Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதயபூமி சிறிலங்கா அரசின் இராணுவ மேலான்மை கனவை தகர்க்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதயபூமி சிறிலங்கா அரசின் இராணுவ மேலான்மை கனவை தகர்க்கும்

-அருஸ் (வேல்ஸ்)-

இராணுவ வழிகளில் விடுதலைப் புலிகளின் போரிடும் வலிமையை சிதைத்துவிட்டால், அரைகுறைத் தீர்வை தமிழ்மக்களின் தலையில் கட்டிவிடலாம் என்பது சில மேற்குலக நாடுகளின் சிந்தனை. ஆனால் இனப்பிரச்சனை என்ற ஒன்றே இங்கு இல்லை என வாதிடலாம் என்பது சிறிலங்கா அரசின் நப்பாசை. அது தான் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் சுருக்கம்.

அது மட்டுமல்லாது சிறிலங்காவில் தற்போது தோன்றியுள்ள நிலைமை அனைத்துலக நாடுகளின் போட்டியாளர்களையும் களத்திற்குள் இழுத்து விட்டுள்ளது. பாகிஸ்தான் ஆயுத விநியோகம், பயிற்சிகள் வழங்குதல், தாக்குதல்களுக்கு ஆலோசனை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

சீனாவும் தன்பங்கிற்கு விமானிகளுக்கு பயிற்சி அளித்தல், ஆயுத விநியோகம், பாகிஸ்;தான் ஊடான உதவிகள் என வழங்கிக் கொண்டு இருக்கிறது. அண்மையில் அனுராதபுரத்தில் வீழ்ந்து நொருங்கிய பயிற்சி விமானத்தில் சீன விமானியே பலியானதாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அன்று சீன விமானிகள் பயிற்சிகளை வழங்கவில்லை என்பது பின்னர் தெரியவந்தது.

அமெரிக்காவும் தன்பங்கிற்கு ஒப்பந்தம் ஒன்றை கோத்தபாயவுடன் மேற்கொண்டு தனது பிடியையும் வலுப்படுத்த முனைந்துள்ளது. இந்தியாவும் சமாதானத்தில் தள்ளியிருந்தது போல சண்டையில் தள்ளியிருக்க விரும்பவில்லை. சிறிலங்காவிற்கு 1999 ஆம் ஆண்டு வழங்கிய கரையோர ரோந்துக்கப்பலை இலவசமாக புனரமைப்பதுடன், அதன் வெற்றிடத்தை நிரப்புவதற்காக தற்காலிகமாக அதனை ஒத்த போர்க்கப்பலையும் வழங்கியுள்ளது.

இது இந்தியத் தலைவர்கள் அடிக்கடி தமிழ் மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் வழங்கிவரும் உறுதிமொழிகளை போல ஒரு மனிதாபிமான உதவியாக கூட இருக்கலாமோ??

அதனுடன் மட்டும் நின்றுவிடாது தமிழ்நாட்டு மக்களிற்கும் தமிழீழ மக்களிற்கும் இடையில் வளர்ந்துவரும் உறவை சிதைப்பதற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும், தற்கொலைப்படகுகள் தயார்படுத்தப்படுவதாகவும் சிறிலங்கா அரசிற்கு ஈடாக பொய்யான தகவல்களை பரப்பி தமிழ்நாட்டை அன்னியப்படுத்தவும் இந்திய மத்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் அண்மைக்காலமாக முயன்று வருகின்றனர்.

இவர்கள் எல்லோரினதும் ஒருங்கிணைப்பாளராக யப்பான் தொழிற்படுகின்றது. அதாவது இவர்களின் அணுகுமுறைகள் என்ன? ஓடும் குதிரையில் பணத்தை கட்டும் தந்திரமா? அல்லது உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வா?

ஓடும் குதிரையில் பணம் கட்டலாம் என இவர்கள் எண்ணுவார்களானால் குதிரை விரைவில் மாற்றமடையும் என்பது நிஜம்.

இப்படியாக பேச்சளவில் தம்மை சமாதான பிரியர்களாக காட்டும் உலகத்தின் செயற்பாட்டால் சிறிலங்கா அரசு உற்சாகம் அடைந்துள்ளது என்பதுடன் தனது போரை விரிவாக்கவும் முனைந்துள்ளது.

அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் முற்றாக துண்டாடுவதற்கு திட்டம் தீட்டி செயலாற்றி வருகிறது அரசு. அதன் முதலாவது கட்டமாக கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை கைப்பற்றுதல். பின்னர் கைப்பற்றிய பகுதிகளை தக்கவைத்தல். அது மட்டுமல்லாது இந்த நடவடிக்கைகள் மூலம் தனது ஒட்டுமொத்த படையினரையும் தக்கவைக்கவும் அது முயன்று வருகின்றது.

இதன் அடுத்த கட்டம் தான் மணலாறு மீதான ஆக்கிரமிப்பு முயற்சி. மணலாற்றில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக அண்மையில் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். இராணுவத்தினரின் நடமாட்டங்கள், கனரக ஆயுதங்களின் நகர்த்தல்கள், புலனாய்வுத் தகவல்கள் என்பன மூலம் புலிகள் இதனை அறிந்துள்ளனர்.

முகமாலை, ஓமந்தை, மன்னார், மணலாறு என எல்லா முன்னணி நிலைகளில் இருந்தும் விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி தாக்குதல்களையும், விமானக்குண்டு வீச்சுக்களையும் நடத்தியும், படையினரை நகர்த்தியும் புலிகளை திசைதிருப்பிவிட்டு ஒரு முனையால் நகர்வை மேற்கொள்ளும் தந்திரத்தை சிறிலங்கா படைகள் மேற்கொண்டு வருகின்றன.

ஏன் சிங்கள அரசு மணலாற்றை தேர்ந்தெடுத்துள்ளது?

- வவுனியாவை போல மணலாற்றில் இருந்து மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்தள வசதிகள் அதிகம்.

- திருமலைக்கு கிழக்காக வாகரையை கைப்பற்றி அதன் கடற்பிரதேசத்தை பாதுகாத்தது போல. திருமலைக்கு வடக்குப் புறமள்ள கடற்பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் (அண்மையில் திருமலைக்கு வடகிழக்காக உள்ள பேராறு, கும்புறுப்பிட்டி கரையோர பிரதேசங்களை அரச படைகள் கைப்பற்றியதையும் குறிப்பிடலாம்). அதாவது விடுதலைப் புலிகளின் கடற்பிரதேசத்தை குறைத்தல்.

- விடுதலைப் புலிகளின் பிரதான தளப்பகுதியான முல்லைத்தீவை ஒரு நெருக்கடிக்குள் வைத்திருத்தல்.

- கிழக்குடனான புலிகளின் தொடர்புகளை முற்றாக தடுத்தல்.

- வடக்கு கிழக்கு இணைப்பின் மையப்புள்ளியை சிதைத்தல்.

இவைதான் மணலாற்றை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள்.

மணலாற்றை பொறுத்த வரையில் அனுராதபுரம், வவுனியா, திருமலை, முல்லைத்தீவு என நான்கு மாவட்டங்களுக்குமான ஒரு எல்லைக் கிராமமாக உள்ள மாவட்டமாகும்.

சிறிலங்கா அரசால் தமிழீழ தாயகப்பகுதியான வடக்கையும் கிழக்கையும் இராணுவ வேலிகள் மூலம் பிரிக்கும் மையமாகவும் இது விளங்குகின்றது. இந்த இராணுவ வேலி உடையும் போது கிழக்கிற்கான பின்தளம் உறுதி செய்யப்படும் என்பதும் கள யதார்த்தம். இதனை உணர்ந்து தான் மணலாற்றில் ஒரு வலிமையான இராணுவ வலையத்தை உருவாக்க சிங்கள அரசுகள் ஆரம்ப காலம் தொட்டு முழுவீச்சில் செயற்பட்டு வருகின்றன.

அதன் முக்கியத்துவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் கிரான் ஹலன்கொட முன்னர் தெரிவித்த கருத்து வருமாறு. 'வெலிஓயா இராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அங்கு நாம் இருப்பது வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை அனுமதிக்காது. நாம் அங்கு இருக்கும் வரை விடுதலைப்புலிகளால் தமிழீழத்தையும் பெறமுடியாது. நாம் அங்கிருந்து பின்வாங்கினால் பதவியா, கெப்பிட்டிக்கொல்லாவ, அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு பெரும் ஆபத்தாக முடியும்" என தெரிவித்திருந்தார்.

