Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறையொன்றுமில்லை....

Featured Replies

குடுத்து வச்சனீங்கள் உங்களுக்கென்ன கவலை பிள்ளையா குட்டியா எதைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை சுதந்திரமாத் திரியுறீங்கள் இப்பிடித்தான் இளையோரைப் பார்த்து பெரியாக்கள் சொல்றவை.அதெல்லாம் சுத்தப்பொய்!!!!!எங்களுக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினை இருக்குப்பாருங்கோ சும்மா எப்ப பார்த்தாலும் உங்களுக்குத்தான் பிரச்சினை இருக்கெண்டு புலம்பாதயுங்கோ.எங்கட கவலைகள் என்ன என்னெண்டு சொல்றன் கேளுங்கோ இல்லையெண்டால் இடையிலையே தலையைப் பிச்சுக்கொண்டு ஓடிப்போயிடுங்கோ.

படிப்பு படிப்பு படிப்பு அதான் எங்கட முதற் கவலை.பள்ளிக்கூடத்திலயும் அதத்தான் செய்யிறம் வீட்டயும் அதுதான். 70 வீதமானோருக்கு படிக்கிறதும் படிச்சு முடிய என்ன செய்யப்போறம் என்றதும்தான் தற்போதுள்ள பெரிய பிரச்சனை.எங்களுக்கே தெரியும் நாங்கள் ஒழுங்காப் படிக்காட்டி உருப்படமாட்டம் என்று பிறகேன் எப்ப பார்த்தாலும் படி படியென்று உயிரை வாங்குறீங்கள். படிக்கிறதெண்டாலும் சரி தேத்தண்ணி குடிச்ச கப் ஐக் கழுவி வைக்கிறதெண்டாலும் சரி நாங்களா நினச்சுத்தான் செய்வம் சும்மா நொய் நொய் என்றால் உங்க ஒரு அலுவலும் நடக்காது சொல்லிட்டன்.

அடுத்தது நேரம்.கிட்டத்தட்ட 10 மணித்தியாலம் போக்குவரத்திலயும் வகுப்பிலயும் செலவழியும்.வீட்ட வந்து ஒரு 4-5 மணித்தியாலம் ஹோம்வேர்க் பிறகு Facebook, MSN தமிழ்மணம் யாழ் அந்த வெப் இந்தப்பாட்டெண்டு ஒரு 3 மணித்தியாலம்.சாப்பாடு பிறகு Grey's Anatomy ,Desperate housewives, House என்று ஒரு 2 மணத்தியாலம் செலவழிக்கிறம்.பிறகு நித்திரை கொள்ள நேரம் காணாது .ஸோ ஒரு நாளில 24 மணித்தியாலம் நேரம் காணவே காணாது எங்களுக்கு.வார நாட்களிலாவது நண்பர்களோட சேர்ந்து உருப்படாம போகலாம் என்றா அதுக்கும் வழியில்லை.பகுதிநேர வேலையென்று ஒன்றைக் கண்டுபிடிச்சதால எங்களுக்கெண்டொரு ஸோசல் வாழ்க்கையே இல்லாமப் போச்சு.

இன்னும் வாசிச்சுக்கொண்டிருக்கிறீங்

குறையொன்றும் இல்லை என்று தலைப்பு போட்டிருக்கிறீங்கள். என்றபடியால் நீங்கள் புலம்பியுள்ளதை உங்களிற்கு ஏற்பட்ட அனுபவமாக எடுக்காது, பொதுவாக மாணவர்கள்படும் கஸ்டங்கள் என்றவகையில் பதில் கொஞ்சம் தருகின்றேன்.

1. மாணவர்களிற்கு இருக்கும் பிரச்சனைகளில் பெரும்பாலானவை அவர்கள் தாங்களாக உருவாக்கிக்கொண்ட பிரச்சனைகள்.

2. மாணவர்களின் நடத்தையில் பெற்றோருக்கு சந்தேகம் அல்லது அவநம்பிக்கை ஏற்படும்போதுதான் அவர்கள் உங்களிற்கு படி அல்லது வேறு ஏதாவது செய் என்று கட்டளை இடுகின்றார்கள்.

3. ஹோம்வேர்க், வகுப்பு, சோதனை, எம்.எஸ்.என், பேஸ்புக் சிட், பிரன்ஸ், வேலை, லீசர் டைம் இது எல்லா மாணவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. நேரத்தை சரியாக நிருவகிக்கத் தெரிந்தால் இந்தப் பிரச்சனைகள் ஏற்படாது.

