Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முப்படை தந்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்மனி தந்தான் புத்தன்

முப்பால் தந்தான் வள்ளுவன்

மும்பழம் தந்தாள் ஒளவை

முத்தொழிலுக்கு(காத்தல்,அழித்

Edited by putthan

முப்படை தந்தான் தலைவன்,

தமிழ் தேசியம் தமிழனும் அறிந்தான்

உலகமும் அறிகிறது

புத்தா கலக்குற மச்சி......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிரசன்னா...............

Edited by putthan

நன்றி பிரசானா

ஏன்ப்பா என் பெயெரை கொலை பண்ணுறீங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சந்தோசம் தானே பிரசன்னா.இதுக்கு போய் அலட்டி கொள்ளலாமா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மும்மனி தந்தான் புத்தன்

முப்பால் தந்தான் வள்ளுவன்

மும்பழம் தந்தாள் ஒளவை

முத்தொழிலுக்கு(காத்தல்,அழித்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகு புத்தன்

முற்காலத்திற்க்கும் முந்தைய குடி தமிழன், அவனிற்க்கு ஒரு தலைவன், அவன் தான் மூவுலகுக்கும் தெரிந்த நமது தலைவன்

கவிதை அருமை புத்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட்ரா அட்ரா அட்ரா... சக்க

நன்றாக உள்ளது புத்தரே

ஆழக் கடலெங்கும் சோழ மகராசன்

ஆட்சி புரிந்தானே அன்று - தமிழ்

ஈழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன்

ஏறி நடக்கின்றான் இன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து கூறிய கறுப்பி,தமிழ்தங்கை,கெளரிபாலன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமமாக யோசித்திருக்கிறீர்கள்.. இதை தமிழ் புத்தகங்களில் இணைக்கும் காலம் வெகு விரைவில் வரும்.. அதுவரை பொறுத்திருப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வை.கோ சொன்ன சொல்' வேட்டி கட்டிக் கொண்டு திரிந்த தமிழனை உலகம் அறியச் செய்தவர் தம்பி பிரபாகரன்'.

நல்ல கவிதை புத்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மும்மனி தந்தான் புத்தன்

மும்மனி என்பதன் அர்த்தம் என்னவென்பதைச் சொல்லமுடியுமா புத்தரே. நேற்று நிலவரம் நிகழ்ச்சி கேட்டபோதும் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் "சிங்களத்தில் மும்மனி என்றால் வேறு பொருள்" என்றுமட்டும் சொல்லிவிட்டு நிறுத்திவிட்டார். அதுதான் கேட்டேன். அது ஒன்றும் சொல்லக்கூடாத பொருள் இல்லைத்தானே. சொல்லக்கூடியது என்பதால்தான் நீரும் கவிதையில் எழுதியிருக்கிறீர். என்ன நான் சொல்லுறது சரியோ?

புத்தன் நல்ல சிந்தனை யோட்டமானவரிகள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன சந்தேகம் புத்தன், வள்ளுவனும், ஒளவையும் தமிழர்கள். புத்தர் தமிழரா?. நீங்கள் கம்பர் அல்லது இளங்கோ போன்றவர்களை குறிப்பிட்டிருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சின்ன சந்தேகம் புத்தன், வள்ளுவனும், ஒளவையும் தமிழர்கள். புத்தர் தமிழரா?. நீங்கள் கம்பர் அல்லது இளங்கோ போன்றவர்களை குறிப்பிட்டிருக்கலாம்

புத்தர் தமிழரோ இல்லையோ என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயமாகச் சிங்களவர் இல்லை. சிங்களவர்தான் தாம் அவரைப் பின்பற்றுவதாகப் புலுடா விட்டுக்கொண்டு திரிகிறார்கள். தலைவரே சொல்லியிருக்கிறார்தானே, "ஜே. ஆர் ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டிருக்காது" என்று. புத்தர் ஒரு இந்து என்பது உண்மை.

