Jump to content

பிரியாணி ஸ்பெஷல்


Recommended Posts

பதியப்பட்டது

பிரியாணி ஸ்பெஷல்

 

dot3(5).jpgலக்னோவி முருக் பிரியாணி  

dot3(5).jpgஹைதராபாதி மட்டன் பிரியாணி

dot3(5).jpgமொகலாய் அண்டா பிரியாணி  

dot3(5).jpgகாரைக்குடி இறால் பிரியாணி

dot3(5).jpgகேலிகட் ஃபிஷ் பிரியாணி  

dot3(5).jpgஆலூ 'தம்’ பிரியாணி

dot3(5).jpgஹைதராபாதி சப்ஜி பிரியாணி  

dot3(5).jpgமலபார் பச்சைக் காய் பிரியாணி

dot3(5).jpgசெட்டிநாடு மஸ்ரூம் பிரியாணி  

dot3(5).jpgகுஸ்கா (பிளெய்ன் பிரியாணி)

p89.jpg

விசேஷ காலத்துக்கு ஏற்ற வெஜ் மற்றும் நான்வெஜ் ரெசிப்பிக்கள் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.

பிரியாணியின் மணத்துக்குக் காரணமான கரம் மசாலாத்தூளை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதையும் இங்கே கற்றுக் கொள்ளுங்கள்.


கரம் மசாலாத்தூள்

கரம் மசாலாத்தூள் செய்ய:

பட்டை - 25 கிராம்  கிராம்பு - 10 கிராம்  ஏலக்காய் - 15 கிராம்  மிளகு - 5 கிராம் ஜாதிக்காய் - ஒரு சிறிதளவு  கறுப்பு ஏலக்காய் - 5 கிராம்  ஸ்டார் அனைஸ் - 5 கிராம் மல்லி (தனியா) - 5 கிராம்  பிரியாணி இலை - 2  ஜாதிப்பத்ரி - 5 கிராம் மராத்தி மொக்கு - 5 கிராம்   சோம்பு - 5 கிராம் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் இரண்டு நிமிடம் குறைந்த தீயில் வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். இவைதான் பல சமையல்களில் பயன்படுத்தப்படும் கரம் மசாலாத்தூள். இதனை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் பத்திரமாக சேமித்து வைத்துப் பயன்படுத்தவும்.


லக்னோவி முருக் பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 300 கிராம்

பெரிய வெங்காயம் - 2

பெங்களூர் தக்காளி - 4

தயிர் - 200 மில்லி

ஃபிரெஷ் க்ரீம் - 50 மில்லி

இஞ்சி-பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்+ ஒரு சிறிதளவு

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் - 1

புதினா - அரை கைப்பிடி

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

பச்சை மிளகாய் - 2

கோழிக்கறி - 300 கிராம்

நெய் - 50 மில்லி

எண்ணெய் - 50 மில்லி

குங்குமப்பூ - சிறிதளவு (2 டேபிள்ஸ்பூன் காய்ச்சிய பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்)

ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு.

உப்பு - தேவையான அளவு

p91.jpg

செய்முறை:

பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீரில் கழுவி, பதினைந்து நிமிடம் ஊற வைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா ஒன்று, உப்பு, சிறிது புதினா, சிறிது கொத்தமல்லித்தழை சேர்த்து முக்கால் வேக்காடு வேக வைத்து தனியாக வைக்கவும்.

கோழிக்கறியைக் கழுவி அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, ஃபிரெஷ் க்ரீம், தயிர் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய்களை ஸ்லைஸ்களாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை அரை நிலா வடிவத்துக்கு நீளமாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கி, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். இதில் மீதமுள்ள இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மீதமுள்ள புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் ஸ்லைஸ், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் கரம் மசாலாத்தூளைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு, ஊற வைத்த  கோழிக்கறியைச் சேர்த்து மிதமான தீயில் பாதி வேக்காடு வேகும் வரை வதக்கவும். இந்தப் பாத்திரத்தை எடுத்துவிட்டு, அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைக்கவும். அடுப்பை பற்றவைத்து தோசைக்கல்லின் மேல் கோழிக்கறி இருக்கும் பாத்திரத்தை வைத்து, அதில் முக்கால் பாகம் வெந்த பாஸ்மதியைப் பரவலாகத் தூவவும். இதன் மேல் குங்குமப்பூ ஊறிய பாலை ஊற்றி மூடி போட்டு அதன் மேல் கனமான ஒரு பொருளை வைத்து இருபது நிமிடம் குறைந்த தீயில் ‘தம்’ போடவும்.
இருபது நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய், ரோஸ் வாட்டர் ஊற்றி கிளறி, லேயர் லேயராகப் பரிமாறவும்.

* இந்த ரெசிப்பியை வழங்கியவர் செஃப் பழனிமுருகன்


ஹைதராபாதி மட்டன் பிரியாணி

தேவையானவை:

போன்லெஸ் ஆட்டுக்கறி - அரை கிலோ

பாஸ்மதி அரிசி - கால் கிலோ

பெரிய வெங்காயம் - 2 (அரை நிலா வடிவம் போல வெட்டவும்)

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

சீரகம் - அரை டீஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

கீரா வாட்டர் - 1 டீஸ்பூன் (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

புதினா - அரை கைப்பிடி

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

முந்திரி - 50 கிராம் (எண்ணெயில் பொரித்தது)

காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன் (வெண்ணெயில் வதக்கி மையாக அரைக்கவும்)

கெட்டி தயிர் - 200 மில்லி

பெங்களூர் தக்காளி- 4 (பொடியாக நறுக்கியது) 

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

ஃப்ரைடு ஆனியன் - 100 கிராம்

எண்ணெய் - 50 மில்லி

குங்குமப்பூ-  சிறிதளவு (2 டேபிள்ஸ்பூன் காய்ச்சிய பாலில் ஊறவைத்துக் கொள்ளவும்)

நெய் - 50 மில்லி

எலுமிச்சைப்பழம் - 1

உப்பு - தேவையான அளவு

p92.jpg

செய்முறை:

ஆட்டுக்கறியை நன்கு கழுவிக் கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், உப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். பாஸ்மதி அரிசியை இருபது நிமிடம் தண்ணீர் ஊற்றி ஊற விடவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் வடிகட்டிய பாஸ்மதி, தலா ஒரு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், உப்பு, சிறிது கொத்தமல்லித்தழை, சிறிது புதினா சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக விட்டு வடித்து வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, மீதம் இருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறியதும், தக்காளி, மீதம் இருக்கும் புதினா, கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் மீதமிருக்கும் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, ஊறிய ஆட்டுக்கறி, உப்பு சேர்த்து இருபது நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும். இனி, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, மட்டன் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து வெந்த பாஸ்மதி அரிசியைத் தூவவும். இதன் மேலே குங்குமப்பூ ஊறிய பால், ஃப்ரைடு ஆனியன், ரோஸ் வாட்டர், கீரா வாட்டர், பொரித்த முந்திரி தூவி மூடி போட்டு, அதன் மேல் கனமான ஒரு பொருளைத் தூக்கி வைக்கவும். தீயை முற்றிலும் குறைத்து இருபது நிமிடம் ‘தம்’ போட்டு வேக விடவும். பிறகு, கழித்து மூடியைத் திறந்து நெய்யை ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.


