Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க துப்பாக்கிச்சூடு: 50 பேர் சாவு

Featured Replies

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 2 பேர் பலி, 24 பேர் காயம் ( படங்கள்,  இணைப்பு )

 

அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

44F2726200000578-4939872-image-a-57_1506

 

 

44F26A2D00000578-4939872-image-a-54_1506

 

 

 

44F27D7800000578-4939872-Police_by_the_M

 

 

 

 

44F29D9000000578-4939872-image-a-75_1506

 

 

44F2764400000578-4939872-image-a-63_1506

 

44F2691400000578-4939872-People_flee_fro

 

http://www.virakesari.lk/article/25212

The gunman appeared to open fire on the Route 91 Harvest festival from the Mandalay Bay Casino. Police said one suspect was down, but it's not clear if more shooters are active. Unconfirmed reports were made of shots at the Bellagio. McCarran International Airport is also closed down indefinitely
 

The gunman appeared to open fire on the Route 91 Harvest festival from the Mandalay Bay Casino. Police said one suspect was down, but it's not clear if more shooters are active. Unconfirmed reports were made of shots at the Bellagio. McCarran International Airport is also closed down indefinitely

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு... 20 பேர் பலி!

 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 

la-na-reported-shooting-at-mandalay-bay-

 


அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள கேசினாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுவந்தது. இந்த இடத்துக்கு திடீரென துப்பாக்கியுடன் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பேர் காயமடைந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

 துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒருவர் கொல்லப்பட்டத்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றொரு மர்ம நபர் மண்டலே பே கேசினோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/world/103837-gun-shot-in-los-vegas-twenty-peoples-died.html

Las Vegas: At least 20 dead in Mandalay Bay shooting

 Image caption Hundreds of concert-goers fled the scene or ducked for cover amid heavy gunfire

More than twenty people have been killed and at least 100 injured in a mass shooting at a Las Vegas concert.

http://www.bbc.com/news/world-us-canada-41466116

  • தொடங்கியவர்

அமெரிக்க துப்பாக்கிச்சூடு: 50 பேர் சாவு, குற்றவாளி சுட்டுக்கொலை 

 

 
Las_Vegas_Shooting_S_1

 

அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் மாகாணம் கேஸினோ வகை சூதாட்ட விடுதிகளுக்குப் பெயர் போனது. இங்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேஸினோ வகை விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பார்ட்டி நடைபெற்றது. இதில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அப்போது அங்கு நடைபெற்ற அதிபயங்கர துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

மான்டாலி பே என்ற கேஸினோ விடுதி ரூட் 91 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல் என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல கன்ட்ரி மியூஸிக் ஸ்டார் ஜேஸன் ஏல்டியான் என்பவர் பங்கேற்றார்.

அப்போது அதே விடுதியின் 32-ஆவது தளத்தில் இருந்த மர்ம நபர் திடீரென இந்த இசை நிகழ்ச்சியை நோக்கி தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். 

Las_Vegas_Shooting_S_%282%291.jpg

இதன்காரணமாக அங்கு கூடியிருந்த பல நூறு பேர் சிதறி ஓடினர். இதில், 100 பேருக்கும் மேல் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 50 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில் அங்கு கூடிய அமெரிக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியவனைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். அப்போது அமெரிக்க உளவு அமைப்பால் நடந்த பதில் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளி அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஆனால், அவனது பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட மறுத்துவிட்டனர். மேலும், குற்றவாளி அப்பகுதியைச் சேர்ந்தவன் என்பதை மட்டும் தெளிவுபடுத்தினர். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, அமெரிக்காவின் பள்ளி ஒன்றில் புகுந்த மர்ம நபர் இதேபோன்று அங்கு படித்து வந்த குழந்தைகளை சரமாரியாகச் சுட்டான். இதுகுறித்து, சமீபகாலங்களில் அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் அதிகரித்து வருவதாக அப்போதைய அதிபர் பாரக் ஓபாமா வேதனை தெரிவித்தார்.

http://www.dinamani.com/world/2017/oct/02/at-least-20-people-dead-over-100-injured-in-las-vegas-concert-shooting-suspect-shot-dead-2783135.html

Las Vegas shooting: 50 people killed in Mandalay Bay attack

BBC

  • தொடங்கியவர்

லாஸ் வெகாஸ் துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிதாரியின் பெண் தோழி கைது