மணலாற்றின் இராணுவ முக்கியத்துவம் உணர்ந்து சிறிலங்கா அரசு ஒரு முழுமையான படையணியை (னுiஎளைழைn) அங்கு நிறுத்தியுள்ளதுடன், பெருமளவான சிங்கள மக்களுக்கும் ஊர்காவல்படை என்ற போர்வையில் நவீன ஆயுதப்பயிற்சி அளித்து அங்கு சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் சிறிலங்கா படைகளின் விசேட படையணிகளும், அதிகளவில் அங்கு நிலைகொண்டிருப்பது வழமை.

மேலும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கஜபாபுர, என ஒரு முக்கோண அமைப்பில் சங்கிலித் தொடர்போன்ற முகாம்களை அமைத்ததுள்ளதுடன். அந்த இராணுவத்தினருக்கு பக்கபலமாக அங்கிருந்த தமிழ் மக்களை 1984 -1985 காலப்பகுதிகளில் முற்றாக வெளியேற்றிவிட்டு சிங்கள மக்களின் குடியேற்றத்தையும் தீவிரமாக சிங்கள அரசுகள் மேற்கொண்டு வந்துள்ளன.

மணலாற்றின் இராணுவ முகாம்களில் இருந்தே நெடுங்கேணி, நைனாமடு போன்ற பகுதிகளுக்குள் ஊடுருவும் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினர் கிளைமோர் தாக்குதல்களை மேற்கொள்வதுண்டு.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு அது தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலேயே. அந்த இரு மாகாணங்களின் மையப்புள்ளியாக விளங்கிய மணலாற்றின் பெயர் மாற்றப்பட்டது.

1988 ஆம் ஆண்டு ஏப்பிரல் 16 ஆம் நாள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒரே இரவில் வெலிஓயா என்ற சிங்களப் பெயர் சூட்டப்பட்டதுடன், சிறிலங்காவின் 26 ஆவது மாவட்டமாகவும் அது பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் நிர்வாகமும் அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

எனினும் ஈழப்போர்களின் வரலாற்றில் மணலாற்றுக்கு இராணுவ அரசியல் ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு என்பதுடன் மணலாறில் சிந்திய குருதிகளும் அதிகம். போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே மணலாறு விடுதலைப் புலிகளின் தாக்குதல் இலக்காக இருந்து வருகின்றது.

1983 களில் விடுதலைப் புலிகளின் கெரில்லா போர்முறைகள் உக்கிரமடைந்த பின்னர் ஒரு முழு அளவிலான இராணுவ முகாம் மீதான முதலாவது தாக்குதலும் மணலாறில் தான் நிகழ்ந்தது. முதலாம் ஈழப்போரில் 1985 ஆம் ஆண்டு கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலுக்கு உள்ளானது.

பின்னர் இரண்டாது ஈழப்போரில் 1993 ஆம் ஆண்டு மண்கிண்டிமலை முகாம் தகர்க்கப்பட்டதுடன் 50 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான ஆயுதங்களும் அள்ளப்பட்டன. மூன்றாவது ஈழப்போரிலும் 1995 ஆம் ஆண்டு மணலாறு இராணுவ முகாம் தொகுதி (ஊழஅpடநஒ) தாக்குதலுக்கு உள்ளானது.

ஓயாத அலைகள் மூன்றும் மணலாற்றின் முன்னணி நிலைகளை ஆட்டம்காண வைத்திருந்தது. எனினும் அதன் முக்கிய இலக்கு வேறுதிசை என்பதால் அன்று மணலாறு தப்பிக்கொண்டது. அப்போது அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள் மக்கள் 48 மணிநேரத்தில் பதவியா நோக்கி தப்பி ஓடியதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

சிறிலங்கா அரசுகளை பொறுத்த வரையில் தாம் இராணுவ வலிமையில் மேலோங்கி விட்டதாக எண்ணும் போதெல்லாம், விடுதலைப் புலிகளின் இதயப்பகுதி என அழைக்கப்படும் வன்னி மீது படையெடுப்பதுண்டு.

