Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“எனக்கு கோபமூட்டாதீர்கள்’’

Featured Replies

“எனக்கு கோபமூட்டாதீர்கள்’’

image_238e3db1a2.jpg(படம்: தமித் விக்கிரமசிங்க)

நாம் தவறு செய்யவில்லை. எனக்கு கோபமூட்டாதீர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் இன்று (11) தெரிவித்தார்.

சிறைத் தண்டனைப் பெற்று,சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவையும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவையும் பார்வையிடுவதற்காக சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே கோபத்தில் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

“சில் ஆடைகளை வழங்குமாறு நானே பணிப்புரை விடுத்தேன். அது தவறல்ல. மக்களிடமிருந்து கிடைத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே நான் பணிப்புரை விடுத்தேன். தேர்தலை நோக்காகக் கொண்டு அவை விநியோகிக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் காலத்தில் விநியோகிக்கப்பட்டமையினாலேயே தண்டனைக்கு ஆளாக வேண்டிவந்தது” என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/எனக்கு-கோபமூட்டாதீர்கள்/175-203588

  • தொடங்கியவர்

உத்தரவு பிறப்பித்தது நானே! என்னை கோபப்படுத்தாதீர்கள்!! – மகிந்த கொதிப்பு

 

இது என்னால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் தானே. நீங்கள் என்னை கோபப்படுத்தாதீர்கள். இதனை ஊடக கண்காட்சியாக்குவதே உங்களது எதிர்பார்ப்பு. இத்தோடு முடித்துக்கொள்வோம். இதனை பெற்றவர்களும் எதிர்காலத்தில் குற்றவாளியாகலாம். – இவ்வாறு சினத்துடன் தெரிவித்துள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.

கடந்த அரச தலைவர் தேர்தல் காலத்தில் சில் துணிகளை அரச நிதியில் வழங்கிய விவகாரத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று சிறைக்குச் சென்று சந்தித்தார்.

அதன்பின்னர் ஊடகங்களுகளின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு சினத்துடன் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டது.

இது குற்றமில்லை. இதுவொரு குற்றம் என்பதை உருவாக்கப்பார்க்கின்றனர். எமது நாட்டில் இதுவொரு சம்பவமல்ல. 10 அல்லது 8 விடயங்களுக்கான உத்தரவுகளை எழுதி அவர்களுக்கு வழங்கியதோடு அதற்கான நிதியையும் வழங்கியிருந்தேன். இது மக்களிடம் இருந்து கிடைத்த கேள்வியாகும். இந்த எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கி நடவடிக்கை எடுத்தோம். மாறாக தேர்தலுக்காக எடுத்த முடிவல்ல.

இது எனது உத்தரவு. ஆனால் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. ஆனாலும் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளனர். மேன்முறையீடு செய்ய எமக்கு உரிமையிருக்கிறது. இதில் எவருக்கும் தர்க்கம் செய்வதற்கான சட்டச்சிக்கல்கள் காணப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

http://newuthayan.com/story/27890.html

 

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி பணத்தில் Helping Hambantota நிதியத்தையே ஆட்டயப் போட்டவர், அரச பணத்தில் கொடுத்தது தவறல்லவாம்.

பயந்திட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

 

 

லைட்டா தண்ணி தான். குறை நினைக்க கூடாது.

பக்கத்தில வெள்ளை வேட்டிக் கள்வர் நிக்கிறார். குறுந்தாடியோட.... அப்பாவியா. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Nathamuni said:

லைட்டா தண்ணி தான். குறை நினைக்க கூடாது.

பக்கத்தில வெள்ளை வேட்டிக் கள்வர் நிக்கிறார். குறுந்தாடியோட.... அப்பாவியா. 

அங்காலை சந்திரிக்கா காலத்திலை சாக்கு சாக்காய் தீர்வுப்பொதி எழுதினவரும் நிக்கிறார் எல்லே ....tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அங்காலை சந்திரிக்கா காலத்திலை சாக்கு சாக்காய் தீர்வுப்பொதி எழுதினவரும் நிக்கிறார் எல்லே ....tw_blush:

அவர்தான் இவையன்ற 'சட்டமேதை'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.