Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவம் எப்போது முழுமையாக வெளியேற்றப்படும்?

Featured Replies

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும்

 
 
வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வடக்­கில் போரின் பின்­ன­ரும் இரா­ணு­வத்­தின் வச­முள்ள பொது­மக்­க­ளின் காணி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும். துரி­த­மாக இந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க அழுத்­தம் கொடுக்­கப்­பட வேண்­டும்.

இவ்­வாறு வலி­யு­றுத்­தி­னார் பிரிட்­ட­னின் ஆசிய பசு­பிக் பிராந்­தி­யத்­துக்­கான அமைச்­சர் மார்க் பீல்ட்.இலங்கை வந்­துள்ள மார்க் பீல்ட் நேற்று வடக்கு மாகாண ஆளு­ந­ர் ரெஜி­னோல்ட் குரே­யைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார். அதன்­போதே அவர் இவ்­வாறு வலி­யு­றுத்­தி­னார்.

வடக்கு மாகா­ணத்­தின் தற்­போ­தைய நில­மை­கள், நல்­லி­ணத்­துக்­கா­கத் தற்­போ­தைய அரசு முன்­னெ­டுத் துள்ள நகர்­வு­கள், எதிர்­கா­லத்­தில் மேற்­கொள்­ளப்­பட வேண்டிய நகர்­வு­கள் தொடர்­பில் இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் பேசப்­பட்­டுள்­ளது.

வடக்­கின் எதிர்­கால அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்குத் தாம் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கு­வோம் என்று மார்க் பீல்ட் சந்­திப்­பில் குறிப்­பிட்­டுள்­ளார்.

மனித உரி­மை­க­ளைப் பாது­காக்­கும் நகர்­வில் வாழ்­விட உரிமை முக்­கி­ய­மா­னது என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள மார்க் பீல்ட் இரா­ணு­வத்­தின் வச­முள்ள பொது­மக்­க­ளின் காணி­களை விடு­விக்க விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

பிரிட்­டன் பிர­தி­நி­தி­கள் விரை­வில் பொது­மக்­க­ளின் காணி­களை ஒப்­ப­டைக்­கும் வேலைத் திட்­டங்­களை எதிர்­பார்க்­கின்­ற­னர் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

வடக்­கில் முத­லீ­டு­களை அதி­க­ரிப்­ப­தன் ஊடாக வடக்கு இளை­ஞர், யுவ­தி­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை வழங்க முடி­யும். அதற்­கான முயற்­சி­க­ளுக்­குப் பிரிட்­டன் உதவ வேண்­டும் என்று வடக்கு மாகாண ஆளு­நர் குரே சந்­திப்­பில் குறிப்­பிட்­டுள்­ளார்.

நல்­லி­ணக்­கம் உரு­வா­கு­வ­தற்கு வச­தி­யாக மூவின மாண­வர்­க­ளும் கற்­கும் தேசிய பாட­சாலை ஒன்றை உரு­வாக்­கும் தனது முயற்சி குறித்­தும் குரே சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

இரா­ணு­வத்­தின் வச­முள்ள மக்­க­ளின் காணி­களை விடு­விப்­பது அர­சின் பொறுப்பு. தற்­போ­தைய அரசு பல ஆயி­ரம் ஏக்­கர் பொது­மக்­க­ளின் காணி­களை விடு­வித்­துள்­ளது.

பொது­மக்­க­ளின் காணி­கள் விடு­விக்­கப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் தொடர்­கின்­றன. படிப்­ப­டி­யாக அதற்­கான முன்­ன­கர்­வு­கள் இடம்­பெ­று­கின்­றன என்று வடக்கு ஆளு­நர் சந்­திப்­பின்­போது தெரி­வித்­துள்­ளார்.