உதாரணமாக 1991 இல் ஆனையிறவுச் சமரில் விடுதலைப் புலிகள் இழப்புக்களை சந்தித்ததை தொடர்ந்து. பிரேமதாச அரசு முல்லைத்தீவில் இருந்த புலிகளின் 1-4 பிரதான தளம் மீது மணலாற்றில் இருந்து ஒபரேசன் மின்னல் என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

1995 இல் யாழ். குடாவை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா அரசு வன்னியை இரண்டாக துண்டாடும் முகமாக ஜெயசுக்குறு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

தற்போது மகிந்தவின் முறை கிழக்கில் தமது இராணுவம் வெற்றி பெற்றுவிட்டது என்ற கானல் நீர் கனவுடன் மணலாறில் இருந்து கடற்கரையோரம் உள்ள அலம்பில் நோக்கி அல்லது மேற்காக உள்ள நெடுங்கேணி நோக்கி ஒரு படைநகர்விற்கு அரசு ஆயத்தமாகின்றது.

ஓமந்தையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஜெயசுக்குறு நடவடிக்கை போல கடினமானதாக மணலாறு நடவடிக்கை இருக்காது என்பது அரசின் எண்ணம். ஏனெனில் ஜெயசுக்குறு நடவடிக்கை முழுக்க முழுக்க நிலங்களால் சூழப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் கொக்குத்தொடுவாயில் இருந்து கடற்கரையோரம் நகர்வை மேற்கொண்டால் விடுதலைப் புலிகளின் ஒருபக்க எதிர்ப்பை இல்லாது செய்துவிடலாம் என்பதுடன் தமது கடற்படையின் உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்பது இராணுவ அதிகாரிகளின் திட்டம்.

ஆனால் விடுதலைப் புலிகளின் பிரதான தளப்பிராந்தியம் மீது மேற்கொள்ளப்பட்ட எல்லா இராணுவ நடவடிக்கைகளும் சிறிலங்கா அரசிற்கு எதிர்மறையான விளைவுகளையே கொடுத்திருந்தது வரலாறு.

பென்ரகன் மீது வீழ்ந்த அடிக்கு அமெரிக்கா சீற்றம் கொண்டதை போல, ஸ்ராலின்கிராட் ஆக்கிரமிப்பு சோவியத்தை சினங்கொள்ள வைத்தது போல வன்னி மீதான படை நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளை சீற்றம் கொள்ள வைக்கும் என்பதுடன் மூர்க்கமான போருக்கும் வழிவகுக்கும்.

மேலும் அரசின் இராணுவ மேலான்மைக் கனவை தகர்க்கும் ஒரு பெரும் சமருக்கு விடுதலைப் புலிகளும் தம்மை தயார்படுத்தி வருகின்றனர்.

ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு கூட இராணுவ மேலான்மை அவசியம் என்ற மேற்குலகின் நியதிகள் சீர்செய்யப்பட வேண்டும். அந்த நிலையை அனைத்துலக சமூகமும், சிறிலங்கா அரசும் கடந்த ஐந்தாண்டு கால போர்நிறுத்தத்தில் தமிழ் மக்களுக்கு உணர்த்தியுள்ளன.

இரண்டாம் ஈழப்போரில் தவறவிடப்பட்ட ஆனையிறவு மூன்றாம் ஈழப்போரில் மண்டியிட்டதை போல. மூன்றாம் ஈழப்போரில் தவறவிடப்பட்ட இதயபூமி நாலாம் ஈழப்போரில் மண்டியிடப்போவது உறுதி.

அதாவது சிறிலங்கா படைகளின் மணலாறு மீதான படை நடவடிக்கை எதிர்விளைவை கொடுக்கப்போவதுடன். அது மணலாற்றின் மீதான இராணுவத்தின் பிடியையும் முற்றாக தகர்ப்பதற்கே வழிவகுக்கும். மேலும் இதயபூமி மீட்கப்படும் போது இராணுவ வலுச் சமன்பாடுகளில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களை காணலாம் என்பது உண்மை.

Edited by பண்டிதர்

"அருஸ்" இப்ப கொஞ்சக்காலமாக கனக்க "பூருஸ்" கள் தொடர்ச்சியாக விட்டுக் கொண்டிருக்கிறார். இதிலை ஒண்டு தான் உதுவும்!!!!!

