Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் சிறுபான்மை சமூகங்களிடையே மோதல்களை உருவாக்க திரைமறைவில் சதி

Featured Replies

கிழக்கில் சிறுபான்மை சமூகங்களிடையே மோதல்களை உருவாக்க திரைமறைவில் சதி

கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகங்களிடையே மோதல்களை உருவாக்கி தமது அரசியல் சுயலாபங்களை அடைந்து கொள்வதற்காக சிலரால்  பல்வேறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்  ஹாபிஸ்; நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் சிறுபான்மை சமூகங்களிடையே மோதல்களை உருவாக்க திரைமறைவில் சதி

தற்போது  மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமுறுகல்களை ஏற்படுத்தும் விதமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து  தெரிவிக்கும் போதே கிழக்கின் முன்னாள் முதல்வர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர்,

அரசியல் சதிகாரர்களின் சுயலாப நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் உணர்ச்சிவசப்படாமல் மிகுந்த அவதானத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் நடந்து  கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அண்மையில் கிரான் மற்றும் வாழைச்சேனை பகுதிகளில்  தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே முறுகல்களை ஏற்படுத்தும் விதமான  சில சம்பவங்கள் இடம்பெற்றன.

அதன் தொடர்ச்சியாக இன்னும் சில பகுதிகளிலும்  இன முறுகல்களை ஏற்படுத்து விதமான இனரீதியான  துவேஷங்களை கிளர்ந்திடும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே  இந்த நிலைமையை  கட்டுப்படுத்துவதற்கான யோசனையொன்றை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நான் முன்வைத்தேன்.

பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆன்மீகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பங்குபற்றுதலோடு  நல்லிணக்க ரீதியான உரையாடல்களை முன்னெடுத்து இனமுறுகல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான் பிரதிப்  பொலிஸ்மா அதிபரை வேண்டிக் கொண்டேன்.

இதனூடாக இந்த நிலைமைகளின் யதார்த்தத்தை மக்களுக்கு உணர்த்தி  இவ்வாறான சதிகளுக்கு பின்புலத்தில் உள்ளவர்களை மக்களின் துணையுடன் அடையாளங்காணுவதற்கு உதவியாக அமையும்.

அத்துடன் தற்போது  முறுகல்கள் தொடர்ந்தும்  வேறு இடங்களில்  இடம்பெறாவண்ணம்  பாதுகாப்புக்களை அதிகரிக்குமாறும்  பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் கதைத்துள்ளேன்.

நாமனைவரும் ஒன்றிணைந்து நீடித்த சுமூக நிலையை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

இந்த நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக  இடம்பெற்ற யுத்த்தில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே என்பது யதார்த்தம்.

கிழக்கில் இன்றும் எமது காணிகள் விடுவிக்கப்படாமல் படையினர் வசம் உள்ளன.

இன்னும் மீள்குடியேற்றப்படாமல்  எமது பல உறவுகள் வாழ்ந்து கொண்டுருக்கின்றனர்.

அத்துடன்  எமக்கான  அரசியல்  ரீதியான  தீர்வையும் இரு  சமூகங்களும் இணைந்தே பெற்றுகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

ஆகவே  நமக்கான  தீர்வுகள் கிடைத்து விடக் கூடாது  நமக்கான பிரச்சினைகள் என்றும் முற்றுப் பெற்றுவிடக் கூடாது என எண்ணும் சில வஞ்சகர்களே  இனங்களிடையே  முறுகல்களை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கின்றனர்.

அத்துடன் தற்போது  புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்த விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது எமக்கான  தீர்வு மற்றும் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படலாம்.

இவற்றை குழப்புவதற்காகவே சிறுபான்மையினரிடையே மோதல்களை ஏற்படுத்தி எம்மிடையே ஒற்றுமையில்லை இவர்களின் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கினால் இவர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் எழும் எனவே இவர்களுக்கு அதிகாரங்களை வழங்க தேவையில்லை என இனவாதிகள் கூறுவதற்கான  சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது.

சதிகாரரர்களின் பொய்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு நாம் சுய புத்திய இழந்தோமேயானால் இறுதியில் கைசேதப்பட்ட சமூகங்களாகவே வாழ வேண்டியிருக்கும் என்பதை நாம் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்.

எனவே  இன நல்லுறவைக் கெடுக்கும் சதிகாரர்களின் கருத்துக்களை புறந்தள்ளி நிதானமிழக்காமல் தமிழர்களும் முஸ்லிங்களும் ஒற்றுமையாக இணைந்து எமக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முன்வர வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/create-clashes-between-minority-communities

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் ...எங்கட பிரச்சினையை நாங்களே பார்த்துகொள்வோம் 
என்ன கல்முனையில் நாங்கள்    சிறுபான்மையாக்க பட்டுவிட்டோம் இல்லாவிட்டால்  கல்முனை பொதுச்சந்தையிலும் அட்டை மாட்டியிருப்போம் 
கிழக்கு தமிழன் நன்றாக முழித்துவிட்டான் ...இனி புட்டும் தேங்காய்பூவும் வேலைய்யாது காக்கா  ...புட்டும் கட்டசம்பலும் தான் சரிவரும், இனி உம்மட கதி ஓலைப்பாயில் ஒண்ணுக்கடித்தவாறு புலம்பவேண்டியது தான்  

  • கருத்துக்கள உறவுகள்

இவ்ரு கிண்டின இனவாததை மறந்திட்டார் போல.....மாறுமா அந்தக் குணம்......

