Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபை­யின் அர­சி­யல் அறம் தாழ்ந்­து­விட்­டது

Featured Replies

வடக்கு மாகாண சபை­யின் அர­சி­யல் அறம் தாழ்ந்­து­விட்­டது

 
வடக்கு மாகாண சபை­யின் அர­சி­யல் அறம் தாழ்ந்­து­விட்­டது
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வடக்கு மாகா­ண­சபை பலம் பெற்று விடக் கூடாது என்­ப­தற்­கா­கத் தெற்கு முன்­னெ­டுத்த சதிக்கு எம்­ம­வர்­கள் சில­ரும் தெரிந்தோ தெரி­யா­மாலோ துணை­போ­ன­தன் மூல­மாக வடக்கு மாகா­ண­ச­பை­யின் அர­சி­யல் அறம் தாழ்ந்து போயுள்­ளது.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் அமைச்­ச­ரும் தற்­போ­தைய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான பொ.ஐங்­க­ர­நே­சன் தெரி­வித்­தார்.

தாவடி வேத­வி­நா­ய­கர் விளை­ யாட்­டுக்­க­ழ­கத்­தின் வாணி­விழா நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. இந்த விழா­ வில் முதன்மை விருந்­தி­ன­ ரா­கக் கலந்து கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கல்வி, செல்­வம், வீரம் ஆகிய முப்­பெ­ரும் வளங்­க­ள் வாழ்க்­கைக்கு அவ­சி­ய­மா­னவை. அறம் என்­றால் மாசு இல்­லாத மனசு என்­கி­றது திருக்­கு­றள். கல்வி அறிவு எவ்­வ­ள­வு­தான் இருந்­தா­லும் அந்த அறிவு ஆக்­கத்­துக்கு அல்­லா­மல் அழி­வுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டால், செல்­வம் எவ்­வ­ள­வு­தான் குவிந்­தா­ லும் அது உழைப்­பால் அல்­லா­மல் குறுக்கு வழி­யில் தேடிய சொத்­தாக இருந்­தால், எவ்­வ­ள­வு­தான் பலம் பொருந்­தி­ய­வ­ராக இருந்­தா­லும் அந்த வீரம் நேருக்கு நேராக அல்­லா­மல் முது­கில் குத்­தும் துரோ­க­மாக இருந்­தால் அறம் பிழைத்­து­வி­டும். கடை­சி­யில், என்றோ ஒரு­நாள் அதற்­கான விளைவை அனு­ப­வித்தே தீர­வேண்டிவரும்.

பௌத்த சிங்­க­ளப் பேரி­ன­வா­தத்­துக்கு எதி­ராக நாங்­கள் முன்­னெ­டுத்த ஆயு­தப் போரட்­டம் ஒட்­டு­மொத்­தத் தமிழ் இனத்­தின் விடு­த­லைக்­கா­னது என்­ப­தில் அதற்­கான அறம் உள்­ளது. ஆயு­தப் போராட்­டம் தோற்­க­டிக்­கப்­பட்­டா­லும் இந்த அறம் எமக்­கான தீர்­வைத் தேடித்­த­ரும். ஆனால், அதனை நோக்­கிப் பய­ணிக்க வேண்­டிய அர­சி­யல்­வா­தி­கள் பல­ரின் அர­சி­யல் அறம்­தான் கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.

விடு­தலை அர­சி­ய­லில் விடு­தலை என்ற இலக்கு மாத்­தி­ரமே போரா­ளி­க­ளுக்கு இருந்­தது. அங்கு தனி­ம­னித ஆசை­க­ளுக்கு இடம் இருக்­க­வில்லை. ஆனால், தேர்­தல் அர­சி­ய­லில் கதி­ரை­கள் மட்­டுமே இலக்கு என்ற துர்ப்­பாக்­கிய நிலை­மையே இன்று உள்­ளது. எந்­தச் சதி­யில் ஈடு­பட்­டே­னும் கதி­ரை­க­ளைப் பிடிக்க முய­லு­வ­தும் பொய்­யான குற்­றச்­சாட்­டு ­களை முன்­வைத்­த­வர்­களே எவ்­வித கூச்­ச­மும் இல்­லா­மல் அமைச்­சர்­க­ளா­வ­தும் இன்று அரங்­கேறி வரு­கி­றது.

வடக்கு மாகா­ண­சபை பலம் பெற்று விடக் கூடாது என்­ப­தற்­கா­கத் தெற்கு முன்­னெ­டுத்த சதிக்கு எம்­ம­வர்­கள் சில­ரும் தெரிந்தோ தெரி­யா­மாலோ துணை போன­தன் மூலம் வடக்கு மாகா­ண­ச­பை­யின் அர­சி­யல் அறம் தாழ்ந்து போயுள்­ளது. என்­றார்.

http://newuthayan.com/story/34114.html

  • கருத்துக்கள உறவுகள்

ஐங்கரநேசனுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் 1. ஐங்கரநேசன் தனிநாட்டு அமைச்சர்போல நடந்துகொள்கிறார். மத்திய அரசின் அதிகார வரம்புகளை மீறுகிறார். 2. காங்கேசன் சீமெந்து தொழிற்சாலைக்கு கல்லு அகழ்வது உட்ப்பட வடமாகான சூழலுக்குப் பாதிப்பான திட்டங்களை இலங்கை அரசின் நண்பர்களான பெருமுதலாளிகள் முன்னெடுப்பதற்க்கு தடையாக இருக்கிறார்.

ஐங்கரநேசனை சூட்ச்சியால் வீழ்த்தியதும்கூட அடிப்படையில் வடமாகானசபை பலம்பெற்றுவிடக்கூடாது என்கிற காரணத்தால்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.