புத்தர் தமிழனாக் இருக்கமுடியாது , அவர் பிறந்தது நேபாளத்தில் ஆகவெ அவர் தமிழாக இருக்கு வாய்ப்புக்கள் இல்லை ஆனால் அவர் 100% இந்து, இன்று கூட உலகத்தில் உள்ள ஒரே ஒரு இந்து ராச்சியம் நேபாளமே, அதேபொல் அவர் சிங்களமும் இல்லை, பௌத்தவ் வந்தபின்னர்தான் சிங்கள்ம் தோன்றியது என்று மகாவம்சம் சொல்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்மனி என்பதன் அர்த்தம் என்னவென்பதைச் சொல்லமுடியுமா புத்தரே. நேற்று நிலவரம் நிகழ்ச்சி கேட்டபோதும் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் "சிங்களத்தில் மும்மனி என்றால் வேறு பொருள்" என்றுமட்டும் சொல்லிவிட்டு நிறுத்திவிட்டார். அதுதான் கேட்டேன். அது ஒன்றும் சொல்லக்கூடாத பொருள் இல்லைத்தானே. சொல்லக்கூடியது என்பதால்தான் நீரும் கவிதையில் எழுதியிருக்கிறீர். என்ன நான் சொல்லுறது சரியோ?

மும்மணி என்றால்

1.புத்தன் மணி

2.தம்பம் மணி

3.சங்கம் மணி

பெளத்தமும் தமிழும் என்பது பற்றி மேலதிக விபரங்களை Tamilresearch and news வெப்சைட்டில் போய் பார்க்கவும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன சந்தேகம் புத்தன், வள்ளுவனும், ஒளவையும் தமிழர்கள். புத்தர் தமிழரா?. நீங்கள் கம்பர் அல்லது இளங்கோ போன்றவர்களை குறிப்பிட்டிருக்கலாம்

புத்தரை பற்றி நான் குறிப்பிடவில்லை தேசியதலைவர் கூறியுள்ளார் ஜே.ஆர் உண்மையான பெளத்தனாக இருந்தால் தான் ஆயுதம் ஏந்தி இருக்கமாட்டேன்,தேசத்தின் குரல் அன்டன்பாலசிங்கம் கூறியுள்ளார் புத்தர் ஒரு இந்துச்(இந்திய மதங்களில்)சீர்திருத்தவாதி என்றும் இப் பெரியோரே கூறியுள்ளார்கள்.

பாபாவின் மாலை வளர்கிறது,வீபூதிவருகிறது,மோத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றி புத்தன்.

கந்தப்ஸ் இது எங்களுக்கு தேவையில்லாத விடயம் வேல்கப் தொடங்குது கிரிக்கட்டை பார்த்து கொண்டு இன்பதமிழ்வானொலியில் தாயகத்து செய்திகளையும் கேட்டு கொண்டு இரண்டு பியர் அடித்து கொண்டு யாழிலையும் அரட்டை அடித்து கொண்டு பொழுதை போக்கலாம்....

:lol::huh:

ஜோவ் இப்போ நீர் டைகர் பமிலி கொன்சும் டீசன்டா பேசும் :angry: :angry: :angry:

கௌதம புத்தர்

கௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

பொருளடக்கம் [மறை]

1 புத்தரின் வரலாறு

2 புத்தரின் கூற்றுக்கள்

3 மற்ற மதங்களில் புத்தர்

4 வெளி இணைப்புகள்

புத்தரின் வரலாறு

சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.

அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.

துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.

தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு ஒரு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் காலமானார்.

புத்தரின் கூற்றுக்கள்

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.

மற்ற மதங்களில் புத்தர்

வட இந்தியாவைச் சேர்ந்த வைணவர்கள் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக போற்றுகின்றனர்.

புத்த பூர்ணிமை

காலம் கடந்து நிற்கும் குறிக்கோளும், இனம், நிலம், மொழி ஆகியவற்றைக் கடந்த

மக்கள் நல நோக்கும் கொண்டது பெளத்த நெறி. (தருமம்) அது தமிழர்களின் வாழ்க்கை

நெறியாக இருந்துள்ளது என்பதற்கு வரலாற்றுச் சான்று இலக்கியச் சான்றுகளும் பல உண்டு.

