Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

அமெரிக்காவில், சிவாஜி படம் திரையிடப்படம் இடங்கள், படக் காட்சிகளின் நேரப் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஜூன் 15ம் தேதி உலகெங்கும் ரிலீஸாகிறது சிவாஜி. அமெரிக்காவில் 10 மையங்களில் இப்படம் ஒரே நேரத்தில் திரையிடப்படுகிறது. அமெரிக்காவில் சிவாஜியை திரையிடும் விநியோக உரிமையை வாங்கியுள்ள பரத் கிரியேஷன்ஸ் நிறுவனம் சிவாஜி எங்கெல்லாம் திரையிடப்படுகிறது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

சிவாஜி (தமிழ்) வெளியாகும் மையங்கள்:

அல்பானி, ரோசெஸ்டர், வெர்மாண்ட், மைன், மிஸ்ஸிஸிப்பி, அலபாமா, கான்சாஸ், இண்டியானாபோலிஸ், வியோமிங், மோன்டனா, கெண்டகி, நியூ ஓர்லியன்ஸ், லாஸ் வேகாஸ், ஓமஹா, ஜாக்சன்.

சிகாகோவாவில் 15ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. டெஸ்பிளைன்ஸ் தியேட்டரில் படத்தின் முதல் காட்சி திரையிடப்படுகிறது. சிகாகோ மாநிலத்தில் எங்கு படம் திரையிடப்படுகிறது என்ற விவரம் இன்று வெளியிடப்படுகிறது.

விர்ஜீனியாவில் 14ம் தேதி இரவு 9.45 மணிக்கு ஏ.எம்.சி லோஸ் பேர்பாக்ஸ் ஸ்குயர் 8 ஹாலில் படம் திரையிடப்படுகிறது. படம் திரையிடப்படும் நேரம்:

15ம் தேதி இரவு 9.45.

16ம் தேதி பிற்பகல் 12, 3.15, 6.30 மற்றும் இரவு 9.45.

17ம் தேதி பிற்பகல் 12, 3.15, 6.30, இரவு 9.45.

18ம் தேதி மாலை 4 மணி, இரவு 7.30 மணி.

19ம் தேதி மாலை 4 மணி, இரவு 7.30 மணி.

20ம் தேதி மாலை 4 மணி, இரவு 7.30 மணி.

21ம் தேதி மாலை 4 மணி, இரவு 7.30 மணி.

22ம் தேதி மாலை 4 மணி, இரவு 7.30 மணி.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட நபர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்:

பிரவீன் (703) 798 9974, அல்டாப் ஷெரீப் (410) 369 8801, அணில் காசினேனி (571) 334 9943.

நியூ ஜெர்சியில், சினி பிளாசா தியேட்டரில் 14ம் தேதி படம் திரைக்கு வருகிறது. படக் காட்சி விவரம்

14ம் தேதி மாலை 6, 7:30, 8:30, 9:30.

15ம் தேதி 4:30, 6:30, 8:30, 10:30.

16ம் தேதி 12:30, 2:30, 4:30, 6:30, 8:30, 0:30

17ம் தேதி 12:30, 2:30, 4:30, 6:30, 8:30, 10:30.

18ம் தேதி 6, 8, 9:30.

19ம் தேதி 6, 8, 9:30.

20ம் தேதி 6, 8, 9:30.

21ம் தேதி 6, 8, 9:30

சிவாஜி (தெலுங்கு) திரையிடப்படும் மையங்கள்

அல்பானி, ரோசெஸ்டர், வெர்மாண்ட், மைன், மிஸ்ஸிஸிப்பி, அலபாமா, கான்ஸாஸ், இண்டியானாபோலிஸ், வியாமிங், மோண்டனா, லாஸ் வேகாஸ், பாஸ்டன், விர்ஜீனியா, லாஸ் ஏஞ்சலெஸ், டென்வர், கெண்டகி, நியூ ஓர்லியன்ஸ், மின்னபோலிஸ், சாக்ரமோண்டா, போர்ட்லேண்ட், மில்வாக்கி, மாடிசன், ஓமஹா, இடாஹோ, ஆஸ்டின், சான் ஆண்டோனியா, புளோரிடா.

நியூஜெர்ஸியில் படம் திரையிடப்படும் நேரம்:

15ம் தேதி மாலை 5:30, 9:30.

