Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிக் பொஸ்ஸாக மாறிய சுமனரத்ன தேரர்

Featured Replies

பிக் பொஸ்ஸாக மாறிய சுமனரத்ன தேரர்

 
 
5998210211075-IBCTAMIL.jpg
 
 
 
 
 
59982102582d8-IBCTAMIL.jpg
599821027866a-IBCTAMIL.jpg
59982102a1de9-IBCTAMIL.jpg

தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழ் அதிகாரிகளுக்கு எதிராகவும் அடாவடித்தனம் புரிந்த அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தற்போது தமிழ் மக்களுக்காக குரல் எழுப்புவதாக தன்னை காட்டிக் கொள்ள முற்படுவதாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், தமிழ் அதிகாரிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள அம்பிட்டியே சுமனரத்ன தேரர் திடிரென மனம் மாறியிருந்தால் அதன் பின் புலம் என்ன ? என்பது குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரதேசத்திலுள்ள பிரதேச செயலகம் தொடக்கம் மாவட்ட செயலகம் வரை சென்று தமிழ் அதிகாரிகளுக்கு எதிராக இன வாதம் பேசி அடாவடித்தனம் செய்தவர்.

பட்டிப்பளை பிரதேசத்தின் எல்லையில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்த முற்பட்டவர் அதுமாத்திரமல்ல, சில மாதங்களுக்கு முன்பு பொது பல சேனா தலைவர்களை வரவழைத்த வேளை எமது இளைஞர்கள் அவருக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான சக்தியொன்று தங்களுக்கு போக இடமின்றி அலைந்து திரிந்து தற்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம் தஞ்சம் பெற்றுள்ளனர். அவர்களை சுமனரத்ன தேரர் பயன்படுத்த முற்படுகின்றார் என அவர் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sumanaratne-Thera-who-became-the-big-boss

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sumanaratne-Thera-who-became-the-big-boss

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத் தமிழ் சொல்வதானால், 'விசரன், பேயன் எண்டு கதை சொல்லுறியளோ?... யாருக்கு பூ சுத்திரியல்'?

முதலாவது, தமிழ் மக்கள் பிக்கரிடம் போய் விட்டார்கள், அவர் சம்பந்தப் பட்டவர்களுக்கு 10 நாள் தவணை கொடுத்திருந்தார் என்ற பின்னும் படுத்துக் கிடந்தது ஏன்?

இரண்டாவது, ஓடி, ஓடி அலைந்து திரிந்த மக்களுக்கு நல்லெண்ணம் குறித்து வகுப்பெடுத்த்து, நீதிமன்றம் வழியே தீர்வு காண்போம் என்று சொன்னது ஏன்?

அசாத் அழியும், யோகேஸ்வரனும் இப்ப கூடி ஆராய்வதை முதலே செய்திருக்க முடியாததன் காரணம் என்ன?

இப்ப பிக்கர், வேலையை முடித்து விட்டார் என்றவுடன் பதறுவது ஏன்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

பிக் பொஸ்ஸாக மாறிய சுமனரத்ன தேரர்

 
 
5998210211075-IBCTAMIL.jpg
 
 
 
 
 
59982102582d8-IBCTAMIL.jpg
599821027866a-IBCTAMIL.jpg
59982102a1de9-IBCTAMIL.jpg
 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான சக்தியொன்று தங்களுக்கு போக இடமின்றி அலைந்து திரிந்து தற்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம் தஞ்சம் பெற்றுள்ளனர். அவர்களை சுமனரத்ன தேரர் பயன்படுத்த முற்படுகின்றார் என அவர் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sumanaratne-Thera-who-became-the-big-boss

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sumanaratne-Thera-who-became-the-big-boss

உது இன்னும் பல கட்டங்களை தாண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.