Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவில்லையென சம்பந்தனிடம் தெரிவித்துவிட்டேன் – மகிந்த!

Featured Replies

புதிய அரசமைப்பு தேவையில்லை

 
புதிய அரசமைப்பு தேவையில்லை
 

புதிய அர­ச­மைப்பு தற்­போது தேவை ­யில்லை என்று தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­த­னி­டம் நேர­டி­யா­கவே தெரி­வித்து, புதிய அர­ச­மைப்­புக்­குத் தனது ஆத­ரவு கிட்­டாது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச.

மகிந்­த­வின் அழைப்­பின் பேரில் கடந்த 29ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை அவ­ரைச் சந்­தித்து புதிய அர­ச­மைப்­புக்கு அவ­ரது ஆத­ரவை சம்­பந்­தன் நாடி­ய­போதே மகிந்த இவ்­வாறு நாசூக்­கா­கக்­கூறி அவ­ரது கோரிக்­கையை நிரா­க­ரித்­தார்.

‘‘எனக்கு எதி­ரா­கக் கெடு­பி­டி­களை விதிக்­கும் இந்த அரசு புதிய அர­ச­மைப்­புக்கு என்­னி­டம் இருந்து எப்­படி ஆத­ரவை எதிர்­பார்க்க முடி­யும்?’’ என்று, இரா.சம்­பந்­த­னிடம் தான் நேர­டி­யா­கவே தெரி­வித்­தார் என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச உத­யன் பத்­தி­ரி­கைக்­குத் தெரி­வித்­தார்.

தனக்­கும் மகிந்­த­வுக்­கும் இடை­யி­லான சந்­திப்பு சுமு­க­மாக நடந்­த­தாக இரா.சம்­பந்­தன் ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­தி­ருந்­தார். புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தைத் தான் எடுத்­து­ரைத்­தார் என்­றும் தமி­ழர்­க­ளும் இணைந்து வரக்­கூ­டிய இந்த வர­லாற்று வாய்ப்­பைத் தவ­ற­வி­டக்­கூ­டாது என்று தான் மகிந்­த­விற்­குத் தெளி­வு­ப­டுத்­தி­னார் என்­றும் சம்­பந்­தன் கூறி­யி­ருந்­தார்.

இந்த நிலை­யில் இந்­தப் பேச்­சுக் குறித்து மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­த­தா­வது:
புதிய அர­ச­மைப்பு குறித்­தும் அதற்கு எனது ஆத­ர­வின் அவ­சி­யம் குறித்­தும் சம்­பந்­தன் விலா­வா­ரி­யாக விளக்­கி­னார். நானும் அதி­லுள்ள சில விட­யங்­கள் குறித்து அவ­ருக்­குத் தெளி­வு­ப­டுத்­தி­னேன்.

புதிய அர­ச­மைப்­புக்­கான அவ­சி­யம் இப்­போது இருப்­ப­தாக எனக்­குத் தெரி­ய­வில்லை. எனது ஆத­ர­வா­ளர்­க­ளை­யும் கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­க­ளை­யும் கைது செய்து எனக்­கெ­தி­ரா­கக் கெடு­பி­டி­களை விதிக்­கும் இந்த அரசு என்­னி­டம் ஆத­ரவை எப்­படி எதிர்­பார்க்­கின்­றது என்­பது தெரி­ய­வில்லை.

எப்­ப­டி­யா­யி­னும், இந்த விட­யத்­தில் என்­னால் தனித்­துத் தீர்­மா­னங்­களை எடுக்­க­மு­டி­யாது என்­பதை அவ­ருக்­குத் தெளி­வு­ப­டுத்­தி­னேன்.

பொது எதி­ர­ணி­யில் அங்­கம் வகிக்­கும் தலை­வர்­க­ளு­டன் பேச்சு நடத்தி அவர்­க­ளின் நிலைப்­பாட்டை முத­லில் நான் அறி­ய­வேண்­டும். அதன் பின்­னரே பதிலை வழங்­க­மு­டி­யும்.