16ம் தேதி பிற்பகல் 1:30, 5:30, 9:30

17ம் தேதி பிற்பகல் 1:30, 5:30, 9:30

18ம் தேதி இரவு 8:30.

19ம் தேதி இரவு 8:30

20ம் தேதி இரவு 8:30

21ம் தேதி இரவு 8:30

இன்னும் வரும் இந்தப் பட்டியல் ...

-thatstamil-

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply

'சிவாஜி'க்கு கேரளாவிலும் வரிச் சலுகை

சிவாஜி படத்திற்கு கேரளாவில் 10 சதவீத வரி விலக்கு அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி ஜூன் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் மட்டும் 35 மையங்களில் சிவாஜி திரையிடப்படுகிறது. இது ஹாலிவுட் படத்திற்கு இணையான ரிலீஸ் என்று கூறப்படுகிறது.

சிவாஜி படத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கேரளாவிலும் சிவாஜிக்கு வரி விலக்கு கிடைத்துள்ளது.

கேரளாவில் திரையிடப்படும் பிற மொழிப் படங்களுக்கு அங்கு வரி விதிக்கப்படுகிறது. பெருநகரங்களில் திரையிடப்படும் பிற மொழிப் படங்களுக்கு 35 சதவீத பொழுதுபோக்கு வரியும், நகராட்சிகளில் திரையிட்டால் 30 சதவீத வரியும், கிராமப்புறங்களில் 25 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் இது அமல்படுத்தப்படுகிறது. மலையாளப் படங்களுக்கு வெறும் 10 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், சிவாஜி படத்தின் கேரள மாநில விநியோக உரிமையை வாங்கியுள்ள ஜானி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

வரி விதிப்பில் பாரபட்சம் காட்டக் கூடாது, சிவாஜி உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கும் மலையாளப் படங்களைப் போலவே 10 சதவீத வரி விதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சிவாஜி உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கும் 10 சதவீத வரியே விதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் சிவாஜிக்கு 10 சதவீத பொழுது போக்கு வரியே விதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே, சிவாஜியை கர்நாடகத்தில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய அங்குள்ள கன்னட அமைப்புகள் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த இந்த சாதகமான நிகழ்வுகள் காரணமாக சிவாஜி யூனிட்டும், ஏவி.எம். நிறுவனமும் நிம்மதி அடைந்துள்ளன.

-thatstamil-

பிரபல பின்னணிப் பாடகர் மனோ, சிவாஜி தெலுங்குப் படத்தில் ரஜினிகாந்த்துக்குக் குரல் கொடுத்துள்ளார்.

சிவாஜியை தரிசிக்க தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு விசிறிகளும் விறுவிறுப்பாக காத்துள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு சிவாஜி குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

முத்து தெலுங்குக்குப் போனபோது ரஜினிக்காக குரல் கொடுத்தவர் பின்னணிப் பாடகர் மனோ. இப்போது சிவாஜிக்கும் கூட அவரேதான் பின்னணி பேசியுள்ளாராம்.

கமல்ஹாசன் படங்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசுபவர் இன்னொரு பிரபலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவரது குரலின் சாயல் கொண்டவரான மனோ இப்போது ரஜினியின் ஆஸ்தான தெலுங்கு குரலாக மாறியுள்ளார்.

இதுகுறித்து கேட்டபோது மனோ சந்தோஷமாக பேசினார். ரஜினியின் குரலாக மக்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமான விஷயம். நான் அதிர்ஷ்டசாலிதான் என்று சொல்ல வேண்டும்.

ரஜினி சாரின் குரலுக்கு எனது குரல் பொருத்தமாக அமைந்திருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். ரஜினிக்காக குரல் கொடுத்துப் பேசுவதில் எனக்கு எந்த சிரமுமம் இருக்கவில்லை என்றார் மனோ.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

சிவாஜி டப்பிங் முடிந்த பின்னர் ரஜினி சாரிடமிருந்து போன் வந்தது. என்னைப் பாராட்டிப் பேசினார் என்றார் மனோ.

ஷ்ரியாவுக்கு பிரபல பின்னணிக் குரல் நட்சத்திரமான சவீதாதான் குரல் கொடுத்துள்ளாராம். தமிழிலும் இவர்தானாம். பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராய், சிம்ரன், ஜோதிகா என பலருக்கும் குரல் கொடுத்து அவர்களின் நடிப்புக்கு வலு சேர்த்தவர் சவீதா என்பது தெரிந்ததுதானே.