 

 

50 பேரின் உயிரை பலியெடுத்து 200 இற்கும் அதிகமானோரை படுகாயமடையச் செய்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தோடு தொடர்புடைய துப்பாக்கிதாரியின் பெண் தோழி மரிலியோ டேன்லி அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Local_News.jpg

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 

அமெரிக்காவின் லாஸ் வெகாஸில்  இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  50 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

 

shoot.jpg

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சில் குறித்த துப்பாக்கிதாரி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஆயுததாரி கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த இசை நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே ஆயுததாரியின் பெண் தோழி கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த பெண் 62 வயதுடைய ஆசிய நாட்டைச் சேர்ந்தவராவார்.

இவர் 4 அடி 11 அங்குலமுடையவர் என்றும் 111 பவுண் எடை உடையவர் எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

44F40E9D00000578-4939872-image-m-52_1506

துப்பாக்கிதாரியும் குறித்த பெண்ணும் அறைத் தோழர்கள் எனவும் இவர்களுக்கிடையிலான நெருக்கமான  உறவு குறித்து எதுவித தகவல்களும் அந் நாட்டு பொலிஸார் வெளியிடவில்லை.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரி அந் நாட்டு குடியுரிமை பெற்ற ஸ்டீபன் பாட்டோக் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்ட பொலிஸார் மரிலியோவிடம் விசாரணை மேற்கொண்ட போது ஸ்டீபன் இறந்து விட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25224

  • கருத்துக்கள உறவுகள்

ஸ் ரீவன் படொக் தன்னை தானே சுட்டுக் கொன்றதாக செய்திகள்(CNN) தெரிவிக்கின்றன. இவரது கோட்டல் அறையில் இருந்து 10க்கு மேற்பட்ட துப்பாக்கிகள் கண்டு பிடிக்கப்பட்டுளன.

  • தொடங்கியவர்

லாஸ் வேகஸ் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 50 பேர் பலி : காணொளி

அமெரிக்காவில் சமீபகாலத்தில் நடந்த மிகமோசமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறைந்தது ஐம்பது பேர் கொல்லப்பட்டனர். நாநூற்று ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிதாரி உள்ளூரைச் சேர்ந்த அறுபத்தி நான்கு வயது ஸ்டீஃபன் பேடக் காவல்துறை அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்தவெளி இசைநிகழ்ச்சி நடந்த மைதானத்துக்கு அருகிலிருக்கும் மேண்டலே கசீனோ பே கட்டிட மாடியிலிருந்தபடி அவர் கீழ்நோக்கி துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவரது அறையில் அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததாகவும் அவரது அறையில் பத்து கனரகதுப்பாக்கிகள் இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது. அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருந்ததாக இதுவரை தெரியவில்லை என்றும் காவல்துறை கூறுகிறது.

இந்த காணொளி காட்சிகள் சிலருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

stephen-paddock-suspected-vegas-gunman.jpg Image released by the Las Vegas Metropolitan Police Department of Marilou Danley in connection to a shooting at the Route 91 Harvest Music Festival in Las Vegas

கொலையாளியும் அவரது ஆசிய பெண் நண்பியும்

 

  • தொடங்கியவர்

லாஸ் வேகஸில் 58 பேரை கொன்ற துப்பாக்கிதாரி யார்?

லாஸ் வேகஸில் 58 பேரை கொன்ற துப்பாக்கிதாரி யார்?படத்தின் காப்புரிமைCBS NEWS Image captionஸ்டீஃபன் பேடக்

லாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 58 பேரைக் கொன்று, 515க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்குக் காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரியைப் பற்றிய பல விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க பாடகர் ஜேசன் அல்டின் இசை நிகழ்ச்சியின் போது 64 வயதான ஸ்டீஃபன் பேடக், இசைக் காதலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி குண்டு மழையினை பொழிந்துள்ளார்.

மாண்டலே பே ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியின் 32வது மாடியில் உள்ள அறையில் இருந்து இந்தச் சந்தேகத்துக்குரிய துப்பாக்கித்தாரி சுட்டுள்ளார்.

போலீஸார் அவரை நெருங்கும்போது, பேடக் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் நவீன வரலாற்றில், இது ஒரு மோசமான துப்பாக்கி சூடு சம்பவம்.

