Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நியூயோர்க் தீவிரவாதத் தாக்குதலில் 8 பேர் பலி : பொலிஸார் சுடும்போது தாக்குதல்தாரி “அல்லாஹு அக்பர் ”எனக் கத்தினார்

Featured Replies

நியூ யார்க்கில் துப்பாக்கிச்சூடு, சந்தேக நபர் ஒருவர் கைது

 

கார் ஓட்டுநர் ஒருவரால் மக்கள் சுடப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் ஒருவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூ யார்க் தாக்குதல்படத்தின் காப்புரிமைCBS

கீழ் மன்ஹாட்டனில் மேற்கு பக்க நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த கைது நடைபெற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அவசரகால சேவைகள் நடைபெறுவதால் அந்த பகுதியில் செல்வதை தவிர்க்குமாறு காவல்துறை மக்களை வலியுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால், கார் ஓட்டி சென்ற ஒருவர், மிதிவண்டி பாதையில் மதிவண்டி ஓட்டி சென்றவர்கள் மீது காரை மோதியதாக உறுதிப்படுத்தப்படுத்தப்படாத சமூக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் இறந்தோர் பற்றிய தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

 

http://www.bbc.com/tamil/global-41825554

New York attack: At least six killed by man driving truck

http://www.bbc.com/news/world-us-canada-41825577

At least six people have been killed in New York after the driver of a truck mowed down people on a pedestrian and cycle path in Lower Manhattan.

A man who emerged from the vehicle brandishing imitation guns was shot and arrested by police officers.

Police urged people to avoid the area as a major emergency services operation got under way.

New York City's mayor and governor are at the scene. US media are calling the incident a terror attack.

One eyewitness, identified as "Eugene," told ABC Channel 7 that he saw a white pick-up truck driving fast down the cycle path alongside the West Side Highway, near Stuyvesant High School, at full speed and hitting a number of people.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நியூயோர்க் தீவிரவாதத் தாக்குதலில் 8 பேர் பலி : பொலிஸார் சுடும்போது தாக்குதல்தாரி  “அல்லாஹு அக்பர் ”எனக் கத்தினார்

 

 

நியூயோர்க்கில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

நியூயோர்க் - கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதை மற்றும் பாதசாரிகளுக்கான பாதைக்குள் திடீரென பிரவேசித்த டிரக் வண்டியொன்று அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

குறித்த டிரக் வண்டியை செலுத்தி தீவிரவாதத் தாககுதலில் இடுபட்ட 29 வயதான நபர் நியூயோர்க் நகர பொலிஸாரால் சுடப்பட்ட நிலையில் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டவர் உஸ்பகிஸ்தானைச் சேர்நத சாய்புலோ  ஹபிபுல்லேவிக் சாய்போ எனவும் இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு அகதியாக அமெரிக்காவிற்கு வந்து புளேரிடா மற்றும் நியூஜேர்சி ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளார்.

குறித்த நபர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் டிரக் வண்டி மற்றும் யூபர் தனியார் போக்குவரத்து நிறுவனத்தின் சாரதியாகவும் தொழில் புரிந்துள்ளார்.

ஆயுததாரியிடமிருந்து இரு துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் அயுததாரியை சுடும் போது “ அல்லாஹு அக்பர் ” என கத்தியுள்ளதாகவும் அவரது டிரக் வண்டியை சோதனையிட்ட போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடியொன்றை மீட்டுள்ளதாகவும் நியூர்க் நகர பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

45E0AED500000578-0-The_rented_Home_Depot

45E0CFB200000578-5037279-He_came_to_a_st

45E0D6A600000578-5036717-image-a-74_1509

45E1C32500000578-5036717-image-a-111_150

45E0D6C200000578-5037059-Shattered_bicyc

45E1BCC200000578-5037145-image-a-20_1509

 

