Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய சட்டமூலத்தில் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Featured Replies

புதிய சட்டமூலத்தில் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

 

 

புதிய அரசியல் சட்டமூலத்தில் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

5_Prez.jpg

பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் சட்டமூலம் பற்றி ஜனாதிபதி இன்று குறிப்பிட்டார். 

இதன்போது, 72ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பௌத்த சமயத்துக்கான முன்னுரிமைத் தன்மையிலும் எதுவித மாற்றமும் புதிய சட்டமூலத்தில் கொண்டுவரப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/25087

  • தொடங்கியவர்

புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையில் சமஷ்டி எண்ணக்கரு வெளிப்படுத்தப்படவில்லை – ஜனாதிபதி

maithri-2.jpg

புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் சமஷ்டி எண்ணக்கரு எவ்விதத்திலும் வெளிப்படுத்தப்படவில்லையென ஜனாதிபதி   தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான எந்தவொரு அரசியலமைப்பையும் தயாரிக்க தான் இடமளிக்கப்போவதில்லை எனவும் தற்போதிருக்கும் அரசியலமைப்பில் பௌத்த சமயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு உறுப்புரையையும் நீக்குவதற்கோ, குறைப்பதற்கோ இடமளிக்கப்பட மாட்டாதெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே  ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேன   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான முன்மொழிவுகளில்  நாட்டை பிரிக்கும் விடயங்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லையென குறிப்பிட்ட ஜனாதிபதி    புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பில் எந்தவொரு வரைபும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பதுடன் அனைவரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் பெறப்பட்டு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை  அனைத்து துறைகளிலும் கலந்துரையாடி, விவாதித்து, மீளாய்வு செய்ய வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல்,  நிலையான சமாதானத்தை பேணுதல், மீளவும் போர் ஏற்படாதவாறு அனைத்து இனத்தவரிடையேயும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் முதன்மை கவனம் செலுத்தி செயற்படுவதாகவும் ஜனாதிபதி   தெரிவித்தார்.

மீளவும்  போரொன்று  ஏற்படும்  என்ற  கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டால் கூட  நாடு  இருண்ட  யுகத்துக்கு  தள்ளப்பட்டுவிடும்  என   தெரிவித்த ஜனாதிபதி   அவ்வாறான எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படாதவாறு அனைத்து இனங்களிடமும் சகவாழ்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பாடுபடுவதுடன், அந்த முயற்சிகள் வெற்றிபெறுவதற்கு   ஒரே  மேசையில் ஒன்றுகூடி கலந்துரையாடுமாறு பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதத்தலைவர்களை வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/43179

  • தொடங்கியவர்

இடைக்கால அறிக்கையில் சமஷ்டி பரிந்துரை இல்லை

G26-6c621a2d722c6e5938437a41dfa1f09d0ab99a49.jpg

 

நாடுபிளவுபட இடமளியேன் என்கிறார் ஜனாதிபதி

(ரொபட் அன்­டனி)

புதிய அர­சி­ய­ல­மைப்புத் தொடர்பில் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்­கையில் சமஷ்டி எண்­ணக்­க­ரு­வா­னது எந்­த­வொரு வகை­ யிலும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்று ஜனா­  தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கு பாதகம் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான எந்­த­வொரு அர­சி­யல மைப்­புக்கும் நான் இட­ம­ளிக்க மாட்டேன் என வும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­  பிட்டார். 

நேற்று பொலன்னறுவையில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்புத் தொடர்பில் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது இடைக்­கால அறிக்­கையை வெ ளியிட்­டி­ருக்­கி­றது. ஆனால் அந்த அறிக்­கையில் சமஷ்டி என்ற எண்­ணக்­கரு எந்­த­வி­தத்­திலும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. 

நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கு பாதகம் ஏற்­படும் வகை­யி­லான எந்­த­வொரு ஏற்­பாட்­டுக்கும் நான் இட­ம­ளிக்க மாட்டேன். அவ்­வா­றான அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிப்­ப­தற்கு அனு­ம­திக்க மாட்டேன். அதே­போன்று தற்­போ­தி­ருக்கும் அர­சி­ய­ல­மைப்பில் பௌத்த சமயம் தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள எந்­த­வொரு உறுப்­பு­ரை­யையும் நீக்­கு­வ­தற்கோ அல்­லது அதனை வலி­வி­ழக்கச் செய்­வ­தற்கோ இடம் கொடுக்க மாட்டேன்.   

தற்­போது முன்­வைக்­கப்­பட்­டள்ள இடைக்­கால அறிக்கை தொடர்பில் அனைத்துத் துறை­க­ளிலும் கலந்­து­ரை­யாடி விவாத்­தித்து மீளாய்வு செய்ய சந்­தர்ப்பம் அளிக்­கப்­படும். வடக்கு, கிழக்கு மக்கள் முகம்­கொ­டுத்­துள்ள பிரச்­சி­னைக்­க­ளுக்கு தீர்வை வழங்­குதல், நிலை­யான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தல் மீளவும் போர் ஏற்­ப­டா­த­வாறு அனைத்து இனத்­தவர் மத்­தி­யிலும் சக­வாழ்­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்­புதல் தொடர்பில் அர­சாங்கம் முதன்­மை­யாக செயற்­பட்டு வரு­கி­றது. மீளவும் யுத்தம் ஒன்று ஏற்­படும் என்ற கருத்து மக்கள் மத்­தியில் ஏற்­பட்டால் கூட நாடு இருண்ட யுகத்­திற்குச் சென்­று­விடும். அவ்­வா­றான எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படாதவாறு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பாடுபடுகிறது.

இதற்காக ஒன்றுகூடி ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடுமாறு பெளத்த, இந்து இஸ்லாமிய கத்தோலிக்க மதத் தலைவர்களை வேண்டிக் கொள்கின்றேன்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-30#page-1

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

  புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பில் எந்தவொரு வரைபும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பதுடன் அனைவரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் பெறப்பட்டு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை  அனைத்து துறைகளிலும் கலந்துரையாடி, விவாதித்து, மீளாய்வு செய்ய வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தனது பதவிக்காலம் முடியுமட்டும் இப்படியே சொல்லிச் சொல்லி காலத்தை கடத்துவார்.  அடுத்த தேர்தலில் எல்லாம் விவாதிச்சாச்சு இனி சட்டம் வரைய வாக்கு போடுங்கோ என கூவுவினம். பிறகு தொடக்கத்திலிருந்து ஆரம்பிப்பினம். தமிழர் உயிரோடு இருக்கிற வரையும் இப்பிடியே மேசை போட்டு விளையாடி  காலத்தை போக்க வேண்டியதுதான். முந்தி மஹிந்த காலத்தில் திஸ்ஸ விதாரண உப்பிடித்தான் கூடுறதும் கலையிறதுமாய் திரிஞ்சவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.