ஜூன் 2016-ம் ஆண்டு புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ இரவு விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 49 பேர் இறந்த நிலையில், தற்போதைய சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய சம்பவத்தை விட அதிகம்.

செப்டம்பர் 28-ம் தேதி முதல் ஹோட்டலில் தங்கியிருக்கும் பேடக் அறையில் இருந்து கூடுதலாக 10 துப்பாக்கிகளை விசாரணை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளதாக லாஸ் வேகஸ் ஷெரீப் ஜோசப் லோம்பர்டோ கூறியுள்ளார்.

லாஸ் வேகஸில் 58 பேரை கொன்ற துப்பாக்கிதாரி யார்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

போலீஸார் அவரது அறையை நெருங்கும் நேரத்தில், அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொன்றதாக ஷெரீப் தெரிவித்தார்.

"அவரது மத கோட்பாடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை" எனவும் ஷெரீப் கூறியுள்ளார்.

இத்தாக்குதலுக்கும், தீவிரவாத செயலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஏதேனும் ஆதாரம் கிடைத்துள்ளதா? என ஷெரீப்பிடம் கேட்கப்பட்டது.

"இல்லை. தற்போது எதுவும் இல்லை" என அவர் கூறினார்.

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழு, பின்னதாக இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. பேடக் சில மாதங்களுக்கு முன்பு, இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆனால், இதற்கான எவ்வித ஆதாரத்தையும் ஐ.எஸ் குழு அளிக்கவில்லை. முந்தைய காலத்தில் ஆதாரமற்ற கூற்றுகளை இக்குழு தெரிவித்துள்ளது.

மூத்த அமெரிக்க அதிகாரிகள் இக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ளனர்.

22,000 எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்தை சுடுவதற்குத் தானியங்கி துப்பாக்கியை பேடக் பயன்படுத்தியிருப்பதை, இசை நிகழ்ச்சியில் பதிவான ஒலி குறிக்கிறது.

வழக்கமான போக்குவரத்து விதிமீறல் வழக்கில் மட்டுமே முந்தைய காலங்களில் பேடக் சிக்கியிருந்ததாக லாஸ் வேகஸ் போலீஸார் கூறுகின்றனர்.

லாஸ் வேகஸில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கும், பேடக்கின் இரண்டு அறை கொண்ட வீட்டினை விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

``நல்ல, அழகான வீடு, அங்கு அசாதாரணமாக எதுவும் இல்லை`` என மெஸ்க்வைட் போலீஸ் அதிகாரி க்யூன் கூறுகின்றனர்.

பேடக் வீட்டிற்குள், சில ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்புவதாகவும் க்யூன் கூறுகிறார்.

உடனிருந்த தாக்குதல்தாரியின் தோழி?

பேடக் அறையில் தங்கியிருந்த, மரிலோவ் டான்லீயை கண்டுபிடிக்க உதவுமாறு முன்னதாக அதிகாரிகள் கோரியிருந்தனர்.

ஆனால், அவர் விசாரிக்கப்பட்டதாக பின்னர் அதிகாரிகள் கூறினர்.

மரிலோவ் டான்லீபடத்தின் காப்புரிமைPOLICE HANDOUT

மாண்டலே பே ஹோட்டலில் அறை பதிவு செய்து பேடக் தங்கியபோது, 62 வயதான மரிலோவ் டான்லீ அவருடன் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மரிலோவ் டான்லீயின் சில அடையாளங்களை, பேடக் பயன்படுத்தியாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

"அப்பெண் பேடக்கின் தோழி" என சந்தேக நபரான பேடக்கின் சகோதரர் எரிக் பேடக் கூறுகிறார்.

" எனது சகோதரர் ஏன் இப்படி செய்தார் என்பது விளங்கவில்லை" எனவும் எரிக் கூறுகிறார்.

``அவருக்கு எவ்வித தீவிரவாத பின்புலமும் இல்லை. மெஸ்க்வைட்டில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். லாஸ் வேகஸுக்கு சென்று சூதாட்டம் ஆடுவார்`` எனவும் அவர் கூறுகிறார்.

