Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கக் கடத்தலில் கடற்படையினருக்கு தொடர்பு

Featured Replies

இலங்கையில் இருந்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி 45 கிலோகிராம் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் அந்த தங்கம் வட பிராந்திய கடற்படை தளபதியின் உத்தரவின் அடிப்படையில் சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

ரணதீர என்ற கப்பல் மூலம் வடபகுதி கடலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது.

இருப்பினும் இந்த நடவடிக்கையில் பங்கேற்ற கடற்படையினர் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய சிறப்பு கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தேடுதல் நடத்தப்பட்டமை சம்பந்தமாக கடற்படை வெளியிட்ட அறிக்கையில் காணப்பட்ட குறைபாடுகளே இதற்கு காரணம் என தெரியவருகிறது.

மேலும் இந்த தங்கக் கடத்தல் சம்பவத்துடன் இலங்கை கடற்படையை சேர்ந்த சில உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக சம்பவங்கள் சிலவற்றின் மூலம் தெளிவாகியுள்ளதாக இது குறித்து தகவல் வெளியிட்ட கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தகவல்கள் ஏதோ ஒரு அழுத்தம் காரணமாகவே மறைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றதுடன், வடபகுதி கடலில் மேற்கொள்ளப்படும் தங்கக் கடத்தலுடன் கடற்படையினரில் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

http://www.tamilwin.com/community/01/156475?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

1970ஆம் ஆண்டுகளிலிருந்தே இந்த தொடர்பு கடற்படையினருக்கு உண்டு..அந்த காலத்தில் விசா எடுக்காமல் இந்தியா சென்று படம பார்த்து வந்த சிலர் உண்டு

10 hours ago, போல் said:

இந்த தகவல்கள் ஏதோ ஒரு அழுத்தம் காரணமாகவே மறைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றதுடன், வடபகுதி கடலில் மேற்கொள்ளப்படும் தங்கக் கடத்தலுடன் கடற்படையினரில் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சின்னையாவுக்கு இருக்கவே இருக்காது. விட்டிருக்க மாட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சகாலத்தில் போதைவஸ்த்து ,கஞ்சா இந்தியாவில் இருந்து  யாழுக்கு கடத்துவதில் கடற்படையினருக்கு தொடர்பு என்று செய்தி வரும் . வடமாராட்சி காரருக்கு தெரியும் பாம்பின்கால் பாம்பு அறியும் சாமி திட்டமிட்டே இளைய சமூகத்தை அழிக்கிறார்கள் பொருள்கள் கைமாறும் இடத்தில் காணும் அத்தனை படகுகளுக்கும் வெடி போட்டு கலைத்தபின் நாடகம் நன்றாக அரங்கேறுது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.