எப்­ப­டியோ சம்­பந்­தன் எனது ஆட்­சிக்­கா­லத்­தில் இப்­படி வந்து மனம்­விட்­டுப் பேசி­யி­ருந்­தால். அப்­போது பல பிரச்­சி­னை­க­ளைப் பேசித் தீர்த்­தி­ருக்­க­லாம். இதை நான் அவ­ரி­டம் நேர­டி­யா­கவே தெரி­வித்­தேன் – என்­றார் மகிந்த.

http://newuthayan.com/story/24537.html

Mahinda-Rajapaksa_2825372b.jpg

புதிய அரசியலமைப்புக்கு தான் ஆதரவளிக்கப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தெரிவித்துவிட்டதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 29ஆம் நாள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவுக்கும், இரா.சம்பந்தனுக்குமிடையில் அரசியலமைப்புத் தொடர்பாக முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்புத் தொடர்பாக இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், தனக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றதெனவும், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததாகவும், தமிழர்கள் இணைந்து வரக்கூடிய இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என தான் மகிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்புத் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பின் அவசியம் தொடர்பாகவும், அதில் எனது பங்களிப்புத் தொடர்பாகவும் இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார். நானும் அதிலுள்ள விடயங்கள் தொடர்பாக எடுத்துரைத்தேன்.

புதிய அரசியலமைப்பின் அவசியம் தற்போது இல்லையென நினைக்கின்றேன். என்மீதும் என்சார்ந்த கட்சி உறுப்பினர்கள், அஅமைச்சர்கள் மீது கெடுபிடிகளை விதித்து கைதுசெய்யும் அரசாங்கம் என்னிடமிருந்து ஆதரவை எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்.

எப்படியிருப்பினும் இந்த விடயம் தொடர்பாக என்னால் தனித்து முடிவெடுக்கமுடியாது. கட்சிக்காரர்களுடன் கதைத்துவிட்டே முடிவெடுக்கமுடியும்.

இருப்பினும், சம்பந்தன் எனது ஆட்சிக் காலத்தில் என்னுடன்மனம்விட்டுப் பேசியிருந்தால் எவ்வளவோ பிரச்சனைகள் தீர்ந்திருக்கும். இதை நான்அவரிடமே நேரில் தெரிவித்தேன் எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=77599

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

இருப்பினும், சம்பந்தன் எனது ஆட்சிக் காலத்தில் என்னுடன்மனம்விட்டுப் பேசியிருந்தால் எவ்வளவோ பிரச்சனைகள் தீர்ந்திருக்கும். இதை நான்அவரிடமே நேரில் தெரிவித்தேன் எனத் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச.... எறிந்த பந்து,  சம்பந்தனிடம் உள்ளது. 
இதற்கு பதில் சொல்லும்... திராணி அவரிடம் உள்ளதா? 

எப்பவும்,  வாயில்... கொழுக்கட்டையுடன் திரியும் சம்பந்தன், எப்படி மனம் திறந்து பேசுவார்.
அந்தாளுக்கு.... நாடி நரம்பெல்லாம், வேறை சிந்தனை.   

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு விளங்கினதோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

மகிந்த ராஜபக்ச.... எறிந்த பந்து,  சம்பந்தனிடம் உள்ளது. 
இதற்கு பதில் சொல்லும்... திராணி அவரிடம் உள்ளதா? 

எப்பவும்,  வாயில்... கொழுக்கட்டையுடன் திரியும் சம்பந்தன், எப்படி மனம் திறந்து பேசுவார்.
அந்தாளுக்கு.... நாடி நரம்பெல்லாம், வேறை சிந்தனை.   

தங்கள் பிழைப்பிற்கும் பதவிக்கும் கொப்பு கொப்பாக தாவும் குரங்குகள்.
அரசியல் மூலமே தீர்வு என கூறி ஒரு ஒரு போராட்டத்தை அழிக்க துணைபோன நாதாரிகள் இவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றீர்கள்?tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தங்கள் பிழைப்பிற்கும் பதவிக்கும் கொப்பு கொப்பாக தாவும் குரங்குகள்.
அரசியல் மூலமே தீர்வு என கூறி ஒரு ஒரு போராட்டத்தை அழிக்க துணைபோன நாதாரிகள் இவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றீர்கள்?tw_angry:

35 வருடமாக.....  குருவி கூடு   கட்டுவதைப்   போல்... 
ஒவ்வொன்றாக...  சேர்த்து.... கட்டிய  விடுதலைப் புலிகளை,
இரத்தமும், சதையுமாக பார்க்க வைத்த... ஆட்கள் இவர்கள்.

தமது  நய  வஞ்சக அரசியல் மூலம், இன்னும்... லாபம் பார்க்க தான் பார்க்கிறார்கள்.

உலகத்  தமிழினத்தை,  பூண்டோடு அழிக்க...  
தமிழ் நாட்டுக்கு, ஒரு  கருணாநிதி....   ஈழத்துக்கு ஒரு  சம்பந்தன்...
இதனை... வரலாறு , என்றுமே... சொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.