சிறிய விமானங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த பேடக், இரண்டு விமானங்களை வைத்திருந்ததாக எம் பி சி கூறுகிறது.

http://www.bbc.com/tamil/global-41477118?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

64 வயது கிழவன்.... 58 பேரை சுட்டுக் கொன்றது.... எவ்வளவு கேவலம் தெரியுமா?  :shocked:
அமெரிக்காவின்...  கலாச்சாரம் , குப்பைக்  கூடைக்குள். 
அமெரிக்கனுக்கு... வாய் தான், பெரிதே ஒழிய, குணம்?... ஒரு சதத்துக்கு... உதவாது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஊரிலை மூலைக்கு மூலை தேத்தண்ணி கடைமாதிரி....அமெரிக்கனுக்கு மூலைக்கு மூலை துவக்கு கடை.

வாங்கினவனும்  வாங்கி வைச்சு என்னத்தை செய்யுறது. அமெரிக்கன் கண்டு புடிச்ச கேம் போய் விளையாட்டை விளையாடி விளையாடியே  ரெயினிங் எடுத்து விளையாடிட்டான்.......

நல்லகாலம் ஆசிய நாட்டு பெண் எண்டு    சப்பையின்ரை  படத்தை உடனையே போட்டுட்டான்....

இல்லையெண்டால் கொஞ்ச நாளைக்கு எங்கடை பொண்டுகளையும் வெள்ளையல்  ஒரு மாதிரித்தான் பாக்குங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: ஐபோன் மூலம் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த பெண்மணி

ஆப்பிள் நிறுவன ஐபோன்கள் அந்நிறுவன பிராண்ட் மட்டுமின்றி அவற்றின் உறுதித்தன்மைக்கும் பெயர்பெற்றதாகும். அவ்வாறு ஐபோன்களின் உறுதித் தன்மையை நிரூபிக்கும் சம்பவம் லாஸ் வேகாஸ் துப்பாக்கிசூட்டில் அரங்கேறியுள்ளது.

 
 
லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: ஐபோன் மூலம் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த பெண்மணி
 
லாஸ் வேகாஸ்:

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 59 பேர் பிரதாபமாக உயிரிழந்ததோடு 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் காயமுற்றோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் சார்ந்த விசாரணை ஒருபுறம் நடைபெற்று வருகிறது. அதேவேளையில், சம்பவத்தில் அரங்கேறிய வீரதீர செயல்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. அந்த வகையில் துப்பாக்கி சூட்டின் போது பாதிரியார் ஒருவர் 30 பேரை காப்பாற்றியிருக்கிறார். மேலும் பலர் காயமுற்றோருக்கு ரத்த தானம் செய்ய வரிசையில் முன்வந்துள்ளனர்.

அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த கொடூர தாக்குதலில் உயிர்பிழைத்த பெண்மணி தனது ஐபோனிற்கு நன்றி தெரிவித்துள்ளார். தாக்குதலில் உயிரிழக்க வேண்டிய பெண்மணி தான் வைத்திருந்த ரோஸ் கோல்டு நிற ஐபோன் தன் உடலில் தோட்டா நுழையாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளார்.

201710041312549205_1_iphone-rose-gold._L

ஐபோன் மூலம் உயிர்பிழைத்த பெண் சார்ந்த தகவல்கள் அறியப்படவில்லை என்றாலும், தாக்குதலில் உயிரை காப்பாற்றிய ஐபோனின் புகைப்படத்தை அவர் கார் ஓட்டுனரிடம் காண்பித்திருக்கிறார். தற்போதைய தாக்குதல் மட்டுமின்றி பலமுறை ஐபோன் மூலம் பலர் உயிர்பிழைத்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

தாக்குதலில் பலியான 59 பேருக்கும் வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலானியா, துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/04131250/1111255/Las-Vegas-Victim-Miraculously-Survives-After-Bullet.vpf

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் காரரின் பெண் நண்பி(மேரிலூ) இன்று பிலிப்பைன்சில் இருந்து லொஸ் ஏஞ்சலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய குடியுரிமையை கொண்டுள்ள இவர் தாக்குதலுக்கு முன் நாட்டை விட்டு சென்றுள்ளார். யப்பான், கொங்கொங் என பல நாடுகளுக்குசென்றுள்ளார். இவரின் பிலிப்பன்ஸ் வங்கி இலக்கத்துக்கு நூறாயிரம் அமெரிக்க டொலர் தாக்குதல் காரரால் அனுப்பப்பட்டுள்ளது. மேரிலூவை விசாரிப்பதன் மூலம் ஏன் தாக்குதல்காரர் மேற்படி கொடூரமான தாக்குதலை மேற்கொண்டார் என தெரிய வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.