வெகு விரை­வில் இந்த வேலைத் திட்­டம் நிறை­வ­டை­யும், பொது­மக்­கள் தமது நிலங்­க­ளில் பூரண சுதந்­தி­ரத்­து­டன் வாழ ஏற்­பாடு செய்­யப்­ப­டும் என்­றும் அவர் குறிப்­பிட்டுள்­ளார்.

http://newuthayan.com/story/34943.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவம் எப்போது முழுமையாக வெளியேற்றப்படும்?

p25-0987fd8e1fe4f2b3b8e35ee4c75c973ac9de8e82.jpg

 

வடக்கு ஆளுநரிடம் கேள்வியெழுப்பிய பிரித்தானிய அமைச்சர் 

(ஆர்.யசி)

வடக்கில் நல்லிணக்கத்தை பலப்படுத்த புதிய அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத் திட் டங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவம் எப்போது முழுமையாக வெளியேற்றப்படும் என பிரித்தானியாவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் வடக்கு ஆளுநருடனான சந்திப் பின்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கின் எதிர்கால அபிவிருத்தி செயற் பாடுகளில் தாம் முழுமையான ஒத்துழைப்பு  களை வழங்குவதாகவும் விரைவில் வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை இதனூடாக முன்னெடுக்கவேண்டும் எனவும் இந்த சந்திப்பில் அவர் வலியுறுத்தினார்.  

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் , இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆலோசகர் போல் கிரீன் ஆகியோர் நேற்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே மற்றும் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் ஆகியோரை யாழ்ப்பாணத்தில் சந்தித்தனர். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே இவ் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது வடக்கு மாகாணத்தின் தற்போதய நிலைமைகள், நல்லிணக்கத்திற்காக புதிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நகர்வுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் வடக்கின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளில் தாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் விரைவில் மக்களின் வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை இதனூடாக முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் யுத்தத்தின் பின்னரும் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் துரிதமாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாக்கும் நகர்வில் வாழ்விட உரிமை முக்கியமான விடயம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய பிரதிநிதிகள் விரைவில் பொதுமக்களின் சொந்த இடங்களை அவர்களிடம் ஒப்படைக்கும் வேலைத்திட்டங்களை எதிர்பார்ப்பதாகவும் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்டுக்கு பதிலளித்த வடக்கு ஆளுநர் ரெஜினோல் குரே , வடக்கில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும் எனவும் அதற்கான முயற்சிகளுக்கு பிரித்தானிய அரசு உதவ வேண்டும் எனவும் கூறியதுடன், நல்லிணக்கம் உருவாவதற்கு மேலும் ஒரு வசதியாக மூவின மாணவர்களும் கல்வி கற்கும் வகையில் தேசிய பாடசாலை ஒன்றினை உருவாக்கும் தனது முயற்சியினையும அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

 இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு, அரசாங்கத்தின் கொள்கையினை தெளிவாக அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் தற்போதைய அரசாங்கம் பல ஆயிரம் ஏக்கர் பொதுமக்களின் காணிகளை விடுத்துள்ளது. மேலும் பொதுமக்களின் காணிகளை விடுவித்து வருகின்றது படிப்படியாக இந்த செயற்பாடுகளுக்கான முன்னகர்வுகள் இடம்பெறுகின்றன. வெகு விரைவில் இந்த வேலைத்திட்டம் நிறைவடையும். பொதுமக்கள் தமது நிலங்களில் மீண்டும் பூரண சுதந்திரத்துடன் வாழ ஏற்பாடுகள் விரைவில் செய்துகொடுக்கப்படும் எனவும் கூறுயுள்ளார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-07#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் எப்போது முழுமையாக வெளியேற்றப்படும்?- வடக்கு ஆளுநரிடம் பிரி. அமைச்சர் கேள்வி

Report us Samy 26 minutes ago
வடக்கில் பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவம் எப்போது முழுமையாக வெளியேற்றப்படும் என பிரித்தானியாவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட், வடக்கு ஆளுநருடனான சந்திப்பின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் , இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆலோசகர் போல் கிரீன் ஆகியோர் நேற்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே மற்றும் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் ஆகியோரை யாழ்ப்பாணத்தில் சந்தித்தனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே இவ் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், நல்லிணக்கத்திற்காக புதிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நகர்வுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் வடக்கின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளில் தாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் விரைவில் மக்களின் வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை இதனூடாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் யுத்தத்தின் பின்னரும் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் துரிதமாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாக்கும் நகர்வில் வாழ்விட உரிமை முக்கியமான விடயம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய பிரதிநிதிகள் விரைவில் பொதுமக்களின் சொந்த இடங்களை அவர்களிடம் ஒப்படைக்கும் வேலைத்திட்டங்களை எதிர்பார்ப்பதாகவும் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்டுக்கு பதிலளித்த வடக்கு ஆளுநர் ரெஜினோல் குரே , வடக்கில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும் எனவும் அதற்கான முயற்சிகளுக்கு பிரித்தானிய அரசு உதவ வேண்டும் எனவும் கூறியதுடன், நல்லிணக்கம் உருவாவதற்கு மேலும் ஒரு வசதியாக மூவின மாணவர்களும் கல்வி கற்கும் வகையில் தேசிய பாடசாலை ஒன்றினை உருவாக்கும் தனது முயற்சியினையும அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு, அரசாங்கத்தின் கொள்கையினை தெளிவாக அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறு இருப்பினும் தற்போதைய அரசாங்கம் பல ஆயிரம் ஏக்கர் பொதுமக்களின் காணிகளை விடுத்துள்ளது. மேலும் பொதுமக்களின் காணிகளை விடுவித்து வருகின்றது படிப்படியாக இந்த செயற்பாடுகளுக்கான முன்னகர்வுகள் இடம்பெறுகின்றன.