மொகலாய் அண்டா (முட்டை) பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 300 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

பச்சை மிளகாய் - 4 (ஸ்லைஸ்களாக வெட்டவும்)

வெங்காயம் - 3

பெங்களூர் தக்காளி - 4

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

புதினா - அரை கைப்பிடி

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

எலுமிச்சைப்பழம் - 1

எண்ணெய் - 50 மில்லி

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

முந்திரி - 25 கிராம் (பதினைந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து விழுதாக அரைக்கவும்)

தயிர் - 25 மில்லி

நெய் - 50 மில்லி

உப்பு - தேவையான அளவு

முட்டை மசாலா தயாரிக்க:

வேக வைத்த முட்டை - 4

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு

உப்பு - சிறிதளவு

p93.jpg

செய்முறை:

வெங்காயத்தை அரை நிலா வடிவத்துக்கு நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி, இருபது நிமிடம் ஊற வைய்க்கவும். அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி, வேக வைத்த முட்டையைச் சேர்த்து வதக்கவும். முட்டை மசாலாவில் குறிப்பிட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, அடுப்பை அணைத்து இந்தக் கலவையை ஒரு பவுலில் தனியாக எடுத்து வைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து சுருங்க வதக்கவும். இதில் தயிர், எலுமிச்சை சாறு, முந்திரி பேஸ்ட், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பாஸ்மதிஅரிசியை வடிகட்டி, உப்பு சேர்த்து இதில் வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்கவும்.
தீயை முற்றிலும் குறைத்து மூடி போட்டு அதன் மேல் ஒரு கனமான பொருளைத் தூக்கி வைக்கவும்.  இருபது நிமிடம் கழித்து, மூடியை திறந்து நெய் ஊற்றி கிளறி மசாலா முட்டையை வைத்துப் பரிமாறவும்.


காரைக்குடி இறால் பிரியாணி

தேவையானவை:

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்

பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

புதினா - அரை கைப்பிடி

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - சிறிதளவு 

எலுமிச்சைப்பழம் -1

சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 100 கிராம்

பச்சை மிளகாய் - 3

சீரகச் சம்பா அரிசி - 300 கிராம்

நெய் - 50 கிராம்

எண்ணெய் - 50 மில்லி

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

இறால் - 300 கிராம்

சோம்பு - அரை டீஸ்பூன்

சீரகம் -  அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செட்டிநாடு மசாலா:

பட்டை - 4

கிராம்பு - 2

ஏலக்காய் - 3

அன்னாசிப்பூ - 1

கருப்பு ஏலக்காய் - 1

மிளகு - 1 டீஸ்பூன்

மல்லி (தனியா) - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

ஜாதிக்காய் - ஒரு சிட்டிகை

p96.jpg

செய்முறை:

செட்டி நாடு மசாலாவுக்குக் கொடுத்தவற்றை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். இறாலைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும். சீரகச் சம்பாவை இரண்டு முறை அலசி, தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், புதினா, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு, செட்டிநாடு மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் 600 மில்லி தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் சீரகச் சம்பா அரிசியை வடிகட்டி சேர்த்து உப்பு போட்டு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்து தண்ணீர் வற்றியதும் அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். இதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து, சுத்தம் செய்த இறால் சேர்த்து மூடி போடவும். மூடியின் மேல் கனமான ஒரு பொருளைத் தூக்கி வைத்து குறைந்த தீயில் இருபது நிமிடம் வேக விடவும்.

இருபது நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறிப் பரிமாறவும்


கேலிகட் ஃபிஷ் பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 250 கிராம்

எலுமிச்சைப்பழம் - 1

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 3 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 10 (பொடியாக நறுக்கவும்)

தேங்காய் எண்ணெய் - 50 மில்லி

நெய் - 50 மில்லி

புதினா - அரை கைப்பிடி

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 3

உப்பு - தேவையான அளவு

மீனை ஊற வைக்க:

வஞ்சிரம் மீன் - 250 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,

எலுமிச்சை- 1

p98.jpg

செய்முறை:

மீனைக் கழுவி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்து பிசிறி இருபது நிமிடம் ஊற விடவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுப் பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு, தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். இதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இத்துடன் பாஸ்மதி அரிசி, உப்பு சேர்த்து முக்கால் பதம் வேக விடவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் இந்தப் பாத்திரத்தை வைக்கவும். மசாலாவில் ஊறிய மீனை பிரியாணியின் மேலே வைத்து மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைக்கவும்.
இருபது நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறிப் பரிமாறவும்.


ஆலூ ‘தம்’ பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 300 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

சீரகம் - அரைடீஸ்பூன்

பிரியாணி இலை - 1

அன்னாசிப்பூ - 1

தயிர் - 200 மில்லி

காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

நெய் - 50 மில்லி

எண்ணெய் - 50 மில்லி

பச்சை மிளகாய் - 4 (இரண்டாக உடைக்கவும்)

புதினா - அரை கைப்பிடி 

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

எலுமிச்சைப்பழம் - 1

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 2 (அரை நிலா வடிவத்துக்கு வெட்டவும்)

தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்)

சிறிய உருளைக்கிழங்கு  (பேபி பொட்டேட்டோ) - 12 (வேக வைத்து தோல் நீக்கியது) 

குங்குமப்பூ - சிறிதளவு (1 டேபிள்ஸ்பூன் பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்)

p99.jpg

செய்முறை:

பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற விடவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம்  தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி நிறம் மாறியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். புதினா, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு, தயிர், உருளைக்கிழங்கு, காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஊற வைத்து வடிகட்டிய அரிசியை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு முக்கால் பதம் வேக விடவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்கவும். தீயை முற்றிலும் குறைத்து குங்குமப்பூ ஊறிய பாலை ஊற்றி, மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து இருபது நிமிடம் வேக விடவும். பின்பு மூடியைத் திறந்து நெய் ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.