விடுகிற சவுண்டுகளுக்கு மட்டும் எம் மத்தியில் குறைச்சலேயில்லை!!!!!!! ஆனால் ....."சீச்சீ, அந்தப் பழம் புளிக்கும்"..... ஒண்டையும் காணேலை!!!!!!!!!!!!

கனமயிலாட...

A9 போல் A15 ...

:lol:

உதுகள் கிடக்க புhசாரி பழங்கள் புளிச்சா என்ன எல்லாரும் ஒருக்க கட்டிப்பிடிச்சு அழுது போட்டு பத்மினியை மினுக்குவம் வாரும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனமயிலாட...

A9 போல் A15 ...

:lol:

உதுகள் கிடக்க புhசாரி பழங்கள் புளிச்சா என்ன எல்லாரும் ஒருக்க கட்டிப்பிடிச்சு அழுது போட்டு பத்மினியை மினுக்குவம் வாரும்.

ஆனையிறவை புலிகள் பிடித்த போது குறூக்ஸ் இன் "கான மயிலாட" எங்கே போனது.அதாவது "சட்டி

சுட்டதடா கை விட்டதடா" என்றதோ சிறிலங்கா இராணுவம்.பலே பலே என்னே குறூக்ஸ் இன் நாட்டுப்பற்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவை புலிகள் பிடித்த போது குறூக்ஸ் இன் "கான மயிலாட" எங்கே போனது.அதாவது "சட்டி

சுட்டதடா கை விட்டதடா" என்றதோ சிறிலங்கா இராணுவம்.பலே பலே என்னே குறூக்ஸ் இன் நாட்டுப்பற்று.

வேல்ஸின் "கானமயிலாட ..." என்ற கட்டுரையையே குறூக்ஸ் குறிப்பிட்டார் என நினைக்கிறேன். அதை வாசித்துக்களிக்க இங்கே அழுத்துங்கள்

http://www.tamilnaatham.com/articles/2007/jan/arush/06.htm

வெற்றிக்கனவில் மிதப்பதைத்தவிர வேறு என்ன செய்யலாம் என்று நினைப்பவர்கள் குறூக்ஸின் இந்தக் கட்டுரையை வாசிய்ங்கள். நான் இப்போதான் வாசித்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15731

Edited by பண்டிதர்

இலங்கை அரசு நடைமுறையிலை இடத்தை பிடித்துக்கொண்டு இருக்கிறான் நாங்கள் இப்படியான ஆய்வுகளை பார்த்து மனதை மாற்றி கொள்ளுறதை தவிர வேறு வழி இல்லை

விடுதலைப்புலிகளால் வலிந்து ஒரு தாக்குதலை செய்ய முடியுமா என்ற கேள்வியே மக்கள் மத்தியிலை இப்ப இருக்கு? சும்மாய் ஆய்வுகளை எழுதி மக்களை விசரனாக்காமல் இருந்தால் சரி ?

விடுதலைப்புலிகளும் சும்மாய் எச்சரிக்கை அறிக்கை விடுகிறதை தவிர வேறு ஒன்றும் இல்லை ?அரசு எச்சரிக்கை அறிக்கை விட்டுவிட்டு அதை நடைமுறைய்படுத்துகிறது

ஏதோ விடுதலைப்புலிகள் தான் யுத்தநிறுத்தத்திலை கை ஒப்பம் இட்டமாதிரி? ஏதோ விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்தை மதித்து நடந்ததாக சர்வதேச சமூகம் அல்லது கண்காணிப்குலு சொல்லுறது மாதிரி? பொறுமையால் தமிழ் மக்கள் அழிந்தது தான் மிச்சம்

அருஸின் கருத்தில் தவறில்லை. விடுதலைப்புலிகள் மேலதிக பிரதேசங்களைக் கைப்பற்ற

வில்லையே என்ற ஆதங்கத்தினால் கட்டுரையாளர் மீது பாய்ச்சல் காட்டப்படுகிறது.

அது யாழ் இணையத்தில் நண்பர்களிடையே கிண்டலடிக்கும் பொருளாகவும் ஆக்கப்

பட்டுள்ளது.