4. காசை ஒழுங்காக நிருவகிக்கத் தெரியாதபோது காசுப்பிரச்சனை வருகிறது. உங்கள் படிப்பு ஒரு எதிர்காலத்திற்கான முதலீடு, இதன் மூலம் கடன்வாங்கும் காசை வட்டியுடன் ஒழுங்காகத் திருப்பிக் கொடுக்க முடியும். அமெரிக்காவில் வைத்தியதுறையில் படிப்பவர்கள் வருடத்திற்கு சுமார் ஒரு இலட்சம் அமெரிக டொலரை கடனாக வாங்குகிறார்கள் என்றால் நம்புவீர்களா? அவர்கள் வாங்கும் படிப்பிற்கான கடன்களுடன் ஒப்பிடும் போது உங்கள் கடன் வெறும் ஜுஜுப்பி.

5. பிரச்சனைகளை பெற்றோருக்குத்தான் சொல்லவேண்டுமென்பதில்லை. படிக்கும் பாடசாலை கவுன்சிலர்களிடம், நல்ல நண்பர்களிடம் கூட சொல்லி உங்கள் பாட்டிலேயே தீர்வையும் காணமுடியும்.

6. வாழ்க்கையில் ஒன்றும் நிரந்தரம் இல்லை. எல்லாம் வரும். போகும். நண்பர்களும் அப்படித்தான். எல்லாக் காலங்களிலும் உங்கள் நண்பர்களை உங்கள் மடியினுள் வைத்திருக்க முடியாது.

7. மற்றவர்கள் சொல்வது போல் எல்லாரும் எமக்கு ஒரு போய் பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. எமது வாழ்க்கை எமக்காகவொழிய மற்றவரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக எமது வாழ்க்கையை அடித்துப் பிடிக்க முடியாது. உணர்வுகள், உறவுகள் எல்லாம் இயற்கையாக வரவேண்டும்.

8. உடலமைப்பைப் பொருத்தவரை 90% தேவையில்லாமல் அலட்டிக் கொள்கின்றார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. சிலருக்கு தமது வயிறு பெரிது என்று கவலை, சிலருக்கு தமது மூக்கு சின்னன் என்று கவலை, சிலருக்கு தமது காதுச் சோணை சிறியது என்று கவலை. இப்படி பல கவலைகளும் தாழ்வு மனப்பான்மைகளும் உள்ளது. அமெரிக்காவின் கொன்டலிசா ரைசைப் பாருங்கள், சிறீ லங்காவின் சந்திரிக்காவை பாருங்கள். இவர்கள் எல்லாம் கவர்ச்சியானவர்களா? ஆனால் இவர்கள் எத்தனை ஆண்களை மடக்கிப் போட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? கவர்ச்சிக்கும், வாழ்வில் விரும்பியவற்றை அடைவதற்கும் சம்மந்தம் இல்லை.

9. பெண்களிற்கு உள்ள பெரும்பாலான எல்லாப் பிரச்சனைகளும் ஆண்களுக்கும் இருக்கிறது. சில பிரச்சனைகள் பெண்களிற்கு மட்டும் பொதுவானது. சில பிரச்சனைகள் ஆண்களிற்கு மட்டும் பொதுவானது. நீங்கள் ஆண்களாக உங்கள் அப்பா, அண்ணாமார், தம்பிமார், மாமாமார், சித்தப்பாமார், மச்சான்மார், மற்றும் உங்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய ஆண் குழந்தை என்று நினைத்து பிரச்சனைகளை அணுகினால் நீங்கள் பெண் என்ற சொல்லை வைத்து ஆடும் மாயையினால் வரும் பிரச்சனைகள், தாழ்வு மனப்பான்மைகள், குறைபாடுகளில் இருந்து விடுதலையடைந்துவிட முடியும்.