-thatstamil-

அமெரிக்காவில் சிவாஜி - பார்ட் டூ!

அமெரிக்காவில் சிவாஜி திரையிடப்படும் தியேட்டர்களின் 2வது பட்டியல் ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழகத்தில் சிவாஜி ஜூன் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அமெரிக்காவில் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அமெரிக்காவில் சிவாஜியை திரையிடும் உரிமையை பரத் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

அமெரிக்காவில் சிவாஜி எங்கெல்லாம் திரையிடப்டுகிறது என்ற பட்டியலை சில நாட்களுக்கு முன்பு பரத் கிரியேஷன்ஸ் அறிவித்தது. இந்த நிலையில் தியேட்டர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது பரத் கிரியேஷன்ஸ்.

அமெரிக்காவில் சிவாஜி திரையிடப்படும் தியேட்டர்கள் விவரம்

ஆஸ்டின் - ஏ.எம்.சி. தியேட்டர்ஸ் (பார்டன் கிரீக் மால்)

ப்ளூமிங்டன் - ஏ.எம்.சி. தியேட்டர்ஸ் (பார்ட்ன் கிரீக் மால்)

பாஸ்டன் - வெஸ்ட் நியூட்டன் சினிமா, என்டர்டெயின்மென்ட் சினிமாஸ், பெல்மாண்ட் ஸ்டுடியோ.

செடார் ரேபிட்ஸ் - காலக்ஸி.

க்ளீவ்லேண்ட் - பார்மா தியேட்டர்.

சிகாகோ - ப்ளூமிங்டேல் கோர்ட் தியேட்டர்ஸ்.

கொலம்பஸ் - ஸ்க்ரீன்ஸ் ( தி காண்டினென்ட்)

இண்டியானாபோலிஸ் - தி ஹிஸ்டாரிக் ஆர்ட் கிராப்ட், ஐமாக்ஸ் தியேட்டர்.

லிட்டில் ராக் - ரிவர்லாண்ட் 10 மூவிஸ்.

லாஸ் ஏஞ்சலஸ் - லமேல்லே, பிளாசா 3 சினிமாஸ்.

மாடிசன் - வெஸ்ட் கேட் தியேட்டர்.

மில்வாக்கி - ஓக் கிரீக் வேல்யூ சினிமா.

மின்னபோலிஸ் - ப்ரூக் டேல் 8 தியேட்டர்.

நியூ ஹேவன் - சினி 1234

போர்ட்லேண்ட் - கார்னலியஸ் 9 சினிமா.

நியூ ஜெர்சி - சினி பிளாசா (கொலம்பியா பார்க்12)

ரோட்ஸ் ஐலண்ட் - பாட்ரியாட் சினிமாஸ் (ஈஸ்ட் புரவின்ஸ்)

சியாட்டில் - டோடெம் லேக் சினிமா.

சில்வர் ஸ்பிரிங் - பாண்டா ஜி வீட்டன் பிளாசா 11.

செயின்ட் லூயிஸ் வேரன்பர்க் - செயின்ட் சார்ல்ஸ் 18 சினி.

-thatstamil-

அட குட்டி தான் அமெரிக்காவில பட உரிமயாளரோ

நன்றி தகவலுக்கு குட்டி

:P

குரு எனக்கொரு டிக்கட் கிடைக்குமா. :lol:

தாத்தா எனக்கும்

டைனோசரை பார்த்து அனில் குட்டிகள் பயப்படும் நிலைதான் கோடம்பாக்கத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை.

சூப்பர் ஸ்டாரின் நடிப்பு, ஷங்கரின் இயக்கம், ஏ.வி.எம்மின் தயாரிப்பு என 'சிவாஜி' க்கு பூஜை போட்டபோதே அதன் பிரம்மாண்டம் பார்த்து மிரள ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம்.

'சிவாஜி' ரிலீஸ் வரை தங்களது ப்ராஜக்டை தள்ளிப்போட ஆரம்பித்த பட நிறுவனங்கள் பல உண்டு. இரண்டு மாதத்திற்கு முன்பே 'சிவாஜி' ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட, அப்போது ரிலீஸாக வேண்டிய சின்ன பட்ஜெட் படங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.