ஹைதராபாதி சப்ஜி பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - அரை கிலோ

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

பிரியாணி இலை - 1

பெரிய வெங்காயம் - 3 (அரை நிலா வடிவம் போல நறுக்கவும்)

தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)

உப்பு - தேவையான அளவு

சீரகம் - அரை டீஸ்பூன்

அன்னாசிப்பூ - 2

கறுப்பு ஏலக்காய் - 2

காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4 (நெய்யில் வதக்கி மிக்ஸியில் அரைக்கவும்)

கெட்டித் தயிர் - 200 மில்லி

இஞ்சி-பூண்டு விழுது - தலா 1 டேபிள்ஸ்பூன்

நெய் - 50 மில்லி

எண்ணெய் - 50 மில்லி

புதினா - ஒரு கைப்பிடி

கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி

கேரட்- பெரியது 1

பீன்ஸ் - 30 கிராம் 

உருளை - 1

காலிஃப்ளவர் - 30 கிராம்

பச்சைப் பட்டாணி - 30 கிராம்

கீரா வாட்டர் - 1 டேபிள்ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 1 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைப்பழம் - 1

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்)

p101.jpg

அலங்கரிக்க:

ஃப்ரைடு ஆனியன் - 4 டேபிள்ஸ்பூன்

ஃப்ரைடு முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்

திராட்சை (கிஸ்மிஸ்) பழம் - 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு

செய்முறை:

காய்கறிகளைக் கழுவி ஒரு இஞ்ச் நீளத்துக்கு நறுக்கி தனியாக வைக்கவும். அரிசியை
20 நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தலா ஒரு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, சீரகம் போட்டு பொரிந்ததும், வெங்காயம் சேர்க்கவும். இதில் இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கியதும், தக்காளி, காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து சுருள வதங்கியதும், நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி போட்டு மிதமான தீயில் வதக்கி இந்த மாசாலாவை தனியே எடுத்து வைக்கவும்.

காய்கறிகள் பாதி வெந்ததும் தயிர், எலுமிச்சை, உப்பு சேர்த்து வதக்கவும்.
மற்றொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ஊற வைத்த அரிசியை வடிகட்டி சேர்த்து உப்பு, மீதம் இருக்கும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, சிறிது புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து முக்கால் பாகம் வேக விட்டு வடித்து வைக்கவும்.
இனி, ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள மசாலாவை இரண்டு பகுதியாகப் பிரித்து எடுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு மசாலா அதன் மேல் வெந்த பாஸ்மதி அரிசி, அதன் மேல் மசாலா, அதன் மேல் பாஸ்மதி அரிசி என்பது போல பரப்பி வைத்துக் கொள்ளவும். இதன் மேல் கீரா வாட்டர், ரோஸ் வாட்டர், குங்குமப்பூ ஊறிய பால், பாதி நெய் ஊற்றி மூடி போடவும்.

அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி அரிசி பாத்திரத்தை வைத்து மூடி போடவும். மூடியின் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடம் வேக விடவும். பிறகு,  மூடியைத் திறந்து, மீதம் இருக்கும் நெய் ஊற்றி, லேயர் லேயராக பிரியாணியை  எடுத்து, அலங்கரிக்கக் கொடுத்தப் பொருட்களை கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.


மலபார் பச்சைக் காய் பிரியாணி

தேவையானவை:

நெய் - 50 மில்லி

பாஸ்மதி அரிசி - 400 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா - 2

தேங்காய் எண்ணெய் - 50 மில்லி

பிரியாணி இலை - 1

பெரிய வெங்காயம் - 2 (அரை நிலா வடிவத்தில் வெட்டவும்)

இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

கேரட்- பெரியது 1

பீன்ஸ் - 30 கிராம் 

உருளைக்கிழங்கு - 1

காலிஃப்ளவர் - 30 கிராம்

பச்சைப் பட்டாணி - 30 கிராம்

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

தயிர் - 2 கப்

முந்திரி - 1 டேபிள்ஸ்பூன் (எண்ணெயில் பொரித்தது)

புதினா - அரை கைப்பிடி

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

எலுமிச்சைப்பழம் - 1

உப்பு - தேவையான அளவு

p102.jpg

செய்முறை:

காய்களைக் கழுவி அரை அங்குல நீளத்துக்கு நறுக்கி தனியாக வைக்கவும். பாஸ்மதி அரிசியில் தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரிசி வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, அதில் தண்ணீர் வடித்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து கூடவே தலா ஒரு ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சிறிதளவு புதினா, சிறிதளவு கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து முக்கால் பதம் வேக விட்டு வடித்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, மீதம் இருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து நன்கு பொரிந்ததும் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தயிர், கொத்தமல்லித்தழை, புதினா, நறுக்கிய காய்கறிகள் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு கிளறி எலுமிச்சைச்சாறு, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி இந்த கிரேவியை தனியாக வைக்கவும். அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதில் ஒரு பங்கு கிரேவி, அதன் மேல் ஒரு பங்கு வேகவைத்த பாஸ்மதி அரிசி, அதன் மேல் ஒரு பங்கு கிரேவி இறுதியாக வேகவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து பொரித்த முந்திரி, சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் தூவி மூடி போடவும். மூடியின் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடம் வேக விடவும். பிறகு மூடியைத் திறந்து நெய் ஊற்றிப் பரிமாறவும்.


