் சமஷ்டி என்­றாலே ஒவ்­வாத ஒரு விட­ய­மாக கரு­து­கின்­றனர். அவர்கள் சமஷ்டி என்றால் பிரி­வினை என்றும் அல்­லது பிரி­வி­னைக்கு இட்டுச் செல்லும் என்றும் கரு­து­கின்­றனர்.

இந்த இரண்டு வாதங்­க­ளுமே தவ­றா­னவை. சமஷ்டி முற்­றி­லிரும் வேற்­று­மை­யான பண்­பு­களை கூட இணைக்­கின்­றது என்­பதே உண்­மை­யாகும். சிங்­க­ள­வர்­களின் பார்­வையில் சமஷ்டி என்­பது பிரி­வி­னை­யா­கின்­றது. அதுவே அவர்­க­ளுக்கு நல்­லி­ணக்­க­மா­கவும் மாறு­கின்­றது.

மேலும் சிங்­க­ள­வர்­க­ளி­ட­முள்ள இன்­னொரு தவ­றான அபிப்­பி­ராயம் இந்த பூமி அவர்­க­ளு­டை­யது என்­பது. சிங்­கள மொழி தோன்றும் முன்பே பாலி மொழி, தமிழ் மற்றும் சுதேச மொழிகள் தோன்­றி­விட்­டன. தமிழ் திரா­வி­டர்கள் நூற்­றாண்டு கால­மாக இந்த பூமியை ஆளு­கின்­றனர்.

பல தமிழ் தலை­வர்கள் சிங்­க­ள­வர்­களின் மனது புன்­பட்டு விடுமோ என்ற பயத்தில் இந்த உண்மையை கூறாமல் விட்டுவிடுகின்றனர். ஆனால் சிங்களவர்களின் மனதில் உள்ளது தவறான அபிப்பிராயமேயாகும். அதனால்தான் சிங்களவர்கள் யார் என்பதும் தமிழர்கள் யார் என்பதையும் விளங்கப்படுத்தினேன்.

இந்நிலையில் எமது வரலாறும் நல்லிணக்க பாதையில் சரியான புரிந்துணர்வோடு அணுகப்பட வேண்டும். உண்மையை மறைக்க முடியாது சிங்களவர்களின் தவறான எண்ணம் களையப்பட வேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-07#page-1

6 hours ago, நவீனன் said:

அவர்கள் பெளத்த மதம் தோன்றும் முன்பே அங்கு வாழ்ந்­த­வர்கள். இந்து தமி­ழர்­களால் பெளத்தம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. ஆனாலும் வடக்கு கிழக்கில் தமிழ் பெளத்­தர்கள் வாழ்ந்­தார்­களே தவிர ஒரு­போதும் சிங்­கள பெளத்­தர்கள் அங்கு வாழ­வில்லை. காரணம் சிங்­கள மொழி 6 ஆம் நூற்­றாண்­டுக்கு பின்பே தோற்றம் பெற்­றது.

சிங்கள மொழியின் காலம் 1000 ஆண்டுகளுக்கு உட்பட்டதே!

6 hours ago, நவீனன் said:

அடுத்­த­தாக வடக்கு கிழக்கில் வாழும் தமி­ழர்கள் தம் சொந்த மொழி,மதம்,கலா­சாரம் பாரம்­ப­ரி­யத்தை பேணும் வகையில் அமைந்த சமஷ்டி அர­சி­ய­ல­மைப்­பையே வேண்டி நிற்­கின்­றனர். தனது தனி மனித சுய பாது­காப்­பையே அவர்கள் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றார்கள்.

அவர்­க­ளது அடை­யா­ளமும் தனி மனித பண்­பு­களும் நிச்­சையம் பாது­காக்­கப்­பட வேண்டும். பெரும்­பான்­மை­யான சிங்­க­ள­வர்கள் வடக்கு கிழக்கு தமி­ழர்கள், தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து வந்த சமீ­பத்­திய குடி­யேற்­ற­வா­சி­க­ளாக கரு­து­கின்­றனர்.

ஆனால் அவர்கள் புத்தர் தோன்­று­வ­தற்கு முன்பே வடக்கு கிழக்கு மக்கள் இங்கு வாழ்ந்­தார்கள் என்­பதை மறந்­து­விட்­டார்கள். சிங்­க­ள­வர்கள் சமஷ்டி என்­றாலே ஒவ்­வாத ஒரு விட­ய­மாக கரு­து­கின்­றனர். அவர்கள் சமஷ்டி என்றால் பிரி­வினை என்றும் அல்­லது பிரி­வி­னைக்கு இட்டுச் செல்லும் என்றும் கரு­து­கின்­றனர்.

இந்த இரண்டு வாதங்­க­ளுமே தவ­றா­னவை. சமஷ்டி முற்­றி­லிரும் வேற்­று­மை­யான பண்­பு­களை கூட இணைக்­கின்­றது என்­பதே உண்­மை­யாகும். சிங்­க­ள­வர்­களின் பார்­வையில் சமஷ்டி என்­பது பிரி­வி­னை­யா­கின்­றது. அதுவே அவர்­க­ளுக்கு நல்­லி­ணக்­க­மா­கவும் மாறு­கின்­றது.

இதனை மறுத்து 'சமஷ்டி' என்ற பதம் முக்கியமில்லை என்று தமிழர்களின் காலை முதலில் வாரிவிடுவது சம்பந்தனும் சுமந்திரனுமாகவே இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.