Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் சிங்களவருடன் வசித்த விக்கி வடக்கில் சிங்களவரை எதிர்ப்பது ஏன்?

Featured Replies

கொழும்பில் சிங்களவருடன் வசித்த விக்கி வடக்கில் சிங்களவரை எதிர்ப்பது ஏன்?

கேள்வி எழுப்புகிறார் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

 

கொழும்­பில் கற்று பல வரு­டங்­க­ளாக சிங்­க­ள­வர்­க­ளு ­டன் வாழ்ந்த வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன், வடக்­கில் சிங்­க­ள­வர்­க ­ளுக்கு இட­மில்லை என்று கூறு­கின்­றார். அவ்­வாறு தெரி­விப்­ப­தற்கு அவர் யார் ? இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்­ளார் ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர.

முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தலை­மை­யில் கடந்த புதன் கிழமை, வெளிச்­சம் அமைப்­பின் ஆரம்ப நிகழ்வு நடை­பெற்­றது.

அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய சரத் வீர­சேக மேலும் தெரி­வித்­த­தா­வது:
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன், நாக­தீ­பத்­தில் விகாரை அமைப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­விக்­கின்­றார்.

வடக்­கில் புத்­தர் சிலை வைப்­ப­தற்கு கிளி­நொச்­சி­யில் ஊர்­வ­லம் செல்­கின்­றார்­கள். இந்த நாட்­டில் உள்ள அனை­வ­ருக்­கும் எந்த இடத்­திற்­கும் சென்று நிம்­ம­தி­யாக வாழ வேண்­டும் என்­பதே எமது முக்­கிய கட­மை­யாக இருந்­தது. தற்­போது வடக்­கில் சிங்­க­ள­ வர்­கள் வாழ்­வ­தற்கு எந்த உரி­மை­யும் இல்லை என்று விக்­னேஸ் ­வ­ரன் தெரி­விக்­கின்­றார்.

விக்­னேஸ்­வ­ரன் யார்? கொழும்­பில் ரோயல் கல்­லூ­ரி­யில் கல்வி கற்று, பல வரு­டங்­க­ளாக சிங்­க­ள­வர்­க­ளு­டன் வாழ்ந்து விட்டு தற்­போது வடக்­கிற்­குச் சென்று சிங்­க­ள­வர்­க­ ளுக்கு இங்கு இட­மில்லை என்று கூறு­கின்­றார்.

சிங்­கள இளை­யோரை திரு­ம­ணம் செய்து கொள்ள வேண்­டாம் என்று வடக்­கில் உள்ள தமிழ் இளை­யோ­ருக்கு அறி­வுரை வழங்­கு­கின்­றார். ஆனால் இவ­ரது இரு புதல்­வர்­க­ளும் திரு­ம­ணம் முடித்­தி­ருப்­பது சிங்­கள இளை­யோ­ரைத்­தான் என்­பதை அவர் மறந்து விட்­டார் – – என்­றார்.

http://newuthayan.com/story/27108.html

  • கருத்துக்கள உறவுகள்

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேசு­வ­ரன் அவர்களைப் பேட்டிகண்டு, அட்மிரல் சரத் வீரசேகரவின் கேள்விக்கான விடையையும் அறிந்து, அதனையும் சேர்த்து உதயன் வெளியிடாத காரணம் என்ன...??      

  • கருத்துக்கள உறவுகள்

ரியல் அட்மிரலுக்கு புரியவில்லையா? புரியாமாதிரிக் கேட்கிறாரா? சிங்களவர்களைக் குடியேற்றி இனப்பரம்பலைக் கிழக்கைப்போல் மாற்றியமைக்கக்கூடாது என்பதோடு தமிழரது வாழ்விடங்களை அபகரிப்பதையும் அவர்எதிர்க்கிறார். 

இனவாதிகளும் இனப்படுகொலையாளரும் கூட்டிணைந்து வேறெதைப்பற்றித்ததான் பேசுவார்கள்.! 

வட-கிழக்கு என்பது தமிழரது பாரம்பரிய வாழ்விடமாகும் என்பதை ஏற்றுக்கொண்டு  சிங்கள இனவாதத்தைக்களைந்துவிட்டு உண்மையாகப் பேசுங்கள்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பின் அபிவிருத்தியிலாகட்டும்  பொருளாதார, ராஜதந்திர எந்த முன்னேற்றத்திலாகட்டும் தமிழன் பாரிய  பங்குண்டு. அதை விட தமிழன் யாரின் காணியையோ, உரிமையையோ பறிக்கவுமில்லை. வடக்கில் சிங்களவன் நட்டானா, நீர் விட்டானா, காவல் இருந்தானா? அவனுக்கேன் விகாரைவடக்கில்? வழிபடுவதற்கா? ஆக்கிரமிப்பதற்கா? தமிழன் பிரதேசத்தில் அவனுக்கு சுதந்த்திரமாய் வாழ வழியில்லை உங்களுக்கு விகாரை கேக்குது. இது நல்ல பகிடி. எங்கள் முதல்வர் எங்கள் பிரச்சனை கதைக்காமல் நீங்கள் செய்வதை எல்லாம் கண்டு கொள்ளாமல் உங்களை பாராட்ட வேணும்  என்று எதிர் பார்ப்பது உங்கள் மடமை. எல்லாரையும் ஒன்றாக கணக்கிடாதீர்கள்.

அவர் எங்கே கற்றாலும், வாழ்ந்தாலும் தன் பணத்திலும்,சொந்த  முயற்சியிலும்தான் கற்று வாழ்ந்திருப்பார். அவர் சொல்வதை அரைகுறையாய் விளங்கி, எதை சொல்லி, எதை விளங்கி எதை சாதிக்கப் போகிறார் இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்­பில் கற்று பல வரு­டங்­க­ளாக சிங்­க­ள­வர்­க­ளுடன் வாழ்ந்த வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேசு­வரன் அவர்கள் சிங்­க­ள­வர்­களின் நிர்வாகத்தின்கீழ் சிங்கள மரபுவழிகளுக்கும், அவர்களின் பாரம்பரியங்களுக்கும், கட்டமைப்புகளுக்கும் இடையூறின்றி அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தார். அதுபோலச் சிங்களவர்களும் ­தமிழர்­களின் நிர்வாகத்தின்கீழ் தமிழ் மரபுவழிகளுக்கும், தமிழரின் பாரம்பரியங்களுக்கும், கட்டமைப்புகளுக்கும் இடையூறின்றி வாழ்வதற்கு எந்தத் தடையும் வரப்போவது இல்லை. இலங்கை சதந்திரம் அடைவதற்கு முன்பு தமிழ்ப் பகுதிகளிலும், குறிப்பாகப் பண்டாரநாயக்க யுகம்வரையில், சிங்களவர்கள் தமிழர் பகுதிகளில் தமிழரோடு சேர்ந்து வாழ்ந்த சரித்திரங்கள் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.