வெற்றியை மட்டும் யுத்தகளத்தில் எதிர்பார்ப்பதும் கிடைக்காததினால் ஆதங்கப்படுவதும்

சாதாரணநிலைதான். தற்போது தமிழீழத்தில் பெறப்பட்டுள்ள தோல்விகள் ஒருவகையில்

தோற்றுவிக்கப்பட்டதுதான். கிழக்கின் பின்வாங்கிச் செல்லப்பட்ட பிரதேசங்கள் இரா

ணுவத்தேவையை மட்டும் நோக்கமாக வைத்து அரசால் கைப்பற்றப்படவில்லை.

சர்வதேசத்தின் தேவைகளும் அதற்குள்ளுள்ளது. இவைபோன்று தளப்பிரதேசத்திற்கு

நெருக்கடி கொடுக்கும் இராணுவ நகர்வுகளுக்கு இடமளிக்கப்படாது. இடமளிக்கவும்

முடியாது. என்பதுதான் கட்டுரையாளரின் கருத்து. அது உண்மையுங்கூட.

விடுதலைப் புலிகளின் மௌனமானதிலிருந்து ஆய்வாளர்கள் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவிட்டனர். அடிக்கடி புலிகளின் தளபதிகள் சோர்ந்துபோன மக்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதற்காக சில கருத்துக்களை சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் புலிகள் இன்னும் தன்னிச்சையான பெரிய படைநகர்வை இன்னும் மேற்கொள்ளவில்லை என்பதற்கு அவர்களே செயல் மூலம் பதிலளிக்க முடியும். அதுவரை பொறுத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கில் இதயபூமியின் எல்லையும் பின்னகர்த்தப்படலாம்.. இதெல்லாம் ஏன் என்று சில வருடங்களிற்குப் பிறகு தெரிய வரும்.. அப்பவும் யாழ் களத்தில எழுதச் சந்தர்ப்பம் இருக்கும் என நம்புகின்றேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்தார் பூமி ஆழ்வார்... பொறுப்போம் தமிழீழத்தை ஆழுவோம்..

  • கருத்துக்கள உறவுகள்

"விடுதலைப்புலிகளும் சும்மாய் எச்சரிக்கை அறிக்கை விடுகிறதை தவிர வேறு ஒன்றும் இல்லை ?அரசு எச்சரிக்கை அறிக்கை விட்டுவிட்டு அதை நடைமுறைய்படுத்துகிறது ''

கவிதா, லிஷா..தங்கைமார்களே நீங்கள் மட்டும் அல்ல இங்கே பலபேர் முனுமுனுக்கிறதும், புலம்புகிறதும் சர்வசாதாரணமாகிவிட்டது. இதெல்லாம் உங்க தப்பென்று நான் சொல்ல வரவில்லை, ஒன்று உங்க வயது அப்படியிருக்கலாம் அல்லது அனுபவ குறைவாக இருக்கவேனும் இல்லையென்றால் இப்படி அனுமானித்திருக்க மாட்டீர்கள் என்பது தான் என்னுடைய கருத்து.

ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏதோ தாக்குதல் நடத்திக்கொண்டிருப்பதும் விடுதலைப்புலிகள் பாரதூரமான தாக்குதல்கள் எதுவும் நடத்தாமல் இருப்பதும் உண்மை அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னும் கொஞ்சம் உங்க பாணியில் சொல்லப் போனால் நிலப்பரப்பும் கூட அவர்களால் கைப்பற்றப் பட்டுக்கொண்டிருப்பதும் மறுப்பதிற்கில்லை. ஆனால் நீங்க புற நிலவரங்களை கொஞ்சம் அவதானிக்க தவறிவிட்டீர்கள் என்பது தான் முக்கிய கருத்து.

இதுவரை காலமும் இடம்பெற்ற சம்பவங்களை சற்று பின்நோக்கி பார்த்தோமானால் உண்மை புரியக்கூடியதாகவிருக்கும்.