ஒரு மொழியின் ஒப்பற்ற இலக்கியமாகப் போற்றப்படும் இலக்கியம் ஒன்றில் பேசப்படும்

கருத்துக்கள், அந்த இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே சமுதாய வாழ்வில் மக்களிடத்தில்

எத்துணைச் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதற்கு தக்க ஒரு சான்றாகும். எனவே,

தமிழ் மொழிக்கும் பெளத்த நெறிக்கும் உடன்பாடான ஒன்றே யாகும். பழம் பெருமை

வாய்ந்த நம் நாட்டில் தோன்றிய பழைய சமயங்களுள் பெளத்த சமயமும் ஒன்று.

புத்தர் பெருமானுடைய வாழ்க்கை தியாகம் நிறைந்த வாழ்க்கை. அன்பையும் அறிவையும்

அடிப்படையாக கொண்டதாக வாழ்க்கை.

நீண்ட நெடிய பாரம்பரியத்தை கொண்ட சனாதன உயர்ந்த தத்துவார்த்தங்களைக் கொண்டது.

ஆனால் இடைக்காலத்தில் அதை நடத்திச் சென்றவர்கள் பல்வேறு

சடங்களையும் பிரிவினைகளையும் சார அனுஷ்டானங்களையும் அதனுடன்

இணைத்தார்கள். தத்துவம் பின் தள்ளப்பட்டுச் சடங்குகள் மேலுக்குக் கொண்டு

வரப்பட்டன. இந்தச் சடங்குகளில் சில பொருந்தியவை. பல பொருளற்றவை.

உதாரணமாக தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுக்கும் சடங்கு நியாயமற்றது.

ஆட்டையும் கோழியையும் இன்னும் பலவற்றையும் கோவில்களிலே நிறுத்திக் கொல்வது

உயிர் கொலை செய்வது தெய்வத் தொண்டு அல்ல. தெய்வ நிந்தனையே ஆகும்.

வடமேற்கு இந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும், முக்கியமாக இரு மதங்களைப்

பின்பற்றி வாழும் மக்கள் வாழ்ந்தார்கள்.

வட மேற்கு இந்தியாவில் வேதங்களையும் அவற்றில் சொல்லப்படும் வேள்வி முறைகளையும்

பின்பற்றி பிராமணர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் சாதிவேற்றுமைகளைத்

தீவிரமாக ஆதரித்தார்கள்.

பிற உயிர்களைப் பலியிட்டு வேள்வி செய்வதனால், தன் பாவங்களைப் போக்கிக்கொள்ள

முடியும் என்றும் அதனால் ஒருவன் மேலான கதியை அடையாளம் என்று சொன்னார்கள்.

ஜெயின மதத்தைச் சார்ந்தவர்கள் தீவிரமாக அஹிம்சையையுடன் கடுமையான தவ வாழ்வை

மேற்கொண்டு அம்மணக்கோலத்துடன் சஞ்சரித்தார்கள். உண்ணா நோன்பிருந்து சல்லேகனை

என்னும் பெயரில் உயிர் துறந்தனர்.

இப்படிப்பட்ட பல்வேறு சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் பரவி வேர் விட்ட நேரத்தில்

மனித ஜாதி ஒரு உன்னத வழிகாட்டியை தேடி நின்றது.

தீவிரப் போக்குள்ள இந்த இரு வித நடைமுறை தவிர்த்து ஒரு நடுத்தர வழியை அமைத்து

அறநெறிகளுக்கு அடித்தளமாக அமைய ஒரு ஒளி பிறந்தது.

புத்தர் பிறந்தார்.

காசிக்கு வடக்கே ரோஹினி நதிக்கரையில் கபிலவஸ்து என்கிற நகரம் உள்ளது. அதைத்

தலைநகரமாகக் கொண்டு சுத்தோதனர் என்கிற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு இரண்டு மனைவிமார்கள். இவர்களில் மூத்தவர் மாயாதேவி. அவர் கர்ப்பவதியா னார்.

பிரசவத்திற்காகத் தாய் வீட்டுக்குப் போனார். பரிவாரத்தினர் புடை சூழ்ந்து வர உயரமான

சால மரங்களின் கிளைகள் தாழ்ந்து வரவேற்றன. அதன் கிளைகளிலும் ஐந்து

ஐந்து தாமரை மலர்கள் தோன்றின. பறவைகள் கீதமிசைத்து இனிய குரலில் பாடின.

