Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாந்தோட்டையில் பதற்றம்;என்றுமில்லாதவாறு பொலிஸார் குவிப்பு

Featured Replies

அம்பாந்தோட்டையில் பதற்றம்;என்றுமில்லாதவாறு பொலிஸார் குவிப்பு

 

அம்பாந்தோட்டையில் பதற்றம்;என்றுமில்லாதவாறு பொலிஸார் குவிப்பு

அம்பாந்தோட்டை நகரில் என்றும் இல்லாதவாறு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதால் பெரும் பதற்றநிலை உருவாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்றைய தினம் அம்பாந்தோட்டையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த நிலையில் அமைதியின்மை ஏற்படாமல் இருப்பதற்காக பொலிஸார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/police-crowd-in-hambantota

 

 

மத்தள விமான நிலைய விவகாரத்துக்கு எதிராக அம்பாந்தோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம்

 

 

மத்­தள விமான நிலை­யத்தை அர­சாங்கம் இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு எடுத்­தி­ருக்கும் தீர்­மா­னத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து இன்று அம்­பாந்­தோட்டை மத்­த­ளயில் பாரிய ஆர்ப்­பாட்டம் நடத்­து­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு ­செய்­துள்­ளது.குறித்த ஆர்ப்­பாட்டம் இன்று காலை ஒன்­பது மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

 prottest.jpg

அவ் ஆர்ப்­பாட்­டத்தில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் மற்று உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் முன்னாள் பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொள்­ளவுள்ளனர். மேலும் தொழிற்­சங்­கங்கள், இளைஞர் அமைப்­புகள், பெண்கள் அமைப்­புகள் உட்­பட பெருந்­தி­ர­ளானோர் ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்டு மத்­தள விமான நிலையம் இந்­தி­யா­விற்கு வழங்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக தமது எதிர்ப்­பினைத் தெரி­விக்­க­வுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

குறித்த ஆர்ப்­பாட்டம் தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழகப்பெரும தெரி­விக்­கையில்,

அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக நாட்டு வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்து வரு­கி­றது. அதன் வரி­சையில் மத்­தள விமான நிலை­யத்­தையும் இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்தே நாளை (இன்று) அமை­தி­யான முறையில் ஆர்ப்­பாட்டம் நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு ­செய்­துள்ளோம்.

மத்­தள விமான நிலையம் உள்­ளிட்ட முக்­கி­யத்­துவம் வாய்ந்த நிலை­யான அபி­வி­ருத்­தி­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நாட்டில் மேற்­கொண்­டி­ருந்தார். எனினும் கடந்த அர­சாங்­கத்தின் மீதுள்ள கோபம் கார­ண­மாக நல்­லாட்சி அர­சாங்கம் மத்­தள விமான நிலை­யத்தில் நெல்லை களஞ்­சி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால் தற்­போது அவ்­வி­மான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

 உல­கி­லுள்ள மிகவும் பெரிய விமா­னங்கள் தரை­யி­றங்கும் வச­தி­கொண்ட விமான நிலை­யங்கள் தென்­னா­சி­யாவில் இரண்டு அல்­லது மூன்றே உள்­ளன. அவற்றில் மத்­தள விமான நிலை­யமும் ஒன்­றாகும். மேலும் மத்­தள விமான நிலையம் 4942 ஏக்­க­ருக்கும் அதி­க­மான நிலப்­ப­ரப்பைக் கொண்­ட­தாகும். 

அத்­துடன் விமான ஓடு­பாதை 3500 மீற்றர் தூரத்­தையும் 75 மீற்றர் அக­லத்­தையும் கொண்­டது. எனவே குறித்த விமான நிலையம் நாட்­டிற்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

அம்­பாந்­­தோட்டை துறை­முகம் சீனா­விற்கு விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது. ஆகவே இந்­தி­யாவை சமா­தா­னப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். 

மேலும் 205 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கே குறித்த விமான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்­ப­தாக அறி­ய­மு­டி­கி­றது. எனினும் விமான நிலை­யத்தை அமைப்­ப­தற்கு ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் 209 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செல­வி­டப்­பட்­டது.

