Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லலித் ஜெயசிங்கவின் பிணை மனு நிராகரிப்பு – 22வரை மறியல்

Featured Replies

லலித் ஜெயசிங்கவின் பிணை மனு நிராகரிப்பு – 22வரை மறியல்

 
லலித் ஜெயசிங்கவின் பிணை மனு நிராகரிப்பு – 22வரை மறியல்
 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள,  லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதன்போது இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

லலித் ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் பிணை கோரப்பட்டது. அதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபம் தெரிவித்தது.

லலித் ஜெயசிங்க பொலிஸ் தர வரிசையில் 4 தர வரிசையில் பதவி வகித்தார். அவரைப் பிணையில் செல்ல அனுமதித்தால் சாட்சியங்களிலும், சான்றுகளிலும் அதீத தலையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டது.

அதையடுத்து பிணை மனுவை நிராகரித்த நீதிமன்று விளக்கமறியலை நீடித்தது.

அதேவேளை, இந்தக் கொலை வழக்கில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இருவரிடம் விரைவில் வாக்குமூலம் பெறப்படவுள்ளது என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.

இது தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் வாக்குமூலம் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

viber-image1-4-750x400.jpg

 

http://newuthayan.com/story/17492.html

  • கருத்துக்கள உறவுகள்

ஓடமும் வண்டியேறுது. :rolleyes:

  • தொடங்கியவர்

சுவிஸ்­குமார் தப்­பித்த விவ­காரம் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜய­சிங்கவின் பிணை மனு நிரா­க­ரிப்பு

 

(ரி.விரூஷன்)

சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் கூட்டுப் பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கில் பிர­தான சந்­தேகநப­ரான சுவிஸ்­குமார் தப்பிச் செல்­வ­தற்கு உத­விய குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட பிர­திப்­பொ­லிஸ்மா அதிபர் லலித்­ஜெ­ய­சிங்­கவின் பிணை விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­பப்­பட்­டுள்­ளது. அவ­ரது தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளி­னதும் அரச சட்­ட­வா­தி­யி­னதும் கடு­மை­யான நீண்­ட­நேர வாதப்­பி­ர­தி­வா­தங்­களின் பின்னர் பிணை விண்­ணப்­பத்தை நிரா­க­ரித்து அவரை எதிர்­வரும் 22ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க ஊர்­கா­வற்­றுறை நீதவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. 

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் வட­மா­காண சிரேஷ்ட பிர­திப்­பொ­லிஸ்மா அதி­ப­ரா­கவும் பின்னர் ஊவா­மா­காண பிர­திப்­பொ­லிஸ்மா அதி­ப­ராக பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்த லலித்­ஜெ­ய­சிங்க வித்­தி­யாவின் பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கில் பிர­தான சந்­தேக நப­ரான சுவிஸ்­கு­மாரை தப்­பிக்க வைப்­ப­தற்கு உத­வி­யி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு மன்றின் உத்­தி­ர­விற்­க­மைய விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார். இந்­நி­லையில் நேற்­றை­ய­தினம் இவ்­வ­ழக்­கா­னது ஊர்­கா­வற்­றுறை நீதவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போ­து­குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் சார்பில் யாழ்.மேல்­நீ­தி­மன்ற அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந் முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார். பிர­திப்­பொ­லிஸ்மா அதிபர் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான சம்­பத்­வி­தா­ரண, துதீஸ்­ஜோன்­தாசன், சமிந்­த­அத்­துக்­கொ­ரள ஆகி­யோரும் மற்றும் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­கள கூட்­டுக்­கொள்ளைப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த் சில்வா ஆகியோர் மன்றில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­தனர். இதன்­படி நேற்­றைய வழக்கு விசா­ர­ணையின் போது,

எதி­ரி­த­ரப்பு சட்­டத்­த­ர­ணிகள் பிணை விண்­ணப்பம்

குறித்த சிரேஷ் பிர­திப்­பொ­லிஸ்மா அதி­பரை பிணையில் விடு­விக்க வேண்டும் என அவர் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் கடு­மை­யான வாதங்­களை முன்­வைத்­தி­ருந்­தார்கள். இதன்­படி, பிணைச் சட்­டத்தில் பிரிவு 2 இன் கீழ் பிணை வழங்­கு­மாறு கோரு­வ­தற்கு எமக்கு உரி­மை­யுண்டு. அவ்­வாறு பிணை வழங்கக் கோரும்­போது அதனை நிரா­க­ரிப்­ப­தா­னது விதி விலக்­கான சந்­தர்ப்­பங்­க­ளின்­போதே ஆகும். அந்த வகையில் இவ்­வ­ழக்கில் அவ்­வா­றான விதி­வி­லக்­கான சந்­தர்ப்­பங்கள் எது­வு­மில்லை.