மெல்லிய பூங்காகூழ் வீசிற்று. மரகிளைகள் தாழ்ந்து அரசியை சுற்றி திரைகள் உண்டாயின.

போகும் வழியில் லும்பினி தோட்டத்தில் ஓர் மகவை ஈன்றார்.

வைகாசி மாதம் பெளர்ணமி அன்று இந்தப் பூமியின் நலனுக்காகப் புத்தர் அவதரித்தார்.

இது நடந்தது கி.மு. 563. சுமார் [இன்றைக்கு] 2500 ஆண்டுகளுக்கு முன்பாக.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஒரு துன்பம் வந்தது. மகவு பிறந்த ஏழாம் நாள் அன்னை மாயாதேவி மரணமடைந்தார். சிற்றன்னைதான் சித்தார்த்தனை எடுத்து வளர்த்தார். சீரும் சிறப்புமாக அரண்மனை வாசம் செய்து வந்த சித்தார்த்தனுக்கு கோலிநாட்டு மன்னன் மகள் யசோதராவைத் திருமணம் செய்து வைத்தார்கள். இப்படி பத்து ஆண்டுகளை யாதொரு கவலையுமின்றி,

சித்தார்த்தன் சுகபோகத்தில் கழித்தான். இன்பமயமான வாழ்க்கையில் சில எதிர்பாராத சந்திப்புகள் நிகழ்நதன. அவை வாழ்க்கை நீரோட்டத்தை திசை திருப்பி விட்டன.

வெளியுலகைக் காண சித்தார்த்தன் பிரியப்பட்டான்.

வீதி தோறும் மக்கள் திரண்டு மலர்ந்த முகத்துடன் இருப்பதைக் கண்டு,

''உலகம் பார்க்கக் கவர்ச்சியாக இருக்கிறது - மக்கள் என்னைப்போல்

மகிழ்வுடன் வாழ்கிறார்கள்'' என்று எண்ணி உவகையுடன் இருந்தபோது...,

கூன் விழுந்து தள்ளாடி நடந்து போனான் ஒரு வயோதிகன்.

அதைக்கண்ட சித்தார்த்தன் உள்ளம் சுருங்கியது.

நோயுற்ற நிலையில் ஒருவனைக் கண்டபோது,

உள்ளம் நொடித்து போனது.

பிணமொன்று போனதைப் பார்த்தபோது பிணி கொண்டது மனம்

மானுட வாழ்க்கையின் அவலங்களை நினைத்து மனம் அலைக்கழிந்தது.

ஏன்... ஏன்.. வையத்தில் இத்தனை துன்பம் என்று தன்னையே கேட்டுக்

கொண்டும், பதிலேதும் கிடைக்கவில்லை.

இதுவரை கவலை என்பதையே அறியாதிருந்த சித்தார்த்தன் உள்ளத்தில் அன்று முதல்

கவலை தோன்றலாயிற்று.

இதற்கிடையில் திருமணமாகிப் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன.

சித்தார்த்தனது மனம், அரண்மனை வாழ்வை வெறுத்தது.

இது சமயம் பணியாள் யசோதராவுக்கு ஆண் மகவு பிறந்திருக்கும் செய்தியினைக் கூறினான்.

இந்த செய்தியைக் கேட்டு சித்தார்த்தன் மகிழ்ச்சி அடையவில்லை.

''இந்தப் பிணிப்பிலிருந்து நான் விடுபட்டாக வேண்டும் '' என்று எண்ணினான்.

பிறந்த ஆண் குழந்தைக்கு ராகுலன் என்று பெயர் வைத்தார்கள்.

மானுட வாழ்க்கையின் துன்பங்களுக்குத் தீர்வு தேடியது சித்தார்த்தனது மனம்.

''எங்கு பார்த்தாலும் நிலையாமையின் ஆற்றல் மிகுந்து நிற்கிறது.

