Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி அபகரிப்புக்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு ; ஏழை மக்களின் வழக்குச் செலவுகளுக்கு சுமணரத்ன தேரர் உதவுவதாக உறுதி

Featured Replies

காணி அபகரிப்புக்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு ; ஏழை மக்களின் வழக்குச் செலவுகளுக்கு சுமணரத்ன தேரர் உதவுவதாக உறுதி

 

 

மட்டக்களப்பு, வாழைச்சேனை, முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி மக்கள் 57 பேருடைய குடியிருப்பு காணிகளை அத்துமீறி அபகரித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக  தீர்வு பெற்றுத்தருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

batticalo.jpg

கடந்த செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை முறாவோடை பாடசாலைக்கு சொந்தமான மைதானக் காணிக்கு மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சகிதம் பொதுமக்கள் வேலியை அகற்ற முற்பட்ட சர்ச்சையையடுத்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலத்தில் விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. 

இவ் கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், அனுரா திஸநாயக்கா . மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கீர்தி ரத்தின,. கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் ரி.ரவி. , மங்களராம விகாரையின் விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உட்பட பாடசாலை அதிபர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்தகால யுத்ததினால் இப் பாடசாலை மற்றும் ஆவணங்கள் அழிக்கப்பட்டது இதன் பிறகு இப் பாடசாலைக்கான ஆவணங்களை பிரதேச செயலகத்திடம் கோரியிருந்தோம். அப்போது இது பாடசாவைக்கு உரிய காணி என பிரதேச செயலகம் அறித்திருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் மைதானத்திற்குள் அத்துமீறி நிலத்தை ஆக்கிரமித்தனர். இது தொடர்பாக அன்றைய தினம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தோம். பொலிசார் உரியநடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுரா திஸநாயக்கா அரசகாணி எனவும் இதனை  முறாவோடை சக்தி வித்தியாலய பாடசாலை மைதானத்திற்கு கடந்த 07-11-2016 ஆம் ஆண்டு கையளித்துள்ளதாகவும் பாடசாலைக்கு சொந்தமான காணியை அத்துமீறி அபகித்தவர்களுக்கு எதிராக நாங்கள் தலையிடமுடியாது. இதனை கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்ததுடன் கிழக்கு மாகாண கல்வி செயலாளருடன் தொடர்பு கொண்டு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதாகவும் அதனூடாக தீர்வு பெற்றுக் கொள்வதாகவும் தீர்வு வரும் வரைக்கும் பொலிஸ் காவல் கடமையில் ஈடுபடுவதாகவும் காணியை அபகரித்தவர்கள் புதிதாக கட்டிடமோ அல்லது எந்தவிதமாக புனர்நிர்மாண வேலைகள் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அப்பகுதில் 57 தமிழ் மக்களுக்கு உரிய காணிகள் அபகரிப்பு தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது கோரளைப்பற்று, மீராவோடை தமிழ் கிராத்தில் வேம்பு என்று அழைக்கப்படும் நிலஅளவையாளரின் வரைபடத்தின் கீழ் தலா ஒவ்வொருவருக்கம் அரை ஏக்கர் காணி வீதம் 57 தமிழ் மக்களுக்கு ஜெய பூமி உறுதிகள்;  464  காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா கையொழுத்திட்டு 2002 ஆம் ஆண்டு வழங்கப்பட்து.

இக்காணி அந்த உறுதி வழங்கியவர்களுக்கு சொந்தம் இதனை யாரும் அத்துமீறி அபகரிக்க முடியாது என காணி ஆணையாளர் தெரிவித்து, இதற்கு இக் காணிகளை அபகரித்தவர்களுக்கு  எதிராக நீதிமன்றத்தில் உடனடியாக  வழக்குத் தொடர்ந்து தீர்வு பெற்றக் கொள்ளுமாறு தெரிவித்ததையடுத்து இந்த இரு காணி பிரச்சினைகளுக்கும் நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு தொடர்ந்து தீர்வு காணுவதாக  தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஏழை மக்கள் வழக்கு தொடர்வதற்கான ஏனைய உதவிகளை சுமணரத்ன தேரர் செய்வதாக உறுதியளித்ததையடுத்து கலந்துரையாடல் நிறைவுக்கு வந்தது.

http://www.virakesari.lk/article/23263

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கில்... பிக்கர்... தமிழ் மக்கள் சார்பில், மாகாண சபை தேர்தலில் நின்றால்... வெல்லுவார் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

போகிற போக்கில்... பிக்கர்... தமிழ் மக்கள் சார்பில், மாகாண சபை தேர்தலில் நின்றால்... வெல்லுவார் போல் தெரிகிறது.

முதல் எதிர்ப்பு அரசியலே பிளை இந்தக்கால கட்டத்தில்.அமைச்சுப் பதவிகளைப் பெற்று மக்களுக்கு அபிவிருத்தி விடையங்களில் நன்மை செய்ய வேண்டும் என்பதை எனது தனிப்பட்ட கருத்து.போற போக்கில் அதை யார் செய்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்றே நினைக்கிறேன்.அதாவது அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் சமாந்திரமாக நடக்க வேணும்.

  • தொடங்கியவர்
மிறாவோடை காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
 

 

image_a17e3b563e.jpg

கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த மைதானக் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படுமென, கோரளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

மிறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானக் காணிப் பிரச்சனை தொடர்பான உயர்மட்ட மாநாடு, கோரளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் கோரளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (19) இடம்பெற்றது.

மீறாவோடை காணிப் பிரச்சனை தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் தற்போதைக்கு இரு தரப்பாரும் தீர்ப்புக் கிடைக்கும் வரை காணிக்குள் செல்வதில்லை என்றும், தீர்வு பாடசாலைக்குச் சாதகமாகக் கிடைக்கும் பட்சத்தில் காணி உரிமை கோருபவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், காணி உரிமை கோருவோருக்கு தீர்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் பாடசாலையின் நலனைக் கருத்தில் கொண்டு அக்காணியை விட்டுக் கொடுப்பது என்றும், அக்காணிக்கு மாற்றுக் காணி வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இரு சமூகங்களுக்கிடையில் உள்ள காணிப் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, மூன்றாம் தரப்பினர் ஒருவரைக் கொண்டு வந்து நியாயம் கேட்பதால் எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு பாதகமாக அமையும் என்று, கோரளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதில் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, ஐக்கிய தேசியக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ்.பெரமுன, மிறாவோடை சக்தி வித்தியாலய அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் காணிக்கு உரிமை கோரும் இரு தரப்புகளின் பிரதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

image_7b08b9cb12.jpgimage_c64b9ffbe8.jpgimage_4fea81f391.jpg

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மிறாவோடை-காணிப்-பிரச்சினைக்கு-விரைவில்-தீர்வு/73-202538

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.