செட்டிநாடு மஸ்ரூம் பிரியாணி

தேவையானவை:

சீரகச் சம்பா அரிசி - 300 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்

பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

புதினா - அரை கைப்பிடி

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - சிறிது 

எலுமிச்சை -1

சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)

நெய் - 50 கிராம்

எண்ணெய் - 50 மில்லி

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

மஸ்ரூம் - 300 கிராம்

சீரகம் -  அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செட்டிநாடு மசாலாத்தூள்:

பட்டை - 4

கிராம்பு - 2

ஏலக்காய் - 3

அன்னாசிப்பூ - 1

கறுப்பு ஏலக்காய் - 1

மிளகு - 1 டீஸ்பூன்

தனியா - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

ஜாதிக்காய் - ஒரு சிட்டிகை

p104.jpg

செய்முறை:

செட்டிநாடு மசாலாவுக்குக் கொடுத்தவற்றை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

சீரகச் சம்பாவை இரண்டு முறை அலசி, தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், புதினா, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு, செட்டிநாடு மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 600 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த இறுத்த அரிசி, மஸ்ரூம், உப்பு சேர்த்து அரிசியை முக்கால் பதம் வேக விடவும். தண்ணீர் வற்றியிருக்க வேண்டும். அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, ஒரு தோசைக்கல்லை வைக்கவும். அதன் மேல் சீரகச்சம்பா அரிசி இருக்கும் பாத்திரத்தை வைத்து தீயை சுத்தமாகக் குறைத்து மஸ்ரூமை சேர்க்கவும். மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடம் வேக விடவும். பிறகு மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறிப் பரிமாறவும்.


குஸ்கா (பிளெய்ன் பிரியாணி)

தேவையானவை:

சீரகச் சம்பா அரிசி - 300 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

புதினா - அரை கைப்பிடி

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

பிரியாணி இலை - 2

பச்சை மிளகாய் - 6 (இரண்டாக உடைத்தது)

தேங்காய்ப்பால் - 100 மில்லி

தயிர் - 100 மில்லி

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் - 1

நெய் - 50 மில்லி

எண்ணெய்- 50 மில்லி

வெங்காயம் - 2

ஃப்ரைட் ஆனியன் - சிறிது அலங்கரிக்க

உப்பு - தேவையான அளவு

இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

p106.jpg

செய்முறை:

சீரகச் சம்பா அரிசியை இருபது நிமிடம் தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நிறம் மாற வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதங்கியதும், கொத்தமல்லித்தழை புதினா, தயிர், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து வதக்கவும். இதில் அரை லிட்டர் தண்ணீர், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து முக்கால் பதம் வேக விடவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து தீயை முற்றிலும் குறைத்து. மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து இருபது நிமிடம் வேக விடவும். பின்பு மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறி ஃப்ரைட் ஆனியனால் அலங்கரித்துப் பரிமாறவும்.

- ம.பிரியதர்ஷினி, படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்கு ஸ்கந்தசஷ்டி ஆரம்பம், இவர் ஒருத்தர்,அங்கால தனி, பிரியாணியும் கூழ்லுமாய் ஊத்தி  என்னை குழப்பிறதென்றே முடிவெடுத்து விட்டார்கள்....!  tw_blush:

Image associée

 

Posted

ஹாஹா நாங்கள் எதை போட்டாலும் உங்களை அசைக்க முடியாது.

இப்ப ரதியும் வருவதில்லை..tw_blush:  முந்தி ஒருக்கா இந்த திரியில் ரதி எழுதியதாக  ஞாபகம் விரதநேரம் இப்படி போடவேண்டாம் என்று.tw_blush:

கந்தசஸ்டிக்கு இந்தாங்கோ ...tw_blush:

 

11 minutes ago, suvy said:

நாளைக்கு ஸ்கந்தசஷ்டி ஆரம்பம், இவர் ஒருத்தர்,அங்கால தனி, பிரியாணியும் கூழ்லுமாய் ஊத்தி  என்னை குழப்பிறதென்றே முடிவெடுத்து விட்டார்கள்....!  tw_blush:

Image associée

 

 

  • 2 weeks later...
Posted

சுவையான மொகல் வெஜ் பிரியாணி

 

பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. இன்று மொகல் வெஜ் பிரியாணியை சுவையான முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சுவையான மொகல் வெஜ் பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1 கப்
பீன்ஸ்  - 10
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 4
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி
புதினா - 1/4 கப்
கொத்தமல்லி தழை - 1/2 கப்
உப்பு, எண்ணெய் - தேவையானது

தாளிக்க :

பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
பிரிஞ்சி இலை - 1

201710281512499212_1_Mughlaivegbiryani._L_styvpf.jpg

செய்முறை :

பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு மூன்றையும் நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.

வெங்காய்ம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்லவேண்டும்.

பாசுமதி அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.

அரிசியை கொதிக்கும் தண்ணீரில் (இரண்டு கப்) போட்டு அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும். அரிசி முக்கால் பதத்துக்கு வெந்துவிடும். தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.(முடிந்தால் இஞ்சியை தனியாகவும், பூண்டு தனியாகவும் அரைத்து சேர்க்கலாம்)

அடுத்து தக்காளி வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்க்க வேண்டும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பும், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் மூன்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.

கலவை கெட்டியாக வந்ததும் வடித்த சாதத்தை போட்டு சிறிது கிளறி அடுப்பை அணைத்து விட்டு தயிர், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

தம் கட்டுதல் :

பிரியாணியை ஒரு அகண்டை பாத்திரத்தில் வைத்து ஒரு தட்டு போட்டு மூடவேண்டும்.

பாத்திரத்துக்கும் தட்டுக்கும் இடைவெளி இல்லாமல் ஈரத்துணியால் மூடி  துணியை முறுக்கிவிட்டு தட்டு மேல் ஏதாவது வெயிட்டான பொருளை வைக்கவும்.

15 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான மொகல் வெஜ் பிரியாணி ரெடி.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாகத்தானிருக்கு ,பிரியாணியில் இருக்கும் கசுக்கொட்டை தேவையான பொருட்களில் இல்லை....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, suvy said:

நன்றாகத்தானிருக்கு ,பிரியாணியில் இருக்கும் கசுக்கொட்டை தேவையான பொருட்களில் இல்லை....!  tw_blush:

முதலில்கசுக்கொட்டையை சாப்பிட்ட பின்பு பிரியாணியை சுவைக்கலாம் சுவியரே  துபாயில் சாப்பிட்ட பிரியாணி தனி ருசி இந்த தனி காட்டு ராஜாவுக்கு tw_blush:

Posted
 
 
 
Bild könnte enthalten: Essen
 

மொகல் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ (சிறிதாக வெட்டியது)
பாசுமதி அரிசி – 2 கப்
தயிர் – 1 கப்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1
மிளகு – 6
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
பிரியாணி இலை – 1
குங்குமப்பூ – 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது)
முந்திரி – 10
உலர் திராட்சை – 10
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள மட்டனை போட்டு 2 நிமிடம், வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.

அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.
பின்னர் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 2-3 நிமிடம் வறுக்க வேண்டும்.
இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் உள்ள மட்டனானது பாதி அளவு வெந்திருக்கும். மேலும் அதைப் பார்த்தால், கிரேவி போன்று காணப்படும். இவ்வாறு கிரேவி போன்று இருப்பதை எடுத்து, குக்கரில் அரிசியுடன் சேர்த்து பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.
மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் குங்குமப்பூ பாலை மேலே ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.

Posted

மட்டன் பிரியாணி

தேவையானவை:
 மட்டன் - 2 கிலோ
 கடலை எண்ணெய் - 200 மில்லி
 தேங்காய் எண்ணெய் - 50 மில்லி
 நெய் (எருமை மாட்டு நெய்) - 200 கிராம்
 பிரிஞ்சி இலை - 10 கிராம்
 சின்ன வெங்காயம் - 100 கிராம் (இரண்டாக நறுக்கவும்)
 பெரிய வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 பூண்டு விழுது- 100 கிராம்
 இஞ்சி விழுது - 75 கிராம்
 பச்சைமிளகாய் - 50 கிராம் (நீளவாக்கில் கீறவும்)
 எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்)
 மிளகாய்த்தூள் - 8 கிராம்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 20 கிராம்
 புதினா இலை - 75 கிராம்
 கொத்தமல்லித்தழை - 25 கிராம்
 தயிர் - 250 மில்லி
 சீரகச் சம்பா அரிசி - 1.5 கிலோ
 தண்ணீர் - 2 பக்கா
( 4 லிட்டர் தண்ணீர்)
 உப்பு- தேவையான அளவு

பிரியாணி மசாலா தயாரிக்க:
 பட்டை - 3 கிராம்
 கிராம்பு - 3 கிராம்
 ஏலக்காய் - 3 கிராம்
 அன்னாசிப்பூ - 1.5 கிராம்
 ஜாதிப்பத்திரி - 1 கிராம்
 சீரகம் - 3 கிராம்
இவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.

மட்டன் மசாலா தயாரிக்க:
 சோம்பு - 3 சிட்டிகை
 சீரகம் - 3 சிட்டிகை
 பட்டை - 1 துண்டு
 கிராம்பு - 2
 அன்னாசிப்பூ - 2 கிராம்
இவற்றை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்.

p111.jpg

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள அளவுக்கு பிரியாணியை சமைப்பதற்கு ஏற்ற பாத்திரத்தை அடுப்பில் (விறகு அடுப்பு/கறி அடுப்பு சிறந்தது) வைக்கவும். பாத்திரத்தில் கடலை எண்ணெய் சேர்த்து சூடானதும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இதில் பிரிஞ்சி இலை, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும். இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்கவும். இப்போது நெய் சேர்த்து, கலவையை மீண்டும் வதக்கவும். இத்துடன் பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), தயாரித்து வைத்திருக்கும் மட்டன் மசாலாவை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தயிர் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். புதினா இலை, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். நன்கு சுத்தம் செய்யப்பட்ட மட்டனை, இந்தக் கலவையில் சேர்த்து மட்டனில் மசாலா சேரும்படி நன்கு வதக்கவும்.
பிரியாணிக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கறி வெந்தவுடன் அரிசியைச் சேர்த்து, தீயைக் குறைத்துக் கிளறவும். தம் செய்ய சரியான பதம் பார்த்து அரிசி வெந்ததும் மீதி தண்ணீர் வற்றுவதற்கு முன் அடுப்பை அணைக்கவும். பிரியாணிப் பாத்திரத்தின் மேலே வாழை இலையால் மூடி, பாத்திரத்தின் வாய்ப்பகுதிக்குச் சரியாகப் பொருந்தும் அளவிலான  தட்டு கொண்டு மூடவும். அந்தத் தட்டின் மேல் நெருப்புத்துண்டுகளை வைத்து ‘தம்’ செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து தம் பிரித்து, சூடான மட்டன் பிரியாணியில் சிறிது நெய்விட்டுக் கிளறிப் பரிமாறவும்.

http://www.vikatan.com

  • 2 weeks later...
Posted

பன்னீர் பிரியாணி செய்முறை விளக்கம்

 

அசைவம் சாப்பிடாதவர்களுக்கான மாற்று பன்னீர். இன்று பன்னீரை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பன்னீர் பிரியாணி செய்முறை விளக்கம்
 
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
பன்னீர் - கால் கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 2
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 4
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 தனியா தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி

வறுத்து அரைக்க :

கிராம்பு - 2
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காயத் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2

201711161548410605_1_paneer-biriyani._L_styvpf.jpg

செய்முறை :

பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் தேங்காய் துருவல் நீங்கலாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் அரைக்கும் போது தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

பன்னீரை துண்டுகளாக வெட்டி அதில் சிறிது பாட்டி மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து வைக்கவும். 

ஒரு குக்கரில் மீதியுள்ள நெய்யை ஊற்றி பிரிஞ்சி இலையை போட்டு தாளித்த பின்னர் பொடியாக வெட்டிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கிய பின்னர் அரைத்த விழுதுடன் மீதியுள்ள பாட்டி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

வதக்கிய கலவையில் இருந்து நெய் பிரிந்தவுடன் தண்ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 10 நிமிடம் வைத்து அணைக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து பொரித்து வைத்துள்ள பன்னீர், சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

சுவையான பன்னீர் வெஜிடபிள் பிரியாணி ரெடி.

http://www.maalaimalar.com

Posted

பல வகையான பிரியாணி ரெசிப்பிக்கள்

 

dot4(1).jpg பேபிஃகார்ன் பிரியாணி
dot4(1).jpg பேபி பொட்டேட்டோ பிரியாணி
dot4(1).jpg மஷ்ரூம் பிரியாணி
dot4(1).jpg மொகலாய் மோத்தி பிரியாணி
dot4(1).jpg ஹோல் சிக்கன் தம் பிரியாணி
dot4(1).jpg காஸ்மீரியன் புலாவ்
dot4(1).jpg செட்டிநாடு காடை பிரியாணி
dot4(1).jpg மிக்ஸ்ட் ஸீ ஃபுட் பிரியாணி
dot4(1).jpg ஹைதராபாத் மட்டன் பிரியாணி
dot4(1).jpg வவ்வால் மீன் பிரியாணி

p29.jpg

விசேஷ காலங்கள், விருந்தினர் வருகை என்றால், மதிய விருந்தில் பலரின் வீட்டிலும் நிரந்தர இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டது, பிரியாணி! அவர்களுக்காகவே வெஜ் மற்றும் காஸ்ட்லியான நான்-வெஜ் பிரியாணிகளை இங்கே வழங்கியிருக்கிறார் சென்னை ‘ஹனி ஸ்பைஸ்’ ரெஸ்டாரண்டின் எக்ஸிக்யூட்டிவ் செஃப் பாலகிருஷ்ணன்.