பிணி, மூப்பு, சாக்காடு என்னும் மூன்றும் உயிர்களை பாதிக்கிறது.

ஆகவே துக்கமே இல்லாத நிர்வாண நிலையை அடைய முயல்வது அவசியமாகும்''

என்று ஒரு முடிவுக்கு வந்தான் சித்தார்த்தன்.

ஒருநாள் இரவு மனைவியும் மகனும் உறங்கிக் கொண்டு இருந்தபோது, தன் பணியாள்

சன்னாவுடன் வீடு துறந்து வெளியேறினார். வழியில் பணியாளைத் திரும்ப அனுப்பிவிட்டார்.

காட்டில் புகுந்தார். இதன் சமயம் அவருக்கு வயது 29. தனக்குப் புதல்வன் பிறந்த ஏழாம்

நாளன்று, சித்தார்த்தன் துறவை மேற்கொண்டான். அன்று சுத்த பூர்ணமி என்றும் வெள்ளிக்

கிழமை என்றும் கூறுகிறார்கள். சித்தார்த்தன் மேற்கொண்ட துறவை, பெருந் துறவு

அதாவது மகாபிநிஷ்கிரமணம் என்று பெளத்த நூலோர் கூறுவர்.

உருலேலா காடுகளில் அலரா கால்மா என்கிற ரிஷியிடம் வேதம் கற்றார்.

பின்பு அவரைவிட்டு ஆச்சார்யா உத்தகாவிடம் பாடம் கேட்டார். எதுவும் அவரைத் திருப்படுத்தவில்லை.

அதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் உண்ணா நோன்பும் மெளன நோன்பும் மேற்கொண்டு

மனதைஅடக்கித் தியானம் செய்தார். அவர் கேள்விகள் எதற்கும் பதில் கிடைக்கவில்லை.

பின்பு பல இடங்களில் அலைந்து திரிந்த புத்தர் கடைசியாக கயாவை அடைந்தார்.

நிரஞ்சனை நதியில் நீராடினர். மஞ்சள் நிற ஆடையினை அணிந்துக்கொண்டு

போதி மரத்தில் அரச மரத்தடியில் கிழக்குத் திசையை நோக்கி அமர்ந்தார்.

நாற்பத்து ஒன்பது நாட்களைப் போதி மரத்தடியிலேயே ஆழ்ந்த தியானத்தில் கழித்தார்.

அங்கு அவருக்கு இருள் நீங்கி ஞான ஒளி சித்தித்தது.

சித்தார்த்தன் புத்தர் என மாற்றம் கண்டார். புத்தர் என்றால் நிறை ஞானி என்பது பொருள்.

புத்தர் தான் கண்ட ஞான மார்க்கத்தை மக்களுக்கும் போதிக்கத் தொடங்கினார்.

முக்திக்கும் அமரத்துவத்துக்கும் அவர் பாதை வழி சொன்னது. வாரணாசி அடைந்து அங்குள்ள

சாரநாத் மான் தோட்டத்தில் முதலில் ஐந்து சீடர்களுக்கு நல்ல உபதேசம் செய்தார்.

இதைத் தொடர்ந்து சீடர்கள் கூட்டம் பெருகியது. அதைத் தொடர்ந்து 45 ஆண்டுகள்

புத்தர் உபதேசம் செய்வதிலே திளைத்து மனித ஜாதியின் விடுதலைக்கு வழி வகுத்தார்.

மன்னர்களும் மாமனிதர்களும் புத்தர் பாதையின் சிறப்பை உணர்ந்தவர்கள்.

அது ஒன்றுதான் துக்கத்தை துடைக்க வழி என்று கண்டு கொண்டார்கள்.

அப்படி உணர்ந்தவர்களில் பிம்பிசார மன்னரும் ஒருவர்.

ஊர் ஊராகச் சென்று உபதேசம் செய்து வந்த புத்தர் ஒரு சமயம் தன் ஊரான கபில

வஸ்துவை அடைந்தார். அவரது தந்தையும் மனைவியும் மகனும் அவர் மார்க்கத்தை

ஏற்றார்கள். சில நாட்களில் சுத்தோதனர் காலமானார்.