உங்கள் புலம்பலிற்கு நன்றி

உடலமைப்பும் எங்களுக்குப் பெரிய பிரச்சனைதான்.ஸெக்ஸியா இருக்கோணும் என்றுதான் எல்லாருக்கும் ஆசை.Dhoom 2 பிபாஸா பாபாஸ+ மாதிரி இருக்கோணும் என்று ஹா ஹா.என்ர நண்பியொராள் சொன்னா உலகத்தில எய்ட்ஸ் ஆல பாதிக்கப்பட்டிருக்கிற ஆக்களை விட டயற்றிங் என்று வெளிக்கிட்டு ஒழுங்கான சாப்பாடில்லாம வருந்தி Anorexia, Bulimia போன்ற நோயை வாங்கின பெண்கள்தான் அதிகமாக இருக்கினம் என்று.

உடல் மெலியணும், அழகா வரணும் என்று அவள் சொன்னா,இவள் சொன்னா சொன்னா என்று கண்ட கண்ட மாத்திரைகளை போட்டு இருப்பதையும் கெடுத்துக்கிறோம். அதுவும் சில மாத்திரைகள் வேறு சில விடயங்களுக்கு பாவிக்க கூடியதுகள்...அவற்றை நாங்கள் வாங்கி போட, வீட்டில் கண்டு அதற்கு புறம்பாக பூகம்பம் வெடிக்கும்.

சமீபத்தில ஒரு பெண் என்னவென்றால் நம்ம தனுஷ் போல ஒரு ஒல்லியான பையனை காதலிக்கிறாராம். அவர் மேல உயிராம்! அவரின்றி தானில்லையாம்!

அதனால அவருக்கு ஏற்றா போல தானும் மெலிஞ்சு பொருத்தமா இருக்கணுமாம்!

என்ன வழி...வீட்டில் சாப்பாடு குறைச்சால் வீண் கேள்வி வரும். அதனால வீட்டில் சாப்பிடுவது..சாப்பிட்டு விட்டு பாத் ரூமை பூட்டி..கையை வாயுக்குள் விட்டு சத்தி எடுப்பது. அப்படியே களைத்து போய் சென்று படுப்பது. போதா குறைக்கு மாத்திரர,தெயிலை..அது இது என்று. எல்லாம் காதலுக்காக! இதுவே காதலுக்காக என்றால் படிப்பு எங்க? அதுவும் சத்தி போல போயிடுச்சு!!!

தனுஷ் போன்றவர் என்ன செய்தார்..கொஞ்ச நாளால்..மனதை மாற்றி கொண்டார்...அவரால் அங்கே இன்னொரு பெண் சாப்பிடாமலே சத்தி!

அப்போ இவர் நிலமை? படிப்பு இல்லை..உடல் நலம் இல்லை..

பெண்கள் தான் இப்படி காதலுக்காக அப்பிடி இப்பிடி என்று கூட தங்களை கெடுத்துக்கிறார்கள். உண்மை! ஆண்களும் சிலர். ஆனால் அவர்கள் அதை சில காலத்தின் பின் அறிந்து நடக்கிறார்கள் அப்போ அதை சமுதாயம்" ஒருகாலத்தில் சுத்தினவன் என்றாலும், இப்போ ஒழுங்கான பிள்ளை ப்டிக்கிறான்"! அப்படின்னு ஏற்றுக்கொள்ளும். பெண்களுக்கு இல்லை..காலம் கடந்து..அதுவும் காதலில் கொஞ்சம் எல்லை மீறி விட்டால்..?!! அப்புறம் வீட்டில் இருந்து, சமுதாயம் வரை..மரியாதைக்கு மண்டி இடணும்.

..............

இதை வாசிக்கையில் எனக்கு என்னவோ சரியான கவலையாக இருந்திச்சு.

அதுதான் எனது கருத்தையும் எழுதினேன்.

அந்த பெண்ணின் கதை உண்மை! எனக்கு சரியான கோவம் வந்து அவரை பேசினேன். இப்போது அவர் நல்ல மாதிரி படிக்கிறார். ஆனால் வீட்டில் அவருக்கு சரியான கட்டுப்பாடு. என்னை பொறுத்தவரை பெற்றோர் இந்த கட்டுப்பாட்டை கொஞ்ச காலம் முன் செய்திருக்கலாம்!!

பெற்றோர்கள் பலர் ஒரே கட்டுப்பாடு னெறு பிள்ளைகளை கெடுக்கிறார்கள் என்றால் சிலர் " இந்த வயதில் அனுபவிக்காமல் எப்ப அனுபவிப்பது" என்று விட்டு வேறு மாதிரி கெடுத்து விடுகிறார்கள்.

...........

மாப்பி தம்பி நீங்கள் சொன்ன விடயங்கள் சரியே.