எனினும் தற்­போது விமான நிலையம், அதற்­கான காணி, தொழில் அபி­வி­ருத்தி வல­யத்­திற்கு உட்­பட்ட காணிகள் உள்­ள­டங்­க­லாக பெரும்­ப­ரப்­புக்­கொண்ட காணி­யி­னையும் 205 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை இவ் ஆர்ப்­பாட்டம் தொடர்பில் அம்­பாந்­தோட்டை நீதிவான் நீதி­மன்றம் தடை­யுத்­த­ர­வொன்றைப் பிறப்­பித்­துள்­ளது. குறித்த ஆர்ப்­பாட்டம் தொடர்பில் அம்­பாந்­தோட்டை பொலிஸார் நீதி­மன்­றிற்கு அறிக்கை சமர்ப்­பித்­ததைத் தொடர்ந்தே குறித்த தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே அவ் ­ஆர்ப்­பட்­டத்தின் பிர­தான ஏற்­பாட்­டா­ளர்­க­ளான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நாமல் ராஜபக் ஷ, டி.வி.சானக உள்ளிட்டோர் நீதிமன்ற அதிகாரப் பிரதேசத்தில் பாதைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புற துறைமுகம் உட்பட பிரதான வீதிகளின் நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தலை தவிர்க்குமாறும் குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/25372

  • தொடங்கியவர்

ஹம்பாந்தோட்டையில் பதற்றம் ; கூட்டு எதிரணியினர் மீது நீர்த்தாரை பிரயோகம்

ஹம்பாந்தோட்டையில் கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் கண்ணீர் புகை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

namal-raja.jpg

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டம் மீதே பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு காலி நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாம் நீதிமன்ற உத்தரவை மதிப்பதுடன் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஹம்பாந்ததோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிணைந்த எதிரணியினரால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25391

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஹம்பாந்தோட்டையில் பதற்றம் ; 3 பொலிஸார் காயம், 26 பேர் கைது

ஹம்பாந்தோட்டையில் கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் 26 ஆர்ப்பாட்டக்கார்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 prot.jpg

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

இதன்போது 3 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 26 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு காலி நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

http://www.virakesari.lk/article/25393

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

இந்திய தூதரக காரியாலயம்,

உவையின்ட காரியாலயங்கள் எத்தனை சிறிலங்காவில் இருக்கு?

  • தொடங்கியவர்

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்..

 

 

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்..

 

 
மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வௌிநாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பிடிக்கப்பட்ட படங்களே இவை..

http://tamil.adaderana.lk/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

உவையின்ட காரியாலயங்கள் எத்தனை சிறிலங்காவில் இருக்கு?

ஒரு சிறிய நாட்டில், இந்தியா பல காரியாலங்களை வைத்து... உளவு பார்க்கின்றது போலுள்ளது.
சீனாவுடன்....  இலங்கை நெருக்கமாக உள்ளதால்,  நெஞ்சு.... திக்கு, திக்கு... என்று தானே அடிக்கும் புத்தன். :grin:

  • தொடங்கியவர்

ஐபிசி கமராவில் பதிவான அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின் சுவாரஷ்ய காட்சிகள்-

 

நாமல் ராஜபக்ஸ தலைமையிலான ஆர்ப்பாட்டம் - 26 பேர் அதிரடியாக கைது-

  • தொடங்கியவர்

பொது எதிரணியின் பேரணி கலைப்பு

 

நீதிமன்ற தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 28 பேர் கைது

களேபரத்தினால் நான்கு பொலிஸாருக்கும் காயம்

(எம்.சி.நஜிமுதீன்) 

மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கு வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை பொலிஸார் கண்ணீர்புகை குண்டு பிரயோகம் மேற்கொண்டும் தண்ணீர் பாய்ச்சிய டித்தும் கலைத்துள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட 28 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆர்ப்பாட்டப் பேரணியின்போது இடம்பெற்ற இழுபறி நிலை காரணமாக நான்கு பொலிஸார் காயமுற்றுள்ளனர்.

மத்தள விமான நிலையத்தை அரசாங்கம் இந்தியா விற்கு வழங்குவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று காலை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. காலை 10.30 மணியளவில் அம் பாந்தோட்டை கடற்கரையோர பூங்காவிற்கு அருகில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த பெருமளவானோர் ஒன்று கூடினர்.  

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக் ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக் ஷ, டலஸ் அழகப் பெரும,செஹான் சேமசிங்க, காஞ்சன விஜயசேகர, பிரசன்ன ரணவீர, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இளைஞர், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தேரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பேரணி

இங்கு ஒன்றுகூடிய பொது எதிரணியினர் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்வதற்கு முயற்சித்தனர். இந்த பேரணியில் கலந்துகொண்ட கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் அரசாங்கத்தைக் கண்டிக்கும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பாகைகளையும் தாங்கியிருந்தனர்.