அவரது ஈமக்கடன்களை முடித்தார் புத்தர்.

பின்பு தான் கண்ட உண்மைகளை உலகத்துக்குக் கூற சங்கங்களை அமைத்தார்.

அவரது சீடர்கள் பிட்சுக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் பல்வேறு இடங்களுக்குச்

சென்று புத்த கோட்பாடுகளைப் பரப்பினர்.

புத்தருக்கு சித்து விளையாட்டில் நம்பிக்கை கிடையாது. அவர் தத்துவ ஞானத்தை மட்டுமே நம்பினார். ஒரு சமயம் ஒரு பெண் அவரிடம் வந்தாள். இறந்த போன தன்

குழந்தையை உயிர்ப்பிக்க வேண்டினாள்.

புத்தர் அவளிடம்,

''மரணமே இல்லா ஒரு வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு வாங்கி வா" என்று கூறினார்.

சுஜாதா என்ற அந்தப் பெண், ஊரெல்லாம் தேடி விட்டுப் புத்தரிடம் திரும்பி வந்து,

''மரணத்தைக் காணாத வீடே இந்த வையத்தில் இல்லை '' என்றாள்.

அதைக்கேட்ட புத்தர் ''அம்மா! வையத்தில் பிறப்புடன் இறப்பும் உண்டு.

இதனை உணர்ந்துக் கொண்டு நீ உன் மனதைத் தேற்றிக் கொள்" என்றார்.

புத்தர் கண்ட ஞானத்துக்கு மத்திய மார்க்கம் என்று பெயருண்டு.

கொல்லாமை, கள்ளாமை, காம்மின்மை, பொய்யாமை, புறங்கூறாமை, வன்சொல்,

பயனில மொழியாமை, வெ·காமை, வெகுளாமை, நற்காட்சி முதலிய தச சீலங்களைப்

புத்தம் கூறுகிறது.

துக்கக் கடலுக்கு அடிப்படைக் காரணமே நமது ஆசைகள்தான் என்பதை அறியவேண்டும்.

நிர்வாணம் என்கிற முக்தி நிலையை எய்த புத்தம் எட்டுக் கட்டளைகளை விதிக்கிறது.

நேர் சிந்தனை, நேர் தனிமை, நேர் தியானம், நேர் கொள்கை, நேர் நோக்கம், நேர் பேச்சு,

நேர் நடத்தை, நேர் தூய்மை என்பவை அவை.

அஞ்ஞானம் அழிந்துவிட மேற்கண்ட எட்டு தர்மங்களையும் ஏற்று ஒழுகுதல் வேண்டும்

என்கிறார் புத்தர். எட்டு வித சீலங்களை கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் யாராய் இருப்பினும்,

சமய வாழ்க்கையின் இன்பத்தை அவர்களால் பெறமுடியும்.

பேரின்ப நிலையை அடைய விரும்பும் ஒருவன் முதலில். நான்கு பேருண்மைகளை அறிவது

அவசியம் ஆகும். அவை:

துக்கம்

துக்க காரணம்.

துக்க நிவர்த்தி

துக்க நிவர்த்திக்கு உரிய வழிகள்

சீடர்கள்,

புத்தம் சரணம் கச்சாமி,

தர்மம் சரணம் கச்சாமி,

சங்கம் சரணம் கச்சாமி...

என்கிற தாரக மந்திரத்தை ஓத வேண்டும்.

இதன் பொருள் புத்தரைச் சரண் அடைகிறேன். தர்மத்தைச் சரணடையப் போகிறேன்.

சங்கத்தைச் சரணடைய போகிறேன் என்பதே இதை

''முத்திற மணியை மும்மையின் வணங்கி '' என்று மணிமேகலை கூறுகிறது.

சுகபோகத்தில் அழுந்திக் கிடப்பதும் தக்க பலனைத் தராது; கடும் தவம்

புரிவதும் தக்க பலனை தராது, தீவிரமான இந்த இரு போக்குகளையும் புத்தர் பெருமான் ஒதுக்கிவிட்டார்.

