Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்பு கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம் : தவராசா

Featured Replies

முன்பு கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம் : தவராசா

 

 

வடமாகாணசபையின் அமைச்சர் சபை மாற்றப்பட்டதன் பின்னரும் மாற்றங்கள் எதனையும் காண இயலவில்லை,முன்பு கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம். உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை உருவத்தில் மட்டுமே மாற்றம் என எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார்.

Local_News.jpg

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்…

"வடமாகாணசபையின் பழைய அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதாவது அமைச்சர் சபை மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சர் சபை மாற்றியமைக்கப்பட்டாலும் மாகாணசபையை ஒட்டுமொத்தமாக பார்க்கையில் மாற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. மாற்றங்கள் மட்டுமல்ல மாற்றங்களுக்கான சமிக்ஞை கூட தெரியவில்லை. வெளிப்படையாக சொன்னால் முன்னர் கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம் அவ்வளவே வித்தியாசம்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோது ஜனாதிபதியின் செயலாளருடன் பேசியிருந்தேன். அப்போது அவர் கூறிய விடயம் ஜனாதிபதி இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டால் நீதி துறையில் ஜனாதிபதி தலையிடுகிறார் என செய்தி தென்னிலங்கைக்கு வரும். அதன் பின்னால் சிறையில் உள்ள படையினர் மற்றும் பலருக்காகவும் ஜனாதிபதி நீதி துறையில் தலையிட வேண்டும் என தென்னிலங்கையில் அழுத்தங்கள் கொடுக்கப்படும்.

என அவர் கூறியிருந்தார். இதேவேளை சட்டமா அதிபர் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல்கைதிகள் விடயத்தில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். காரணம் சட்டத்தில் எதிரிகளுக்கே பாதுகாப்பு வழங்க இயலும். சாட்சிகளுக்கு வழங்க இயலாது" என்றார்.

http://www.virakesari.lk/article/26227

  • தொடங்கியவர்
‘தீர்வு சாதகமாக வரும்’
 

-எஸ்.நிதர்ஷன்

“அண்மையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்கள். இதனடிப்படையில், ஒரு தீர்வு சாதகமாக வரும் என நாங்கள் நம்பலாம்” என, வட மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். 

யாழ். ஊடக அமையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிக்கையில், 

“தீபாவளி நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன் அப்போது ஜனாதிபதியின் செயலாளரும் கலந்துகொண்டிருந்தார். அவருடன் பேசியபோது அவர் கூறியிருந்த விடயம், ‘தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டால் அந்தச் செய்தி தெற்கு மக்களுக்குச் சென்றடையும். அதன் பின்னர் ஜனாதிபதி நீதித்துறையில் தலையீடு செய்கிறார் என்பது தெற்கில் உணரப்பட்டால் சிறைகளில் உள்ள முன்னாள் படையினர், பல்வேறு குற்றவாளிகள் விடயத்திலும் ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டும் என தெற்கிலும் அழுத்தங்கள் கொடுக்கப்படும்’ என்றார்.  

“இதேவேளை, சட்டத்தின்படி எதிரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கவே இடம் உள்ளது. சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்க இடமில்லை. குறிப்பாக மூதூர் வழக்கு எதிரிகளுக்கு பாதுகாப்பு இல்லாமையால் திருகோணமலையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், சாட்சிகளுக்குப் பாதுகாப்பில்லை எனக் கூறி வவுனியாவில் இருந்து வழக்குகளை அநுராதபுரத்துக்கு மாற்றுவது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை.  

“இந்த விடயத்தில் சட்டமா அதிபர் முரண்பாடான தீர்மானத்தை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.  

“இதேவேளை, என்னுடன் தொடர்பை உண்டாக்கிய தமிழ் அரசியல் கைதிகள், தங்களை வைத்து அரசியல் நடப்பது குறித்து மிக வருத்தப்பட்டார்கள். அவ்வாறு அரசியல் நடத்துவதைத் தவிர்த்து, தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்” என்றார். 

http://www.tamilmirror.lk/வன்னி/தீர்வு-சாதகமாக-வரும்/72-206045

18 hours ago, நவீனன் said:

முன்பு கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம். உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை உருவத்தில் மட்டுமே மாற்றம் என எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார்.

முன்பு சிங்களவனுடன் ஒட்டு உறவாடிய தவராசா இப்ப ரிஷாட் + சத்தியமூர்த்தி குழுவுடன் ஒட்டு உறவாடி வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய விரைவில் வட்டிலாப்பம் சாப்பிட வேண்டி வரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.