“நல்லாட்சி அரசே தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யாதே”, “இந்திய காலணித்துவம் எமக்கு வேண்டாம்”, “சீன காலணித்துவம் எமக்கு வேண்டாம்”, “எங்கள் காணிகளை எமக்கே வழங்கு”, “செயற்திறனற்ற அரசே பதவி விலகு” போன்ற சோகஷங்களை இவர்கள் எழுப்பியவாறு முன் சென்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் அம்பாந்தோட்டைப் பொலிஸார் ஏற்கனவே நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்ததற்கமைவாக அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவொன்றையும் பிறப்பித்திருந்தது. மேலும் நீதிமன்ற அதிகாரப் பிரதேசத்தில் வீதிகளின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தல், இந்திய கொன்சியூலர் அலுவலகம், மாகம்புற துறைமுகம் உட்பட பிரதான வீதிகளின் நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துதல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை தவிர்க்குமாறு குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவையடுத்து நேற்று குறித்த பிரதேசத்தில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் இந்திய கொன்சியூலர் அலுவலகம், மத்தள விமான நிலையம் உட்பட குறித்த இடங்களில் நீர்பாச்சியடிக்கும் வாகனங்கள், கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்கள் என்பனவும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 

இதேவேளை பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்திய கொன்சியூலர் அலுலகத்தை அண்மித்தபோது அங்கு பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து இவர்களை இந்திய கொன்சியூலர் காரியாலய வளாகத்திற்குள் நுழைய முடியாத வகையில் தடுத்தனர்.  

மகஜர் கையளிப்பு 

பேரணியில் கலந்துகொண்ட பத்தேகம சமித தேரர் உள்ளிட்ட சிலர் இந்திய கொன்சியூலர் காரியாலத்திற்குச் செல்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்பட்டத. எனவே குறித்த பிரதிநிதிகள் அங்கு சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அதிகாரிகளிடம் கையளித்தனர்.

இருந்தபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் நடு வீதியில் நின்று கடுமையான எதிர்பினைத் தெரிவித்தனர். மேலும் பொலிஸார் ஏற்படுத்தியிருந்த வீதித்தடைகளுக்கு அருகில் அம்பாந்தோட்டை மாவட்ட ஆளும் கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள் சிலரின் கொடும்பாவைகளையும் எரித்தனர். 

இரு தரப்புக்கிடையில் வாக்கவாதம் 

கொடும்பாவிகளை எரித்ததுடன் தொடர்ந்தும் அங்கு தீ மூட்டும் நடவடிக்கைகளிலும் சிலர் ஈடுபட்டனர். எனவே வீதித் தடைகளின் உயரத்திற்கு தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதமும் ஏற்பட்டது. பொலிஸார் தீ மூட்டும் நடவடிக்கையினை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்தே அங்கு வாக்குவாதம் வலுத்தது.

களேபரம் 

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளைத் தகர்த்துக்கொண்டு முன்னேறுவதற்கு எத்தனித்த வேளை அங்கு நிலைமை மோசமானது. விதித்தடைகளை சீர்செய்து ஆர்பாட்டக்காரர்கள் உள்நுழைவதை தடுக்க பொலிஸார் முயன்றபோதும் அது முடியாமல் போனது.

எனவே கலகம் அடக்கும் பொலிஸார் களத்தில் இறங்கியதுடன் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் மூலம் தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பகுதியினர் அதற்கும் ஈடுகொடுத்துக்கொண்டு அங்கு நின்றுகொண்டிருந்தனர். ஆகவே கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொண்டு அவர்களையும் கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். 

மேலும் நீதிமன்றின் உத்தரவை மீறி குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலலிஸார் 28 பேரை கைதுசெய்துள்ளனர். அத்துடன் குறித்த அமைதியின்மையின்போது பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-07#page-1

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

ஒரு சிறிய நாட்டில், இந்தியா பல காரியாலங்களை வைத்து... உளவு பார்க்கின்றது போலுள்ளது.
சீனாவுடன்....  இலங்கை நெருக்கமாக உள்ளதால்,  நெஞ்சு.... திக்கு, திக்கு... என்று தானே அடிக்கும் புத்தன். :grin:

இனி ஈழத்தமிழன் சும்மா இருக்க வேண்டியது தான்.... சிங்களவனும் இந்தியாவும் பட்ட பாடு எண்டு போட்டு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.