Jump to content

ஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்?


Recommended Posts

ஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்?

 

ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம் என்று பிரிட்டனில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழக்கிறார்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழக்கிறார்கள்

முதுமையை நெருங்குவது ஆண்களுக்கும், ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருப்பது பெண்களுக்கும் பாலியல் ஆர்வத்தைக் குறைக்கிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, உடல் நலக் கோளாறுகளும், உணர்வுப்பூர்வமான நெருக்கமின்மையும், இரு பாலைச் சேர்ந்தவர்களுக்கும் பாலியல் ஆர்வம் குறையக் காரணமாக உள்ளது.

5,000 ஆண்கள் மற்றும் 6,700 பெண்கள் கலந்துகொண்டஇந்த ஆய்வின் முடிவுகள் பி.எம்.ஜே ஓபன் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பாலியல் ஆர்வத்தில் உள்ள கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்போது, வெறும் மருந்துகளை மட்டும் நம்பாமல், ஒரு மனிதரின் மற்ற பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் இழப்பது எப்போதுமே அசாதாரணமானதாக இருக்க வேண்டியதில்லை என்று கூறும் பாலியல் சிகிச்சை நிபுணர் அமந்தா மேஜர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தேவைகள் வேறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளதாகக் கூறுகிறார்.

'வலியும் வேதனையும் நிறைந்தது'

"சிலருக்கு பாலியல் ஆர்வம் குறைவது இயல்பானதாக இருக்கலாம். சிலருக்கு இது வலியையும் வேதனையையும் உண்டாக்கலாம்," என்கிறார் அவர்.

ஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழக்கிறார்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஆண்களில் 15% பெரும், பெண்களில் 34% பேரும் கடந்த ஆண்டில் 3 மாதம் அல்லது அதற்கும் அதிகமான காலம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆர்வம் இல்லாமல் இருந்ததாகக் கூறியுள்ளனர்.

ஆண்களுக்கு 35 - 44 வயதிலும், பெண்களுக்கு 55 - 64 வயதிலும் பாலியல் ஆர்வமின்மை மிகவும் அதிகமாக உள்ளது.

ஆனால், மாதவிடாய் நின்றுபோவது பெண்களுக்கு பாலியல் ஈர்ப்பு குறைவதற்கான காரணம் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று சௌத்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

தங்கள் குடும்பங்களில் இளம் குழந்தைகளைக் கொண்டுள்ளது, பெண்களுக்கு பாலியல் ஆர்வத்தைக் குறைப்பதற்கான காரணமாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மோசமான உடல் மற்றும் மன நலம், தங்கள் துணையுடன் போதிய தகவல் பரிமாற்றம் இல்லாதது, பாலுறவின்போது உள ரீதியிலான பிணைப்பு இல்லாதது ஆகியன பெண்கள் ஆர்வம் இழக்கக் காரணங்களாக உள்ளன.

Couple arguing on their bedபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழக்கிறார்கள்

பிரிட்டனில் நடைபெற்ற பாலியல் மனநிலை மற்றும் வாழ்க்கை முறை குறித்த தேசிய கணக்கெடுப்பில், தங்கள் துணையுடன் பாலியல் விடயங்கள் குறித்து பேசுவது எளிமையானது என்று கருதியவர்கள் ஆர்வம் குறைந்துள்ளதாகக் கூறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்துள்ளது.

தங்கள் உறவில் மகிழ்ச்சியாக இல்லாதவர்கள், பாலியல் பிரச்சனைகள் உடைய துணைகளைக் கொண்டவர்கள் ஆகியோர் அதிகம் ஆர்வமின்றி காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சம அளவிலான பாலியல் ஆர்வம் இல்லாதது, ஒரே மாதிரியான பாலியல் ரீதியான விருப்பு வெறுப்புகள் இல்லாத துணைகள் ஆகியன பெண்கள் ஆர்வமிழக்கக் காரணமாக இருந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது.

  •  

"இந்த ஆய்வு மூலம் ஆண்களும் பெண்களும் பாலியல் ஆர்வம் குறைந்து இருப்பதற்கான காரணங்கள் மற்றும் அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன," என்று சௌத்ஹாம்ப்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிந்தியா கிரகாம் கூறியுள்ளார்.

'ஃபிலிபான்செரின்' எனப்படும் பெண்களின் பாலுணர்வைத் தூண்டுவதற்காக மருந்துக்கு முதல் முறையாக அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

line break

மீண்டும் பாலியல் ஆர்வத்தைத் தூண்ட என்னவழி?