45E1C36F00000578-5036717-image-a-118_150

45E3B44200000578-5036717-image-a-1_15095

45E3B44600000578-5036717-image-a-2_15095

45E3FE3000000578-5037279-image-a-13_1509

45E3342C00000578-5037279-Sayfullo_Habibu

45E1181200000578-5036717-image-a-98_1509

45E1401600000578-0-The_driver_of_a_truck

45E3356100000578-5037279-image-a-42_1509

 

http://www.virakesari.lk/article/26531

  • கருத்துக்கள உறவுகள்

ஏனிந்த மரணங்கள். உலகின் ஆதிக்கப்போட்டிகளின் விளைவாகவும் மற்றையோரின் தனித்துவங்களின் மீதான தாக்குதலுமே கரணியமாகும்.  எதிர்கால உலகு அச்சத்திற்குரியதாகவே இருக்கப்போகிறது.  உலகத்தலைவர்களின் தவறானதும் பக்கச்சார்பானதுமான முடிவுகளே அப்பாவிமக்களின் இறப்புக்குக் கரணியமாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கன நாட்கள் ஒன்றும் நடக்கவில்லை.  இவர்கள்... திருந்தி விட்டார்கள் என நான்  நினைத்தது...  தவறு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கன நாட்கள் ஒன்றும் நடக்கவில்லை.  இவர்கள்... திருந்தி விட்டார்கள் என நான்  நினைத்தது...  தவறு. 

மத்திய காலப் பகுதியில் முஸ்லீம் கையிலிருந்த கிறிஸ்தவர்களின் புனித பூமி பெத்தலகேமை  மீட்க ஆரம்பித்த சிலுவைப் போரின் நீட்சி.

  • தொடங்கியவர்

நியூயார்க் தாக்குதல்: இறந்தவர்களில் 5 பேர் அர்ஜென்டீனாவைச் சேர்ந்த நண்பர்கள்

p05lmrx7.jpg
 
சந்தேக நபர் துப்பாக்கியுடன் ஒடும் காணொளி

நியூ யார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில், சய்ஃபுல்லோ சாய்போவ் என்ற 29 வயது நபர், சைக்கிள் ஓட்டுநர்கள் செல்லக்கூடிய பாதையில், டிரக்கை இயக்கி நடத்திய தாக்குதலில், எட்டு பேர் கொல்லப்பட்டதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபரை, நியூ யார்க் காவல்துறையினர் வயிற்றிற்கு மேல் சுட்டு, கைது செய்துள்ளனர்.

இது குறித்து அர்ஜென்டீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்தவர்களில் ஐந்து பேர் தங்களின் நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் பத்துபேர் கொண்ட குழுவாக இருந்தனர் என்றும், பட்டம் பெற்று 30 ஆண்டுகள் கடந்துள்ளதை அவர்கள் கொண்டாடிக்கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக அட்ஜென்டீனா ஊடகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரும் கூறியுள்ளார்.

நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

ஏ.பி.சி சேனல் 7இல், யூஜீன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நபர், சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். ஒரு வெள்ளை நிற டிரக், வெஸ்ட் சைட் நெடுஞ்சாலையை ஒட்டியவாறு அதிவேகத்தில் பலரின் மீது மோதி சென்றது என்றார். மேலும் 9 அல்லது 10 முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது என்றார்.

ஃப்ராங்க் என்பவர், அந்த சாலைகளின் சந்திப்பில் ஒருவர் ஓடுவதை பார்த்ததாகவும், ஐந்து அல்லது ஆறு முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், என்.ஒய் 1 என்ற உள்ளூர் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

`அவர் கையில் எதையோ வைத்திருந்ததை நான் பார்த்தேன். ஆனால், அது என்ன என்பதை என்னால் சரியாக கூற முடியவில்லை. ஆனால் அவர்கள் அதை துப்பாக்கி என்று கூறினார்கள்.`

`காவல்துறையினர் அவரை சுட்டவுடன், எல்லோரும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். ஒன்றுமே புரியாத நிலையில் அந்த இடம் இருந்தது. நான் மீண்டும் அங்கு என்ன நடக்கிறது என பார்க்க முயன்ற போது, அந்த நபர் ஏற்கனவே கிழே விழுந்து கிடந்தார்.`

காவல்துறையால் சுட்டு, கைது செய்யப்பட்டுள்ளவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

 

http://www.bbc.com/tamil/global-41829094

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மத்திய காலப் பகுதியில் முஸ்லீம் கையிலிருந்த கிறிஸ்தவர்களின் புனித பூமி பெத்தலகேமை  மீட்க ஆரம்பித்த சிலுவைப் போரின் நீட்சி.

Bildergebnis für trump & kim

 

Bildergebnis für trump & kim

 

ஓஹோ.... டிரம்ப்பும், கிம்மும்...  சேர்ந்து அலுவல் பார்த்தாலும்...  :grin:
இது,  இப்போதைக்கு  முடியாது போலுள்ளது. tw_yum:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியைச்சேர்ந்த ஒருவரும் பலியாகியுள்ளாராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.