3. ஹோம்வேர்க், வகுப்பு, சோதனை, எம்.எஸ்.என், பேஸ்புக் சிட், பிரன்ஸ், வேலை, லீசர் டைம் இது எல்லா மாணவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. நேரத்தை சரியாக நிருவகிக்கத் தெரிந்தால் இந்தப் பிரச்சனைகள் ஏற்படாது.

ம்ம் ஆனால் எத்தனை பேருக்கு இது சரியாக தெரியும்????????

படி படி..என்று சொல்பவர்கள்..படிக்காமல் இருக்கையில் சந்தேகப்பட்டு சொல்கிறார்கள்.அப்படி சந்தேகப்படும் போது நய் நய் என்று அரிக்காமல் வந்து என்ன பிரச்சனை..என்ன உதவி..என்று கேட்டு செய்யலாம்...

அதையே பரீட்சைக்கு முன் நேர அட்டவணை போட கஷ்டப்பட்டு தலையை பிய்க்கும் போது வந்து அதற்கு உதவி செய்தால் (சிறு வயதில் இருந்தே) ஒரு வயதில் பிள்ளைகள் தானாக போட்டு தானாக படிக்க தொடங்கி விடுவார்கள். இல்லையா??

  • தொடங்கியவர்

ஆ ஆ ஆ ஆ மாப்பு....உங்களை என்னவோ நினைச்சன் பட் நல்லா அறிவுரையெல்லாம் சொல்றீங்கள் நன்றி நன்றி :-)))

சகி உங்கட நண்பிக்கு என் சார்பிலயும் ஒரு குட்டு வையுங்க தலையில.இப்ப நல்லாப்படிக்கிறாவா அப்ப நல்லது. ஏனோ தெரியல்ல காய்ஸ் பெருசா இந்த மாதிரிக் காதல் கத்தரிக்காய்க்கெல்லாம் அலட்டிக்கொள்றதே இல்லை ரொம்ப இயல்பா இருப்பினம் ஆனால் கேர்ள்ஸ்க்குத்தான் அது கஸ்டமா இருக்கு.

காய்ஸ் பெருசா இந்த மாதிரிக் காதல் கத்தரிக்காய்க்கெல்லாம் அலட்டிக்கொள்றதே இல்லை ரொம்ப இயல்பா இருப்பினம் ஆனால் கேர்ள்ஸ்க்குத்தான் அது கஸ்டமா இருக்கு என்று எப்படி சொல்லுறீங்கள்?

எல்லாருக்கும் அடிப்படையில் பிரச்சனை ஒரே மாதிரியானதே, ஆனால் இங்கு பல ஏமாற்றுப் பேர்வழி காய்ஸ்ம் கேர்ள்ஸ்ம் இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

  • தொடங்கியவர்

அப்பிடின்றீங்க ...கேர்ள்ஸ் கவலைப்படுற அளவுக்கு காய்ஸ் இல்லை என்று சொன்னன். அவை take it easy policy படி வாழினம் என்று எனக்கு பட்டிச்சு.

அதனால அவருக்கு ஏற்றா போல தானும் மெலிஞ்சு பொருத்தமா இருக்கணுமாம்!

என்ன வழி...வீட்டில் சாப்பாடு குறைச்சால் வீண் கேள்வி வரும். அதனால வீட்டில் சாப்பிடுவது..சாப்பிட்டு விட்டு பாத் ரூமை பூட்டி..கையை வாயுக்குள் விட்டு சத்தி எடுப்பது. அப்படியே களைத்து போய் சென்று படுப்பது. போதா குறைக்கு மாத்திரர,தெயிலை..அது இது என்று. எல்லாம் காதலுக்காக! இதுவே காதலுக்காக என்றால் படிப்பு எங்க? அதுவும் சத்தி போல போயிடுச்சு!!!

தனுஷ் போன்றவர் என்ன செய்தார்..கொஞ்ச நாளால்..மனதை மாற்றி கொண்டார்...அவரால் அங்கே இன்னொரு பெண் சாப்பிடாமலே சத்தி!

அப்போ இவர் நிலமை? படிப்பு இல்லை..உடல் நலம் இல்லை..