குறிப்­பாக பிர­திப்­பொ­லிஸ்மா அதி­ப­ருக்கு எதி­ராக முகத்­தோற்­ற­ம­ளவில் எந்­த­வொரு சாட்­சி­யங்­க­ளையும் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தால் மன்­றிற்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட 'பி' அறிக்­கையில் காணப்­ப­ட­வில்லை.  

மேலும் இச்­சம்­பவம் இடம்­பெற்று இரண்டு வரு­ட­கா­ல­மா­கின்­ற­போதும் இவ்­வி­ரண்டு வருட காலத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வெ ளிநா­டு­க­ளுக்குச் சென்று வந்­துள்ளார். அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­க­ளின்­போது இவ்­வ­ழக்­கி­லி­ருந்து தப்­பிக்­க­வேண்­டு­மென நினைத்­தி­ருந்தால் அதனை அவர் அப்­போதே செய்­தி­ருக்­க­மு­டியும். இச்­சம்­பவம் தொடர்­பாக தற்­போது குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் வாக்­கு­மூ­ல­மொன்றை பதிவு செய்ய அழைத்­த­போது அவ­ரது பொலிஸ் சேவை அனு­ப­வத்­தின்­படி தன்னை கைது செய்­யப்­போ­கின்­றார்கள் என்­பதைத் தெரிந்­தி­ருந்தும் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் அழைத்­த­போது உடனே சென்று முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.

மேலும் இச்­சம்­பவம் தொடர்­பாக இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், தமிழ்­மாறன் உப­பொலிஸ் பரி­சோ­தகர் ஸ்ரீகஜன் ஆகியோர் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாக கூறப்­பட்­டி­ருந்த நிலையில் அவர்­க­ளி­டமும் எந்­த­வி­த­மான விசா­ர­ணை­களும் இது­வரை நடாத்­தப்­ப­ட­வில்லை. இது தொடர்­பான காணொளிக் காட்­சிகள் இணைத்­த­ளத்தில் காணப்­பட்­டி­ருந்­த­போதும் இரண்டு வருட கால­மாக அது தொடர்­பிலும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அத்­துடன் இவ­ருக்கு எதி­ராக எந்­த­வொரு அடிப்­ப­டை­யான விட­யத்­தையும் சட்­டமா அதிபர் கூறி­யி­ருக்­காத நிலை­யிலும் இவ­ருக்­கெ­தி­ரான சாட்­சி­யங்கள் எதுவும் இல்­லாத நிலை­யிலும் தொடர்ந்து இவரை விளக்­க­ம­றி­யலில் வைத்­தி­ருக்­காது பிணையில் விடு­தலை செய்­ய­வேண்டும் என அவர் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் மன்றில் விண்­ணப்பம் ஒன்றைச் செய்­தனர்.

இதனைத் தொடர்ந்து இவர்­க­ளது பிணை விண்­ணப்­பத்­திற்கு பதி­ல­ளிக்கும் வகையில் அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந் பதில் விண்­ணப்பம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்தார்.

அரச சட்­ட­வா­தியின் பதில் விண்­ணப்பம்

பிணைச்­சட்­டத்தின் பிரிவு 2 இன் கீழ் பிணை வழங்க கோரு­வ­தற்கு தமக்கு உரிமை உண்டு என்றும் அதனை நிரா­க­ரிப்­ப­தா­னது விதி விலக்­கான சந்­தர்ப்­பங்­க­ளின்­போதே என்றும் எதிரி தரப்பு கற்­ற­றிந்த சட்­டத்­த­ர­ணிகள் கூறி­யி­ருந்­தார்கள். இங்கு பின்­வரும் கார­ணங்­க­ளைக்­கூ­று­வதன் ஊடாக அவ் விதி­வி­லக்­கான சந்­தர்ப்­பங்­களை மன்­றிற்கு தெரி­யப்­ப­டுத்த முடியும்.