பேபிஃகார்ன் பிரியாணி

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி -அரை கிலோ
 தண்ணீர் - தேவையான அளவு
 ஃப்ரெஷ் பேபிஃகார்ன் - 15
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -200 கிராம்
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 6
 பொடியாக நறுக்கிய தக்காளி - 150 கிராம்
 திக்கான தேங்காய்ப் பால் - 2 கப்
 மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
 மல்லித்தூள்(தனியாத்தூள்)
- அரை டீஸ்பூன்
 கரம்மசாலா - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் -50 மில்லி
 நெய்-50 மில்லி
 பட்டை - 1
 கிராம்பு - 2
 ஏலக்காய் -  2
 பிரிஞ்சி இலை-1
 இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 50 கிராம்
 புதினா இலை - 50 கிராம்

p30.jpg

செய்முறை:
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊறவைக்கவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பேபிஃகார்ன் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, ஊற வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேகவிடவும். நெய் மற்றும் தேங்காய்ப்பால் ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவி மூடி போடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்

பேபி பொட்டேட்டோ பிரியாணி

தேவையானவை:
 பேபி பொட்டேட்டோ -200 கிராம் (வேக வைத்து தோல் உரிக்கவும்)
 பாஸ்மதி அரிசி - அரை கிலோ
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
 டொமேட்டோ பியூரி - 75 மில்லி
 இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
 கரம்மசாலாத் தூள் - அரை  டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய் - 2
 பட்டை - 2
 கிராம்பு - 2
 பிரிஞ்சி இலை - 1
 கொத்தமல்லித்தழை - 50 கிராம்
 புதினா இலை - 50 கிராம்
 தண்ணீர் - தேவையான அளவு
 எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)
 நெய் - 50 கிராம்
 எண்ணெய் - 50 மில்லி
 உப்பு - தேவையான அளவு

p32.jpg

செய்முறை:
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலாதூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்கு வதக்கவும். இதில் தயிர், டொமேட்டோ பியூரி சேர்த்து கிரேவி பதம் வரும் வரை லேசாக கிளறிவிடவும். இத்துடன் தண்ணீர் ஊற்றி, பாஸ்மதி அரிசியைச் சேர்த்து உப்பு போட்டு ஐந்து நிமிடம் வேக விடவும். பிறகு நெய், எலுமிச்சைச் சாறு ஊற்றி கொத்தமல்லித்தழை மற்றும் புதினா இலைதூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து  20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

மஷ்ரூம் பிரியாணி

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - அரை கிலோ 
 மஷ்ரூம் - 400 கிராம் (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)
 பச்சைப் பட்டாணி - 150 கிராம்
 வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 தண்ணீர் - தேவையான அளவு
 தக்காளி - 150 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 தயிர் - 1 கப்
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
 இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
 புதினா இலை - 50 கிராம்
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 50 கிராம்
 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 கரம்மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
 எண்ணெய் - 100 மில்லி
 உப்பு - தேவையான அளவு
 நெய் - 50 மில்லி
 பட்டை - 1
 கிராம்பு - 2
 ஏலக்காய் - 2
 பிரிஞ்சி இலை - 2
 அன்னாசிப்பூ - 2

p34.jpg

செய்முறை:
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தயிர் மற்றும் தக்காளி சேர்த்து கிரேவி பதத்துக்குக் கிளறவும். இத்துடன் மஷ்ரும், பச்சைப் பட்டாணி, பாஸ்மதி அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்்தழை, புதினா தூவி நெய் ஊற்றி கிளறி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து, தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, 20 நிமிடம் ‘தம்’ போட்டு இறக்கிப் பரிமாறவும்.

மொகலாய் மோத்தி பிரியாணி

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - அரை கிலோ
 பனீர் - 400 கிராம்
 வேக வைத்து அரைத்த பாலக்கீரை - 50 கிராம்
 டொமேட்டோ பியூரி - 2 டேபிள்ஸ்பூன்
 வெள்ளை மிளகு - 100 கிராம்
 பால் - 50 மில்லி
 தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
 கரம்மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 150 கிராம்
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
 தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 குங்குமப்பூ - சிறிதளவு
 எலுமிச்சைப்பழம் - ஒன்றில் பாதி (சாறு எடுக்கவும்)
 நெய் - 50 மில்லி
 எண்ணெய் - 100 மில்லி
 பட்டை - 1
 கிராம்பு - 2
 ஏலக்காய் - 2
 பிரிஞ்சி இலை - 1
 இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 50 கிராம்
 புதினா இலை - 50 கிராம்

p38.jpg

செய்முறை:
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். பனீரை விருப்பமான வடிவில் நறுக்கி வைக்கவும். பாலக் கீரை விழுது, டொமேட்டோ பியூரி, குங்குமப்பூ கலந்த பால் இந்த மூன்றையும் தனித்தனி பவுல்களில் ஊற்றி வைக்கவும். இவை மூன்றிலும் சரிசமமாக பனீர் துண்டுகள், உப்பு, வெள்ளை மிளகு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனை எண்ணெயில் தனித்தனியாகப் பொரித்து எடுக்கவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும்.

இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தயிர் மற்றும் டொமேட்டோ பியூரி சேர்த்து கிரேவி பதத்துக்குக் கிளறிவிடவும். தேவையான தண்ணீர் ஊற்றி, ஊற வைத்த பாஸ்மதி சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும். இதில் பொரித்தெடுத்த பனீர், எலுமிச்சைச் சாறு, நெய் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை மற்றும் புதினா இலை தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

ஹோல் சிக்கன் தம் பிரியாணி

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - 1 கிலோ 
 முழு சிக்கன் (முழுக் கோழி) - 1 
 தயிர் - 1 கப்
 இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
 முந்திரி விழுது -  2 டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)
 மிளகாய்த்தூள்  - அரை டேபிள்ஸ்பூன்
 மஞ்சள் தூள்  - அரை டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 50 கிராம்
 புதினா இலை - 50 கிராம்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம்
 பொடியாக நறுக்கிய தக்காளி - 100 கிராம் 
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5
 சோம்பு - 2 டேபிள்ஸ்பூன்
 கரம்மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்)  -  அரை டீஸ்பூன்
 சோள மாவு (கார்ன் ப்ளார் மாவு )- 2 டேபிள்ஸ்பூன்
 பட்டை - 2 
 கிராம்பு - 4
 ஏலக்காய் - 4
 அன்னாசி்ப்பூ - 1 
 பிரிஞ்சி இலை - 1
 எண்ணெய் - 200 மி.லி.
 நெய் - 50 மில்லி
 உப்பு -தேவையான அளவு

p38a.jpg

செய்முறை:
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலையைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். இதில் ஊற வைத்த பாஸ்மதி அரிசி மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு 10 நிமிடம் வேக வைத்து தனியாக வைக்கவும். முழுக்கோழியை சுத்தம் செய்து வாங்கி வந்து, வீட்டிலும் இரண்டு முறை சுத்தம் செய்யவும். கோழியின் வயிற்றுப் பகுதி காலியாக இருக்க வேண்டும். ஒரு பவுலில் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, தயிர், எலுமிச்சைச் சாறு, மஞ்சள் தூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். இதனை சிக்கனின் மேல் பகுதி மற்றும் உள் பகுதியிலும் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும். சிக்கனை பொரிக்கும் அளவுக்கு பெரிய வாணலியில் சிக்கனைப் பொரித்தெடுக்கவும். அவன் இருப்பவர்கள் கிரில் முறையில் கோழியை வேக வைத்து எடுக்கலாம். வீட்டில் பெரிய வாணலி இல்லாதவர்கள் ஊறிய முழு சிக்கனை, பொரிக்க முடிகிற அளவுக்கு பெரிய துண்டுகளாக நறுக்கி பொரித்தெடுக்கலாம். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்கி, கரம்மசாலாத் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மற்றும் பொரித்ததெடுத்த சிக்கன் துண்டுகள் சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும். இதில் வெந்த சாதம், முந்திரி விழுது, கொத்தமல்லித்தழை, புதினா இலை சேர்த்து கிளறி நெய் ஊற்றி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் ‘தம்’ போட்டு இறக்கிப் பரிமாறவும்.

காஸ்மீரியன் புலாவ்

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - அரை கிலோ
 பட்டை - 1
 கிராம்பு - 2
 ஏலக்காய் - 2
 பிரிஞ்சி இலை - 1
 இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 50 கிராம்
 புதினா இலை - 50 கிராம்
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
 பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
 எண்ணெய் - 100 கிராம்
 நெய் - 50 மில்லி
 உப்பு - தேவையான அளவு
 குங்குமப்பூ - சிறிதளவு
 உலர் திராட்சை - 10 கிராம்
 ஆப்பிள் - ஒன்றில் பாதி (சிறு துண்டுகளாக்கவும்)
 அன்னாசிப்பழம் - ஒன்றில் பாதி
 திராட்சை - 50 கிராம்
 பால் - 50 மில்லி
 முந்திரி - 10 கிராம்
 பாதாம் - 10 கிராம்

p40.jpg

செய்முறை:
பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைக்கவும். அன்னாசிப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கவும். பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பாஸ்மதி அரிசி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும். பிறகு முந்திரி, பாதாம், குங்குமப்பூ சேர்த்த பால், நெய் சேர்த்துக் கிளறவும். இத்துடன் ஆப்பிள், அன்னாசி, திராட்சை, உலர் திராட்சை, கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் ‘தம்’ போட்டு இறக்கிப் பரிமாறவும்.

செட்டிநாடு காடை பிரியாணி

தேவையானவை:
 காடை - 4
 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 150 கிராம்
 பொடியாக நறுக்கிய தக்காளி  - 100 கிராம்
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5
 புதினா இலை - 50 கிராம்
 கொத்தமல்லித்தழை - 50 கிராம்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
 தயிர் - 50 மில்லி
 தேங்காய்ப்பால் - 100 மில்லி
 பட்டை - 2
 ஏலக்காய் - 2
 கிராம்பு - 4
 பிரிஞ்சி இலை - ஒன்று
 இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்
 உப்பு - தேவையான அளவு 
 எண்ணெய் - 100 மில்லி
 நெய் - 50 மில்லி

பிரியாணி மசாலா செய்ய:
 பட்டை - 2
 ஏலக்காய் - 4
 கிராம்பு - 6
 பூண்டு - 50 கிராம்
 இஞ்சி-1 துண்டு

p42.jpg

செய்முறை:
சீரகச் சம்பா அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கியதும், தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும். கழுவி சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

மிக்ஸ்ட் ஸீ ஃபுட் பிரியாணி

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - 1 கிலோ 
 வஞ்சிரம் மீன்  - 150 கிராம் (சிறு துண்டுகளாக்கவும்)
 இறால் - 150 கிராம் 
 நண்டு சதை - 150 கிராம்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம் 
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5
 தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 கரம்மசாலாத் தூள் -  அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 தயிர் - 50 மில்லி 
 கொத்தமல்லித்தழை - 50 கிராம்
 புதினா இலை - 50 கிராம் 
 எலுமிச்சைப்பழம் - 2 (சாறு எடுக்கவும்)
 இஞ்சி-பூண்டு விழுது - 50 கிராம்
 பட்டை - 2 
 கிராம்பு - 4
 ஏலக்காய் - 4
 அன்னாசிப்பூ - ஒன்று 
 பிரிஞ்சி இலை - ஒன்று
 எண்ணெய் - 200 மில்லி.
 நெய் - 50 மில்லி
 குங்குமப்பூ - சிறிதளவு 
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 100 மில்லி. 

p44.jpg

செய்முறை:
மீன், இறால், நண்டை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து நெய் சேர்த்து உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். இத்துடன் ஊற வைத்து தண்ணீர் இறுத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் மீன், இறால், நண்டின் சதைப்பகுதியை சேர்த்து கலந்து
30 நிமிடம் ஊறவைக்கவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும். இத்துடன் தயிர் சேர்த்து வதக்கி, சீரகத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் ஊற வைத்த மீன், இறால் மற்றும் நண்டு, உப்பு, தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இதில் வெந்த சாதத்தை மெதுவாக கலந்து நெய் ஊற்றி கிளறி குங்குமப்பூ, கொத்தமல்லித்தழை, புதினா தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, இதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் ‘தம்’ போட்டு இறக்கிப் பரிமாறவும்.