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

நீங்கள் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் ...எங்கட பிரச்சினையை நாங்களே பார்த்துகொள்வோம் 
என்ன கல்முனையில் நாங்கள்    சிறுபான்மையாக்க பட்டுவிட்டோம் இல்லாவிட்டால்  கல்முனை பொதுச்சந்தையிலும் அட்டை மாட்டியிருப்போம் 
கிழக்கு தமிழன் நன்றாக முழித்துவிட்டான் ...இனி புட்டும் தேங்காய்பூவும் வேலைய்யாது காக்கா  ...புட்டும் கட்டசம்பலும் தான் சரிவரும், இனி உம்மட கதி ஓலைப்பாயில் ஒண்ணுக்கடித்தவாறு புலம்பவேண்டியது தான்  

நீங்க என்னதான் சொன்னாலும் நாங்களும் அவிங்களும் ஒண்ணுக்குள்ள ஒன்று அரசியல் வாதிகள் சொல்லி திரியினும் ஐ மீன்  தேங்காயும் பிட்டும் போல அம்பாறையின் கதை கதை முடிஞ்சு இப்ப மட்டக்களப்பு அலறுது அவ்வளவுதான் அதற்கும் சில நாட்களில்  தண்ணி ஊத்தி  தெளித்து விடுவார்கள் நமக்கு அரசியல் வாதிகள் பெருவிரலை நமது வாய்க்குள்ள திணிச்சு இருக்கிறார்கள்  ஒன்றுமே பேச முடியாமல் 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க என்னதான் சொன்னாலும் நாங்களும் அவிங்களும் ஒண்ணுக்குள்ள ஒன்று அரசியல் வாதிகள் சொல்லி திரியினும் ஐ மீன்  தேங்காயும் பிட்டும் போல அம்பாறையின் கதை கதை முடிஞ்சு இப்ப மட்டக்களப்பு அலறுது அவ்வளவுதான் அதற்கும் சில நாட்களில்  தண்ணி ஊத்தி  தெளித்து விடுவார்கள் நமக்கு அரசியல் வாதிகள் பெருவிரலை நமது வாய்க்குள்ள திணிச்சு இருக்கிறார்கள்  ஒன்றுமே பேச முடியாமல் 

நீங்கள் (ஐ மீன் திகாமடுல்ல மாவட்டம் ) என்ன செய்தீர்கள் ....அவ்வளவு கத்தியும் கடைசி நேரத்துலை போய் வீட்டுக்கு கீறி கும்பலாய் அனுப்பினீர்கள் 
அவர்களுக்கு குளிர் விட்டு போச்சு. வாக்கு சீட்டில் வீட்டை பார்த்தவுடன் கீற கை தானா ஓடுதாமில்ல . அப்பிடி ஓடினா இப்படித்தான் லோல் படனும் . இனியும் உங்களுக்கு  (ஐ மீன் திகாமடுல்ல மாவட்டம் ) புத்தி வருதா என்று பார்ப்போம்.

நான் அப்பவே சொல்லல யாழிலும் கூத்தமைப்பிட்கு காவடி தூக்கியோர் அத்தனையும் கம்மாஸ். இப்போ யாரிடம் கேட்பது ...நமது மூஞ்சியையே பார்த்து கேட்கவேண்டியது தான்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

நீங்கள் (ஐ மீன் திகாமடுல்ல மாவட்டம் ) என்ன செய்தீர்கள் ....அவ்வளவு கத்தியும் கடைசி நேரத்துலை போய் வீட்டுக்கு கீறி கும்பலாய் அனுப்பினீர்கள் 
அவர்களுக்கு குளிர் விட்டு போச்சு. வாக்கு சீட்டில் வீட்டை பார்த்தவுடன் கீற கை தானா ஓடுதாமில்ல . அப்பிடி ஓடினா இப்படித்தான் லோல் படனும் . இனியும் உங்களுக்கு  (ஐ மீன் திகாமடுல்ல மாவட்டம் ) புத்தி வருதா என்று பார்ப்போம்.

நான் அப்பவே சொல்லல யாழிலும் கூத்தமைப்பிட்கு காவடி தூக்கியோர் அத்தனையும் கம்மாஸ். இப்போ யாரிடம் கேட்பது ...நமது மூஞ்சியையே பார்த்து கேட்கவேண்டியது தான்  

இனி நாங்க யாராவது சிங்கள அரசியல் வாதி வந்தால் அவரை ஆதரிக்க வேண்டிய நிலைதான் இருப்பையாவது தக்க வைத்துக்கொள்ள உங்க பக்கம் காற்றடிக்குது நீங்க தூற்றிக்கொள்ளுங்கள் 

கூத்தமைப்புக்கு (தமிழரசுக்கட்ட்சிக்கு ) வாக்களித்துவிட்டு அண்ணாந்து பார்த்து திரிய வேண்டியதாக இருக்கிறது கிழக்கில் அத்தனை பிரச்சினை நடக்கிறது ஆட்கள் கோமாவில் திரியுறாங்கள் போல தெரிகிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.