குறித்த சந்­தேக நப­ரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் புங்­கு­டு­தீவு வல்லன் பகு­தியில் இடம்­பெற்ற கூட்டு பாலியல் வல்­லு­றவு கொலை­தொ­டர்­பாக பிர­தான சந்­தேக நபர் யாழ்.தலைமைப் பொலிஸ் நிலை­யத்தில் காவ­லி­லி­ருந்து விடு­வித்­தமை தொடர்­பா­கவே கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். மகா­லிங்கம் சசிக்­குமார் என்ற அந்­நபர் தப்பிச் சென்றார் என்­பதை விடவும் அவர் தப்பிச் செல்ல வைக்­கப்­பட்டார் எனக் கூறு­வதே பொருத்­த­மா­ன­தாகும்.

வட­மா­கா­ணத்தில் பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ராக இச்­சந்­தேக நப­ரான லலித் ஜய­சிங்க பணி­யாற்­றும்­போதே அம்­மா­ண­வியின் கொலைச் சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்­தது. அச்­சம்­பவம் தொடர்பில் அதன் பிர­தான சந்­தேக நப­ரான சுவிஸ்­குமார் தப்பிச் சென்­றமை தொடர்­பாக இன்­று­வரை விசா­ரணை நடை­பெற்று வரு­கின்­றது. இவ்­வி­சா­ர­ணையில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தலை­யீடு செய்வார் என்ற சந்­தேகம் வலு­வாக இருந்­த­மை­யி­னா­லேயே 2015.06ஆம் மாத காலப்­ப­கு­தியில் சட்­டமா அதி­பரின் பணிப்­பு­ரையில் அப்­போ­தைய பொலிஸ்மா அதி­பரால் இவர் இட­மாற்றம் செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இத­னைத்­தொ­டர்ந்து 2017.07.17 திக­தி­யி­டப்­பட்ட சட்­டமா அதி­பரின் கடி­தத்­தின்­மூலம் இவ் பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ருக்கு எதி­ராக நியா­ய­மான சந்­தே­கங்கள் இருப்­ப­தாக தெரி­வித்து அவரைக் கைது செய்து மன்றில் முற்­ப­டுத்தி வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்து அது தொடர்­பாக ஏனைய சாட்­சி­யங்­க­ளி­னதும் வாக்­கு­மூ­லங்­களைப் பதிவு செய்­யு­மாறும் சட்­டமா அதி­பரால் ஆலோ­சனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பாக இரண்டு தட­வைகள் சட்­டமா அதி­பரால் ஆலோ­சனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இவர் சாட்­சி­க­ளு­டனும் சான்­று­க­ளு­டனும் தலை­யீடு செய்வார் என்ற நியா­ய­மான சந்­தேகம் இருந்­த­மை­யி­னாலும் தண்­டனைச் சட்­டக்­கோ­வையின் பிரி­வு­களின் கீழ் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யக்­கூ­டிய நியா­ய­மான சந்­தேகம் இவ­ருக்கு எதி­ராக காணப்­பட்­ட­மை­யி­னா­லேயே இவர் கைது செய்­யப்­பட்டு மன்றில் முற்­ப­டுத்­தப்­பட்டார்.

இது தொடர்­பாக விசா­ர­ணைகள் இன்­னமும் முற்­றுப்­பெ­ற­வில்லை. இதன்­படி இவ்­வ­ழக்குத் தொடர்­பாக சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் மற்றும் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆகி­யோ­ரிடம் வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­ப­ட­வுள்­ளன. இது தொடர்­பாக பாரா­ளு­மன்ற சபா­நா­ய­க­ருக்குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சபா­நா­ய­கரின் அனு­மதி கிடைத்­த­வுடன் அவர்­க­ளிடம் வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­படும்.

மேலும் இச்­சந்­தேக நப­ரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித்­ஜ­ய­சிங்க பொலிஸ்மா அதிபர் உள்­ள­டங்­க­லாக சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­களின் நான்­கா­வது இடத்தில் உள்­ள­வ­ராவார். இவ்­வா­றான நிலையில் இவர் பிணையில் விடு­விக்­கப்­பட்டால் இவ்­வி­சா­ர­ணை­யிலும் சாட்­சி­யங்­க­ளிலும் இவ­ரது தலை­யீடு காணப்­படும்.

