Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.சிறையில் இருந்து உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள்

Featured Replies

யாழ்.சிறையில் இருந்து உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள்

 
 

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் இருவர் யாழ்ப்பாணம் சிறையில் இருந்தவாறு உயர்தர பரீட்சையில்  தோற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் -   கொக்குவில் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது  வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டைமை தொடர்பாக   சந்தேகிக்கப்பட்டு  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களே இவ்வாறு சிறைச்சாலைக்குள்  இருந்தவாறு  உயர்தர பரீட்சையில்  தோற்றியுள்ளனர்.

எனினும் -   கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக தனது  மகனிற்கு  தொடர்பு  உள்ளது என  குறித்த  மாணவர்களில் ஒருவரது தந்தை பொலிஸாரிடம்  வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Students-high-quality-examination-Jaffna

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

யாழ்.சிறையில் இருந்து உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள

எனினும் -   கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக தனது  மகனிற்கு  தொடர்பு  உள்ளது என  குறித்த  மாணவர்களில் ஒருவரது தந்தை பொலிஸாரிடம்  வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Students-high-quality-examination-Jaffna

தேப்பனுக்கு, இருக்குது... வாள்வெட்டு.. :rolleyes:

  • தொடங்கியவர்
சிறையில் பரீட்சை எழுதும் ஆவாக் குழுவினர்
 

 

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், சிறைச்சாலையில் இருந்து கொண்டு, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி வருவதாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலை உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் அன்மையில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் இவர்கள் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரண்டு பேர் மீது வாள்வெட்டு நடத்திய குற்றச்சாட்டில், இம்மாதம் 9ஆம் திகதி கைதான இருவர, இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

குறித்த இருவரும் வணிகப் பரிவில் பரீட்சைக்குத் தோற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றெஷான் பெர்ணான்டோவின் பணிப்புரைக்கு அமைய, சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை அடுத்து, இவர்கள் இருவரும் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் இரண்டு பேரையும், இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சிறையில்-பரீட்சை-எழுதும்-ஆவாக்-குழுவினர்/71-202280

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2017 at 3:10 PM, நவீனன் said:

கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக தனது  மகனிற்கு  தொடர்பு  உள்ளது என  குறித்த  மாணவர்களில் ஒருவரது தந்தை பொலிஸாரிடம்  வாக்குமூலம் வழங்கியுள்ளார்

ஐயா நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்  ஆனால் இங்க உள்ள சிலர் ??..................

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை எழுத வைத்து அதன் மூலம் சிங்களம் தன்னை நல்லவனாக உலகிற்கு காட்ட முயற்சிக்கின்றது.

இதுவும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் (சி.பெள.பே) த‌ந்திரமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.