யப்பா உண்மையா நடந்ததா ..... :angry: :angry: .. ம்ம் சிலதுகள் இன்னும் இப்படி இருக்கத்தான் செய்யினம்.... சகி எதுக்கும் உங்க நண்பிக்கு .... மாப்பிள்ளை எழுதிய அறிவுரைகளை கொண்டே காட்டுங்கள்.... :P

கேர்ல்ஸுக்கு முக்கிய பிரச்சினை அவன் அப்ப்டி எருக்கன் எவ எப்படி எருக்க நான் அவ போல வரனும் மெலியனும் அழகாகனும்.......... வேல வெடி எல்லம இத பற்றியே திங் ப்ண்ணுறது...... அப்புறம் நேரம் இல்லை நீங ஜொலியா இருக்கிறீங்க, நாங்க கஸ்டப்படுறம் என்டு சொல்ல வேண்டியது. உங்க வேலைய நீங்க பாருங்க டைம் எல்லம் ஒழுங்கா வரும்

ம்ம் அவா என் நண்பி இல்லை. பட் தெரிஞ்ச பிள்ளை ஒராள்.

நமக்கு கொலண்டில் ஒரே ஒரு தமிழ் நண்பி என்றால் நம்புவீங்களா????/

அவாவும் இப்போ இங்கு இல்லையே :blink:

.........

யா மாப்பிள்ளை சொல்வது சரியே...

எல்லா காய்ஸும் அப்படி இல்லை..சில பெண்களும் அப்பிடியே.

என்ன சிலரால பலரும் தவறாக பார்க்கபடீனம்.

எல்லாம் ஒரு வயசு ஒரு காலம் வர திருந்துவினம். என்ன அப்போ காலம் என்ன தருமோ....?

கேர்ல்ஸுக்கு முக்கிய பிரச்சினை அவன் அப்ப்டி எருக்கன் எவ எப்படி எருக்க நான் அவ போல வரனும் மெலியனும் அழகாகனும்.......... வேல வெடி எல்லம இத பற்றியே திங் ப்ண்ணுறது...... அப்புறம் நேரம் இல்லை நீங ஜொலியா இருக்கிறீங்க, நாங்க கஸ்டப்படுறம் என்டு சொல்ல வேண்டியது. உங்க வேலைய நீங்க பாருங்க டைம் எல்லம் ஒழுங்கா வரும்

அப்ப நீங்க அப்படி திங் பண்ணுறதே இல்லை எண்டு சொல்லுறீங்களா? :blink:

இது இரண்டு பேருக்கும் இருக்கிற பிரச்சனை தான். ஏன் காய்ஸ் மட்டும் , நீங்க சொல்லுற முக்கிய பிரச்சனையை திங் பண்ணாமலா இருக்கினம். ? மாப்பிள்ளை சொல்லுற மாதிரி 2 பேரையும் சொல்ல்லுங்க ... கேர்ள்ஸ மட்டும் தனிய பேசாதீங்க B) B) B) ;) ;)

நாங்க என்ன பிபசா போல செக்ஸியாகனும், பக்கது வீட்டுல இருக்கவ போல அழ்கான நகை வாங்கனும் என்டு நினைcஇட்ட இருக்கம். இல்லை குஷ்பு போல குண்டு பொன்ன பாத்திட்டு அவ போல குண்டாகனும் என்டு கூட சாப்பிடுறமா? சும்மா மற்றவங்கல பாத்து பேரசைல பண்ணுறது அப்புறம் டைம் இல்ல எண்டு அழுறது

  • தொடங்கியவர்

ஹலோ ஹலோ இங்க என்னா நடக்குது ஹா?

  • தொடங்கியவர்

இல்லை சகி...காய்ஸ் எல்லாரும் நல்ல பெடியங்கள் :-)))

அவைக்கு ஒருதரைப் போலயும் இருக்கணும் என்று ஆசையில்லை.

எங்கட வீட்டில நடக்கிற கதை :: அண்ணா குளிக்கப்போனான் எண்டால் எப்பிடியும் ஒரு இரண்டு மணிநேரம் எடுக்கும். என்னட்டயும் தங்கச்சியிட்டயும் இருக்கிறத விட அண்ணாட்டதான் நிறைய கிறீம் ஜெல் எல்லாம் இருக்கு. எங்களை விட உடுப்பு சப்பாத்து மேக் அப் அது இதென்று அதிகம் செலவழிக்கிறதும் அவன்தான்.

எங்கயும் போக வெளிக்கிட்டால் எல்லாரையும் விட அதிக நேரம் எடுக்கிறதும் அவன்தான் .............ஆனால் பிரசன்னா அப்பிடியில்லையாக்கும்.

'மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி

சேவலும் துதிக்கநின்ற ஈராறுதோள்கள் போற்றி.. '

அப்பனே.. முருகா.. பிறந்து உருண்டு, தவழ்ந்த எழும்பி, என்னவெல்லாமே செய்து, ஊரையும் நாட்டையும் விட்டுவந்து இருபது வருசத்துக்கு மேலை ஆச்சு அப்பனே!

உனக்குத் தேங்காய் உடைச்சு கற்பூரமேத்திப்போட்டு வந்த கனபேர்.. ரையும் கோட்டுமாய், சூட்கேசும் கையுமாய் உன்னையும் என்னையும் சாத்தான் என்கிறாங்கள்.. அந்தப் பாவிகளை நாங்கள் மன்னிப்பம்.. பரவாயில்லை!

நூறு டொலரோடை பாசை தெரியாத ஊரிலை.. அது பிழை இது சரியெண்டு சொல்லுறதுக்கு பெரியவங்கள் இல்லாத நாட்டில வந்து குடியேறினம். ஏதோ எங்கடை எண்ணத்துக்கு சங்கங்கள், அமைப்புகள், கடையள், புத்தகங்கள், சஞ்சிகைகள் எண்டு அந்த இளவயசிலயே தொடங்கினம். இந்த இருபது வருசத்தில அதுகள் எப்படியெல்லாமோ வளர்ந்து விசுவரூபமோ.. விசுவற்றை உருவமோ.. என்னமோ முருகா.. உனக்குத்தானே அதுகளின்ரை வளர்ச்சியைப்பற்றி தெரியும்?

அதுக்கிடையில எங்களுக்கெண்டு குடும்பமானம்.. குழந்தை குட்டிகளை பெத்தம்.. எங்கடை இந்த நாட்ட வாழ்க்கையில அதுகளையே எங்கடை பொழுதுபோக்குகளாக, எங்கடை வாழ்வின் பயன்களாக, எ்கடை வாழ்வின் உன்னதமான நோக்கங்களாக நினைச்சம்.. நாளைக்கு அதுகளின்ரை முன்னேற்றத்துக்கு எங்களாலை தடை வரக்குடாது எண்டு ஓடியோடி உழைச்சம்.. அந்த உழைப்பைக் காட்டி நல்ல விசா எடுத்தம்.. அதுக்கு மேலையும் போய் அந்தந்த நாட்டு சிற்றிசனும் எடுத்தம்.. இவளவும் ஏன்.. கனபேருக்கு பெரியவங்களாகிய நாங்களே நாரிப் பிடிப்போடையும், முதுகு நோவோடையும் ஓடியோடி உழைச்சு கார் லைசென்சுக்கும் காசு குடுத்து, காரும் எடுத்துக் குடுத்தம். எல்லாம் உன் கருணை முருகா!

நாங்க ஐந்து பத்து யூறோ சப்பாத்துடன் வருசக்கணக்கா அலைஞ்சாலும், நம்ம பிள்ளைகள் பாடசாலைகளிலோ விளையாட்டு மைதானங்களிலோ அல்லது வேறு இடங்களிலோ தாழ்ந்தவன் எண்டு கருதப்பட்டு தாழ்வுணர்ச்சிக்கு ஆளாகக் கூடாதே எண்டு... 'மார்க்' சூ.. 'மார்க்' ஜீன்ஸ்.. எண்டு வாங்கிக் கொடுத்தோமே.. இதெல்லாம் பிள்ளைகளை மதிக்கமலா முருகா? நம்ம பிள்ளைகள் சமுதாயத்தில் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில்தானே, அவங்க பிரச்சிகைளையும் எங்கள் பிரச்சினைகளாக்கி, அவங்கள் பிரச்சினைகளை குறைத்தோம் முருகா?