வெகு விரைவில் இந்த வேலைத்திட்டம் நிறைவடையும். பொதுமக்கள் தமது நிலங்களில் மீண்டும் பூரண சுதந்திரத்துடன் வாழ ஏற்பாடுகள் விரைவில் செய்து கொடுக்கப்படும் எனவும் கூறுயுள்ளார்.
tamilwin.com

  • தொடங்கியவர்

றெயினோல் குரே, மார்க் பீல்ட் இடையே சந்திப்பு

றெயினோல் குரே,  மார்க் பீல்ட் இடையே சந்திப்பு

 

வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பிரித்தானியாவின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்ட் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுடனான சந்திப்பிலேயே நல்லிணக்க விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்த பிரித்தானியாவின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்ட் தலைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் றெயினோல் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

றெயினோல் குரே,  மார்க் பீல்ட் இடையே சந்திப்பு

வட மாகாண ஆளுநர் றெயினோல் குரேயின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற  இந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநரிடம் குறித்த குழுவினர்  கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

பிரித்தானிய  தூதுக்குழுவினருடனான இந்த  சந்திப்பு  தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஊடகங்களுக்கு  கருத்து வெளிட்டார்.

றெயினோல் குரே,  மார்க் பீல்ட் இடையே சந்திப்பு

(ரெஜினோல்ட் குரே

வடமாகாண ஆளுநர் – “ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம் என்னை சந்தித்து சிறந்த கலந்துரையாடலை நடத்தினர். வடமாகாண அபிவிருத்தி குறித்து இதன்போது பேசப்பட்டது. இந்த அபிவிருத்திற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்ததோடு எதிர்காலத்தில் வடமாகாண அபிவிருத்தி திட்டங்களுக்கு நேரடியாக தொடர்புகொள்ளவும் இணக்கம் வெளியிட்டனர். மேலும் தேசிய நல்லிணக்கம் குறித்தும் பேசப்பட்டது. ஆங்கில மொழிமூலமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த தங்களது விருப்பத்தையும் இதன்போது வெளியிட்டனர்.

இதன்படி வடமாகாணத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஒன்றாக இணைந்து கற்கும் பாடசாலைக்கான தேவையை சந்திப்பில் எடுத்துக்காட்டினேன். இதனூடாக நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் என்று கூறினேன். இதற்காக உதவிகளை செய்ய விருப்பம் வெளியிட்டனர். காணிகளை விடுவித்தல் மற்றும் அரச கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்தினேன்.

மக்களது காணிகளை அவர்களுக்கே திருப்பிக் கொடுப்பதே அரசின் கொள்கை என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினேன். இனவாத சம்பவங்கள் இடம்பெறும்போது அந்த செயற்பாடுகளுக்கு சில தடை ஏற்படுவதாகவும், சமாதானம், அமைதி சூழ்நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் இந்தப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டினேன்”)

றெயினோல் குரே,  மார்க் பீல்ட் இடையே சந்திப்பு

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Meeting-between-Reynold-Curre-Mark-Field

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மொட்டையும் எங்கட பகுதியை விட்டு வெளியேற வேணும். ஏதாவது ஒன்றைச் சொல்லி எம்மண்ணை மதத்தாலும், மொழியாலும்  அபகரிக்கப் பாக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.