சுவிஸ்­குமார் தப்பிச் சென்­றமை தொடர்­பாக இன்­னமும் பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கர்கள் உள்­ள­டங்­க­லான பொலிஸ் அதி­கா­ரி­க­ளி­டமும் நான்கு சிவில் சாட்­சி­யங்­க­ளி­டமும் வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. இவ­ரதும் இவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளதும் வங்கிக் கணக்­குகள் பரி­சீ­ல­னைக்­காக அனுப்­பப்­பட்­டுள்­ளன. எனவே இவர் இச்­ச­ம­யத்தில் பிணையில் விடு­விக்­கப்­பட்டால் விசா­ர­ணைக்கு பாதிப்­பாக அமையும்.

விளக்­க­ம­றியல் காலம் என்­பது தண்­ட­னைக்­காலம் அல்ல. ஒரு சந்­தேக நபர் அவர் தொடர்­பு­பட்ட குற்றச் சம்­பவம் தொடர்­பாக விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைக்கும் வகை­யிலும் சாட்­சிகள் சான்­றுப்­பொ­ருட்­களில் தலை­யீடு செய்­யாதும் சமூ­கத்­தி­லி­ருந்து வில­கி­யி­ருக்­கின்ற ஓர் செயற்­பா­டாகும். அத்­துடன் இச்­சம்­பவம் தொடர்பில் இவர் மாத்­திரம் சந்­தேக நபர் அல்ல. விசா­ர­ணை­க­ளி­னூ­டாக சட்­டமா அதிபர் மேலும் சந்­தேக நபர்­களை இணைக்­க­மு­டியும். எனவே விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டு­வதைத் தவிர்க்கும் வகையில் இச்­சந்­தேக நபரின் பிணை விண்­ணப்­பத்தை நிரா­க­ரிக்­க­வேண்­டு­மென மன்றைக் கோரு­கின்றேன்.

பிணை வழங்­கு­வது தொடர்­பாக விதி­வி­லக்­கான சந்­தர்ப்­பங்கள் காணப்­ப­ட­வேண்­டு­மென என எதிர்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணிகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்த நிலையில் மேற்­கூ­றிய கார­ணங்கள் அவ்­வி­தி­வி­லக்­கான சந்­தர்ப்­பங்­க­ளாக பிணைச் சட்­டத்தின் பிரிவு 2, 14 ஆகி­ய­வற்­றுடன் ஒத்­துப்­போ­கின்­றது எனவும் அரச சட்­ட­வாதி தனது பதில் விண்­ணப்­பத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மன்றில் தோன்­றிய புதிய சாட்சி

நேற்­றைய இவ்­வ­ழக்கு விசா­ர­ணை­யின்­போது முன்னாள் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதி­பரும் தற்­போ­தைய சப்­ர­க­முவ பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ரா­கவும் கட­மை­யாற்றும் ஜி.கே.பெரேரா மன்றில் பொலிஸ் சீரு­டை­யுடன் முன்­னி­லை­யானார். இவ்­வாறு முன்­னி­லை­யான இவர் சுவிஸ்­குமார் தப்­பிச்­சென்­றமை தொடர்­பான இவ்­வ­ழக்கில் வாக்­கு­மூ­ல­மொன்றை நீத­வானின் பிரத்­தி­யேக அறையில் வழங்­க­வேண்­டு­மென மன்றில் தெரி­வித்தார்.

எதி­ரி­த­ரப்பு சட்­டத்­த­ர­ணி­களின் ஆட்­சே­பனை

சப்­ர­க­முவ பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா இவ்­வ­ழக்குத் தொடர்­பாக வாக்­கு­மூ­ல­மொன்றை வழங்­க­வேண்­டு­மென மன்றில் தெரி­வித்­தி­ருந்த நிலையில் அதற்கு எதிர்­த­ரப்புச் சட்­டத்­த­ர­ணிகள் தமது ஆட்­சே­ப­னையைத் தெரி­வித்­தி­ருந்­தார்கள். குறிப்­பாக இப்­பி­ரதிப் பொலிஸ்மா அதி­ப­ரது வாக்­கு­மூ­ல­மா­னது தயா­ரிக்­கப்­பட்ட சோடிக்­கப்­பட்ட ஓர் வாக்­கு­மூலம் எனவும் அதனை மன்று ஏற்றுக் கொள்­ளக்­கூ­டாது எனவும் தமது ஆட்­சே­ப­னையை தெரி­வித்­தார்கள்.