உடுப்பு தோய்த்தலிலிருந்து சாப்பாடு வரை அம்மா... உடை, பாடப்புத்தகங்கள் போன்ற தேவைகளுக்கு அம்மா... இப்படி அவங்கள் பிரச்சினைகளில் பெரும்பகுதியை அம்மாவும் அப்பாவும் பொறுப்பேற்பதுதானே வழமையாக உள்ளது முருகா? படித்தலைத் தவிர இந்த இளவயதுப் பிள்ளைகளுக்கு வேறு என்ன பிரச்சினைகள் முருகா? :lol:

நாங்கள் ஊரிலை அரைகுறையாகப் படிச்சுப்போட்டு வந்து... அமைப்புகள், ஊடகங்கள், கழகங்கள், பத்திரிகைகள் என்று நாங்களாகவே உருவாக்கினோமே முருகா? இங்கே படிக்கிற இவங்க, தாங்களாகவே சாதனை படைத்து எம்மினத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என நாங்கள் நினைப்பது தவறா முருகா? அதை இவங்க 'பெரிசுகள் தங்களுக்குத்தான் பிரச்சினை.. எங்களுக்கில்லை என்று சொல்லுதுகள்' என இவங்கள் முறையிடுவது சரிதானா முருகா?!

எங்கடை காலத்தில மாதத்தில ஒரு படம் பாப்பம்.. இப்ப..? இப்பிடி நாங்கள் தவறுகளை தேடி போற காலம் போய், தவறுகள் எங்களை தேடி வந்து வீட்டுக்குள்ளை குந்தி இருக்குற காலத்தில வாழுற நாங்கள், எங்கடை இளம் பிள்ளைகளைப்பற்றி பயப்பிடுறது யாருக்கு தெரியும்? அப்பிடி தெரிஞ்சாலும் அந்த நியாயத்தை ஆர் கண்டுக்கப் போறாங்க?

என்னமோ முருகா.. எல்லாத்துக்கும் நீதான் கதி..

'ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே

ஈசனொடு ஞானமொழி பேசுமுக மொன்றே..'

"அரோகரா..!!" :P

இல்லை சகி...காய்ஸ் எல்லாரும் நல்ல பெடியங்கள் :-)))

அவைக்கு ஒருதரைப் போலயும் இருக்கணும் என்று ஆசையில்லை.

எங்கட வீட்டில நடக்கிற கதை :: அண்ணா குளிக்கப்போனான் எண்டால் எப்பிடியும் ஒரு இரண்டு மணிநேரம் எடுக்கும். என்னட்டயும் தங்கச்சியிட்டயும் இருக்கிறத விட அண்ணாட்டதான் நிறைய கிறீம் ஜெல் எல்லாம் இருக்கு. எங்களை விட உடுப்பு சப்பாத்து மேக் அப் அது இதென்று அதிகம் செலவழிக்கிறதும் அவன்தான்.

எங்கயும் போக வெளிக்கிட்டால் எல்லாரையும் விட அதிக நேரம் எடுக்கிறதும் அவன்தான் .............ஆனால் பிரசன்னா அப்பிடியில்லையாக்கும்.

நீங்க 5மணித்தியாலம் குளிக்குறீங்க உங்க அண்ணா 2மணித்தியாலம்தானே குளிக்கிறாரு, அப்படி குளிச்சிட்டு இருந்தாலும் உங்களப் போல நேரம் இல்லைண்டு சொல்லிட்டு திரியுரமா????????? :angry: :angry:

இங்க இப்ப யாரு எவ்ளோ நேரம் குளிக்கினம் என்பதா பிரச்சனை வானவில் ?? :D:rolleyes:

...................

சோழியன் அண்ணா பெற்றோர்களை பற்றி நிங்கள் எழுதியது பொய் என்று நான் சொல்லவில்லை..உண்மையே!! நாமும் அறிந்ததே!

அதை அறிந்தே (நாங்க) படிப்பில யும்,வாழ்க்கையிலும் கவனமா இருக்கோம். ஆனால் படிப்பிலும், இந்த வயதில் புலம் பெயர் நாட்டிலும் நமக்கு வரும் சில பிரச்சனைகள் எல்லாவற்றையும் பெற்றோர்கள் அறிந்திருக்கிறார்களா?? இதே வயதில் அவர்கள் வாழ்ந்த சூழல் வேறல்லவா? இதே சூழலில் அவர்களும் வாழ்ந்திருந்தால்..எப்படி நடந்திருப்பார்கள்?? :D

Edited by ப்ரியசகி

இங்க இப்ப யாரு எவ்ளோ நேரம் குளிக்கினம் என்பதா பிரச்சனை வானவில் ?? :rolleyes::icon_idea:

...................

சினேகிதி சொன்ன பிரச்சினைக்ளில் அதுவும் ஒன்றுதானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.