அங்கே(தாயகத்தில்) என்ன பிரச்சினைகள் இடம்பெற்றாலும் கண்டனங்கள், குற்றச்சாட்டுக்கள் எல்லாமே எங்கள் மீதுதான் விழுந்தவண்ணமிருந்தன என்னும் ஒரு படி மேலே சொன்னால் பேச்சுவார்த்தைக்கு போங்கோ போங்கோ என்று எங்களை மட்டும் தான் சொல்லிக் கொண்டிருந்தவங்கள் எல்லாம் இப்போது மற்றவிதமாக வாய்திறக்கத் தொடங்கிவிட்டாங்கள். அதுக்காக எங்க மீது கரிசனை கொள்கிறாங்கள் என்பதல்ல எனது கருத்து அதாவது எங்கமீது குற்றம் சுமத்த முடியாதளவிற்கு ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாதம் சகலவழிகளிலும் உச்சத்திற்கு போய்விட்டது என்பது தான் நிஷம். இவ்வளவு காலமும் சொல்லு சொல்லு என்று சொல்லியும் யாரின் காதிலும் ஏறவில்லை ஆனால் அவன் அடிக்க அடிக்க நாம் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டியதை சாதித்துவிட்டோம் என்பது தான் உண்மையிலும் உண்மை. அதாவது இனிமேல் நாங்க எடுக்கப்போகும் நடவடிக்கை சம்பந்தமாக யாரும் குற்றம் கண்டு பிடிக்கமுடியாதவாறு ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டோம்....இனிமேல் நடக்கவிருப்பவை எல்லாம் எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையுமில்லை என்று கூறிக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

Edited by Valvai Mainthan

வல்வை மைந்தனுக்கு போடுங்கள் ஒரு சபாஸ் கெட்டிக்காரன் சரியாக புரிந்து வைத்திருக்கிறார் புலிகளை.

அதாவது இப்ப அமெரிக்காவே நினைக்கும் இலங்கைப்படைகளே போதும் புலிகளை அழிக்க எண்டு. எனி பின்பக்கத்தால் ஆயுத சப்பிளை நடக்கும். அதற்கு பின்பு வேற ஒரு நாடுமே இதில தலையிடாது. சண்டைதொடங்கினா அரசாங்கத்தில தான் எல்லா நாடுகளும் பழி போடும் சண்டையைத்தொடங்கினது எண்டு. ஆகவே இது நிலப்பரப்பினை இழந்தாலும் ஆள் இழப்பு இல்லாத ஒரு பெரும் புலிப்பாச்சல் தான்.

எறிகணை வீச்சுக்களால் மணலாற்றில் இடம்பெயரும் மக்கள்.

மணலாற்று சிறிலங்கா படைத் தளங்களில் இருந்து படையினர் தொடர்ச்சியாக நடத்திவரும் எறிகணை வீச்சுக்களினால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு படையினர் நெடுங்கேணி மக்கள் குடியிருப்புக்களை நோக்கி கடும் எறிகணை வீச்சினை நடத்தினர்.

1997 ஆம் ஆண்டு சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட 'ஜெயசிக்குறு' படை நடவடிக்கையின் போது நெடுங்கேணிப் பிரதேசத்தில் இருந்து மக்கள் முற்றாக இடம்பெயர்ந்திருந்தனர்.

1999 ஆம் ஆண்டு 'ஓயாத அலைகள் - 03' நடவடிக்கை மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நெடுங்கேணிப் பிரதேசம் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் நெடுங்கேணிப் பிரதேசத்தில் 4,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீளக்குடியமர்ந்தன.

தற்போது சிறிலங்காப் படையினர் நடத்தி வரும் எறிகணை வீச்சுக்களினால் மீளக்குடியமர்ந்த மக்கள் மீண்டும் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இதேவேளை மணலாற்றில் இருந்து சிறிலங்காப் படையினர் நாயாறு, அளம்பில் அதனை அண்டிய பகுதிகளை நோக்கி அடிக்கடி நடத்தி வரும் வரும் எறிகணை வீச்சுக்களினால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.

1984 ஆம் ஆண்டு மணலாற்றின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாண்டாங்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து சிறிலங்காப் படையினரால் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவியதாக கூறப்படும் ஐந்து ஆண்டுகளில் சிறிலங்காப் படையினரால் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-Puthinam-

மிக சரியாக சொன்னீர்கள். எல்லோருக்கும் ஆதங்கமும் எதிர்பார்ப்பும் இயற்கையானது

தானே. நம்புங்கள் ----------. செய்யவேண்டிய கடமைகளை தொடருங்கள்-------.

மிக சரியாக சொன்னீர்கள். எல்லோருக்கும் ஆதங்கமும் எதிர்பார்ப்பும் இயற்கையானது

தானே. நம்புங்கள் ----------. செய்யவேண்டிய கடமைகளை தொடருங்கள்-------.

சரியாக சொன்னீர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.