ஹைதராபாத் மட்டன் பிரியாணி

தேவையானவை:
 ஆட்டுக்கால் - 200 கிராம்
 பாஸ்மதி அரிசி - 1 கிலோ
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம்
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
 சீரகம் - 1 டீஸ்பூன்  
 கரம்மசாலாத் தூள் - 2 டேபிள்ஸ்பூன் 
 மிளகாய்த்தூள் - ஒன்று டேபிள்ஸ்பூன்
 ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது  -
2 டேபிள்ஸ்பூன்
 தயிர் - 100 மில்லி
 முந்திரி - 50 கிராம்
 மஞ்சள் தூள் - 5 கிராம்
 குங்குமப்பூ - சிறிதளவு
 கொத்தமல்லித்தழை - 50 கிராம்
 புதினா இலை - 50 கிராம் 
 காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - 100 மில்லி
 நெய் - 50 மில்லி
 பட்டை - 2
 ஏலக்காய் - 4
 எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)
 கிராம்பு - 4 
 பிரிஞ்சி இலை - ஒன்று
 உப்பு - தேவையான அளவு

p46.jpg

செய்முறை:
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். பாஸ்மதி அரிசியை இத்துடன் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, தயிர், உப்பு சேர்த்து கலக்கி, ஆட்டுக்காலைச் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிய விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் கரம்மசாலாத் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், ஊறிய ஆட்டுக்காலைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். இத்துடன் வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து... பின்னர் நெய், ரோஸ் வாட்டர் ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா, குங்குமப்பூ, முந்திரி தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 30 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

வவ்வால் மீன் பிரியாணி

தேவையானவை:
 வவ்வால் மீன் (பாம்ஃபிரட்) - அரை கிலோ
 பாஸ்மதி அரிசி - அரை கிலோ
 இஞ்சி-பூண்டு விழுது - 50 கிராம்
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம்
 மிளகாய்த்தூள் - 30 கிராம்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 20 கிராம்
 மஞ்சள் தூள் - 10 கிராம்
 தயிர்- கால் கப்
 தக்காளி - 50 கிராம்
 புதினாஇலை - 50 கிராம்
 கொத்தமல்லித்தழை - 50 கிராம்
 எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)
 கரம்மசாலாத் தூள் - அரை டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 ஏலக்காய் - 2
 கிராம்பு - 4
 பட்டை - ஒன்று
 முந்திரி - அரை டேபிள்ஸ்பூன்
 உலர் திராட்சை - அரை டேபிள்ஸ்பூன்
 நெய் - 50 மில்லி
 தேங்காய் எண்ணெய் - 100 மில்லி

p48.jpg

செய்முறை:
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து  நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து சிவக்க வறுக்கவும். ஊறிய பாஸ்மதியைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து மீனில் இந்தக் கலவையைத் தடவி 15  நிமிடம் ஊறவைக்கவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்கி தயிர், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் ஊறவைத்த மீனைச் சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும். இதை வெந்த சாதத்தோடு மெதுவாக அரிசி உடையாத அளவுக்குக் கலக்கவும்.  இதில் நெய் ஊற்றி கிளறி, கொத்தமல்லிதழை, புதினா, முந்திரி, உலர் திராட்சை தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 30 நிமிடம் ‘தம்’ போட்டு இறக்கிப் பரிமாறவும்.

https://www.vikatan.com

  • 3 weeks later...
Posted

திருச்சி ஸ்டைல் மட்டன் பிரியாணி

2010-08-29_13-37-19_464-1024x577-575x262
  • Yield : 3
  • Servings : 3-4
  • Prep Time : 20m
  • Cook Time : 30m
  • Ready In : 50m

Ingredients

  • மட்டன் -400 கிராம்
  • அரிசி -3 கப் [ பாஸ்மதி அரசி]
  • பெரிய வெங்காயம் -2
  • தக்காளி-2
  • பச்சை மிளகாய் -4
  • தனி மிளகாய் தூள் -1 /2 ஸ்பூன்
  • பிரியாணி தூள் அல்லது கரம் மசாலா தூள் -1 /2 ஸ்பூன்
  • கசகசா -1 /2 டீ ஸ்பூன்
  • பூண்டு -6 பல்
  • இஞ்சி -சிறிதளவு
  • புதினா -சிறிதளவு
  • கொத்தமல்லி தழை -சிறிதளவு
  • தேங்காய்-1 /2 மூடி
  • எலுமிச்சை பழம் - பாதி
  • எண்ணெய் அல்லது பட்டர் -2 ஸ்பூன்
  • கிராம்பு -3
  • பட்டை -2
  • பிரியாணி இலை -2
  • ஏலக்காய் -5
  • முந்திரி பருப்பு - 5

Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள் : கிராம்பு பட்டை ஏலக்காய் பிரியாணி இலை முந்திரி பருப்பு

Step 2

முதலில் வெங்காயம் +தக்காளி+இஞ்சி+பூண்டு அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயை நீள வாட்டில் அரிந்து கொள்ளவும் .தேங்காயுடன் கசகசாவையும் அரைத்து பால் எடுத்து கொள்ளவும் .இஞ்சி+பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும் .பின்பு ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசி முக்கால் பாகம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்

Step 3

கனமான ஒரு பாத்திரத்தில் பட்டர் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வைத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி+தூள் வகைகள் [மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள்] இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு 2 கப் தண்ணீருடன் மட்டனையும் சேர்த்து 30 நிமிடம் வேக வைத்து மட்டன் மசாலாவை ரெடி செய்து வைத்து கொள்ளவும்.

Step 4

கடைசியில் முக்கால் பாகம் வெந்த சாதத்துடன் வேக வைத்த மட்டன் மசாலா கலவையுடன் சேர்த்து அடுப்பை சிம் இல் வைத்து 10 நிமிடம் தம் போடவும்.

Step 5

சிறிது கொத்தமல்லி தழையை மேலே தூவி 2 முறை கிளறி விட்டால்.. தயாராகிவிட்டது சுவையான திருச்சி ஸ்டைல் மட்டன் பிரியாணி

 

 

 

http://manakkumsamayal.com

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.