ஒரு கட்டத்தில் 'சிவாஜி' எப்போது ரிலீஸாகும் என்பது தயாரிப்பு நிறுவனத்துக்கே தெரியாமல் இருக்க, கிடைத்த கேப்பில் வெளியான சிறு முதலீட்டு படங்கள் சிலவும் இருக்கின்றன.

படத்தை வெளியிட தயங்குவது மட்டுமின்றி 'சிவாஜி' ரிலீஸ் நேரத்தில் படபூஜை, பாடல் வெளியீட்டு விழா என நிகழ்ச்சிகள் நடத்த கூட பயந்த பட நிறுவனங்கள் கணக்கிலடங்கா.

ஒருவழியாக 15-ந் தேதி 'சிவாஜி' ரிலீஸாவது உறுதியாக கோடம்பாக்கத்தில் நடந்துக்கொண்டிருந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமும் பிரஸ்மீட்டுகள், சினிமா நிகழ்ச்சிகள் என பரபரப்பாக இருக்கும் கோடம்பாக்கத்தில் கடந்த பத்து நாட்களாக பந்த் நடக்கும் அமைதி. இதற்கெல்லாம் காரணம் 'சிவாஜி' ரிலீஸ் நேரத்தில் தங்கள் படத்தின் செய்தி, கிணற்றில் போட்ட கல்லாகிவிடும் என்ற பயம்தான்.

எது எப்படியோ 15-ந் தேதிக்கு பிறகு கோடம்பாக்கம் மீண்டும் விழாக்கோலம் கண்டுவிடும்.

:blink::huh:

தான் நடித்த சிவாஜி படத்தை முழுமையாகப் பார்த்து ரசித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

15ம் தேதி சிவாஜி திரைக்கு வருகிறது. படம் தொடர்பான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. இயக்குநர் ஷங்கர் ஹாயாக தனது குடும்பத்துடன் கனடாவுக்குப் போய் விட்டார்.

இந்த நிலையில் இமயமலைக்குப் போயிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஊர் திரும்பி விட்டார். வந்ததும் முதல் வேலையாக ஏவி.எம்.ஸ்டுடியோவுக்குப் பறந்தார்.

சிவாஜி படத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று அவர் கூற உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் ஏவி.எம். நிறுவன இணை நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.குகன்.

படத்தை தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோருடன் பார்த்து ரசித்தார் ரஜினி.

படத்தை முழுமையாகப் பார்த்து முடித்து விட்டு வெளியே வந்த ரஜினி எதுவும் பேசவில்லையாம். பென்டாஸ்ட்டிக் என்று மட்டும் சொல்லி விட்டு கிளம்பினாராம்.

2 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வந்த சிவாஜி,தயாரிப்புச் செலவாக ரூ. 85 கோடியை விழுங்கியுள்ளதாம். இதில் ரஜினிக்கு சம்பளம் மட்டும் ரூ. 25 கோடி என்கிறார்கள்.

அடேங்கப்பப்போய்!

-thatstamil-

ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.

ஜூன் 15ம் தேதி சிவாஜி ரிலீஸ் ஆகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுகிறது. சென்னை நகரில் மட்டும் 15 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

சிவாஜி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. அதிகாலையிலேயே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை நகரில் சிவாஜி திரையிடப்படும் தியேட்டர்களில் திருவிழாக் கூட்டம் காணப்பட்டது. காலையில் அடித்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுக்களை வாங்கினர்.

ஜூன் 15ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தமிழகம் முழவதும் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் விற்றுத் தீர்ந்து விட்டதாம்.

ரஜினி ரசிகர்களின் கூட்டத்தால் தியேட்டர்கள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் வந்து ரசிகர்களை விலக்கி விட வேண்டியதாயிற்று.

சென்னை நகரில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியாக டிக்கெட் கவுண்டர்கள் போடப்பட்டிருந்தன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் டிக்கெட் வாங்க அலைமோதியதைப் பார்க்க முடிந்தது.

சத்யம் தியேட்டர் வளாகத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தியேட்டர் வளாகத்தைச் சுற்றிலும் ரசிகர்கள் நிற்கும் அளவு்க்கு கூட்டம் கடுமையாக இருந்தது.

-thatstamil-

இது எல்லாம் அவர் சேர்த கூட்டம் இல்லை அன்பால தானா சேர்ந்த கூட்டம்

:P

தகவலுக்கு நன்றியுங்கோ

சிவாஜியை புறக்கணிக்கவேண்டும் என்று நான் கருத்து எழுத|வேயில்லை டங்கிலாஸ்

நான் திரையில் பார்க்க போகப்போவதுமில்லை. எதிராக நின்று கொடியேந்தி அசைக்கப்போவதுமில்லை.