இதன்­போது அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந் இச்­சாட்சி தானாக மன்றில் தோன்றி வாக்­கு­மூ­ல­ம­ளிக்­க­வுள்­ள­தாகக் கூறி­ய­நி­லையில் அதனை தயா­ரிக்­கப்­பட்ட வாக்­கு­மூ­ல­மென கூறு­வதை ஏற்றுக் கொள்­ள­மு­டி­யா­தென மன்றில் கூறினார்.

நீத­வானின் கட்­டளை

இன்­றை­ய­தினம் (நேற்­றைய தினம்) மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட தொடர் அறிக்­கையில் உள்ள தமிழ்­மாறன் மற்றும் இக்­குற்றச் சம்­பவம் இடம்­பெ­றும்­போது யாழ் பிராந்­தி­யத்­திற்கு பொறுப்­பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஆகி­யோ­ரு­டைய வாக்­கு­மூ­லங்­களை மன்று பரி­சீ­லனை செய்­துள்­ளது. இச்­ச­ம­யத்தில் இவ்­வ­ழக்கு விசா­ர­ணை­யினை தொடர்ந்து நடாத்­து­வ­தற்கு இந்­நீ­தி­மன்­றத்­திற்கு நியா­யா­திக்கம் உள்­ளதா என தீர்­மா­னிக்­க­வேண்­டிய தேவை­யேற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இது தொடர்­பாக இறு­தி­யான முடி­வினை எடுப்­ப­தற்கு சரி­யான தக­வல்கள் தேவைப்­ப­டு­கின்­றன.

குற்­ற­வியல் நட­வ­டிக்கை முறைக்­கோவை சட்­டத்தின் பிர­காரம் இக்­குற்­றச்­சம்­ப­வ­மா­னது இந்­நீ­தி­மன்ற நியா­யா­திக்க எல்­லைக்குள் புரி­யப்­பட்­ட­தா­கவோ அல்­லது அதன் ஒரு பாக­மேனும் இந்­நீ­தி­மன்ற நியா­யா­திக்க எல்­லைக்குள் புரி­யப்­பட்­டி­ருந்தால் அது தொடர்­பாக இந்­நீ­தி­மன்றால் கட்­ட­ளை­களை ஆக்­க­மு­டியும். எனவே குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வா­னது இக்­குற்­றச்­சம்­பவம் அல்­லது அதன் ஒரு பாக­மேனும் இந்­நீ­தி­மன்ற நியா­யா­திக்க எல்­லைக்குள் இடம்­பெற்­றுள்­ளதா? என்­பது தொடர்­பா­கவும் இச்­சந்­தேக நபர் அல்­லது வேறு­ந­பரால் இக்­குற்­ற­மா­னது இந்­நீ­தி­மன்ற நியா­யா­திக்க எல்­லைக்குள் இடம்­பெற்­றுள்­ளதா?- என விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்­க­வேண்டும்.

மேலும் இவ்­வ­ழக்கை தொடர்ந்து நடாத்­து­வ­தற்கு இந்­நீ­தி­மன்­றிற்கு நியா­யா­திக்கம் உள்­ளதா? என்ற சந்­தேகம் எழுந்­துள்ள நிலையில் சப்­ர­க­முவ பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரே­ராவின் வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்­வது பொருத்­த­மற்­றது என மன்று கரு­து­கின்­றது. இவ்­வ­ழக்கை தொடர்ந்து இந்­நீ­தி­மன்­றத்தில் நடாத்­து­வ­தற்கு நியா­யா­திக்கம் இருப்பின் அதன்­பின்னர் சப்­ர­க­முவ பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்­வது தொடர்­பாக அவ­ருக்கு மன்றால் அறி­விக்­கப்­படும்.

