Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரை விசாரணைக்கு அழைத்தால் முன்னாள் போராளிகளை கைது செய்யவேண்டுமாம்?

Featured Replies

இராணுவத்தினரை விசாரணைக்கு அழைத்தால் முன்னாள் போராளிகளை கைது செய்யவேண்டுமாம்?

 
இராணுவத்தினரை விசாரணைக்கு அழைத்தால் முன்னாள் போராளிகளை கைது செய்யவேண்டுமாம்?

இராணுவத்தினரின் போர்க் குற்றங்களை விசாரிக்க பொன்சேகா கோருவாராயின் விடுவிக்கப்பட்ட 12ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்ய வேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் மட்டுமா போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்? விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன், அடேல் பாலசிங்கம், விநாயகம் ஆகியோரும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12,000 முன்னாள் போராளிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையா? தனிப்பட்ட ரீதியில் குப்பைகளை பொன்சேகா கிளறக்கூடாது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது ஒரு விரலை நீட்டினால் மீதி நான்கு விரல்களும் தன் பக்கம் தான் திரும்பியுள்ளன என்பதை சரத் பொன்சேகா மறந்து விடக்கூடாது என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனவே பொன்சேகா தனது நற்பெயரைக் கெடுத்து அடுத்தவர்கள் மீது விரல் நீட்டக்கூடாது. மீதி நான்கு விரல்களும் தன்னை நோக்கியே திரும்பி உள்ளன என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/he-former-soldiers-should-be-arrested

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிட்டினம் நாடு நாடாய் பறந்தவையல் இப்ப யோசிக்கினம் .எல்லாம் அம்பான்தோட்டை செய்த மாயம் .

  • கருத்துக்கள உறவுகள்

அவயளத் தான் உள்ள வைச்சு விசாரிச்சு விட்டாச்சே....

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல.. சிங்களப் படைகளால்.. திட்டமிட்டு.. சர்வதேச வேண்டுகோள்களையும் மதிக்காமல்.. நிகழ்த்திய..மனித இனப்படுகொலைகளை நியாயப்படுத்திக் கொண்டு திரியும் இவரை.. உள்ள வைச்சு விசாரிக்கனும். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

அவயளத் தான் உள்ள வைச்சு விசாரிச்சு விட்டாச்சே....

ஓம்..உண்மைதான்....ஆனால் இன்னுமொருக்கால் விசாரிக்க வேண்டி வரும் எண்டு சொல்லித்தானே கையெழுத்து வாங்கிக்கொண்டு ஆக்களை வெளியிலை விட்டனாங்கள் எண்டால்!!!!!!!!!
இதுக்கு என்ன சொல்லுவியள்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஓம்..உண்மைதான்....ஆனால் இன்னுமொருக்கால் விசாரிக்க வேண்டி வரும் எண்டு சொல்லித்தானே கையெழுத்து வாங்கிக்கொண்டு ஆக்களை வெளியிலை விட்டனாங்கள் எண்டால்!!!!!!!!!
இதுக்கு என்ன சொல்லுவியள்? :cool:

சீனாக்காரன் இடம் போனால், உது, உந்த யுத்தக் குத்த விசாரணை சனியன் வேற ...

போக்காட்டில்.... கடன், காசு பிரச்னை....

என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல... 

புத்தர் கண்ணை திறக்க வேணுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.