  • பாலியல் ஆர்வத்தை இழக்கத் தொடங்கும் ஆரம்ப காலத்திலேயே உங்கள் துணையுடன் இதுகுறித்துப் பேசுங்கள். பேசுவதில் தயக்கம் இருந்தால், அதை எது தடுக்கிறது என்று சிந்தியுங்கள்.
  • உறவு கொள்வதில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தாமல் கைகளை பற்றிக்கொள்ளுதல், வருடுதல், அணைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட நெருக்கமாவதற்கான மற்ற வழிகளையும் கையாளுங்கள்.
  • உங்கள் துணையின் தேவையைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் மதிப்பதாகவும் முக்கியமானவராக நினைப்பதாகவும் உணர வையுங்கள்.
  • பாலியல் சிகிச்சை நிபுணரையோ, உளவியல் ஆலோசகரையோ, பொது மருத்துவரையோ அணுகித் தீர்வு காணுங்கள்.
  • பாலியல் உறவு இல்லாதபோதும், உங்கள் துணையின் விருப்பத்துடன், மனம் சோராமல் தளர்வாக இருப்பதும் நன்று.
 

 

http://www.bbc.com/tamil/science-41264558

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனுக்கு ஒருத்தி என்பது....மனிதன் தனக்குத் தானே...தனது தேவைகளுக்காக...வரைந்து விட்ட கோடு!

மனிதனுக்கு மிகவும் நெருங்கியது mountain Gorilla  என்று சொல்கின்றார்கள்!  99 %  வீதமான அளவுக்கு...உயிரணுப் பொருத்தம் உள்ளதாகச் சொல்கிறார்கள்!

ஆனால் ஒரு கூட்டத்துக்கு..ஒரே ஒரு கொரில்லா தான் தலைமை தாங்குகின்றது!

அதாவது பல பெண்களுக்கு...அது தான் பொறுப்பாக உள்ளது!

இன்னொரு கொரில்லா...அந்த இடத்துக்கு வரவேண்டுமெனில்...அது முதலாவதுடன் சண்டையிட்டு...அதனைத் தோற்கடிக்க வேண்டும்!

அதன் காரணம்...வலியது வாழ்வதும்...மெலியது வீழ்வதுமேயாகும்!

அப்படிப் பார்த்தால்...மேலேயுள்ள ஆய்வின் முடிவுகள் மிகவும் சரியானவை போலத் தான் உள்ளது!

 

வசந்தமாளிகை..படத்தில சிவாஜி கணேஷன் பேசிய ஒரு வசனம் இன்னும் நினைவில் உள்ளது!

 

சரின்னு சொன்னா....யாரென்னாலும் விடக் கூடாது!

வேணான்னு சொன்னா....விலைமாதா இருந்தாலும்...தொடக்கூடாது!tw_dizzy:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் மனம்தான் அனுபவிக்கின்றது. உடல் அதற்கு ஒரு காரணி மட்டுமே. ஒரு பதார்த்தத்தை வேக வைக்க நெருப்பு போதும்.ஆனால் அந்த நெருப்பை சிதறாமல் ஒருமுகப்படுத்திக் கொடுக்க அடுப்பு அவசியம் மட்டுமல்ல,  நல்லதாகவும் பலமானதாகவும் இருக்க வேண்டும்.அந்த அடுப்புத்தான் உடல்.குறைந்தது 40 % உடல் ஆரோக்கியமாய் இருந்தால்கூட போதும் திருப்தியாக வாழ்ந்து விட முடியும். கனவுக்கன்னி என்று சொல்கிறார்களே அவர்கள் என்ன கூட வந்து இருந்திட்டுப் போகிறார்களா என்ன....! உங்களின் மனையாளுடன் கண்களால் பேசுங்கள், கைகளால் ஸ்பரிசியுங்கள், சின்ன சின்ன முத்தங்கள் போதும் ஜோராய் வாழ்ந்துட்டு போவீர்கள்....!  tw_blush:

 பி.கு:  இந்த டெக்னிக் துணைவி, இணைவிகளுக்கு சரிவராது, அவர்கள் இன்னும் அதிகமாய் எதிர்பார்ப்பார்கள் அது உங்களால் முடியாமலும் போகலாம்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தெரியாமல் எட்டிப்பார்த்து வாசித்து விட்டன் :10_wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
    • வோல்ஸ்ரிட் ஜெனர்ல்ட் இல் ட்ரம்பின் தற்காலிக போர் நிறுத்த முன்வடிவம் பற்றி கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதன் படி அமெரிக்கா தொடர்ச்சியாக உக்கிரேனுக்கு அயுத வழங்கும் எனவும் அதற்கு கைமாறாக உக்கிரேன் 20 ஆண்டுகள் நேட்டோவில் இணையமாட்டேன் என உறுதிப்பிரமானம் எடுக்கவேண்டும் எனவும், அது தவிர இரஸ்சியா தற்போது ஆக்கிரமித்துள்ள பகுதிகளை இரஸ்சியா உரிமை கொள்ளலாம் இரண்டு நாட்டுக்குமிடையே 800 மைல்கள் உள்ள இராணுவ அற்ற வலயத்தினை அமெரிக்க கூட்டாளிகள் கண்காணிப்பார்கள். இதனை உக்கிரேன் ஒப்புக்கொள்ளாவிட்டால் உக்கிரேனுக்கான ஆயுத வழங்கல் நிறுத்தப்படும், மறுவளமாக இரஸ்சியா ஒப்புக்கொள்ளாவிட்டால் உக்கிரேனுக்கு அதிக ஆயுதம் வழங்கப்படும். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://meduza.io/en/news/2024/11/07/wsj-reports-that-trump-is-reviewing-ukraine-peace-plan-options-that-cede-all-occupied-territory-to-moscow-suspend-nato-expansion-and-create-dmz https://kyivindependent.com/trump-ukraine-plan-wsj/ இதனை இரஸ்சியா ஏற்றுக்கொண்டால் இலங்கையில்  நோர்வே பேச்சுக்காலத்தில் ஒரு தரப்பினை பலப்படுத்தி அதற்கான கால அவகாசத்தினை பேச்சுவார்த்தை என்பதன் மூலம் பெற்றுக்கொண்டு பின்னர் போரினை ஆரம்ம்பித்து மறு தரப்பினை தோற்கடித்தது போல ஒரு சூழ்நிலை உருவாகும்.  மறுவளமாக இரஸ்சியா 2022 முன்னர் செய்த ஒப்பந்தத்தினை ஏற்று கொள்ள விரும்பும் அதற்காக தற்போது கைப்பற்றிய இடங்களையும் விட்டுக்கொடுக்கும், உக்கிரேன் நிரந்தரமாக நேட்டோவில் இணைய கூடாது உக்கிரேன் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேணப்பட வேண்டும் எனும் நிபந்தனைகளை வலியுறுத்தலாம். அது உக்கிரேனும் அணுகூலம் இரஸ்சிய பாதுகாப்பிற்கும் அனுகூலம் எல்லையில் மேற்கு நாட்டு அமைதி படைகளை அனுமதிப்பது என்பது இரு நாடுகளுக்கும் ஆபத்தான விடயமாகும். இவற்றை பார்க்கும் போது போர் முடிவடையாது இன்னும் மோசமாக தொடர்வதற்கே வாய்ப்பு அதிகம், பைடன் அரசினை விட ட்ரமின் ஆட்சிக்காலத்தில் போர் மேலும் உலகெங்கும் தீவிரமடையலாம்.
    • இராசவன்னியர் அவர்களின் மகன் திலீபனுக்கும், மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துகள்1!
    • அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின்(Donald trump) பதவியேற்பதற்கு முன்னதாக, உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை பாதுகாப்பு உதவியாக வழங்க வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் அரசாங்கத்தை வலுப்படுத்தும் நம்பிக்கையுடன், ஜோ பைடன்(Joe Biden) ஜனவரி மாதம் பதவி விலகுவதற்கு முன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளை மாளிகை தொடர்பிலும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் கீழ் ஜனாதிபதி உக்ரைன் வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கத்திற்கான ஆதரவின் எதிர்காலம் தொடர்பிலும் கடந்த காலங்களில் ட்ரம்ப் விமர்சித்திருந்தார். பைடனின் உதவி இதில் உக்ரைனுக்கான பைடனின் உதவியை ட்ரம்ப் மேற்கோள்காட்டியிருந்தார். மேலும், கடந்த ஆண்டு இடம்பெற்ற சந்திப்பொன்றில் உக்ரைன் - ரஷ்ய மோதல் அமைதிபெற ஜெலன்ஸ்கி விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். உக்ரைன் அரசாகங்ம் எனினும் அதை உக்ரைன் அரசாங்கம் மறுத்திருந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகளை புதிய அமெரிக்க ஜனாதிபதி கட்டுபடுத்தினால் உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://tamilwin.com/article/us-ready-to-provide-aid-to-ukraine-1730957383#google_vignette
    • வாழைச்சேனை காகித ஆலையா? எனது பெரியப்பாவும் இதே போன்ற காரணங்கள் ஓய்வு பெறும் வயது வர முதலே வேலையை விட்டிட்டார். மண்வாசம் புலம்பெயர்ந்து அங்கு பிறந்தாலும் ஈர்க்கிறதோ!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.