Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலி வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது

Featured Replies

போலி வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது

 

 

யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போலி கனேடிய நாணயத்தாள்களுடன் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

canada-money.jpg

குறித்த இருவரிடமிருந்து சுமார்  13 இலட்சம் ரூபா பெறுமதியான கனேடிய நாணயத் தாள்களையும் 2 கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

குறித்த போலி கனேடிய நாணயத்தாள்கள்  பாகிஸ்தானில்  அச்சடிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/24748

  • தொடங்கியவர்

போலி கனேடிய நாணயதாள்களை மாற்ற முயன்றவர் கைது – யாழில் பரபரப்பு!!

 

  •  

10 ஆயிரத்து 100 பெறுமதியான கனேடியன் டொலர் போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது யாழ்.நகரில் உள்ள நாணய மாற்று நிலையத்துக்கு இளைஞர் ஒருவர் 10 ஆயிரத்து 100 ரூபா பெறுமதியான கனேடியன் டொலர் நாணய தாளை மாற்றக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த இளைஞரால் கனேடியன் டொலர் நாணயத் தாள்கள் போலி என கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பில் யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வு பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற புலனாய்வுப் பிரிவினர், நாணயம் மாற்றுவதற்கு வந்த இளைஞரைக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சித்தன்கேணிப் பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரே அவற்றை மாற்றிக்கொண்டு வருமாறு கொடுத்தார் என்று தெரியவந்தது.

அதையடுத்து சித்தன்கேணிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகரும் போலி நாணயங்களை மாற்ற வந்த நபரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

http://newuthayan.com/story/30785.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

குறித்த போலி கனேடிய நாணயத்தாள்கள்  பாகிஸ்தானில்  அச்சடிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னர் 1990 முஸ்லீம்கள் இடம்பெயர்வின் போதும் பல நூறு பாகிஸ்தான் பாஸ்போட்டுக்கள் காணப்பட்டன.

இப்ப மீண்டும்................ பாகிஸ்தான் உலகத் திருட்டு நாடு. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரையே இதை வைச்சு ..வான்கிடுவாங்கண்ணே.......அதுதான் அந்த டம்மி  கதைக்குது

  • தொடங்கியவர்

போலி கனேடிய டொலர்கள்..

 

 

போலி கனேடிய டொலர்கள்..

September 21, 2017  

 
10 ஆயித்து 100 கனேடியன் டொலர் போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவர் இன்று (21.09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

யாழ். நகரில் உள்ள நாணயமாற்று நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் 10 ஆயிரத்து 100 கனேடியன் டொலர் கள்ள நாணயங்களை மாற்றுவதற்கு கொண்டு சென்றுள்ளார்.

நாணயமாற்று சேவை பிரிவில் உள்ள இளைஞரினால் கனேடியன் டொலர்கள் அனைத்தும் போலி நாணயங்கள் என கண்டறியப்பட்டதை தொடர்ந்து யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற புலனாய்வுப் பிரிவினர், நாணயம் மாற்றுவதற்கு வந்த இளைஞரை கைதுசெய்ததுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சித்தன்கேணிப் பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் போலி நாணயங்களை மாற்றிக்கொண்டு வருமாறு தந்ததாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சித்தன்கேணிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகரும் போலி நாணயங்களை மாற்ற வந்த நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், இவை சந்தேகநபர்களால் அச்சிடப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றதுடன், 10 ஆயிரத்து 100 கனேடியன் டொலரும் இலங்கை ரூபாவின் மதிப்பின் பிரகாரம் சுமார் 13.5 இலட்சம் ரூபா என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=2593&mode=head

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.