மேலும் 1979 ஆம் ஆண்டு குற்­ற­வியல் நட­வ­டிக்கை முறைக் கோவை 15ஆம் இலக்க பிரிவு 2 இன் கீழ் முறைப்­பாடு என்ற சொற்­ப­தத்­தி­னூ­டாக, அறிந்த அல்­லது அறி­யப்­ப­டாத நபர் குற்­ற­மொன்றை புரிந்தார் என்று அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென வாய்­மொழி மூலமோ எழுத்து மூல­மா­கவோ தெரி­வித்தால் அதனை முறைப்­பா­டாக எடுக்­க­வேண்­டு­மென விளங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் உண்­மை­யான நீதியை நிலை­நாட்ட சட்­டங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இங்கு சப்­ர­க­முவ பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்ன விட­யத்தை வாக்­கு­மூ­ல­மாக கூற­வுள்ளார் என தெரியும் முன்பே அவரின் வாக்­கு­மூ­லத்தை தயா­ரிக்­கப்­பட்ட சோடிக்­கப்­பட்ட வாக்­கு­மூலம் என கூறு­வது கற்­ப­னை­யான புனை­யப்­பட்ட விடயம் என்றே மன்று கரு­து­கின்­றது. அத்­துடன் அவ­ரது வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்­யாது விடு­வ­தற்கு மன்­றுக்கு அதி­காரம் இல்லை என நீதவான் தனது கட்­ட­ளையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

வாக்­கு­மூலம் பதிவு செய்ய மன்றின் அனு­மதி

இவ்­வ­ழக்குத் தொடர்­பாக சிறை­யி­லுள்ள பொலிஸ் அதி­காரி சிந்­தக்க பண்­டா­ரவின் வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்ய மன்று அனு­ம­திக்க வேண்­டு­மென குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தால் முன்­வைக்­கப்­பட்ட விண்­ணப்­பத்தை மன்று பரி­சீ­லனை செய்து அதற்கு அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. இதன்­படி இன்­றி­லி­ருந்து 09.08.2017 எதிர்­வரும் 20.08.2017 அன்­று­வரை காலை 8.30 மணி­யி­லி­ருந்து மாலை 4.30 மணி­வரை குறித்த பொலிஸ் அதி­கா­ரி­யிடம் வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்ய குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் கூட்­டுக்­கொள்ளைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா, இலங்கசிங், சம்பத், சார்ஜண்ட் நிஷாந்த், கான்ஸ்டபிள் குமார, ராஜபக்ஷ் ஆகியோருக்கு மன்று அனுமதி வழங்கியது.

சிறைச்சாலை அதிகாரியை முன்னிலையாக மன்று உத்தரவு

சந்தேக நபரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்க தனது கழுத்துப் பகுதியில் தொடர்ச்சியாக வலி காணப்படுவதாகவும் அதற்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டுமெனவும் தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து மன்றானது சிறைச்சாலை அதிகாரிகளிடம் இவரது மருத்துவ அறிக்கையை கோரியிருந்தது. எனினும் மருத்துவ அறிக்கையை சிறை அதிகாரிகள் சமர்ப்பித்திருக்கவில்லை. இதனையடுத்து மன்றானது ஏற்கனவே இவரது மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டுமென கட்டளையிட்டிருந்த நிலையில் இன்றையதினமும் (நேற்று) மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாமையால் அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கு இச்சந்தேக நபரை தடுத்துவைத்துள்ள சிறைச்சாலை பொறுப்பதிகாரி மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்கவேண்டுமெனவும் அடுத்த வழக்குத் தவணையின்போது இச்சந்தேக நபரின் மருத்துவ அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டுமெனவும் மன்றானது கட்டளையிட்டது. அத்துடன் இச்சந்தேக நபருக்கு தேவையான மருத்துவ வசதிகளை சிறைச்சாலை சட்டத்திற்குட்பட்டு வழங்கப்படவேண்டுமெனவும் மன்று கட்டளையிட்டது.

விளக்கமறியல் நீடிப்பு

சந்தேக நபரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித்ஜயசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு அவர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தையும் அதற்கு பதிலளிக்கும் வகையிலான அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்தினது பதில் விண்ணப்பத்தையும் பரிசீலித்த மன்றானது லலித் ஜயசிங்கவின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்து அவரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம். றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.