செய்வதை நன்றே செய்யவேண்டும். மேடையில் உரக்க கத்திவிட்டு மொட்டாக்கு போட்டுக்கொண்டு களவு செய்பவர்கள் நிறையவே இங்கு இருக்கின்றார்கள். அதைவிட மௌனமாக இருந்துவிட்டால் எல்லோருக்கும் நல்லது.

அது சரி இவருக்கும், சிவாஜிக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா? இல்லை சிவாஜி செக்சனில புகுந்து விளையாடுறார் அதுதான்.. அதுசரி அண்ணாச்சி யாரு? முன்னாள் சந்தில் சிந்து விளையாடும் உறுப்பினராச்சே விடுவாரா இதை. <_<

நல்ல நகைச்சுவை. ஒரு படத்தை புறக்கணிப்பதென்றால் அதை எந்தவிதத்திலும் பார்க்காமலிருப்தே புறக்கணிப்பு. நான் தியேட்டரில் பார்க்க மாட்டேன் ஆனால் திருட்டு விசிடியில் பார்ப்பேன் என்பதெல்லாம் அபத்தமாகத் தெரியவில்லையா?? அப்போ இங்கே சிவாஜியுடன் சம்மந்தப்பட்டவர்கள் தான் கருத்து எழுதுகின்றார்களா?? எப்படியான சம்மந்தம்?? அப்ப சிவாஜி திரைப்படைத்தை வாங்கி வெளியிட்டு பணம் பார்த்துக் கொண்டு உம்மைப் போல் பலர் இங்கு சந்திலே சிந்து பாடுகின்றார்கள் என்று சொல்ல வருகின்றீரா?? உந்த சந்திலே சிந்து பாடுகின்ற தன்மை உம்மைப்போல் எனக்கு வராது கண்ணா!! :icon_idea::lol::(:unsure:

இன்று இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினி தானாம்.

நடிப்பிற்காக சம்பளமா ? அல்லது பெயரிற்கும் புகழிற்குமாக சம்பளமா ?

என்ன வசம்பு கெட்ட வார்த்தையில் திட்டுகின்றீர்களா ?

எல்லாம் பெட்டி பெட்டியாகவே இருக்கின்றது..........

நடிப்பிற்காக சம்பளமா ? அல்லது பெயரிற்கும் புகழிற்குமாக சம்பளமா ?

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு.

என்ன வசம்பு கெட்ட வார்த்தையில் திட்டுகின்றீர்களா ?

எல்லாம் பெட்டி பெட்டியாகவே இருக்கின்றது..........

என்ன கெட்ட வார்த்தையா?? :icon_idea::(

ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று எதைக்கூற முனைகின்றீர்கள். ?

அவற்றை அவர் பூர்த்தி செய்கின்றாரா ?

வயதுக்கு மீறிய காட்சிகள் கற்பனைக்கு மீறிய நிகழ்வுகள் என எல்லாமே ஏமாற்றமாகத்தானே அமைகின்றது.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனிற்கு கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அவர் நடிகர்.

ரசிகர்கள் ஓவராக எதிர்பார்ப்பதால்தான் ரஜனிக்கு 25 கோடி தருகிறார்கள்.

85 கோடி ரூபாக்களைத் மீட்டுத் தரப்போகிறவர்கள் அவர்கள்தானே.

சிவாஜி கணேசன் உயிரோடிருந்திருந்தால் இவ்வளவு தொகையை யாரும் கொடுத்திருக்க மாட்டார்கள். காரணம், ரசிகர்கள் தான்.

என்ன கெட்ட வார்த்தையா?? :icon_idea::(

கெட்ட வார்த்தை என்றா என்ன வசம்பண்ணா

:P

http://www.youtube.com/watch?v=MWsjfPpN92o

''''''கிடைக்கிறது கிடைக்காமல் போகாது! கிடைக்காமல் கிடக்கிறது கிடைக்காது! ''''''

அப்படியெண்டு பாக்கப்போனா ஒரு மயிரும் கிடைக்கது

:icon_idea:

மொத்தத்தில் ஒரு பனங்காயும் கிடைக்காது என்று சொல்லுறீங்களா

:P

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.