Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போதைய தரவுகளை கொண்டு இன விகிதாசாரம் பேசுவது தவறு

Featured Replies

தற்போதைய தரவுகளை கொண்டு இன விகிதாசாரம் பேசுவது தவறு

 
தற்போதைய தரவுகளை கொண்டு இன விகிதாசாரம் பேசுவது தவறு
 

தமிழ் மக்கள் போரால் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இன்னும் முழுமையாக இங்கு வரவில்லை. இந்தநிலைமையில் தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்துக் கொண்டு இனவிகிதாசாரம் பற்றிப் பேசக் கூடாது.

– இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது-

நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவதற்கு – முன் அமைதிச் சூழல் ஏற்பட்ட காலத்தில் இருந்த விகிதாசாரங்களை வைத்தே பேச வேண்டியது உசிதம் என நான் விரும்புகின்றேன்.

1983ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தின் இன விகிதாசாரமானது தமிழர்கள்-42 சதவீதம் முஸலீம்கள-32 சதவீதம் சிங்களவர்கள்-26 சதவீதமாக இருந்துள்ளது.

நாட்டில் எற்பட்ட போரின் காரணமாக திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள். இவர்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இது போல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவர்களும் நாட்டுக்கு முழுமையாக வந்து சேரவில்லை. இந்த நிலையிலே இன்று புள்ளி விபரம் மாறியுள்ளது எனவே தற்போதய நிலையை மட்டும் வைத்துக் கொண்டு புள்ளி விபரங்களைப் பேசக் கூடாது

இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக இருக்கக் கூடும் காரணம் பல தேர்தல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. கூட்டரசின் அரைவாசி காலம் இவ்வாண்டுடன் முடிவடையவுள்ளது.

ஆகவே அபிவிருத்திப் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டிய தருவாயிலும் நாம் உள்ளோம் என்றார்.

மாவட்டச் செயலர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் சுகந்த புஞ்சி நிலமே நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மகருப் இ இம்ரான் மகருப், எம்.எஸ்.தௌபிக் க.துரைரெட்ணசிங்கம் மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

http://newuthayan.com/story/21366.html

  • கருத்துக்கள உறவுகள்

ஓடாத மணிக்கூடும் ஒரு நாளில் இரண்டுதரம் சரியான நேரத்தைக் காட்டும் என்பதைத் தலைவரும் இங்கு மெய்ப்பிக்கின்றார். :grin:

b3ede92dcf775799d9e6a120e09f5c47_XL.jpg

திருகோணமலை மாவட்டத்தின் இன விகிதாசாரம் மாற்றமடைந்துள்ளதால், இன விகிதாசாரத்தைக் கணிப்பிடுவதாயின் நாட்டிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் இருந்த காலப்பகுதியிலிருந்தே கணிப்பிடவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் தெரிவிக்கையில்,

1983ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் இனவிகிதாசாரம் 42 வீதமும் முஸ்லிம்களின் 32வீதமும் சிங்களவர்கள் 26 வீதமுமாக காணப்பட்டது.

நாட்டில் எற்பட்ட போரின் காரணமாக திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள். இவர்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இது போல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவர்களும் நாட்டுக்கு முழுமையாக வந்து சேரவில்லை இந்த நிலையிலே இன்று புள்ளி விபரம் மாறியுள்ளது எனவே தற்போதய நிலையை மட்டும் வைத்துக் கொண்டு புள்ளி விபரங்களைப் பேசக் கூடாது எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=76752

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் தவறான பிடிவாதம் முஸ்லிம்களுக்கு பாதகம்..!

இந்த ஆண்டில் பல தேர்தல்களை சந்திக்க வாய்ப்புள்ளதால் இன விகிதாசாரங்கைளக் கருத்திற்கொள்ளும் போது வடக்கு கிழக்கில் யுத்தம் ஏற்படுவதற்கு முன்னர் இருந்த விகிதாசாரங்களே கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அங்கு மேலும் தெரிவித்துள்ள அவர்இன விகிதாசாரங்களை கணிப்பிடும் போது நாட்டில் அமைதிச் சூழல் நிலவிய காலத்தில் உள்ள விகிதாசாரங்களையே கணிப்பிட வேண்டும்.

யுத்தத்தால் நாட்டை விட்டு பலர் வெளியேறியுள்ளனர். எனவே மக்கள் வெளியேறுவதற்கு முன்பிருந்த விகிதாசாரமே கருத்திற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.திருகோணமலை மாவட்டத்தின் 1983ஆம் ஆண்டு இன விகிதாசாரப்படி தமிழர்கள்-42 சதவீதமும் முஸ்லிம்கள்- 32 சதவீதமும் சிங்களவர்கள்-26 சதவீதமாகவும் இருந்துள்ளனர்.இந்த நிலையில் நாட்டில் எற்பட்ட யுத்தத்தின் காரணமாக திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள். அவர்கள் முழுமையாக வந்து சேரவில்லை.

இது போல ஐரோப்பிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் சிலர் தஞ்சம் புகுந்துள்ளனர்.அவர்களும் நாட்டிற்கு முழுமையாக வந்து சேரவில்லை. இந்த நிலையிலே இன்று புள்ளி விபரம் மாறியுள்ளது. எனவே தற்போதைய நிலையை மட்டும் வைத்துக் கொண்டு புள்ளி விபரங்கள் பற்றிப் பேசக் கூடாது என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

திருகோணமலையில் தற்போது முஸ்லிம்களின் விகிதாசாரம் அதிகளவில் உள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள்  தெரிவிக்கும் நிலையில் 1983ஆம் ஆண்டு இன விகிதாசாரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென சம்பந்தன் தெரிவிப்பதானது திருகோணமலை முஸ்லிம்களுக்கு பல்வேறு விடயங்களில் பாதகமாக அமைவதுடன் சம்பந்தனின் இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்குமிடத்து அது முஸ்லிம்களுக்கு பெரும் இடியாக இருக்குமென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது...

www.tharaasu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.