ஆசைப் பேய்க்கு அடிமையாகாமலும், உடலையும் உள்ளத்தையும் துன்புறுத்தி வாட்டி வதைக்காமலும் ஆனந்த நிலையை ஒவ்வொரு ஜீவனும் சுய முயற்சியால் அடையக் கூடிய

ஒரு வழியைப் புத்தர் பெருமான் கண்டறிந்தார்.

அந்த வழிக்கு 'மத்திய மார்க்கம் 'என்று பெயர்.

புத்தர் கூறிய வாழ்க்கை வழி மக்களிடம் வெகு விரைவில் பரவியது.

பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, சீனா ஜப்பான், திபெத், மங்கோலியா போன்ற

அனைத்து புத்தம் வேர் கொண்டு வளர்ந்தது.

45 ஆண்டுகள் கால் நோக ஊர் உலகமெல்லாம் புத்தர் நடந்து தேவவாக்கு

மானுட ஜாதிக்குப் புத்துயிர்ப்பு தந்தது.

உடல் நலம் தளர்ந்து விட்ட நிலையில் வாரணாசிக்குத் தொலைவில் காகுஸ்தா

நதிக்கரையில் உள்ள காசிநாரா கிராமத்தை அடைந்தார் புத்தபிரான்.

அங்கே மஹாபரி நிர்வாண நிலை அடைந்தார்.

அவரின் இறுதியாக கூறிய உபதேசம்.

''என் அருமை பிக்குகளே! பஞ்ச பூதங்களின் சேர்கையால் உண்டான எந்தப்

பொருளுக்கும் அழிவு உண்டு. இதை எப்போதும் நினைவில் இருத்திக்கொண்டு,

விழிப்புடன் இருங்கள். நிர்வாணப் பேற்றை அடைவதற்கு, உண்மையோடும்

ஊக்கத்தோடும் உறுதியோடும் முயலுங்கள்''

என்று சொன்னார்.

இதன் பின்னர் நான்கு ஞான நிலைகளை இடம், எண்ணம், உணர்வு, பேதாபேதம் முதலிய

நிலைகளை கடந்து, நிர்வாணப் பெரும் பேற்றை, பிறவாத ஒரு பெரு நிலையை அடைந்தார்

ஒரு சக்ரவர்த்திகுரிய மரியாதைகளுடன் அவரது திருமேனியை, வடதிசையில் அடக்கம் செய்தனர்.

அவர் நீத்த சாலா மரத்தடியில் பூ மழை பெய்தாக வரலாறு.

மானுட ஜாதியின் மகோன்னத ஞானி கெளதமபுத்தரை ஹிந்துக்கள் ஒரு அவதாரம்

எனக்கொள்வார்கள்.

மணிமேகலையின் செய்யுளோடு புத்தரின் நினைவுகளை நிறைவு செய்வோம்.

பேதமை சார்வா, செய்கை யாகும்

செய்கை சார்வா உணர்ச்சி யாகும்

உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்

வாயில் சார்வா ஊறா கும்மே

ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்

நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்

வேட்கை சார்ந்து பற்றா கும்மே

பற்றிற் ஒன்றும் கருமத் தொகுதி

கருமத் தொகுதி காரண மாக

வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்

தோற்றம் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு

அவலம், அரற்று கவலை, கை யாறெனத்

தவலில் துன்பம் தலைவரும் என்ப.

--மணிமேகலை --

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ் இப்போ நீர் டைகர் பமிலி கொன்சும் டீசன்டா பேசும் :angry: :angry: :angry:

செயற்குழு தலைவரே தவறுக்கு மன்னிக்கவும்(இந்த கந்தப்பு தான் றோயல் பமிலியில் அவுஸ்ரேலிய உறுப்பினர்)

:lol::huh:

புத்தரை பற்றிய இணைப்புக்கு நன்றி.

அது தான் பார்த்தேன் புத்தன் 16 வயசில கல்யாணம் கட்டினா 35 வயசில ஞானம் பெறலாம் தானே,நாங்கள் 35 வயசில கல்யாணம் கட்டினா 50 வயசில தான் ஞானம் பிறக்கும்,இரண்டும் ஒன்று தான்..

எவ்வளவு டீசன்டா பதிலளித்திருக்கேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.